Sunday, February 08, 2009

திருமாவளவன் - தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியுமா?

பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் சம்பந்தமான விவாதங்களில் மக்கள் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு.

"திமுக, அதிமுக ரெண்டுமே வேஸ்ட். வேற கட்சியை கொண்டு வரணும்க". காங்கிரசை அந்த இடத்தில் வைத்து அவ்வபோது சில தேசியவியாதிகள் காமெடி செய்வதுண்டு. சிலர் ரஜினிகாந்தை வைத்து செத்த பிணத்திற்கு உயிரூட்ட முயன்றனர். அது நடக்கவில்லை.

சமீப காலமாக விஜயகாந்த் மேல் அந்த பொறுப்பு (?) விழுந்திருக்கிறது. மாற்று வேண்டும் என்று சொல்லும் அம்பிகள் விஜயகாந்த்தை தான் தொடர்ந்து முன்னிறுத்தவார்கள் என்பது என் அனுமானம். (கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி வரை விஜயகாந்த் 70 தொகுதிகளில் வெல்வார் என்று ஒரு கூட்டம் சீரியசாக நம்பியது.). இன்றைய சூழ்நிலையில் விஜயகாந்த் கட்சி இன்னொரு அதிமுக வாக ஆவதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன. பி.ஜே.பி யுடன் கூட்டணி மற்றும் "சோ" வுடனான நட்பு மட்டும் தான் இன்னும் நடக்கவில்லை. அதுவும் நடந்தால் இது உறுதியாகிவிடும்.

ஆனால் அடுத்த நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற இடத்திற்கு பொறுத்தமான ஒரு தலைவராக திருமாவளவன் இருப்பார் என்று நினைக்கிறேன். சினிமா கவர்ச்சி இல்லை. குடும்ப அரசியல் என்றெல்லாம்சொல்வதற்கு குடும்பமும் இல்லை. தமிழ் உணர்வாளர் என்ற அடிப்படையில் தினமலர், துக்ளக் மற்றும் அம்பிகளின் ஆதரவு அவருக்கு கிடைக்காது.

சரி. இப்போதைய ஈழ பிரச்சினையைப் பற்றி பலரையும் போல் (சிலர் உணர்ச்சிவசப்பட்டு, சிலர் சுயநலத்திற்கு பாற்பட்டு ) வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டாமல் மிக முதிர்ச்சியாக அணுகும் திருமாவளவன் என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


" திமுக மாநில ஆட்சியை தக்க வைக்க ஆசைப்படுகிற காரணத்தால்தான் காங்கிரசை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. காங்கிரசை திமுக விட்டால் காங்கிரசு அதிமுகவுடன் சேர்ந்துவிடு்ம். இதன்மூலம் இருப்பதையும் விட்டுவிடுவோம் என்று திமுக பயப்படுகிறது.( எல்லாருக்கும் தெரிந்ததுதான் இது, கலைஞர் குடுமி சோனியா கையில்). மற்ற அனைத்து கட்சிகளும் செய்யவேண்டியது.... .....


தொடர்ந்து சில அருமையான கருத்துக்களை கூறியுள்ளார்...வீடியோ பார்க்க இங்கே செல்லவும்.


திமுக அழிவுப்பாதையில் பயணம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் திருமாவளவன் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவனாக தெரிகிறார்.ஆனால் பல காரணங்களால் திருமாவளவனின் வளர்ச்சியும் எழுச்சியும் தமிழக அரசியல் அரங்கில் சுலபமாக இராது.

19 comments:

சிவாஜி த பாஸ் said...

திருமா....வ...ள...வ...னா.....?
போதையில போட்ட பதிவா ......?

முத்து தமிழினி said...

பாசு,

எனக்கு புரியலையே பாசு...ஏன் அப்படி சொல்றீங்க?

பி.கு: மப்பெல்லாம் இல்லை இப்ப :)

Hariharan # 03985177737685368452 said...

//அடுத்த நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற இடத்திற்கு பொறுத்தமான ஒரு தலைவராக திருமாவளவன் இருப்பார் என்று நினைக்கிறேன். சினிமா கவர்ச்சி இல்லை//

விடுதலைசிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியை விட்டு விலகும்போது திருமாவளவன் சினிமா கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்டு சினிமா சினிமா என்று கதியாகி கொள்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டார் என்று காரணம் சொன்னார்.

சினிமா கவர்ச்சி தனக்கு அவசியம் என்பதால்தானே திருமாவளவன் தான் நடித்த சினிமாவில்
"சிறுத்தை தனியாத்தான் வரும் பன்னிங்கதான் கூட்டமாவரும்" என்று பஞ்ச் டயலாக் பேசியதெல்லாம்!

முதலில் திருமாவளவனால் தனது சமூகத்தை நிதர்சனத்தில் ஆதர்சமாக இருந்து மேம்படுத்த முடிந்திருக்கிறதா?? இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது!

தமிழால் கருணாநிதி தனது நிலையில் இருந்து பெரிய அளவில் மேம்பட்ட மாதிரி தனது சமூக வாக்கு வங்கியால் திருமாவளவன் தனது அடையாளத்தைப் பெற்று தன் தனிப்பட்ட நிலையில் மேம்பட்டிருகிறார் என்றே கருத வேண்டி இருக்கிறது!

திருமாவளவன் முதலில் தமிழகத்தில் இருக்கும் காசு, வசதி அற்ற தனது சமூகத்தினருக்காக குரல் கொடுத்து ஒளி ஏற்றி அவர்களிடையே ஒற்றுமையை மேவி மேம்படுத்தட்டும்.

திருமாவளவனின் முதல் கடமை இதுவே!

இத்தகைய தன் பிரதான கடமையை மறந்து சிறுத்தை திருமாவளவன் தன் ஆற்றலை புலிக்காகச் சீற்றம் காட்டும் ஆக்கங்கெட்ட செயல்களில் செலவிட்டு வருவதாகவே உணர்த்துகின்றன!

முத்து தமிழினி said...

//முதலில் திருமாவளவனால் தனது சமூகத்தை நிதர்சனத்தில் ஆதர்சமாக இருந்து மேம்படுத்த முடிந்திருக்கிறதா?? இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது!//

சாதி விட்டு அவர் மேல் எழுந்து வரக்கூடாதா? சாதி அரசியல் மட்டும் தான் செய்யணுமா?

சாதி அரசியல் செஞ்சா சாதி அரசியல்னு குற்றம் சாட்டுவீங்க.சரி அதையும் மீறி வந்தா சாதிக்கு என்ன பண்ணிட்டாங்கறீங்க...

அவர் எழுச்சி பெறுவது கடினம் என்று நான் கூறியதற்கு உள்ள காரணங்களில் முக்கியமானது உங்களை போன்றோரது இந்த கருத்து.

முத்து தமிழினி said...

செல்வபெருந்தகை சமாச்சாரமும், திருமாவின் சினிமா மேட்டரும் எனக்கு விளக்கமாக தெரியாது. தகவலை திரட்டி முடிந்தால் இங்கு எழுதுகிறேன்.

ராவணன் said...

கருணாநிதி என்ற நபர் போய்ச்சேரவேண்டும்.திமுக என்ற கட்சி அழியவேண்டும்.அதன் பின்னர் ஜெ கட்சி,கருணாநிதி தாங்கி நிற்கும் சோனியா கட்சி ஒன்றும் இல்லாமல் போனால் திருமாவளவன் தமிழக அரசியலில் மாற்றம் கொண்டுவரமுடியும்.அதுவரையில் தமிழனுக்கு விடிவு இல்லை.

i criticize periyar said...

He cannot become a powerful force without consolidating the dalit votebank in his favor. His involvement in Srilankan Tamils issue may not yield political dividends.VCK is too weak to bring in any significant change in tamil nadu politics. VCK is already split.BSP is also targetting the dalit votebank. So if he fails to consolidate his base among dalits
he will end up as a leader who made much noise and had little effect. Today many think that he can do something, someone whom they can trust because of his involvement in Srilankan Tamils
issues. But those issues do not matter much in electoral politics
or in building a strong Dalit party. He is not doing anything
in consolidating and expanding
his party's support base. Beyond a
point involvement in Srilankan
Tamils issue will be counter-productive. He may be a good orator. But VCK as a party has miles to go. If he joins hands with Dr.Krishnasami, both can bring in change by consolidating
Dalit vote bank. But that is not
happening. So VCK will end in one alliance or another and will have
to be contended with what is given to them, like one or two seats in lok sabha election, 8 to 10 seats in assembly election.Mr.Muthu the ground reality is different from what you think.

i criticize periyar said...

முதலில் திருமாவளவனால் தனது சமூகத்தை நிதர்சனத்தில் ஆதர்சமாக இருந்து மேம்படுத்த முடிந்திருக்கிறதா?? இன்னும் இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது.

Yes.VCK is not strong in all parts of Tamilnadu.The dalit votebank is still split among parties. BSP consolidated the dalit votebank in UP and they were focussed in their efforts to do that. Tirumavalavan
lacks that focus and is frittering away his energy in other issues.

முத்து தமிழினி said...

//Mr.Muthu the ground reality is different from what you think.//

I too understand things are different in electoral politics.

my view is based on the his politics, he can be better choice than vijaykanth for tamilian cause

i criticize periyar said...

திமுக அழிவுப்பாதையில் பயணம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில்

You are underestimating MK and DMK.

i criticize periyar said...

'my view is based on the his politics, he can be better choice than vijaykanth for tamilian cause'

I am not that optimistic.VCK or Tiruma cannot do anything unless they are politically strong. A Ramadoss or Jayalalitha can marginalise him with little effort.

முத்து தமிழினி said...

//He cannot become a powerful force without consolidating the dalit votebank in his favor.//

சுருக்கமாக, தலித் அல்லாத மக்களிடம் அவரை தலைவராக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கும் என்கிறீர்களா?


ஈழ பிரச்சினையில் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளதாகவும் ஒருவித எழுச்சி தமிழகத்தில் இருப்பதாகவும் பேசப்படும் இந்த சூழ்நிலையில் திருமாவளவனால் அந்த மாணவர்களையும் தமிழ் இயக்கங்களையும் ஒன்றினைத்து போராட முடியுமா?

முத்து தமிழினி said...

//திமுக அழிவுப்பாதையில் பயணம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில்

You are underestimating MK and DMK.//

அழிவு பாதையில் திமுக என்று நான் கூறுவது ஈழ பிரச்சினையில் கருணாநிதியின் நிலையை வைத்து அல்ல...( பல நண்பர்களுக்கு காண்டு)..

நான் திமுக அழிவுப்பாதையில் போகின்றது என்று கூறியது மற்ற பல காரணங்களுக்காக.(பின்னால் முடிந்தால் எழுதுகிறேன் ஏன் என்று நான் நினைப்பதை)

Hariharan # 03985177737685368452 said...

//சாதி விட்டு அவர் மேல் எழுந்து வரக்கூடாதா? சாதி அரசியல் மட்டும் தான் செய்யணுமா?//

50:50 என்று செய்யட்டும். சாதி இல்லாத தமிழகத்தை கனவிலும் நான் அடுத்த 200 ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவில்லை!

//சாதி அரசியல் செஞ்சா சாதி அரசியல்னு குற்றம் சாட்டுவீங்க.சரி அதையும் மீறி வந்தா சாதிக்கு என்ன பண்ணிட்டாங்கறீங்க...//

பேருந்தின் மீது கல்வீச தன் சமூகத்திற்குக் கற்றுத் தருவதற்கு என்று இன்னும் ஒரு கட்சி திருமாவளவன் நடத்த தேவையா? திருமாவளவன் சார்ந்த சமூகத்தின் பிரதான தேவை இதுதானா???//அவர் எழுச்சி பெறுவது கடினம் என்று நான் கூறியதற்கு உள்ள காரணங்களில் முக்கியமானது உங்களை போன்றோரது இந்த கருத்து.//

என்னைப் பற்றி ஒரு முன் முடிவுடன் இருப்பதால் இப்படிக் கூறி இருக்கிறீர்கள்.

உண்மையாக தமிழக மக்கள் தொகையில் 20% க்கும் மேல் இருக்கும் திருமாவளவனின் சமூகத்தினர் கழகங்களினால் அடியாட்களாகவும் கூட்டங்களுக்கு பிரியாணி, சாராயம் பேட்டாவுக்கு என மட்டும் பயன்படுத்தப்படும் நிதர்சனம் நீங்கி கல்வி பெற்று வாழ்வில் பண்பட்டு மேம்பட்டவர்கள் ஆனால்தான் தமிழகத்திற்குப் பெருமை என்பதை உணர்ந்திருக்கிறேன்.

ஆண்டு தோறும் கழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் கல்லாக் கட்டும் 8000 கோடியில் முப்பது சதவீதம் திருமாவளவன் சார்ந்த சமூகத்தினர் முறையற்று கல்வி தவிர்த்து சாராயத்திற்கு செலவிடும் பணமே என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

i criticize periyar said...

'ஈழ பிரச்சினையில் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளதாகவும் ஒருவித எழுச்சி தமிழகத்தில் இருப்பதாகவும் பேசப்படும் இந்த சூழ்நிலையில் திருமாவளவனால் அந்த மாணவர்களையும் தமிழ் இயக்கங்களையும் ஒன்றினைத்து போராட முடியுமா'

Very difficult because supporting LTTE may alienate many who dislike
LTTE and still support the cause of Srilankan Tamils. The students
cannot afford to do much as exams are due in the next two months.
Tamil movements are weak and cannot mobilise much support.
So sustaining any struggle by him
will be very difficult. With
polls around the corner he cannot afford to spend much energy on this
alone. How credible will be his struggle when he has an alliance with DMK. If he wants to fight against the central govt., VCK should quit that alliance in which Congress is a partner. Karunanidhi will try to co-opt him and both Jayalalitha and Ramadoss will try to woo him and try to neutralise his efforts to lead a struggle for srilankan tamils by offering a seat or two in the parliamentary polls.For all his talks walking the talk is not going to be easy.
BSP will try to weaken his party.
So the challenges are too many
and options are too few.

முத்து தமிழினி said...

//Very difficult because supporting LTTE may alienate many who dislike
LTTE and still support the cause of Srilankan Tamils//

இலங்கை தமிழர் நலமாக வாழவேண்டும் என்று உண்மையாக நினைக்கும் பலரும் விடுதலைபுலிகளையும் இலங்கை தமிழரையும் பிரித்து பார்ப்பதில்லை என்று சமீபத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்து தமிழினி said...

//சாதி இல்லாத தமிழகத்தை கனவிலும் நான் அடுத்த 200 ஆண்டுகளுக்கு எதிர்பார்க்கவில்லை!//

நீங்கள் குழப்பி கொண்டு வீட்டீர்கள்.

சாதி அரசியல் இந்தியா முழுக்க உள்ளது. ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் என்பது போல் குழம்பாதீர்கள்.

நான் கூறுவது ஒரு சாதிக்கான அரசியல் தலைவராக திருமாவளவன் இருக்கவேண்டியது இல்லையே என்பதைத்தான்.


//பேருந்தின் மீது கல்வீச தன் சமூகத்திற்குக் கற்றுத் தருவதற்கு என்று இன்னும் ஒரு கட்சி திருமாவளவன் //

அவர் என்ன அதற்காக ட்ரெய்னிங்கா தருகிறார்? என்னங்க இது?

சாராயத்திற்கு யார் எவ்வளவு செலவு செய்வார்கள் என்றெல்லாம் கணக்கு எடுத்திருக்கிறீர்கள்.:)

இதுவெல்லாம் திருமாவளவன் அரசியல் எதிர்காலத்திற்கு எந்த விதத்தில் சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.

Rajaraman said...

ஏன் மன்சூர் அலி கானை விட்டு விட்டீர்கள்.

முத்து தமிழினி said...

//ஏன் மன்சூர் அலி கானை விட்டு விட்டீர்கள்.//

மன்சூர் அலிகான், எஸ்.வி.சேகர் எல்லாம் பின்னாடி வர்றாங்க :)

தமிழ்வெளியை பார்த்தீங்களா?