Wednesday, March 25, 2009

ஈழ துரோகியும் ஈழ நாயகியும்

நாளைக்கே ஈழத்திற்கு சென்று போரிடும் ஆர்வத்தில் இருந்த கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு கூட்டணியாக தேடி ஓடிவிட்டனர். கீழ்க்கண்ட பதிவுகளில் குறிப்பிட்டபடி சம்பவங்கள் நடப்பதை நக்கீரன் வாயிலாக அறிய முடிந்தது.


http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

ஈழ பிரச்சினையை தேர்தல் பிரச்சினை ஆக்கலாம் என்றும் கூறிய ஈழ ஆர்வலர்கள், சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய அதிமுக கூட்டணியில் தமிழின போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதற்கு என்ன சாக்கு சொல்வார்கள் என்று தெரியவில்லை.

பொதுவாக தமிழ் ஆர்வலர்கள் அம்மா ஆட்சியில் சப்த நாடியும் ஒடுங்கி இருப்பதும் கலைஞர் ஆட்சி வந்தால் ஆடுவதும் சகஜம்தான். ஆனாலும் இந்த முறை ரொம்ப ஓவர்.கருணாநிதி தமிழின துரோகி என்றால் ஜெயலலிதா என்ன ஈழ நாயகியா?

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை பல ஈழத்தமிழர்களும் கருணாநிதியை போட்டு தாக்கியதை பார்க்க முடிந்தது. உணர்வுபூர்வமாக பார்க்கும்போது அது பெரும் குற்றமாக தெரியவில்லை என்றாலும் ஈழத்தமிழர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும் விட ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெறும் பொறுப்பு யாருக்கு உண்டு? கருணாநிதிக்கா?

சரி. தேர்தல் கணக்கை பார்ப்போம். மதிமுகவை கணக்கில் எடுக்க முடியாது. வடமாவட்டங்களில் பா.ம.க ஆதரவு உள்ளதால் அதிமுக எளிதில் வெல்லும் என்றே நினைக்கிறேன். விஜயகாந்த் எந்த அளவிற்கு ஓட்டை பிரிப்பார் என்பதை பொறுத்தே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள்.

நாளைக்கு திமுக கூட்டணி தோற்றா(ல்)லும் மத்தியில் ஆட்சி அமைக்க நிலைக்கு காங்கிரஸ் வந்தால் டாக்டர் காங்கிரஸ் கூட்டணிக்கு போய்விடுவார். ( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).

காங்கிரசுடன் சேரும் டாக்குடர் அய்யா அப்படியே அம்மாவையும் கொண்டு போனால் திமுக ஆட்சி இங்கு பணால்தான். ஆக தமிழக அரசியல் சூடு பிடிக்கிறது.

திமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டம். ஆளுங்கட்சி எந்த எல்லைக்கும் போகும். கூட்டணி கட்சியான காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த தேர்தல் பரபரப்பாக இருக்கும். நரேஷ் குப்தா..எப்படிப்பா இருக்கே?26 comments:

CrazyTennisParent said...

ஒரு கொசுறு செய்தி:

ஈழத்தில் பிரச்சினை. நீ என்ன பண்ணிகிட்டு இருக்க ஆபிசுல, என்று நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டார்.

நானும் பயந்துகிட்டே, சரி நீங்க எங்க வன்னியில் இருக்கீங்களா, இல்ல புதுக்குடியிருப்பிலா என்றேன்.

இல்ல சென்னையில்தான். ஊர்வலம் போறோம்னாரு.

அடக்கொக்கமக்கா..இதையே கருணாநதிதி செஞ்சா திட்டறீங்களேடா நெனச்சென்..சொல்லல...

CrazyTennisParent said...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5616

நக்கீரன் உரல் மேலே.

அபி அப்பா said...

ஏங்க இதல்லாம் சொல்லிகிட்டு சொன்னா நம்மளை தமிழின துரோகின்னு சொல்வாங்க!எட்டாவது பாஸு பெரிசா , எஸ்ஸெல்சி பெயிலு பெருசான்னு கவுண்டமணி செந்தில் கதையா போகும்.

CrazyTennisParent said...

சர்டிபிகேட் கொடுத்தவங்க கதையத்தான் எழுதி இருக்கேன்

:)

CrazyTennisParent said...

http://thatstamil.oneindia.in/news/2009/03/25/tn-bjp-advice-to-to-pro-ltte-groups.html

இல.கணேசன் பேசியிருக்காருபா...

Adriean said...

//சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய அதிமுக கூட்டணியில் தமிழின போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதற்கு என்ன சாக்கு சொல்வார்கள் என்று தெரியவில்லை.//
சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று புலி ஆதரவாளர்களும் கூறி முன்பு போர் பிரகடனம் செய்தவர்கள் தான்.
ஒவ்வொரு நகரையும் புலிகள் பறிகொடுக்க தொடங்கியவுடன் தான் மக்கள் அழிகிறார்கள் போர் நிறுத்தம் உடனே தேவை என்று கேட்க தொடங்கியவர்கள்.

மோகன் கந்தசாமி said...

////இதையே கருணாநதிதி செஞ்சா திட்டறீங்களேடா நெனச்சென்..சொல்லல...////

கருணாநிதி என்ன உங்கள் நண்பரின் பக்கத்துவீட்டில் காலத்தை ஓட்டுகிறாரா? அல்லது உங்களுடன் அலுவலகத்தில் பொட்டி தட்டுகிறாரா?

கருணாநிதி உங்கள் அலுவலக நண்பர்தான் என தெரிந்திருந்தால் நாங்கள் அவருக்கு போட்ட ஓட்டை உங்களுக்கே போட்டு முதல்வராக்கி இருப்போமே! நீங்களும் விசுவாசத்துடன் ஈழத்திற்கு ஏதாவது செய்திருப்பீர்கள்!!!

நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் செய்யமுடிந்த மிக அதிகப்படியான செயல் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவை தெரிவிப்பது. உங்கள் நண்பரால் முடிந்ததை அவராக மனமுவந்து செய்துவிட்டார். இனப்பேரழிவை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கொண்டு, செய்யவேண்டியதையும் செய்யமுடிந்ததையும் தட்டிக் கழித்துக்கொண்டு, அவ்வப்போது சிணுங்கிக் கொண்டு காலத்தை ஓட்டவில்லை உங்கள் நண்பர். அவருடன் கருணாநிதியை ஒப்பிடுவதே மிகத்தவறு. உண்மையான அக்கறையுடனும் பதைபதைப்புடனும் பேரணியில் கலந்துகொண்டவர்களை கொச்சை படுத்துவது கூடாது.

கருணாநிதி போன்றவர்கள் ஈழத்தமிழருக்காக உயிரையும் தருவேன் என்று கூறும் பொது ஏற்படும் ரத்த அழுத்தம் ஜெயலலிதா போன்றவர்கள் போரில் மக்கள் சாவது இயல்பு என்று கூறும்போது வருவதில்லை. இப்படி ஒரு அற்பமான மனிதர் திமுக தலைவராக இத்தனை காலம் இருந்தார் என்பதே வியப்பாக உள்ளது.

மேலும், உங்களை ஒன்று கேட்கிறேன்! நேர்மையாக பதில் சொல்லுங்கள். கடந்த நான்கு மாதங்களாக ஈழத்தமிழருக்கு கருணாநிதி செய்துவருவதுதான் அவரால் முடிந்ததா? இதற்குமேல் அவரால் எதுவும் முடியாது என்று சொல்லுங்கள், இந்த பின்னூட்டத்தை நானே நீக்கி விடுகிறேன்.

லக்கிலுக் said...

//நாளைக்கு திமுக கூட்டணி தோற்றா(ல்)//

இந்த அளவுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை முத்து. திமுக தமிழ்நாட்டில் வலுவாகவே இருக்கிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் டிவி ஹீரோ என்றால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு ரூபாய் அரிசி ஹீரோ.

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியுமே இல்லாமல் தனித்து நின்றாலும் கூட இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல முடியும் என்பதே களநிலவரம்.

முத்துக்குமார் தியாகத்தைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை கண்டபோது எனக்கும் கலைஞர் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் தமிழின உணர்வாளர்கள் என்று சான்றிதழ் தரப்பட்ட ஈழத்தமிழர்களின் காவலர்களாக முத்திரை குத்தப்பட்ட வைகோ, ராமதாஸ் உள்ளிட்டவர்களின் அடுத்தடுத்த பல்டிகளும், அந்த பல்டிகளை ஜீரணித்து சாக்கு போக்கு சொல்லும் நம் வலையுலக தமிழுணர்வாளர்களும் கலைஞரை மட்டுமே துரோகியாக கார்னர் செய்யும் நிலையில் கலைஞர் மீது இப்போது அனுதாபமே மேலோங்கி வருகிறது.

சுயநலமில்லா பொதுநலம் சாத்தியமேயில்லை என்பது கலைஞருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பொருந்தும்.

குழலி / Kuzhali said...

//( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).
//
மேட்டர் தெரியாதா? அன்புமணி அவிங்க பசங்களுக்கு டில்லியிலிருந்து டிசி வாங்கிட்டாராம்...

மற்றபடி பதிவு மேட்டர் குறித்து முத்து தமிழினியும் மருத்துவர் இராமதாசும் என் கணிப்பை ஏமாற்றலை.

மாயவரத்தான் said...

பேரை 'முத்து கருணாநிதினி'ன்னு மாத்துங்க தல!

ராஜ நடராஜன் said...

ஒவ்வொருவருக்கும் சுயநலம் கலந்த அணுகுமுறை.மனம் விரக்தியடைந்து விட்டது.சொல்வதற்கொன்றுமில்லை.

நந்தா said...

//அடக்கொக்கமக்கா..இதையே கருணாநதிதி செஞ்சா திட்டறீங்களேடா நெனச்சென்..சொல்லல...//

அது எப்படி கலைஞர் சார்ந்த பதிவுகளின் போது மட்டும் எவ்வளவு நன்றாக யோசிக்கக் கூடியவராயினும் வெகு சாதாரணமாய் தோன்றக்கூடியதைக் கூட யோசிக்க முடியாமல் போகின்றனர் என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

மோகன் கந்தசாமி நான் கேட்க நினைத்ததை ஆணித்தரமாகவே கேட்டிருக்காரு.

கருணாநிதி யார் யாருக்கிட்டயோ கூட்டணி வெக்க எல்லாம் முயற்சி செய்ய வேண்டாம். ஜெயலலிதா கூட வெச்சுக்கலாம். ரெண்டு பேரும் இப்போ எல்லாம் ஒரே மாதிரிதான் நடந்துக்கிறாங்க.

Pot"tea" kadai said...

நாய் எந்த சாதியா இருந்தாலும்...டாபர்மேனோ, அல்சேஷனோ அல்லது கோல்டன் ரிற்றீவரோ...எந்த நாய் வாலையும் நிமிர்த்த முடியாது. என்னை தூக்கி உன் தோளில் வை எல்லா நாய் வாலையும் நிமிர்த்திக் காட்டுகிறேன் என்று கூறியே தோளில் உட்கார்ந்திருக்கும் நாயை எந்த நாய்க்கும் பிடிக்காது.

அம்புட்டுதேன்...

//கலைஞர் மீது இப்போது அனுதாபமே மேலோங்கி வருகிறது./
கழகத்துல இருக்கவங்களுக்கு அப்படி தானே வரனும்.

//திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியுமே இல்லாமல் தனித்து நின்றாலும் கூட இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்ல முடியும் என்பதே களநிலவரம்//

தமாசு தான பன்றீங்க?

சென்ற தேர்தலில் திமுகவினர்(பாமக உள்ளிட்ட கூட்டணியினர்) தர்மபுரி எரிப்பை காமிச்ச மாதிரி ஹிந்துலயும், தினகரன்லயும் தினகரன் அலுவலக எரிப்பைப் போட்டு இவிங்களுக்கா உங்கள் ஓட்டுன்னு கேட்க போறாங்களாம்.

என்ன எழவோ...எந்த நாய் கெலிச்சாலும் எனக்கு லோன்ல ரிபேட் தரப்போறதில்லை. அதனால் நா உட்டுக்கறேன் அப்பீட்டு.

மோகன் கந்தசாமி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு..

CrazyTennisParent said...

மோகன் கந்தசாமி சொன்னதுக்கு ரீப்பிட்டு சொன்னவர்களுக்கு நான் அப்பீட்.

வெலாவாரியா தீக்குளிக்க நான் தயாரில்லை.நான் சொல்லவந்ததை சொல்லிட்டேன்.மத்ததை அப்பாலிக்கா பார்ப்போம்.


இன்னமும் தேர்தல் முடிவை பொறுத்து ஈழ ஆதரவாளர்கள் இது எங்களால்தான் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறதுதான்.

CrazyTennisParent said...

//பேரை 'முத்து கருணாநிதினி'ன்னு மாத்துங்க தல!//

என் சமீபத்திய பதிவுகள் எல்லாம் ஈழ விவகாரமும் கலைஞரும் என்ற அளவில் மட்டுமே..

CrazyTennisParent said...

//நேர்மையாக பதில் சொல்லுங்கள். கடந்த நான்கு மாதங்களாக ஈழத்தமிழருக்கு கருணாநிதி செய்துவருவதுதான் அவரால் முடிந்ததா? இதற்குமேல் அவரால் எதுவும் முடியாது என்று சொல்லுங்கள்,//


முடியாது என்பதுதான் என் கருத்து. தனிதமிழ்நாடு முதல்ல வாங்குவோம்.எனக்கும் இதுதர்ன ஆச்சரியம். எப்படி இந்த மாதிரி விஷயங்களில் மக்கள் யொசிக்கவே மாட்டறாங்கன்னு தான்.

CrazyTennisParent said...

//முடியாது என்று சொல்லுங்கள், இந்த பின்னூட்டத்தை நானே நீக்கி விடுகிறேன்//

எதுக்கு பின்னூட்டததை நீக்கணும்..இருந்துட்டு போகட்டும்....

Sanjai Gandhi said...

//( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).//

இதை விட தெளிவா யாராலும் சொல்ல முடியாது. :)) தேர்தல் முடிஞ்சதும் உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டன்னு அம்மாவும் ஐயாவும் அடிச்சிப்பாங்க. எல்லாம் சரி தான். வைகோ வைகோன்னு ஒருத்தர் கழுத்தை புடிச்சி வெளிய தள்ளினாலும் போக மாட்டேன்னு அம்மா காலையே சுத்து வராரே அவர் கதி என்ன ஆகும்? :(
பாவம் யாரு பெத்த புள்ளயோ.. நல்லா இருக்கோனும். :(

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//முத்து தமிழினி said...

ஒரு கொசுறு செய்தி:

ஈழத்தில் பிரச்சினை. நீ என்ன பண்ணிகிட்டு இருக்க ஆபிசுல, என்று நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டார்.

நானும் பயந்துகிட்டே, சரி நீங்க எங்க வன்னியில் இருக்கீங்களா, இல்ல புதுக்குடியிருப்பிலா என்றேன்.

இல்ல சென்னையில்தான். ஊர்வலம் போறோம்னாரு.

அடக்கொக்கமக்கா..இதையே கருணாநதிதி செஞ்சா திட்டறீங்களேடா நெனச்சென்..சொல்லல...//

கொசுறு என்றால் காய்கறிக்கு கறிவேப்பிலை அல்லது மளிகை பொருள் வாங்கினா கொடுக்கிறாங்களே பொட்டு கடலை சக்கரை அது மாதிரி என்று சொல்வார்கள்!

உங்கள் ஒப்பீடு உங்களுக்கே சரியா வருதா என்று இன்னொரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்(படித்துப் பாருங்கள்).
முதல்வர் கருணாநிதியும், உங்க நண்பரும் ஒண்ணா?

CrazyTennisParent said...

//முதல்வர் கருணாநிதியும், உங்க நண்பரும் ஒண்ணா?//

அய்யா அறிவாளிகளா! அவங்கவங்க லெவலுக்கு அவங்கவங்க பண்ணுவாங்க.அவ்ளொதான்.

நண்பர் சட்டசபைல தீர்மாணம் நிறைவேற்ற முடியாது என்பது சரிதான். நண்பர் என்னையை பார்த்து ஈழம் பற்றி யெறியுது.நீ என்ன ஆபிசுல உட்கார்ந்துட்டு பொருளாதாரம் பத்தி என்கிட்ட பேசறன்னு கேட்கறதும் தப்புதான். அப்ப நீ என்ன வன்னியில் இருந்தா பேசறன்னு நான் கேட்பேன்தான்.


உங்களுக்கு எப்படி பிரேக்கிங் பாயிண்ட் இருக்கோ அதுமாதிரி எல்லாருக்கும் இருக்கு என்பது புரியணும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//முத்து தமிழினி said...

//முதல்வர் கருணாநிதியும், உங்க நண்பரும் ஒண்ணா?//

அய்யா அறிவாளிகளா! அவங்கவங்க லெவலுக்கு அவங்கவங்க பண்ணுவாங்க.அவ்ளொதான்.

நண்பர் சட்டசபைல தீர்மாணம் நிறைவேற்ற முடியாது என்பது சரிதான். நண்பர் என்னையை பார்த்து ஈழம் பற்றி யெறியுது.நீ என்ன ஆபிசுல உட்கார்ந்துட்டு பொருளாதாரம் பத்தி என்கிட்ட பேசறன்னு கேட்கறதும் தப்புதான். அப்ப நீ என்ன வன்னியில் இருந்தா பேசறன்னு நான் கேட்பேன்தான்.


உங்களுக்கு எப்படி பிரேக்கிங் பாயிண்ட் இருக்கோ அதுமாதிரி எல்லாருக்கும் இருக்கு என்பது புரியணும்.//

நாங்க அறிவாளி இல்லைங்க சாமி!
நீங்க தான் ஒத்துக்கிறோம்!
உங்க நண்பர் உங்களிடம் கேட்டது உங்களுடைய சொந்த விடயம், வேலை நேரம் காலம் இவற்றைப் பொருத்தது. அதைப் பற்றி உங்களிடம் யார் கேட்டது?
தாங்கள் பொதுவில் வைக்கிற விடயத்திற்கு கொஞ்சம் கோபப் படாமல் பதில் சொல்லலாமே?!
தங்கள் ஒப்பீடு பற்றி மட்டுமே யாம் கேட்டோம் ஐயா!?

enRenRum-anbudan.BALA said...

//கருணாநிதி தமிழின துரோகி என்றால் ஜெயலலிதா என்ன ஈழ நாயகியா?
//

இந்த மாதிரி கம்பேரிசனே காமடியா இருக்கு :) ஈழப்பிரச்சினையில் அம்மாவோட ஒப்பீடு பண்ர அளவுக்கு கருணாநிதி நிலைமை இருக்கறது பரிதாபமில்லையா ???

Fact என்னவென்றால், நாடகம் இப்ப தெளிவா அம்பலமாகி விட்டது. சார்பு நிலையைத் தாண்டி கொஞ்சம் யோசியுங்களேன் ப்ளீஸ் !!!

enRenRum-anbudan.BALA said...

மோகன் கந்தசாமி,
//உண்மையான அக்கறையுடனும் பதைபதைப்புடனும் பேரணியில் கலந்துகொண்டவர்களை கொச்சை படுத்துவது கூடாது
//

மிகச் சரியான கருத்து ...

அதோடு, உங்கள் பின்னூட்ட கருத்துகள் அத்தனையுமே அருமை, நன்றி.

CrazyTennisParent said...

//விடயத்திற்கு கொஞ்சம் கோபப் படாமல் பதில் சொல்லலாமே?!
தங்கள் ஒப்பீடு பற்றி மட்டுமே யாம் கேட்டோம் ஐயா//

:) ஒரு வாக்கியகோர்வையில் ஒரு வார்த்தையை மட்டும் வெச்சி கேள்வி கேட்டா என்ன சொல்றது?கோவமெல்லாம் இல்லைங்க..

நீங்க கருணாநிதியை மட்டும் கும்முங்க..மத்தவங்களுக்கு 100 மார்க் கொடுங்க யாரு வேணாண்ணா :)

CrazyTennisParent said...

//ஈழப்பிரச்சினையில் அம்மாவோட ஒப்பீடு பண்ர அளவுக்கு கருணாநிதி நிலைமை இருக்கறது பரிதாபமில்லையா ???//

பாலா, அதைவிட காமெடி ஈழ போராளிகளே அம்மா கூட்டணியில் இருக்காங்க அப்படிங்கற போது அம்மா தான ஈழ பிரச்சினையில் கருணாநிதியை விட தமிழர்கள் நலம் விரும்பி என்று தெளிவாகுது இல்லையா?அப்புறம் என்ன?


நாடகம் அம்பலம் என்றெல்லாம் சந்தில் ஏன் சிந்து பாடணும்? உங்க ஆசை நிறைவேறாததற்கு என் அனுதாபங்கள்.

தேர்தல் முடியட்டும்.ஒரு வேளை நடக்கலாம்னுதானே சொல்லியிருக்கேன் :)

நியோ / neo said...

என் கருத்து:

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

தமிழ்வெளியை பார்த்தீங்களா?