Saturday, May 16, 2009

ஆட்டம் ஆர்ப்பாட்டம் - தொடர்ச்சி

ராமதாசு படுதோல்வியை சந்தித்து இருப்பது இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ( கவுண்டணுங்க புண்ணியத்துல கணேசமூர்த்தி கரைசேர்ந்தார். கூடவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வாய்கொழுப்பும்). வைகோ இதோ அதோ என்று தொங்குகிறார்.மத்தபடி பா.ம.க வாஷ் அவுட் என்பது மிக மிக தேவையான ஒன்று.

என் கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்று பினாத்தி திரி்ந்த ராமதாஸ் என்ன பதில் ( காரணம்) சொல்லப்போகிறார் என்று உலகே எதிர்ப்பார்க்கிறது. அம்மா உறுதி கொடுத்த ராஜ்யசபா பதவியும் கிடைக்காது. (இந்த முறை தலைமை செயலகம் என்ன...போயஸ் தோட்டம் கேட்டுக்குள்ளே கூட போகமுடியாது டாக்குடர் அய்யா). அன்புமணி கடுப்பு ஆயிருப்பார். இவர் அடிச்ச கூத்தில் பாவம் சின்னய்யா. ஒரு நல்ல மத்திய அமைச்சரை இந்தியா இழக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி ஒண்ணுமே பண்ணலைன்னு சொன்ன புண்ணியவானுங்க ஒன்று தனிக்கூட்டணி கண்டிருக்கணும் அல்லது தேர்தலை புறக்கணிச்சிருக்கணும். அவங்களுக்கு வக்காலத்து வாங்கிய எணைய அறிவுசீவிகள் திமுக, அதிமுக இருவரையும் புறக்கணித்து குறைந்தபட்சம் கேப்டனை ஆதரிக்கலாம்னு எழுதியிருந்தா கூட இவங்களுக்கு ஒரு தார்மீக பலம் இருந்திருக்கும். புர்ச்சிதலைவியை நம்பி...ஹிஹிஹி.....

திமுக எப்பவுமே பா.ம.கவை உள்குத்துமாம். அதுனால் செயற்குழுவே அதிமுக கூட்டணின்னு முடிவு செஞ்சதாம். அய்யா இப்ப அதிமுக உள்குத்து, உள் நடுக்குத்து, வெளிக்குத்து, குருக்குத்து என்று ஏகப்பட்ட குத்து குத்திருச்சே. என்ன பண்ணலாம்?இருக்கவே இருக்கு அம்மா ஸ்டைல் பல்டி. எதையாவது சொல்லுங்க. கள்ள ஓட்டு. பணம் கொடுத்தாங்க அப்படின்னு காரணமா இல்ல. இவிங்க கொடுத்த பணத்தை நானும்தான் பார்த்தேன்.

அப்புறம் புரட்சிதலைவியும் உங்க மேல கோவமா இருக்காங்களாம். சும்மா இருந்த புரச்சிதலைவியை ஈழ பிரச்சினையை பேசவச்சி உண்மையான உணர்வாளர்களின் ஓட்டை திமுக பக்கம் திருப்பியதற்கு காரணம் நீங்கதானாமே?

அப்புறம் முதல்ல விஜயகாந்த்கிட்டே மோதிட்டு அப்புறம் கருணாநிதியை ஒண்டிக்கு ஒண்டி வரசொல்லுங்க அய்யா....

எப்பவுமே கருணாநிதியை எதிர்க்கும் பிராமண ஆதரவாளர்கள் கள்ள மெளனம் காத்தனர். தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது சத்தமில்லாமல் அம்மா ஜெயிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். புரட்சிதலைவி செட்டியார் கடையில் ஈழம் வாங்கித்தருவேன் என்று கூறியதை இவர்கள் ஒரு ஜோக்காக மட்டுமே எடுத்துக்கொண்டு கருணாநிதியின் தோல்வியை ஆவலோடு எதிர்ப்பார்த்தார்கள். சோவின் பேச்சு, பேட்டிகளை கவனிப்பவர்களுக்கு இது புரிந்திருக்கும். பதிவுலகிலும் சில பதிவுகள் இந்த அப்ரோச் செய்திருந்தன. அவர்களுக்கும் கு** கிழிக்கப்பட்டது தெரியாமல் கிழிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். கடந்த சில மாதங்களில் இந்த மனுசனை எல்லாரும் திட்டியது அவர் சொல்லுவது போல் எருவாகிவிட்டது.

36 comments:

முத்து தமிழினி said...

test

குழலி / Kuzhali said...

கருணாநிதியின் நல்ல ஆட்சிக்கும், அவர் தமிழரின் பால் கொண்டுள்ள அன்பிற்கும், கருணைக்கும், தன்னலம்ம் கருதா உழைக்கும் மேன்மைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் திமுகவின் இந்த வெற்றி எப்படி தல ஓகே வா?

குடியாட்சி கோமகன்னு அண்ணாதுரை ஒரு கட்டுரை பக்தவசலத்தை நோக்கி எழுதியிருந்தார் வரிக்குவரி இன்னைக்கு தமிழின தலைவருக்கு பொறுந்தும்...

மற்றபடி திமுக-காங்கிரஸிற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் மக்கள்... எஞ்சாய்... ஸ்ட்ராட் மீசிக்,...

முத்து தமிழினி said...

குழலி,

நன்றி என்று மட்டும் இப்போதைக்கு போட்டு வைக்கிறேன்.

நீங்க யோசிப்பீங்கன்னு நம்பல. திருமா சொல்றதையும் கேப்பீங்கன்னு நம்பல. ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு...

-/பெயரிலி. said...

/புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்/

தமிழக அரசியலிலே கருத்தினைச் சொல்லுமளவுக்கு எனக்குத் தெரியாது.

எடுத்ததுக்கெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களைக் குற்றம் சாட்டுகின்றீர்களே. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியல்வாதிகள் ஈழத்திலே மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்று நம்பிய காலம் போய் நெடுங்காலம். அப்படி ஒரு நம்பிக்கையிருந்திருந்தால்,ரொரொண்டோவிலே கார்டினர் பாலத்துக்கு மேலே போய் "உயிரா? மயிரா?"" என்று நின்றிருக்கமாட்டார்கள். இலண்டனிலே வெஸ்மினிஸ்ரருக்கு முன்னாலே இடிபட்டு நாளும் நிற்கமாட்டார்கள்.

ஆனால், தமிழக அரசியலிலே காங்கிரஸ் தோற்கவேண்டுமென்று உள்ளூர விரும்பியவர்களிலே நானுமொருவன். இன்றைக்கும் சிதம்பரம் என்பவர் வென்றதும் வைகோ என்ற இடம் தெரியாது ஒதுங்கியவர் தோற்றதும் வருத்துகிறது; "சோனியா வாழ்க" என்று மேடையிலே முழங்கித்தொலைத்த திருமாவளவன் வென்றதும் "யாருங்க அது முத்துக்குமரன்" இளங்கோவன், தங்கபாலு, மணிசங்கர ஐயர் தோற்றது மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால், ஜெயலலிதா-கருணாநிதி இருவருக்குள்ளும் இரண்டு கட்சிக்குள்ளும் என்னைப் பொறுத்தமட்டிலே பெரிய வித்தியாசமில்லை. இருபுறமும் அவர்களின் ஆதரவாளர்களும் ஈழத்தமிழரை ஊறுகாயாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதிலே எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. கருணாநிதியுடனோ ஜெயலலிதாவுடனோ தமிழினக்காவலர் போட்டிக்கு எந்த ஈழத்தமிழ்த்தலைவரும் வந்து நிற்கவில்லை; அப்படி நிற்பதுதான் முக்கியமானதென்ற எண்ணம் வரக்கூடிய நடப்பும் அங்கில்லை. "கருணாநிதியை யாரோ திட்டினார்கள் என்பதற்காக, "ஈழத்தமிழனுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்றவர் அபி அப்பா. பிரபாகரன் என் ஹீரோ ஆனால், கலைஞருக்கு அவர் போட்டியோ என்னமோ என்று விடுதலைப்புலிகளின் தவறுகளை அ. மார்க்ஸ், சுகுணா திவாகர் மட்டத்திலே திடீரெனக் அதிர்ஷ்டவசமாகப் பார்த்துக் கண்டுபிடித்துப் பதிவு போட்டவர்களையும் பார்த்தாகிவிட்டது. விடுதலைப்புலிகளுக்கு அரசியல் தெரியாமலுமில்லை என்றும் நம்புகிறேன். ஆனால், இராணுவ அமைப்பு ஒன்றிற்கிருக்கக்கூடிய எல்லை என்பது ஆயுதம் "சட்டரீதியாக" வாங்கும் அரசுக்கும் கலர் டிவி காட்டி அரசமைக்கும் அரசுக்கும் மும்

வேண்டுமானால், கலைஞர் வாழ்கவென்று திமுக ஆதரவாளர்கள் சொல்லிவிட்டுப் போங்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களோ புழுதியிலே புழுத்துப்போன தமிழர்களோ வந்து எப்படியாகச் சொல்லலாமென்று கேள்வி கேட்கப்போவதில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் தெரியாத அடிமுட்டாள் என்பதிலிருந்து வைக்கிறேண்டா ஆப்பு என்ற அளவிலே பேசாதீர்கள்.

உங்களுக்கு ஈழத்தமிழரின் நிலை தமிழக அரசியல் பேசுவதற்காக ஒரு வாய்ப்பாகத் தெரிகின்றதோ என்னமோ தெரியவில்லை; ஆனால், தமிழக அரசியலாடும் பின்புலமும் ஈழத்தமிழர் அரசியலிலேயாடும் பின்புலமும் முழுக்கவும் வேறுவேறு. ஜெயலலிதா "நான் ஈழத்தினை எடுத்துத்தருவேன்" என்றபோது நானறிந்து நிதானமான எந்த ஈழத்துப்புலம்பெயர்ந்தவரும் அதை நம்பவில்லை; அதேபோலத்தான், கருணாநிதியின் பாதிநாள் உண்ணாவிரதத்துக்கு ராஜபக்சே ஆடித்தொலைப்பாரென்றுமேதான் நம்பவில்லை.

முத்துக்குமரன் போன்றவர்களிலும் அவர்களினை ஒட்டி ஒழுகும் எத்தனையோ தமிழகத்தவர்களிலே நன்றியும் மதிப்பும் கொண்டிருக்கின்றபோதுங்கூட, அவர்களாலே இன்றைய நிலையிலே தமிழகத்திலே எதையும் செய்யமுடியுமென்றும் நம்பவில்லை.

தமிழகத்தின் அரசியல் ஈழத்தமிழரைச் சார்ந்திருக்கவேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சனையுண்டு. கண்ணுக்கு முன்னால் நின்று கவலைதரும் அரிசிப்பிரச்சனையும் கலர் டிவியும் ஆறாயிரம் ரூபாவும் கடலுக்கப்பால் செத்துக்கொண்டிருக்கும் காணாத மனிதர்களிலும்விட நிச்சயமாக முக்கியமாகவேண்டும். அதுதான் மனித இயல்பு.

/ தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது சத்தமில்லாமல் அம்மா ஜெயிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர்./
இதுதான் "ஈழத்துக்காக ஜெ வாழ்க" என்ற கூட்டத்துள்ளே தலையைப் போடாமலிருந்ததற்குக் காரணம். ஆனால், கருணாநிதி என்ற நவபார்ப்பனியவாதிக்கும் ஜெயலலிதா என்ற அசலான பார்ப்பனியவாதிக்கும் எவ்விதமான வித்தியாசமும் இன்றைய நிலையிலே தெரியவில்லை. தமிழக அரசியலிலே ஈடுபாடில்லாத நிலையிலே அதைப் பற்றிக் கவலையுமில்லை.

ஆனால், இன்னும் இருபது ஆண்டுகளிலே தமிழகம் 1983 இன் ஈழமாக வந்து நிற்கையிலே உயிரோடு இருப்பின், வந்து ஒரு பதிவோ அன்றைய நிலையிலேயான கருத்தாடற்களத்திலோ எழுதலாம்.

உடன்பிறப்பு said...

//இந்த முறை தலைமை செயலகம் என்ன...போயஸ் தோட்டம் கேட்டுக்குள்ளே கூட போகமுடியாது டாக்குடர் அய்யா//

அவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, நாம கண்டிச்சா தான் முறுக்கிக்குவாங்க

உடன்பிறப்பு said...

//எப்பவுமே கருணாநிதியை எதிர்க்கும் பிராமண ஆதரவாளர்கள் கள்ள மெளனம் காத்தனர். தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது சத்தமில்லாமல் அம்மா ஜெயிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர்//

இது தான் உண்மை, ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே

Dharan said...

//குழலி,

நன்றி என்று மட்டும் இப்போதைக்கு போட்டு வைக்கிறேன்.

நீங்க யோசிப்பீங்கன்னு நம்பல. திருமா சொல்றதையும் கேப்பீங்கன்னு நம்பல. ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு//

NO CHANCE.

உடன்பிறப்பு said...

//புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். கடந்த சில மாதங்களில் இந்த மனுசனை எல்லாரும் திட்டியது அவர் சொல்லுவது போல் எருவாகிவிட்டது//

கலைஞரை திட்டுவது வழக்கமாக கள்ள மவுனம் இருப்பவர்களின் யுக்தி அதை ஏதோ தாங்கள் கண்டுபிடித்த புதிய பாணி போல் எணைய அறிவாளிகள் செய்தது தான் மிகப் பெரிய வருத்தம்

ராவணன் said...

அப்ப அடுத்தமுறை கருணாநிதி என்ற நபர் ராமதாசை சேர்த்துக் கொள்ளமாட்டாரா?சேர்த்துக் கொண்டால் அந்த நபரை செருப்பால் அடிக்கலாம்.
இத்தாலி சோனியாவை அடிவருடும் அந்த நபர்..இன்னும் மானத்துடன் இருப்பதாக பலரும் நினைக்கின்றனர்போலும்....

gulf-tamilan said...

welcome back !!

thevanmayam said...

உணர்ச்சிவசப்பட்டு என்ன லாபம்!! நாம் உணர்ச்சிவசப்படுவதற்கும் ஒட்டுமொத்த வாக்களர் சிந்தனைக்கும் வித்தியாசம் அதிகம்!! ஆகவே நம் எதிர்பார்ப்புகளை தேர்தல் பலநேரம் பிரதிபலிப்பதில்லை!!
http://abidheva.blogspot.com/2009/05/blog-post_16.html

Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

அதிஷா said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள் \\

amanga paavam ... it is a comedy piece why boss why

வெ. ஜெயகணபதி said...

/* திமுக எப்பவுமே பா.ம.கவை உள்குத்துமாம். அதுனால் செயற்குழுவே அதிமுக கூட்டணின்னு முடிவு செஞ்சதாம். அய்யா இப்ப அதிமுக உள்குத்து, உள் நடுக்குத்து, வெளிக்குத்து, குருக்குத்து என்று ஏகப்பட்ட குத்து குத்திருச்சே */

ஹா ஹா ஹா...! குத்துன சாதாரண குத்து இல்ல, சரியான கும்மாங்குத்து ...!

/* இருக்கவே இருக்கு அம்மா ஸ்டைல் பல்டி. எதையாவது சொல்லுங்க. கள்ள ஓட்டு. பணம் கொடுத்தாங்க அப்படின்னு காரணமா இல்ல */
சரிதான்.. அன்பு சகோதரியின் வழியை அடிபற்றி நடக்கும் மருத்துவ குடிதாங்கி வேற என்ன செய்வார்...!

/* அப்புறம் புரட்சிதலைவியும் உங்க மேல கோவமா இருக்காங்களாம். சும்மா இருந்த புரச்சிதலைவியை ஈழ பிரச்சினையை பேசவச்சி உண்மையான உணர்வாளர்களின் ஓட்டை திமுக பக்கம் திருப்பியதற்கு காரணம் நீங்கதானாமே? */
அவன்தான் தேடிகிட்டு இருக்காம்... கைக்கு கிடச்சான் மதம் பிடிச்ச யானை கையில சிக்கின மாதிரி தான்.. போட்டு துவச்சு எடுத்துடும்...!

/* சில மாதங்களில் இந்த மனுசனை எல்லாரும் திட்டியது அவர் சொல்லுவது போல் எருவாகிவிட்டது.*/
உண்மை நண்பரே ...! நன்றி...!

முத்து தமிழினி said...

பெயரிலி,

நிறைய எழுதி இருக்கிறீர்கள். கண்டிப்பாக இதைப்பற்றி பேசுவோம்.

முத்து தமிழினி said...

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன்/

//எடுத்ததுக்கெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களைக் குற்றம் சாட்டுகின்றீர்களே. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியல்வாதிகள் ஈழத்திலே மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்று நம்பிய காலம் போய் நெடுங்காலம். அப்படி ஒரு நம்பிக்கையிருந்திருந்தால்,ரொரொண்டோவிலே கார்டினர் பாலத்துக்கு மேலே போய் "உயிரா? மயிரா?"" என்று நின்றிருக்கமாட்டார்கள். இலண்டனிலே வெஸ்மினிஸ்ரருக்கு முன்னாலே இடிபட்டு நாளும் நிற்கமாட்டார்கள்.//

பெயரிலி,

நீங்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்று என்று நினைத்திருக்கலாம். கருணாநிதி இந்திய - இலங்கை கூட்டாக நடத்தும் போரை நிறுத்த முடியாது (அ) நிறுத்த மாட்டார் என்று முன்னமே அறிந்திருக்கலாம். கருணாநிதியை கண்டபடி திட்டாதிருந்திருக்கலாம். நான் மேற்கண்ட இடத்தில் கூறி உள்ளது ஒரு பொதுவான ஸ்டேட்மெண்ட். பெரும்பாலானவர்கள் என்ற வார்த்தையை நான் முன்னாடி போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். தினமலர், தட்ஸ் தமிழ், தமிழ்மணம் என்று புலம் பெயர் தமிழர்கள் பெருவாரியாக புலங்குவதாக நான் எண்ணியிருந்த இடங்களில் கருணாநிதியை படு கேவலமாக திட்டி எழுதி இருந்தனர் பல தமிழர்கள். அதையே நான் குறிப்பிட்டேன். இங்கும் நான் ஈழத்தமிழர்களை திட்டவில்லை.அவர்கள் நினைத்தது தவறு என்றே கூறினேன்.அதற்கான உரிமையை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முத்து தமிழினி said...

//ஆனால், தமிழக அரசியலிலே காங்கிரஸ் தோற்கவேண்டுமென்று உள்ளூர விரும்பியவர்களிலே நானுமொருவன். இன்றைக்கும் சிதம்பரம் என்பவர் வென்றதும் வைகோ என்ற இடம் தெரியாது ஒதுங்கியவர் தோற்றதும் வருத்துகிறது; "சோனியா வாழ்க" என்று மேடையிலே முழங்கித்தொலைத்த திருமாவளவன் வென்றதும் "யாருங்க அது முத்துக்குமரன்" இளங்கோவன், தங்கபாலு, மணிசங்கர ஐயர் தோற்றது மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால், ஜெயலலிதா-கருணாநிதி இருவருக்குள்ளும் இரண்டு கட்சிக்குள்ளும் என்னைப் பொறுத்தமட்டிலே பெரிய வித்தியாசமில்லை. இருபுறமும் அவர்களின் ஆதரவாளர்களும் ஈழத்தமிழரை ஊறுகாயாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதிலே எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. கருணாநிதியுடனோ ஜெயலலிதாவுடனோ தமிழினக்காவலர் போட்டிக்கு எந்த ஈழத்தமிழ்த்தலைவரும் வந்து நிற்கவில்லை; அப்படி நிற்பதுதான் முக்கியமானதென்ற எண்ணம் வரக்கூடிய நடப்பும் அங்கில்லை. "கருணாநிதியை யாரோ திட்டினார்கள் என்பதற்காக, "ஈழத்தமிழனுக்கு வைக்கிறேன் ஆப்பு" என்றவர் அபி அப்பா. பிரபாகரன் என் ஹீரோ ஆனால், கலைஞருக்கு அவர் போட்டியோ என்னமோ என்று விடுதலைப்புலிகளின் தவறுகளை அ. மார்க்ஸ், சுகுணா திவாகர் மட்டத்திலே திடீரெனக் அதிர்ஷ்டவசமாகப் பார்த்துக் கண்டுபிடித்துப் பதிவு போட்டவர்களையும் பார்த்தாகிவிட்டது. விடுதலைப்புலிகளுக்கு அரசியல் தெரியாமலுமில்லை என்றும் நம்புகிறேன். ஆனால், இராணுவ அமைப்பு ஒன்றிற்கிருக்கக்கூடிய எல்லை என்பது ஆயுதம் "சட்டரீதியாக" வாங்கும் அரசுக்கும் கலர் டிவி காட்டி அரசமைக்கும் அரசுக்கும் மும் //


நானும் காங்கிரஸ் தோற்கவேண்டும் என்று விரும்பியவன் தான். சொன்னால் நம்பவா போறீங்க? எல்லா காங்கிரசு காரனும் தோற்று அதிமுக அங்கெல்லாம் வென்றாலும் நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். பிரபாகரன் எப்படி உலக தமிழர்களுக்கெல்லாம் தலைவர் ஆக முடியாதோ அதே போல் கருணாநிதி உலக தமிழர்களுக்கெல்லாம தலைவன் ஆக முடியாது. இவங்கெல்லாம் அவங்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு தலைவர்கள்.அவ்ளோதான்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பற்றியெல்லாம் "நாம்" பேசும் சூழ்நிலை இப்போது இல்லை. தமிழ்சசி பதிவில் நிறைய விவாதம் வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.


அபி அப்பா அப்படி கூறிஇருந்தால் என் கடுமையான கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன். அபிஅப்பா நீங்கள் கூறியது இன்சென்சிடிவ் வார்த்தைகள்.

சுகுணா திவாகர், மார்க்ஸ் கும்பல் ( சுகுணா மன்னிக்க) கூறிய விமர்சனங்களை என் சிற்றறிவு புறந்தள்ள மறுக்கிறது.

முத்து தமிழினி said...

//கலைஞர் வாழ்கவென்று திமுக ஆதரவாளர்கள் சொல்லிவிட்டுப் போங்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களோ புழுதியிலே புழுத்துப்போன தமிழர்களோ வந்து எப்படியாகச் சொல்லலாமென்று கேள்வி கேட்கப்போவதில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் தெரியாத அடிமுட்டாள் என்பதிலிருந்து வைக்கிறேண்டா ஆப்பு என்ற அளவிலே பேசாதீர்கள்.//

வார்த்தைகளை என் வாயில் போடாதீர்கள் பெயரிலி. உங்கள் எழுத்து வன்மைக்காகவே உங்கள் பதிவுகளை படிக்கிறவர்களில் நானும் ஒருவன் :)

// அதேபோலத்தான், கருணாநிதியின் பாதிநாள் உண்ணாவிரதத்துக்கு ராஜபக்சே ஆடித்தொலைப்பாரென்றுமேதான் நம்பவில்லை.//

நான் திமுக அனுதாபிதான். அணுக்க தொண்டர் கிடையாது. உண்ணாவிரதம் நாடகமாக இருக்கலாம். யார் பெரிய நடிகர் என்று பிரச்சினை வரும்போது நீங்கள் என்ன செய்வீர்களோ அதைத்தான் அவர் செய்தார். யார் ரத்தத்தின் மீது நாடகம் நடத்துவது என்பதை நாடகத்தை ஆரம்பித்தவர்கள் யோசித்திருக்கணும்.

முத்து தமிழினி said...

//தமிழகத்தின் அரசியல் ஈழத்தமிழரைச் சார்ந்திருக்கவேண்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சனையுண்டு. கண்ணுக்கு முன்னால் நின்று கவலைதரும் அரிசிப்பிரச்சனையும் கலர் டிவியும் ஆறாயிரம் ரூபாவும் கடலுக்கப்பால் செத்துக்கொண்டிருக்கும் காணாத மனிதர்களிலும்விட நிச்சயமாக முக்கியமாகவேண்டும். அதுதான் மனித இயல்பு. //

இது உங்களுக்கு தெரிகிறது. தேர்தலுக்கு முன்போ பின்போ இந்த பார்வை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் திரும்பவும் நான் சொல்லுவது போல் இணையத்தில் எழுதி கொட்டப்பட்ட வார்த்தைகள் ஆதாரமாக நிற்கின்றன பெயரிலி. இதோ மே 13 வாய்க்கரிசி போடறோம், பால் ஊத்தறோம், கிழட்டு நாய்...என்றெல்லாம் எழுதிய பலர் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள்.தமிழகத்தின் அரசியல் ஈழப்பிரச்சினையை விட்டு விலகுவதற்கு யார் காரணம் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாமல் இல்லை.

//இதுதான் "ஈழத்துக்காக ஜெ வாழ்க" என்ற கூட்டத்துள்ளே தலையைப் போடாமலிருந்ததற்குக் காரணம். ஆனால், கருணாநிதி என்ற நவபார்ப்பனியவாதிக்கும் ஜெயலலிதா என்ற அசலான பார்ப்பனியவாதிக்கும் எவ்விதமான வித்தியாசமும் இன்றைய நிலையிலே தெரியவில்லை. தமிழக அரசியலிலே ஈடுபாடில்லாத நிலையிலே அதைப் பற்றிக் கவலையுமில்லை. //

ஈழத்திற்காக ஜே வாழ்க போட்ட கூட்டத்தையே நான் சாடினேன். இனிமேல் ஜெ ஈழத்தை பற்றி பேசுவாரா என்று யோசித்தாலே இந்த கும்பலின் வேசம் பல்லிளிக்கும். ஈழம் வாங்குவேன் என்று இனிமேல் ஜெ பேசுவார் என்று ஜெ பேசுவதற்கு முன் எந்த பிரகஸ்பதியாவது உறுதி தரமுடியுமா?

-/பெயரிலி. said...

முத்து தமிழினி
நிறையப் பேசலாம். நான் முன்னமும் தமிழக அரசியல் பற்றிப் பேசவில்லை; இனியும் பெரிதாகப் பேச விருப்பமில்லை.

உங்களுக்கு கருணாநிதியின் தேர்தல் முக்கியமாகிறது. எனக்கு ஊரைவிட்டு வெளியிலே கிளம்ப மறுக்கும் சகோதரசகோதரிகளின் குழந்தைகளின் எதிர்காலம் பயமாகிறது. ஈழத்தமிழருக்கு ஆப்பு வைக்கிறேண்டா என்ற உங்கள் தோழர் அபி அப்பாவின் மனநிலைதான் திமுக தொண்டர்களின் மனநிலை என்றால் சொல்ல எதுவுமில்லை. கடைசியிலே ராம் சோ கூட்டுக்கும் உங்கள்கட்சிக்கூட்டுக்கும் ஈழத்தமிழர் பற்றிப் பெரிய வேறுபாடில்லை என்று திமுகவின் சில தொண்டர்கள் இன்றைய மகிழ்ச்சிகரமான சூழ்நிலையிலே உணர்த்தியிருக்கின்றீர்கள். ஏதோ கருணாநிதியை யாரோ கிண்டல் செய்தார்கள் என்று பிரபாகரனை அடித்து நொருக்கினார் இன்னொருவர். இன்றைக்குப் பிரபாகரன் இறந்துவிட்டதாக வதந்தி உலாவும் நிலையிலே அனுதாப அறிக்கையை விட இவர்களே முந்துவார்கள். தமிழக அரசியல் ஈழத்திலே எதையும் செய்யப்போவதில்லை என்பதினைத் திடமாக நம்புகிறவன் நான். ஆனால், ஏழாயிரம் மக்கள் இறந்தும் வதைமுகாமிலிருக்கும் நேரம் தேர்தல் காரணமாக ஒரு திராவிடக்கட்சித்தொண்டர், "ஈழத்தமிழருக்கு வைக்கிறேண்டா ஆப்பு" என்று தலைவரின் பாசத்திலே திட்டுகையிலே அது தவறென்றுகூடச் சொல்லாமல் கூடவே நின்று பின்னூட்டமிட்ட திமுகத்தோழர்கள் மீது அன்று தோன்றிய வன்மம் மறக்காது; நிலைக்கும். நாளைக்கு தன் குழந்தை தலையிலே குண்டு விழுந்து மண்டை சிதறினால் மட்டுமே அடுத்தவர்குழந்தைக்கு ஆப்புவைப்பது பற்றி குழந்தையின் அப்பாவுக்கு புரியுமென்பதுதான் யதார்த்தமா? :-(

சொல்ல மேலே எதுவுமில்லை. அரசியல் அறிந்த திமுக+காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து. மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். அரசியல் அறியாத விடுதலைப்புலிகளும் அழிந்திருப்பதால் மேலதிகமாகச் சந்தோசத்தோடு காங்கிரசுடன் ராமுடன் சோவுடன் சுவாமி சோனியாவுடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக்கொண்டாடலாம்.

Anonymous said...

#அப்படி ஒரு நம்பிக்கையிருந்திருந்தால்,ரொரொண்டோவிலே கார்டினர் பாலத்துக்கு மேலே போய் "உயிரா? மயிரா?"" என்று நின்றிருக்கமாட்டார்கள். இலண்டனிலே வெஸ்மினிஸ்ரருக்கு முன்னாலே இடிபட்டு நாளும் நிற்கமாட்டார்கள்.#
உயிரா மயிரா என்று இலங்கையிலேயே நின்றிருக்கலாமே இதற்காகவா லண்டன் போகணும்

கலையரசன் said...

//ஒரு நல்ல மத்திய அமைச்சரை இந்தியா இழக்கிறது.//

உண்மைதான்.
இதுவே அடுத்தமுறை ராமதாஸ்
தி.மு.க வில் சேர்ந்து 10 இடத்தில்
ஜெயித்தால் என்ன சொல்லுவீங்க?

மக்கள புரிச்சிக்கவே முடியாது கண்னு...

Anonymous said...

//ஆனால், இன்னும் இருபது ஆண்டுகளிலே தமிழகம் 1983 இன் ஈழமாக வந்து நிற்கையிலே உயிரோடு இருப்பின், வந்து ஒரு பதிவோ அன்றைய நிலையிலேயான கருத்தாடற்களத்திலோ எழுதலாம்.//

ஈன தமிழினமே உங்களை போல் இந்திய தமிழர்கள் நாங்கள் மூடர்கள் அல்ல.. எங்களுக்கு அரசியல் தீர்வில் மட்டுமே நம்பிக்கை.. உங்களை போல முட்டாள்தனமாக லட்சம் பேரை இரையாக்கி விட்டு தனி நாடு கோரிக்கைகளை தாங்கி கொண்டிருக்க நாங்கள் என்ன இலங்கை மூடர்களா?

திரு/Thiru said...

ஈழத்தமிழர்கள் பெருமளவு துயரத்திலும், அழிவிலும், சாவிலும் இருக்கிற நேரத்தில் அவர்களது மனதை புண்படுத்துகிற எழுத்துக்களை அனுமதிக்கவும், ஊக்குவிக்கவும் செய்யமாட்டீர்கள் என்று நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்யாகிப் போனது.

இதை குறிப்பிட மட்டுமே இந்த பின்னூட்டம்.

உமையணன் said...

//அபி அப்பா அப்படி கூறிஇருந்தால் என் கடுமையான கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன். அபிஅப்பா நீங்கள் கூறியது இன்சென்சிடிவ் வார்த்தைகள்.//

அபிஅப்பாவின் வார்த்தைகளில் "ஈழத்தமிழர்களே நாங்கள் உங்கள் ஊருக்கு வந்து ஓட்டு போடமாட்டோம் சரியா?" என்ற வக்கிரமான கிண்டல்தான் ரொம்ப வேதனைபடுத்தியது. அதை அவர் ஒரு பின்னூட்டமாகவும் ஒரு தனி இடுகையாகவும் போட்டிருந்தார். இப்போது அந்த இடுகையை நீக்கிவிட்டார். பின்னூட்டம் என்ன ஆனது தெரியவில்லை. அவர் நீக்கிய இடுகை இப்போதும் என் கூக்ள் ரீடரில் தெரிகிறது.

Anonymous said...

வெளிநாடுகளில் உள்ள ஈழ புலி ஆதரவாளர்கள் ஜெயலலிதாவுக்கு தமிழ் அமைப்புகள் என்ற பெயரில் வாழ்த்துக்கள் அனுப்பினர்.
அன்னை ஜெயலலிதாவே நாடகம் ஆடும் அரசியல் கலைஞர்(கருணாநிதி) வாழும் தமிழ்நாட்டில் சொல்லிலும் செயலிலும் நேர்மையை நிலை நிறுத்தியவர் நீங்கள் என்ற கருத்து படவே அவை இருந்தன.ஒரு பக்கம் புலி ஆதரவு எம்.பி.சிவாஜிலிங்கம் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து பாடி திரிந்தார்.

Anonymous said...

அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை

முத்து தமிழினி said...

//ஈழத்தமிழர்கள் பெருமளவு துயரத்திலும், அழிவிலும், சாவிலும் இருக்கிற நேரத்தில் அவர்களது மனதை புண்படுத்துகிற எழுத்துக்களை அனுமதிக்கவும், ஊக்குவிக்கவும் செய்யமாட்டீர்கள் என்று நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கை பொய்யாகிப் போனது//

கிழட்டு நாய், மே 13ல் பால், தமிழ் ஈனத்தலைவர் இதையெல்லாம் விட்டுட்டீங்களே திரு....

ஈழத்தமிழர்கள் மேல் நமக்கு அனுதாபம் உண்டு. ஆனால் அவர்களை சாக்கிட்டு குறுக்குசால் ஓட்டுபவர்களுக்கு ஆப்பு இப்போ வைக்கவில்லை என்றால் எப்பவும் வைக்க முடியாது.

முத்து தமிழினி said...

பெயரிலி,

நான் இங்கு மொத்தமும் பேசியுள்ளது தமிழக அரசியல்தான். நீங்கள் கடைசியாக கூறியுள்ளதற்கு நிறைய பேசலாம். ஆனால் நேரம் இது அல்ல.

லக்கிலுக் said...

திரு அண்ணே!

//கிழட்டு நாய், மே 13ல் பால், தமிழ் ஈனத்தலைவர் இதையெல்லாம் விட்டுட்டீங்களே திரு...//

மாபெரும் தலைவனின் அந்திமக் காலத்தில் அவருக்கு புலம்பெயர் ஈழத்தமிழரிடையே இருந்து கிடைத்த இந்த வாழ்த்துகளையும் நீங்க அந்தந்த சந்தர்ப்பங்களில் கண்டித்திருந்தால் உங்கள் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும். மாறாக அக்கூட்டம் மேலும் மேலும் ஊளையிட நெய் ஊற்றினீர்கள்.

விடுங்கள், ஈழத்தமிழரை நேசிக்க எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர் கலைஞர். எங்கள் நேசத்தை அனுமார் மாதிரி நெஞ்சை பிளந்து எல்லாம் காட்ட முடியாது.

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வேறு, நான்கு கிலோ மீட்டர்களுக்குள் அடைபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் வேறு என்று இப்போது நம்புகிறேன். எண்ணங்களின் அடிப்படையில் இவ்விருத்தன்மை கொண்ட தமிழர்களும் எக்ஸ்ட்ரீம் கார்னர்களில் எதிரெதிராக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

தமிழ்சசி போட்ட பதிவுக்கு இன்று ஒத்தூதியவர்கள் இதையே கலைஞர் சொன்னால் கிழட்டுநாய், ஊழல் பெருச்சாளி என்று வசைபாடியதேன்?

லக்கிலுக் said...

இது அதுக்கு :-)

மு. சுந்தரமூர்த்தி said...

முத்து,
வெற்றி பெற்றவர்கள் ஆடுங்கள். கொண்டாடுங்கள். ஆட்டம், கொண்டாட்டம் முடிந்த பிறகு கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

1989 இலும் கலைஞர் கருணாநிதி பதவியில் இருந்தார். மத்தியிலும் திமுக அங்கம் வகித்தது, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லாமலேயே. மாநிலத்தில் பெரும்பான்மை ஆட்சி. மத்தியில் சிறுபான்மை, அப்போதும் காங்கிரஸ் தயவில் தான்.

2009 இல் ஆட்சியில் இருக்கிறார். மத்தியில் அங்கம் வகித்தார், 15 எம்பிக்களுடன். மத்தியில் பெரும்பான்மை ஆட்சி, திமுக ஆதரவும் சேர்த்து. மாநிலத்தில் சிறுபான்மை ஆட்சி, காங்கிரஸ் ஆதரவுடன்.

1989 க்கும் 2009 க்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள்.

மத்தியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவராக, மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பியதை எதிர்த்த, திரும்ப வந்த இந்திய இராணுவத்தை வரவேற்க மறுத்த துணிவும், போர்க்குணமும் இப்போது எங்கே போனது? அப்போது அவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டி கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

இதற்குக் காரணம் இந்த 20 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அல்ல. குடும்பத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள். குடும்பத்தில் அவர் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருப்பதாகத் தான் எனக்குத் தெரிகிறது. பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

நெருக்கடி நிலை முடிந்து நடந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து நேரடியாகவும், தூரத்தில் இருந்தும் தமிழ்நாட்டு தேர்தல் அரசியலை கவனித்து வருகிறேன். திமுக ஆதரவாளனாக இருந்திருக்கிறேன். வெறும் பதிவுகள் எழுதிமட்டுமல்ல, ஊரில் இருந்த காலத்தில் தேர்தல் வேலை செய்தும், விட்டு வந்த பிறகு தேர்தல் நிதி அனுப்பியும். வாழ்க்கையில் முதல் முறையாக காங்கிரசோடு சேர்ந்து திமுகவும் அதிகபட்சம் தோற்கவேண்டுமென்று விரும்பினேன்.

திமுகவின் வெற்றியைக் கொண்டாடும் கலைஞரின் உடன்பிறப்புகள் பாமகவின் தோல்வியைக் கொண்டாடுவது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் காங்கிரஸ் வெற்றியைப் பற்றி யாரும் மூச்சுவிடாமல் இருப்பது ஏன்?

முத்து தமிழினி said...

சுந்தரமூர்த்தி,

பதில் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் நான் அதை எழுதும் சூழ்நிலை இப்போது இல்லை.ஒன்றிரண்டு நாட்கள் கழித்தோ வாரங்கள் கழித்தோ எழுதுகிறென். நான் இருவரும் நிதானமாக யோசிக்க நேரம் வேண்டும்.

முத்து தமிழினி said...

நாம் இருவரும் (அனைவரும்) யோசிக்க நேரம் கிடைக்கும் என்பதாக கடைசி வாக்கியத்தை படிக்கவும்.

Anonymous said...

///1989 க்கும் 2009 க்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள்.

மத்தியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவராக, மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு இந்திய அமைதிகாக்கும் படையை அனுப்பியதை எதிர்த்த, திரும்ப வந்த இந்திய இராணுவத்தை வரவேற்க மறுத்த துணிவும், போர்க்குணமும் இப்போது எங்கே போனது?///

1989க்கும், 2009க்கும் ஒரே வித்தியாசம்தான் சுந்தரமூர்த்தி.

1991.

அன்று புலிகள் புதைத்தது ராஜிவை மட்டுமல்ல
தமிழ் ஈழத்தையும் சேர்த்துத்தான்.

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

தமிழ்வெளியை பார்த்தீங்களா?