Tuesday, June 20, 2006

இதுதான்யா அறச்சீற்றம்

"இந்தி"ய சினிமா விழா என்ற பெயரில் துபாயில் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் கொட்டம் அடித்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம்.இந்திய சினிமாவை இன்டர்நேஷனல் லெவலுக்கு எடுத்து செல்வதாக இந்தி சினிமாகாரர்கள் சொல்கிறார்கள்.

Click for the Statement:

" அது எப்படி இந்தி சினிமாவை மட்டும் வைத்துக்கொண்டு இதை இந்திய சினிமா விழா என்று சர்வதேச அளவில் பேசமுடியும்? தென்னிந்திய மொழிகளை கணக்கில் எடுத்து கொள்ளாதது கண்டனத்தற்கு உரியது" என்றார் மம்மூட்டி.

இது பல காலமாக நாம் புலம்பிவருவதுதான். இந்தியா என்றால் இந்தி என்று தெரிந்தோ தெரியாமலோ மாற்றிவருகிறார்கள்.இதற்கு நம் தேசிய வியாதிகளும் ஒத்து ஊதி வருகின்றனர்.

அமிதாப்பச்சன் சாதித்துள்ளதை விட நம்முடைய "வாழும் வரலாறு" கமல் சாதித்தது அதிகம்.சினிமாவில் ஒரு பச்சை குழந்தைக்குக்கூட தெரியும். ஆனால் அமிதாப்பச்சன்தான் இந்திய சினிமாவின் மார்லன் பிராண்டோ என்ற அளவிற்கு சர்வதேச சினிமா சமுதாயத்திலும் சரி,இந்தியாவிலும் சரி ,பில்ட் அப் தரப்படுகிறார்.இந்தி சினிமாவை விட தொழில்நுட்ப ரீதியில் நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் கிடையாது.

அந்த கிரிக்கெட் படத்திலிருந்துதான் அமீர்கான் சில தரமான படங்கள் தந்துவருகிறார். Most Overrated Actor என்று இவரை ஷோபா டே என்று நினைக்கிறேன் விமர்சிக்கப்பட்டவர்.அது சரிதான் என்று நானும் நினைக்கிறேன். நம்முடைய பாலா, செல்வராகவன் ஆகியோர் மிகச்சிறந்த டைரக்டர்கள். நாசர், விக்ரம் உள்பட மிகச்சிறந்த நடிகர்கள் நம்மிடமும் உள்ளனர்.

இந்தி தனது அகண்ட வாயை திறந்து பல மொழிகளை விழுங்கிவருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. கன்னட திரை உலகம் எங்கே என்று தேட வேண்டியுள்ளது. சமீப காலமாக கேரளாவிலும் சீரியஸ் திரைப்படங்களுக்கு மவுசு குறைந்து வருவதாக பேச்சு உள்ளது. இந்தி திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாகிறதாம். சகிலா திரைப்படம் பட்டையை கிளப்புவதால் அதை எதிர்த்துக்கூட கேரள திரை உலகத்தின் ஒரு பகுதியினர் கலாட்டா செய்ததாக நண்பர் ஒருவர் கூறினார். மம்மூட்டி இதனால் கூட கோபப்பட்டிருக்கலாம்.

ஆனால் அவர் கூறியதில் உள்ள உண்மையை புறந்தள்ளவிடமுடியாது. இந்தியா என்றால் இந்தி என்று கொஞ்சம் கொஞ்சமாக நம் மேல் திணிக்கப் பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. தைரியமாகவும் அறச் சீற்றத்துடனும் கருத்து தெரிவித்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை பாராட்டுவோம்.

தொடர்புடைய சுட்டியாக நண்பரும் கவிஞர் சங்க தலைவருமான ஆசிப்பின் சுட்டி கிழே:


http://asifmeeran.blogspot.com/2006/06/blog-post_19.html

26 comments:

ஜோ/Joe said...

//ஆனால் அமிதாப்பச்சன்தான் இந்திய சினிமாவின் மார்லன் பிராண்டோ என்ற அளவிற்கு சர்வதேச சினிமா சமுதாயத்திலும் சரி,இந்தியாவிலும் சரி ,பில்ட் அப் தரப்படுகிறார்.//

ஹா..ஹா..யாரும் யாரையும் பில்டப் செய்து கொள்ளலாம் .ஆனால் மார்லன் பிராண்டோ என்ன சொன்னார் ,யாரை வியந்து போற்றினார் என்று இங்குள்ள மேதாவிகள் இங்கே தெரிந்து கொள்ளட்டும்..

http://brando.crosscity.com/Brando/Main.aspx?Page=Articles/Sivaji.ascx

Unknown said...

தமிழ்த் திரையுலகமும் இதுபோல் ஒரு விழாவைக் கொண்டாடி "இந்திய விழா" என்று நடத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவது இல்லை.

கொடுமை என்னவென்றால் தென்னிந்திய மொழிச் சினிமாக்களுக்கு இடையே ஆக்கபூர்வமான போட்டி/விழாக்கள/ஒற்றுமை/ கிடையாது. அதுதான் பிரச்சனையே.

இந்தியாவில் பாலிவுட்டிற்கு அடுத்து (அல்லது சமமாக ..இன்னும் சொல்லப்போனால் அதைவிடச் சிறப்பாக )இருப்பது நம்ம கோலிவுட்தான். எனவே முயற்சியை இவர்கள்தான் செய்யவேண்டும்.

சும்மா புலம்புவதால் பயனில்லை.

அப்புறம் அந்த விழாவுக்கு தாவூதின் மனைவி வந்ததாகவும் இந்தி சினிமா V.I.P கள் அவருக்கு மரியாதை செய்ததாகவும் செய்தி.

Muthu said...

ஜோ,

அப்படி போடுங்க அரிவாளை...

Anonymous said...

Actually, after Bollywood, Tollywood(Telugu Industry) is the most profitable and largest. Tamil industry, up till some years back, led in quality and popularity. Telugu has reached Tamil in terms of quality(technically, Telugu industry has surpassed Tamil at times). Even an average Telugu film will boast of great cinematography, although Tamil is far ahead in terms of new theories etc.

I feel that because of the influence of the west on Bollywood, and their natural influence on people of the south, our films are starting to cater the youth what others due. There is no other reason for an able industry from Kerala to produce so much junk.

As far as unity is concerned, it is only because there are 4 different languages. Marathi and Bengali films are not even recognized much by common film goers in their own respective states. But South has to cater to 4 different languages and people. Moreover, we have hero dominance etc to think about. I think, at this point, there is no real hero in Bollywood. There is a lot to think about. The layers are so much more.

-Kajan

Anonymous said...

முத்து அண்ணாச்சி,

மம்மூட்டியின் சீற்றம் முக்கியமானது. இது தொடர்பாக வழங்கப்பட்ட பதில் என்ன தெரியுமா?

"மற்ற மொழிப்படங்களையும் சேர்த்துக் கொள்வதென்றால் விருது வழங்குவதில் குழப்பம் வந்துவிடும்"

மம்மூட்டி உடனே, அப்படியானால் தேசிய விருதுகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கேட்டிருக்கிறார். பதிலே இல்லை. இருந்தால்தானே சொல்ல முடியும்?

சாத்தான்குளத்தான்

Balamurugan said...

மார்லன் பிராண்டோ பாவம்!

நாகை சிவா said...

அங்க பெரும்பாலும் நம்மவர்க்கள் தான். நம்மளை வச்சி வேலை வாங்கிட்டு நம்மளையே மட்டம் தட்டுறான்.
எ.கா. மணிரத்னம், சந்தோஷ்சிவம், ரஹ்மான், ரவி.கே.சந்திரன், ராம் கோபால் வர்மா...................

அருண்மொழி said...

Read this link

http://thatstamil.oneindia.in/specials/
cinema/specials/mamooty.html

பொன்ஸ்~~Poorna said...

மம்முட்டி கலக்கி இருக்காரு.. சந்தேகமே இல்லை.. சுட்டி கொடுத்த அருள்மொழிக்கு நன்றி.

நம்மாளுங்க யாராவது விருதுன்னு சொல்லிக் கூப்பிட்டாக் கூடப் போகிறது இல்லையே.. எல்லாம் புதுப் படம், கால்ஷீட்னு கதையில்ல சொல்றாங்க!! அப்புறம் இதையெல்லாம் எப்போ வந்து கண்டிக்கிறது?!!

Unknown said...

மம்மூட்டி ஒருத்தராவது இதப் பத்தி பேசியிருக்காரே - உண்மையிலேயே அறச்சீற்றம் னு சொல்லலாம்...

அன்புடன்,
அருள்.

Muthu said...

கல்வெட்டு,

நீங்கள் கூறிவது ஒரு விதத்தில் சரி. ஆனால் நம் ஒற்றுமை இல்லை என்பதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடாது.இல்லையா?

ஹிஹி.அந்த தாவூது தான்யா அவங்களுக்கு படியளக்கிறார். அதல்லாம் செய்வானுங்க.தாவூது வீட்டு கல்யாணத்தில் இவனுங்க கூத்தடிச்சத வலைப்பதிவுகளிலேயே படித்துள்ளேன்

Muthu said...

காஜன்,

உங்கள் கருத்துக்கள் பதிவோடு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும் சில உபயோகமான தகவல்களை கொண்டிருந்தது.நன்றி

Muthu said...

//மம்மூட்டி உடனே, அப்படியானால் தேசிய விருதுகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கேட்டிருக்கிறார். பதிலே இல்லை. இருந்தால்தானே சொல்ல முடியும்?//

:))

Muthu said...

bala,

நீங்கள் மார்லன் பிராண்டோ பாவம் என்று கூறியது அமிதாப் கூட எல்லாம் கம்பேர் செய்யப்படுகிறார் என்பதாலா?

அமிதாப்பும் மோசம் அல்ல.ஆனால் கமல் உடன் கம்பேர் செய்யமுடியாது என்று நினைக்கிறேன்.

Muthu said...

நாகை சிவா,

பொன்ஸ:

அருள்
அருள்மொழி

அனைவருக்கும் நன்றி

Anonymous said...

Indhiyavin marlon brando yaar appadingaradhukku enna potti... Englishkaran America-vin Sivaji Ganesannnu sollikirana... Idhila Bollywoodkkum kollywoodkum tollywoodkkum vera potti....

Alexander kaalathila Porus-in raanuvam thaniya thaniya samaichu saaptudhaam. adhe maadhiri dhan innum irukkom.

Anonymous said...

We are not only being forgotten in cinema,but also in many others aspects.We are invisible to others.Think about that!I am from Malaysia and here the bollywood movies are more popular than tamil movies among the Malays.I always wonder why is that so.I tried to promote tamil movies and tamil culture to them(this is all I can do),so far I am have been achieved at least 20% success.No matter what our Tamil cinema is the BEST!

Anonymous said...

But we have to admit, these days, Bollywood is more Hollywood like, in the sense that there is nothing Indian in it except the hindi language. So foreigners appreciate them better. We are still catering to the native audiences. Bollywood films don't do half their potential domestically because of the foriegn element, whereas they are hit outside of the country.

I think if Tamil films were shot more slicker and the subjects were more universal (without the hero punchlines and 'Kuthu' dances/Mass fights) we would also see an improvement.

But then, as I said, Bollywood heros don't enjoy the craze that south stars enjoy. I doubt Amitabh or Shah Rukh will ever affect the way people think and decide as do Rajni and Chiranjeevi down south.

-Kajan

Anonymous said...

just FYI. Lagaan is copied from Nadodi Thendral except the cricket thing. Somewhere I've read.

டிபிஆர்.ஜோசப் said...

ரொம்ப நாளைக்கப்புறம் ஒங்கட்ட சண்டை போடறதுக்கு வரேன்..

இந்த கண்ணோட்டத்ததான் வேணாங்கறேன்..

கலைக்கு ஏதுங்க மொழி?

சரி நீங்க சுட்டிக்காட்டுன மம்மூட்டிய பத்தி..

நான் கேரளாவில வேலை செஞ்சிக்கிட்டிருக்கறப்போ மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஒரு முறை தரமில்லாத தமிழ் படங்கள கேரளத்துல திரையிடறத முதல்ல நிறுத்தணும். அத பார்த்து நம்முடைய ரசிகர்ங்க கெட்டுப்போனதுனாலதான் தரமுள்ள மலையாளப் படங்கள் ஒடமாட்டேங்குது என்று திருவாய் மலர்ந்தார். அதற்கு ஜால்ரா அடித்தவர்தான் இந்த மம்மூட்டி..

இன்னொன்னு.. அவரால எந்த மொழியிலயும் மலையாள ஆக்சண்ட் இல்லாம பேசமுடியாது. ஆனா டப்பிங் பண்றதுக்கும் அவருடைய ஈகோ விட்டுக்கொடுக்காது..

அதனாலதான் ஹிந்தில நடிக்க கூப்ட்டாலும் ஒதுங்கிருவார்..

Anonymous said...

ஜோசஃப் சார்,
நீங்களா சிறுபிள்ளைத்தனமாக கதைப்பது.
மம்முட்டி அடிப்படையில் ஒரு மலையாளி. எனவே தமிழா மலையாளமா என்று வரும்போது அவர் மலையாளம் சார்பு எடுப்பது தவறோ வியப்போ இல்லை. அதே போல் வடக்கா, தெற்கா என்று வந்தால் தெற்கின் சார்பு தான் எடுக்க முடியும் அதுவும் தென்னகம் பக்கமே நியாயமும் இருக்கும் போது?!

மம்முட்டியின் மலையாள் அக்செண்ட் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் நீங்கள் அவரை புறக்கணிக்கலாம். தப்பேயில்லை.

முத்துகுமரன் said...

//கலைக்கு ஏதுங்க மொழி?//

ஆஹா அற்புதம்...

உங்கள் கண்களை எது மறைக்கிறது என்றுதான் தெரியவில்லை. இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் இந்தி திரைப்பட விழா நடத்தியதனால்தான் மம்மூட்டி அந்த கேள்வியைக் கேட்டார். சொரணையோடு உணர்வை பதிவு செய்தவனிடம் நொள்ளை காண்பது என்ன வியாக்கானோமோ.....

விருது ஏன் தென்னிந்தியபடங்களூக்கு கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு குழப்பம் வரும் என்று அமைப்பாளர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். தென்னிந்தாயாக்காரனுக்கும் மட்டும் மொழிப்பற்று இனப்பற்று இருக்கக்கூடாது.

இந்திக்காரனின் கூத்துகளைப் பற்றி கவலை இல்லை. அதை இந்தியனுடையது என்று சொல்லாதே என்பதுதான் பொருள்.

ஜெயகாந்தன் சொன்னதை உணர்த்துவது போல் இருக்கிறது உங்கள் வாதம்.
:-)இல்லாமல்...

டிபிஆர்.ஜோசப் said...

அன்புள்ள அனாநி,

சும்மா பேர போட்டே திட்டுங்க..

அப்பத்தான ஸ்வாரஸ்யமா இருக்கும்..

சினிமாவுல வடக்கு என்ன தெற்கு என்னங்க..

எல்லாம் ஒன்னுதான்.. இந்தியாதான்..

மம்மூட்டி என்னமோ தெற்கு மொழிக்கெல்லாம் வக்காலத்து வாங்கறார்னு நினைக்காதீங்க.. அவருக்கு அவரோட படத்த சேர்த்துட்டா போறும்.. வாய மூடிக்குவார்..

நாம தமிழ்நாட்டுல இந்தி வேணாம், வேணாம்னு நின்னதாலத்தான் நம்ம பிள்ளைங்க இப்பவும் வட நாட்டுல போயி பிரகாசிக்க முடியாம திறமையிருந்தும் உள்நாட்டுலயே முடங்கி கிடக்குதுங்க..

ஏதோ ஐ.டி வந்ததோ நம்ம பிள்ளைங்களுக்கு விடிவுகாலம் வந்ததோ..

அரசியல்வாதிங்கள பாருங்க.. நம்ம பிள்ளைய இந்தி படிக்காதேன்னுட்டு அவங்க பிள்ளைங்களுக்கு எல்லாத்தையும் படிச்சி குடுத்துருப்பாங்க..

என்னமோ போங்க..

என்ன சொல்ல வரேன்னு தெரியாம முகமூடிய போட்டுக்கிட்டு சிறுபிள்ளைத்தனங்கறீங்க..

Muthu said...

anony,

என்ன கடுமையா சொல்லீட்டீங்கன்னு அனானியா வர்றீங்க? ச்சும்மா பேரை போடுங்க...

ஜோசப் சார்,

இந்தி தெரிஞ்சா வேலை கிடைக்கும்னா ஏன் சார் வடநாட்டுக்காரன் இங்க சோம்பப்டி விக்கறான்? (சார், சொல்லிட்டேன்.இது என் கேள்வி இல்லை.நடிகர் மணிவண்ணன் எங்கயோ கேட்டது)

பொன்ஸ்~~Poorna said...

ஜோசப் சார்,
எனக்குத் தெரிஞ்சு நம்மாளுங்க ஐ.டில நல்லா வந்ததுக்குக் காரணமே இந்தி தெரியாதது தான். இந்தி தெரியாததுனால ஐடில இருக்கும் பல ஆங்கிலப் பதங்கள் நமக்கு சுலபமா இருக்கு.
இதுவரை நான் டெல்லி, பூனா, சென்னை, பெங்களூர் எல்லா பக்கமும் இன்டெர்வியூ எடுக்கப் போயிருக்கேன். எங்க கம்பனிலயே(பழைய கம்பனி) சொல்லிக்குவோம், இந்த வட நாட்டுப் பக்கம் போனா ஒரு பத்து பேர் தேறினா பெரிய விஷயம்.

இந்தி இங்க வராததுனால தான் நம்ம பேசுற ஆங்கிலம் இந்திக்காரங்க ஆங்கிலத்தை விட இன்னும் நல்லா இருக்கு. அதுனால தான் இந்த ஐடி, கால் சென்டர் வேலை எல்லாம் இங்க வருது.

சரி, அதை விடுங்க.. கலைக்கு மொழி இல்லைன்னு எப்படிங்க சொல்றீங்க? புரிஞ்ச மொழியான ஆங்கிலத்துல இருக்கும் பாட்டையே என்னால ரெண்டு செகண்டுக்கு மேல கேட்க முடியாது..

அதோட, கலைக்கு மொழி இல்லைன்னா, ஒரே மொழில பாட்டு, படம் எல்லாம் எடுக்கலாமே, எதுக்கு தனியா தமிழ், தெலுங்கு, மலையாளம்னு இத்தனை மொழிப் படங்கள்? எல்லாருமே இந்திப் படம் மட்டும் பார்க்கலாம்..

ஆங்கிலத்துல மட்டும் ப்ளாக் எழுதலாம்.. தமிழ் ப்ளாக் எழுதவே வேண்டாம்..(இதுவும் எழுத்துக் கலை தானே?)

முத்துகுமரன் said...

//(இதுவும் எழுத்துக் கலை தானே?)//

:-)) No comments.