Wednesday, January 18, 2006

துக்ளக் ஆண்டு விழா - ஒரு வம்பு பதிவு

திரு டோண்டு சோ வை பற்றி பதிவு போட்டால் அதை எதிர்த்து ஏதாவது நான் எழுதவேண்டும் என்று வலைப்பதிவு நண்பர்கள் எதிர்ப்பார்ப்பதாக காற்று வாக்கில் ஒரு சேதி வந்தது. ஏன் அவர்கள் ஆசையை குலைக்கவேண்டும்?

இது திரு.டோண்டு அவர்களின் இந்த(லிங்க்) பதிவை அடிப்படையாக கொண்டது. தகவல்பிழைகளுக்கு அவரை பிடிக்கவும்.

மேலும் காங்கிரஸ் பற்றி சோ கூறிய சில கருத்துக்களை நானும் ஆதரிக்க வேண்டி உள்ளது. இது தான் என் பிரச்சினை. ஒரு தரப்பை எதிர்க்க வேண்டும் என்னும்போது எதிர்தரப்பை ஆதரிக்க முடியாமல் போய்விடுகிறது.

அடைப்பு குறிகளுக்குள் இருப்பது சோவின் கருத்து. கீழே இருப்பது நம்மளோட பொருமல்.

//பல பத்திரிககைகள் உண்மையாகவே பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று நினைக்கின்றன. இந்தத் தோற்றத்தை அகற்ற அக்கட்சி நல்ல பப்ளிக் ரிலேஷன்ஸ் வேலை செய்ய வேண்டும். பத்திரிகைக்காரர்களை அழைத்து அத்வானி, வாஜ்பேயீ அவர்கள் பேசவேண்டும். //

உண்மையாகவே பா.ஜ.க மதவாத கட்சி என்று பத்திரிக்கைகள் நினைக்கின்றனவாம். இதற்கு என்ன அர்த்தம்? பா.ஜ.க மதவாத கட்சி இல்லை என்பதா? பப்ளிக் ரிலேஷன்ஸில் பா.ஜ.க எல்லா கட்சியையும் விட முன்னால் நிற்கிறது என்றே கூறவேண்டும். பிரச்சினை என்னவென்றால் புத்திசாலித்தனம் இருக்கிறது .ஆனால் நேர்மை இல்லை. (சோவிடம் உள்ள அதே பிரச்சினைதான்)

//இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கூறுவதை விட தீவிரவாதம் என்றுதான் கூறவேண்டும். புலிகள் இஸ்லாமியர் அல்ல, காலிஸ்தானியர் இஸ்லாமியர் அல்ல, ஐரிஷ் தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. ஸ்ரீலங்காவில் அஹிம்ஸை போதிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த பலர் செய்யாத தீவிரவாதமா? கூறப்போனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்று பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் உருவாகின்றனர். ஆகவே இஸ்லாமியரை மட்டும் குறிவைப்பது நீதியாகாது. //

இது தான் கலக்கல் கருத்து. எப்போதுமே சோ ராமசாமி கடுமையான தாக்குதலுக்கு இடையே சில சலுகைகளை அள்ளி விடுவார்.அதற்கு உதாரணம் இது. கடவுளின் பெயரால் வன்முறை, மதத்தின் பெயரால் வன்முறை என்பதையே இந்த வார்த்தைகள் குறிக்கின்றன். குஜராத்தில் கலவரம் செய்தவர்களை இந்து தீவிரவாதிகள் என்றுதான் கூறுகின்றனர். அதுபோலத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் கூறுகின்றனர். (இந்த விஷயத்தில் சோவின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் தான் நடுநிலைவாதி என்று சொல்லப்படவேண்டும் எனபதற்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பார் அவர்.(புத்திசாலி அல்லவா)

//ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அதை பற்றி பேசுவதையும் தான் விட்டாயிற்று என்று சோ கூறிவிட்டார். உடனேயே, தான் கூறுவதை விட்டுவிட்டதால் ரஜனி வந்தாலும் வரலாம் என்றும் பொடி வைத்து பேசினார். ஒரே சிரிப்பு.//

நகைச்சுவையாக தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார் சோ. வருத்தப்பட தேவையில்லை என்பேன் நான். அதுதான் விஜயகாந்த வந்துட்டாரே...ஓடிப்போய் பார்த்து அரசியல் ஆலோசகர் போஸ்டிங் கேட்கலாமே...விஜயகாந்தும் இவருடைய வாழ்நாள் லட்சியமான தி.மு.க மற்றும் கலைஞர் ஒழிப்பு ஆகிய கொள்கைகளை கையில் எடுத்து விட்டாரே...இனிமேல் விஜயகாந்தை ஆதரித்து கட்டுரைகளை துக்ளக்கில் எதிர்பார்க்கலாம். விஜயகாந்த பி.ஜே.பி கூட்டணியில் சேர்வதை பொறுத்து இது அமையும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.

//கருணாநிதி அவர்கள் பலமுறை மிக நல்ல நகைச்சுவைக்கு இடம் அளிக்கிறார் என்று சோ குறிப்பிட்டார். உதாரணத்துக்கு தான் 2001-ல் கைதான நிகழ்ச்சியை குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகளை மிகைபடுத்திக் கூற ஆரம்பித்தார். கடைசியில் தன் வீட்டுப் பெண்களிடமே போலிஸார் முறைதவறி நடந்தனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்தனர் என்றும் அவர் கூற ஆரம்பித்து விட்டார். இவ்வளவு தமாஷாக எல்லாம் கூறினால் அதற்கேற்பத்தான் தன் நடவடிக்கையும் இருக்கும் எனக் கூறினார். ஜயலலிதா இந்த விஷயத்தில் டெட் சீரியஸ் என்றும் கூறினார். மற்றப்படி இருவரையும் சமமாகவே பாவிப்பதாகக் கூறினார்.//

இன்றைய முதல்வரை பாம்பும் பல்லியும் கொசுவும் ஜெயிலில் படுத்தி எடுத்ததை பற்றி கூறலாமோ? துரைமுருகன் சட்டசபையில் அப்போது பண்ணிணார் என்று கூறப்பட்ட கலாட்டாக்கள்? சென்னாரெட்டி விவகாரம்? காலில் விழும் தமாசுகள்? எல்லா அரசியல்வாதியையும் விமர்சிக்க போனால் தமாஷ்தான். ஓபனாக கலைஞரை எதிர்ப்பது தான் என் வாழ்நாள் லட்சியம் என்றும் மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லிவிடலாம்.
(ஒரு உதாரணத்திற்கு: அ.தி.மு.க ஆட்சி அமைத்த இந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை கார்ட்டூனில் தி.மு.க தாக்கப்பட்டுள்ளது? எத்தனை முறை கார்ட்டூனில் அ.தி.மு.க தாக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா? அ.தி.மு.க ஆளுங்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


// இப்போதைக்கு வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகிய இருவரும் தேர்தலைச் சந்திக்க கட்சிக்கு தேவை என்றும் அவர் பேசினார்//

தேர்தலை சந்திக்க மட்டும் தேவையாம்.ஆட்சியை நரேந்திர மோடியை வைத்து இவர்கள் நடத்தி கொள்வார்களாமா?

// துறவியான உமா பாரதி அவர்கள் நீதி முதலிய நல்ல பண்புகளையும் துறந்தார் என்றும் அவர் கூறினார்.//

சரியோ தவறோ கட்சியின் கொள்கைகளை விடக்கூடாது என்று கூறிய உமாபாரதி நல்ல பண்புகளை துறந்தவராம்.ஆனால் ஆட்சியை பிடிக்க இவர்கள் ( பி.ஜே.பி என்று படிக்க) நடத்திய மற்ற கூத்துக்களை கீதையை மேற்கோள் காட்டி நியாயப்படுத்துவார் இவர்.

//தீவிரவாத எதிர்ப்பு, தி.மு.க.வால் தூண்டப்பட்ட மத்திய அரசின் எதிர்ப்பு இருப்பினும் அரசை திறமையாக நடத்திச் சென்றது, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கையாண்டது, தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது எல்லாவற்றையும் அடிக்கோடிட்டு ஜெயலைதாவுக்கு தன் ஆதரவை சூசகமாகத் தெரிவித்தார்.//

என்னமோ கருணாநிதி ஆட்சியில் யாரும் ரோட்டில் நடந்துபோக முடியாத சூழ்நிலை இருநததுபோலவும் அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக ஆனதாகவும் இவர் அடிக்கடி பில்ட் பண்ணுவது உண்டு. தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது...அரசு ஊழியரை சமாளித்தது எல்லாம் அவங்கவங்களைத்தான் கேட்கணும்....

//போன வருடம் சங்கராச்சாரியாரை பற்றி மிகவும் பேசிய சோ அவர்கள் இம்முறை மிகச் சில வாக்கியங்களிலேயே பேசி முடித்தார். அதாவது தெருவில் நியூசன்ஸ் செய்தார் என்ற வழக்கைத் தவிர மற்ற எல்லா வழக்குகளையும் அரசு போட்டுப் பார்த்துவிட்டது என்று கூறினார். தேவையில்லாது குண்டர் சட்டத்தை இவ்வரசு பயனபடுத்தியதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.//

இதைப்பற்றி நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை. சிரித்து வைக்கலாம்.

// பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.//

இதையெல்லாம் சரியாக பண்ணிடுவாங்க...தேசியவியாதிங்க இல்லையா...

அவருடைய மற்ற அரிய பெரிய கருத்துக்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால் கட்டுடைத்து பார்க்கலாம்.

15 comments:

ஜெ. ராம்கி said...

//இனிமேல் விஜயகாந்தை ஆதரித்து கட்டுரைகளை துக்ளக்கில் எதிர்பார்க்கலாம். விஜயகாந்த பி.ஜே.பி கூட்டணியில் சேர்வதை பொறுத்து இது அமையும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்

so, there must be some similarities between Cho & Jnani?! :-)

dondu(#11168674346665545885) said...

“திரு டோண்டு சோ வை பற்றி பதிவு போட்டால் அதை எதிர்த்து ஏதாவது நான் எழுதவேண்டும் என்று வலைப்பதிவு நண்பர்கள் எதிர்ப்பார்ப்பதாக காற்று வாக்கில் ஒரு சேதி வந்தது. ஏன் அவர்கள் ஆசையை குலைக்கவேண்டும்?”
அதானே

”இது திரு.டோண்டு அவர்களின் இந்த(லிங்க்) பதிவை அடிப்படையாக கொண்டது. தகவல்பிழைகளுக்கு அவரை பிடிக்கவும்.”
அடப்பாவி மனுஷா கெடுத்தீர்களே காரியத்தை

”மேலும் காங்கிரஸ் பற்றி சோ கூறிய சில கருத்துக்களை நானும் ஆதரிக்க வேண்டி உள்ளது. இது தான் என் பிரச்சினை. ஒரு தரப்பை எதிர்க்க வேண்டும் என்னும்போது எதிர்தரப்பை ஆதரிக்க முடியாமல் போய்விடுகிறது.”
நிஜமாகவே பிரச்சினைதான்.

”உண்மையாகவே பா.ஜ.க மதவாத கட்சி என்று பத்திரிக்கைகள் நினைக்கின்றனவாம். இதற்கு என்ன அர்த்தம்? பா.ஜ.க மதவாத கட்சி இல்லை என்பதா?”
அவ்வப்போது முஸ்லீம் லீக்குடன் கைகோத்துக் கொள்ளும் கட்சிகள் மட்டும் தங்களை மதவவதக் கட்சிகள் என்று ஒத்துக் கொண்டுவிடுகின்றனவா?

”இது தான் கலக்கல் கருத்து. எப்போதுமே சோ ராமசாமி கடுமையான தாக்குதலுக்கு இடையே சில சலுகைகளை அள்ளி விடுவார்.அதற்கு உதாரணம் இது. கடவுளின் பெயரால் வன்முறை, மதத்தின் பெயரால் வன்முறை என்பதையே இந்த வார்த்தைகள் குறிக்கின்றன். குஜராத்தில் கலவரம் செய்தவர்களை இந்து தீவிரவாதிகள் என்றுதான் கூறுகின்றனர். அதுபோலத்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் கூறுகின்றனர். (இந்த விஷயத்தில் சோவின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் தான் நடுநிலைவாதி என்று சொல்லப்படவேண்டும் எனபதற்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பார் அவர்.(புத்திசாலி அல்லவா)”
சோ என்ன நினைக்கிறார் என்பது சில சமயம் அவருக்கே தெரியாது என்று அவரே கூறிக்கொள்வது உண்டு. உங்களுக்கு தெரிகிறது!! சோவை விட நீங்கள் மேல்.

”இனிமேல் விஜயகாந்தை ஆதரித்து கட்டுரைகளை துக்ளக்கில் எதிர்பார்க்கலாம். விஜயகாந்த பி.ஜே.பி கூட்டணியில் சேர்வதை பொறுத்து இது அமையும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.”
அப்படி எழுதுவார் என்று தோன்றவில்லை

”இன்றைய முதல்வரை பாம்பும் பல்லியும் கொசுவும் ஜெயிலில் படுத்தி எடுத்ததை பற்றி கூறலாமோ? துரைமுருகன் சட்டசபையில் அப்போது பண்ணிணார் என்று கூறப்பட்ட கலாட்டாக்கள்? சென்னாரெட்டி விவகாரம்? காலில் விழும் தமாசுகள்? எல்லா அரசியல்வாதியையும் விமர்சிக்க போனால் தமாஷ்தான்.”
அவை எல்லாம் அந்தந்த காலக்கட்டத்தில் சோவால் நையாண்டி செய்யப்பட்டவையே.
“ஓபனாக கலைஞரை எதிர்ப்பது தான் என் வாழ்நாள் லட்சியம் என்றும் மற்றவை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லிவிடலாம்.”
1976 பிப்ரவரியில் செய்ததை அறியாமலிருந்தால் நான் கூட நீங்கள் சொன்னதை ஒத்துக் கொண்டிருக்கலாம். 1996-ல் நடந்ததாவது உங்கள் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.
(ஒரு உதாரணத்திற்கு: அ.தி.மு.க ஆட்சி அமைத்த இந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை கார்ட்டூனில் தி.மு.க தாக்கப்பட்டுள்ளது? எத்தனை முறை கார்ட்டூனில் அ.தி.மு.க தாக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா? அ.தி.மு.க ஆளுங்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்துக் கூறுங்களேன்.

”தேர்தலை சந்திக்க மட்டும் தேவையாம்.ஆட்சியை நரேந்திர மோடியை வைத்து இவர்கள் நடத்தி கொள்வார்களாமா?”
என் பதிவில் சொல்ல மறந்து விட்டேன். நரேந்திர மோடியின் ஆட்சியையும் புகழ்ந்தார் சோ. அது பற்றி வரும் துக்ளக்குகளில் பார்க்கலாம்.

”சரியோ தவறோ கட்சியின் கொள்கைகளை விடக்கூடாது என்று கூறிய உமாபாரதி நல்ல பண்புகளை துறந்தவராம்.ஆனால் ஆட்சியை பிடிக்க இவர்கள் ( பி.ஜே.பி என்று படிக்க) நடத்திய மற்ற கூத்துக்களை கீதையை மேற்கோள் காட்டி நியாயப்படுத்துவார் இவர்.”
கட்சிக் கட்டுப்பாட்டை உடைத்த அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்க கட்சி தவறியது என்பது பற்றியும் சோ பேசினார்.

”என்னமோ கருணாநிதி ஆட்சியில் யாரும் ரோட்டில் நடந்துபோக முடியாத சூழ்நிலை இருநததுபோலவும் அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் மீண்டும் அமைதி பூங்காவாக ஆனதாகவும் இவர் அடிக்கடி பில்ட் பண்ணுவது உண்டு. தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது...அரசு ஊழியரை சமாளித்தது எல்லாம் அவங்கவங்களைத்தான் கேட்கணும்....”
தீவிர வாதம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கருணாநிதி அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது நிஜமே. மழை நீர் சேமிப்பு திட்டத்தை ஜயலலிதா பண்ணியதும் அவருடைய கிரீடத்தில் ஒரு சிறகுதான். 90%-க்கு மேல் அது நிறைவேற்றப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது எதுவும் கற்பனை இல்லையே. மிக உறுதியான நடவடிக்கை எடுத்து அதை நிறைவேற்றினார். அந்த மன உறுதி கருணாநிதி அவர்களிடம் இல்லை என்பது நிஜமே.

”// பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.//
இதையெல்லாம் சரியாக பண்ணிடுவாங்க...தேசியவியாதிங்க இல்லையா...”
தேசியவியாதியோ என்னவோ, ஆனால் நிச்சயம் அரசியல் வியாதி அல்ல. பார்வையாளர்கள் அனைவரும் கட்டுப்பாடோடு இருந்து தேசீய கீதம் பாடியதை ஏன் கிண்டல் செய்ய வேண்டும்? மற்ற மீட்டிங்குகள் பலவற்றில் இத்தகையக் கட்டுப்பாட்டை கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடமே பார்க்கவில்லை.

இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

welcome ramki and dondu

//so, there must be some similarities between Cho & Jnani?! :-)//

ராம்கி இது எனக்கு புரியவில்லை....

அரசியல் ஆலோசகர் பதவி பற்றி சொல்கிறீர்களா அல்லது வேறு ஏதாவதா?

சோவும ஞானியும் ஒரே புள்ளியில சந்திக்கலாம். எதிர்நிலை அளவிற்கு மேல் போகும்போது நேர்நிலையாகிவிடும் என்று எங்கோ படித்துள்ளேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

//intelligent but not honest//well said.
may i add a correction?HE IS OCCASSIONALLY HONEST

Anonymous said...

"அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கையாண்டது,"

இதுலதானே நாப்பதும் போச்சு

இந்த கோயில் ஆடு கோழி பத்தி எதுவும் பாராட்டலையா?

வானம்பாடி said...

:) கலக்கலான பதில் கருத்துக்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சிவசேனை, ஜெயா, பாஜக, பஜ்ரங்தள் போன்ற காவிக் கோஷ்டிகள் ஒன்றாக சேர்ந்தால் அது மதவாதம் இல்லையாம்.

கருணாநிதி கிறிஸ்துவ அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள், திருமா, ராம்தாஸ் போன்ற அனைத்து ஜாதி கூட்டணியை அமைத்தால் அதுதான் மதவாதமாம்!

Muthu said...

vengayam,

i removed your paragraph which targets a individual personally...

please donot attack people personally in my blog.

thank you

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சந்திப்பு said...

முத்து! சோவின் கருத்துக்கள் சத்தனை சதவீதம் பேரை சென்றடைகிறது. சாதாரண மக்களுக்கும் துக்ளக்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சாதாரண மக்கள் பத்திரிகைகள் படிப்பதேயில்லை என்பது ஒரு உண்மை. அதிலும் கொஞ்சம் பேர் படிப்பது “நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம், ஆனந்த விகடன்” போன்றவைகளே. துக்ளக்கை பொறுத்தவரை “அவாள்”களுக்காகவே எழுதப்படுகிறது. இதில் சோவின் கோமாளித்தனத்தை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்!
புத்திசாலித்தனம் என்று கூறுவதெல்லாம், அவர்கள் தாங்களாகவே கொடுத்துக் கொண்ட அடைமொழிகளே!
எனக்குத் தெரிந்து சோவை பற்றி நீங்கள் அடிக்கடி எழுதுவதன் மூலம் அவரை பிரபலப்படுத்துவதாகவே எனக்குப் படுகிறது. சில விஷயங்களுக்கு நச்சுன்னு ஒரு பன்சு கொடுத்து விட்டு... கண்டுக்கவே கூடாது என்பது என் கருத்து!

நியோ / neo said...

முத்து - சில வாரங்களுக்கு முன்னர் 'சோ'வானவர் எப்படி சிந்திப்பார் செயல்படுவார் என்பதற்கு நீங்கள் எழுதிய பதிவில் உதாரணம் கொடுத்திருந்தீர்கள் (அந்த பாராளுமன்ற எம்.பி. விவகாரத்தில் திமுக தலைவர்களை வைத்து கார்ட்டூன் போடுவது).

சந்திப்பு சொல்வது போல 'நச்'னு அந்த மாதிரி காமென்ட்டுகளுக்குத்தான் 'சோ' தகுதியானவர். வேறொரு வலைப்பதிவர் எழுதியிருந்தார் - அடுத்த ஆட்சி யார் கைக்குப் போகும் என்று 'சோ' வுக்குத் தெரிந்து விட்டதால் இப்படி rattled ஆகப் பேசுகிறார் என்று. நிறையவே அதில் உண்மையிருக்கு!

'சில குண்டர் சட்ட மீறல்கள் இருந்தாலும், POTA தீவிரவாத எதிர்ப்ப்பு நடவடிக்கைகளில் உறுதியாக' இருந்தாராம் ஜெ! இவாள் புத்தியே 'மகன் செத்தாலும் பரவால்ல; மருமக தாலியறுக்கணும்னு'தான்...

இதிலே ஒரு பார்ப்பன சங்க நிர்வாகி 'சோ துரோகி' என்று ஆவேச அறிக்கை விடுத்தாராம்! நல்ல நாடகம்! :)

இவர்கள் திமுகவை ஆதரிப்பது எதிர்ப்பது என்ற என்ன நிலையை எடுத்தாலும் இவர்கள் மனசிருப்பது ஆரிய மேலாண்மையில்தான்.

Anonymous said...

அன்புள்ள முத்து,

நீங்கள் ்வெகுவாக மதிக்கும் டோண்டு அவர்களின் சில கருத்துகள்:

* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.


அந்த ஆளு எழுதினார் என்று நீங்களும் பதிவுபோடுகிறீர்களே..? இது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா? சோவை நான் மதிப்பதே இல்லை.

Muthu said...

thanks sivagnanamji,sudarsan, santhipu,neo,vengayam and thirupaachi...

thirupaachi,

அவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இருக்கலாம். கருத்துக்களை எதிர்ப்போம். மனிதர்களை வேண்டாமே....

dondu(#11168674346665545885) said...

முத்து மற்றும் நாட்டாமை அவர்களே,

உங்கள் வலைப்பூக்களை என்னுடைய வலைப்பதிவில் இணைப்பாகக் கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நம்மைப் போன்ற இளைஞர்களின் உற்சாகம்தான் இந்த நாட்டுக்குத் தேவை!!!!

இப்பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்