Monday, January 23, 2006

முத்து இனிமேல் முத்து (தமிழினி)
Photo: 2


Photo : 1ஏற்கனவே தமிழ்மணத்தி்ல் ஒரு முத்து இருப்பதால் நான் என்னுடைய தமிழ்மண பெயரை முத்து (தமிழினி) என்று மாற்றியுள்ளேன். பெயர் காரணம் என்ன என்பவர்களுக்காக முத்துவும் தமிழினியும் இருக்கும் புகைப்படத்தை கொடுத்துள்ளேன்.

1.சென்னை புத்தககண்காட்சியில் காலச்சுவடு ஸ்டாலில் எடுக்கப்பட்ட புகைப்படம்.


2.சென்னை ஓபன் இரட்டையர் இறுதி போட்டியி்ல் மேட்ச் பாயிண்ட்


இறுதி போட்டியில் இந்திய ஜோடி பிரகாஷ் அமிர்தராஜும் ரோகன் புபண்ணாவும் வெற்றி பெறும் நிலையில் இருந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்கள்.இரட்டையர் ஆட்டங்கள் இப்பொதெல்லாம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெறுவதில்லை என்பதால் ரூல்சை மாற்றியுள்ளனர். இரண்டு செட் தான் ஆட்டம். மூன்றாவது செட் டைபிரேக்கராக நடத்தப்படும்.இதற்கு இரட்டையர் ஆட்ட சாம்ப்பியன்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சென்னை ஓபன் போட்டியில் ஒற்றையர் இறுதி போட்டி கடந்த இரண்டு வருடங்களாக சாம்பியன் பட்டம் பெற்ற மோயா இந்த வருடம் லுபிசிக்கிடம் பட்டத்தை பறிகொடுத்தார். ஆனால் கடந்த இரண்டு வருட சாம்பியன் ஆதலால் மக்கள் ஆதரவு அவருக்கே இருந்தது.மோயாவிற்கு வயதாகிகொண்டு வருகிறது. ஆட்டத்தை விட்டு அவர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடுவார் என்று தோன்றுகிறது.

இந்த பதிவு டென்னிஸ் பற்றியது. டென்னிஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒன்றும் புரியாது.எனக்கு டென்னிஸ் விளையாட்டின் மேல் இனம்புரியாத ஒரு காதலே உண்டு. சிறுவயதிலேயே (சுமார் பத்து வயதில் இருந்து) டிவியில் காட்டப்படும் டென்னிஸ் போட்டிகளை இரவென்றாலும் கண் விழித்து பார்த்துக்கொண்டிருப்பேன்.

கிரிக்கெட் மாதிரி சோப்ளாங்கி விளையாட்டு அல்ல அது. அது விளையாட நிறைய எனர்ஜி தேவைப்படும். இரண்டு கேம்களுக்கு ஒரு முறை சிறிது ஓய்வு அளிக்கப்படும் என்றால் அதன் கஷ்டத்தை புரிந்துக்கொள்ளலாம். நாங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சிறுவயதிலேயே லாங் சைஸ் நோட்புக்கின் இரண்டு அட்டையை மடித்து பின் செய்து மட்டை செய்து டென்னிஸ் ஆடியுள்ளோம்.இத்தனைக்கும் டென்னிஸ் மாட்சையோ கோர்ட்டையோ நான் நேரில் பார்த்ததேயில்லை.

எனக்கு அப்போதெல்லாம் இவான் லெண்டிலைத்தான் ரொம்ப பிடிக்கும். மிகவும் கடின உழைப்பாளி. தொடர்ந்து நான்கு வருடங்கள் உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரராக இருந்து நன்றாக விளையாடினாலும் விம்பிள்டன் பட்டத்தை இவர் வெல்ல முடிந்ததேயில்லை.அவர் விம்பிள்டன் ஜெயிப்பதை பலமுறை கெடுத்தவர் போரிஸ் பெக்கர். இவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சர்வீஸ் போடும் ஸ்டைல் அழகாக இருக்கும். இவரும் ஒரு சாதனையாளர்தான். இவர் சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து விளையாடினார். அப்பொழுதே இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க நினைத்திருந்தேன்.முடியவில்லை. இந்த வருடம் ஆசையை தீர்த்துக் கொண்டேன். இனி வருடா வருடம் வரவேண்டும் என்றும் முடிவு செய்துகொண்டேன்.


ஆண்கள் டென்னிசில் இன்று முடிசூடா மன்னன் ரோஜர் பெடரர். சாம்பிராஸ் ஒய்வு பெற்றபிறகு இப்போது நடக்கும் போட்டிகளில் அநேகமாக கலந்துக்கொள்ளும் அனைத்து கோப்பைகளையும் தட்டி செல்கிறார். அற்புதமான ஆல் ரவுண்ட் கேம் இவருடையது. சர்வீஸ், ரிடர்ன் ஆஃப் சர்வ், பாசிங் ஷாட் என்று அனைத்து வித்தைகளிலும் கை தேர்ந்தவர்.இப்போது நடைபெறும் ஆஸ்ரேலிய ஒபன் டென்னிசிலும் இவரே பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்டுகிறது. சென்னை ஓபனில் பட்டம் வென்ற லுபிசிக்கும் உலக தரவரிசையில் முதல் பத்திற்குள் தான் இருக்கிறார். இவர் ஆட்டத்தைத்தான் நான் சென்னையில் நேரில் கண்டுகளித்தேன். இவரும் திறமையான ஆட்டக்காரர்தான்.


டென்னிஸ் பற்றி பேசும்போது சானியா மிர்சாவை பற்றி பேசுவதும் தவிர்க்க முடியாததாகிறது. சிறு வயதிலிருந்தே ஸ்பான்சர் கிடைத்து அதிஷ்ட்சாலி சானியா.அதனால் தான் அவரால் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்திருக்கிறது. திறமையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் மூத்த வீரர்களிடம் இருந்து அவர் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும். டென்னிஸ் விளையாட்டில் வெல்ல முழு முதல் தேவை உணர்ச்சிவசப்படாத கண்சிஸ்டென்சி.அது சானியாவிடம் இல்லை. பெடரர் ஆட்டத்தை பார்ப்பவர்கள் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்காது.கருமமே கண்ணாக இருப்பார்.


சானியா கொஞ்சம் பந்தா பண்ணுகிறார் என்றே கூறலாம்.(வேறு வார்த்தை எனக்கு தோன்றவில்லை).ஆஸ்ரேலிய ஓபன் இரண்டாம் சுற்றில் தன்னைவிட தரத்தில் குறைந்த வீராங்கனையிடம் தோற்றுவி்ட்டு மட்டையை தூக்கி வீசினார். இதுவெல்லாம் ஒரு வளர்ந்து வரும் வீராங்கனை செய்ய கூடாதது என்பது என் கருத்து.இவருக்கு சர்வீசும் ஒரு வீக்னெஸ்.சற்று உயரம் கம்மியானதால் இந்த பலவீனத்தை இவர் சரிசெய்வது கடினம் என்று தோன்றுகிறது.அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை இவர் உணர்ந்து கொண்டால் இன்னும் பல சாதனைகளை இவர் நிகழ்த்தலாம்.

7 comments:

பரஞ்சோதி said...

முத்து நீங்க டென்னிஸ் பிரியரா?

நான் கிரிக்கெட் வெறியன் என்றாலும், டென்னிஸ் ரொம்ப ரொம்பவே பிடிக்கும்.

இவான் லெண்டிலை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் ஒரு முறை வைரம் பதித்த டென்னிஸ் மட்டையை வென்ற போட்டோவை என் அறையில் பெரிய அளவில் ஒட்டியிருந்தேன், அமைதியான மனிதர், பாவம் புல் மைதானம் அவரை பாடா படுத்து விட்டது, ஆஸ்திரேலியாவின் பேட் காஷ் யார் என்றே தெரியாது, அவர் கூட இறுதி போட்டியில் லெண்டிலை தோற்கடித்து விட்டார்.

அதன் பின்னர் சாம்பிராஸ், அவரது அமைதி ரொம்பவே பிடிக்கும். இப்போ ரோஜர் பெடரர் ரொம்ப பிடிக்குது, அவர் பல சாதனைகள் படைப்பார்.

டென்னிஸ் பதிவுகள் அதிகம் கொடுங்க.

அன்புடன்
பரஞ்சோதி

வினையூக்கி said...

Muthu[Thamizhini]. Nice Post

சந்திப்பு said...

முத்து! தமிழினி அருமை! புகைப்படத்தில் உள்ள லுக் ரசிக்கும்படி உள்ளது. இது தமிழினியின் லுக்கா அல்லது புகைப்பட கலைஞரின் திறமையா? கிரிக்கெட்டை சோப்ளாங்கி என்று கூறியுள்ளீர்கள். உண்மைதான், ஆனால் பவுலிங் வீசுவதும், அதற்கேற்ப திறமையாக பேட்டை சுழற்றுவதும் என்ன சாதாரண விஷயமா? அக்தர் 140 மைல் வேகத்தில் பந்து வீச, நம்முடை திராவிட் அதை மிக சாந்தமாக்குவது என்ன சாதாரண விஷயமா? சுழற் பந்திந் வேகம் மெதுவாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கம் சுனாமி போன்றதல்லவா? பல பேர் கிரிக்கெட்டை சோம்பேறி விளையாட்டு என்று கூறினாலும், அதில் ஒரு திரில்லிங் - போதை எல்லாம் கலந்துள்ளது. நம்முடைய விளையாட்டு வீரர்களை (ஒரு சிலரைத் தவிர) சோப்ளாங்கி என்றால் புரிந்து கொள்ளலாம். மற்றபடி உங்களது டென்னி° ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்!

சந்திப்பு said...

முத்து! தமிழினி அருமை! புகைப்படத்தில் உள்ள லுக் ரசிக்கும்படி உள்ளது. இது தமிழினியின் லுக்கா அல்லது புகைப்பட கலைஞரின் திறமையா? கிரிக்கெட்டை சோப்ளாங்கி என்று கூறியுள்ளீர்கள். உண்மைதான், ஆனால் பவுலிங் வீசுவதும், அதற்கேற்ப திறமையாக பேட்டை சுழற்றுவதும் என்ன சாதாரண விஷயமா? அக்தர் 140 மைல் வேகத்தில் பந்து வீச, நம்முடை திராவிட் அதை மிக சாந்தமாக்குவது என்ன சாதாரண விஷயமா? சுழற் பந்திந் வேகம் மெதுவாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கம் சுனாமி போன்றதல்லவா? பல பேர் கிரிக்கெட்டை சோம்பேறி விளையாட்டு என்று கூறினாலும், அதில் ஒரு திரில்லிங் - போதை எல்லாம் கலந்துள்ளது. நம்முடைய விளையாட்டு வீரர்களை (ஒரு சிலரைத் தவிர) சோப்ளாங்கி என்றால் புரிந்து கொள்ளலாம். மற்றபடி உங்களது டென்னி° ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்!

முத்து(தமிழினி) said...

நன்றி பரஞ்சோதி, வினையூக்கி, மற்றும் சந்திப்பு


பரஞ்சோதி,

டென்னிஸ்க்கு ஆள் இருக்கீங்களா...தூள் கிளப்பிடுவோம்.......லெண்டில் மேல் நானெல்லாம் பைத்தியமா இருந்தேனய்யா....ஜென்டில்மேன்...
( புல் தரை பசுமாட்டுக்குத்தான் என்று அவர் டென்சன் ஆனதை மறக்கமுடியுமா)

சந்திப்பு,

தமிழினிக்கு கண் அழகுய்யா...(அப்பாவோட கண்ணு அப்படியே)....

கல்லூரியில் கிரிக்கெட் அணியில் இருந்த இன்றும் கிரிக்கெட் விளையாடுகிற(இதனால் அடிபட்டு இப்போது தமிழ்மணத்திற்கு வரமுடியாத) கிரிக்கெட்டை விடமுடியாத சோப்ளாங்கிகளில் நானும் ஒருவன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

Boston Bala said...

டென்னிஸ் விளையாடுவது கொஞ்சம் கஷ்டம்தான்; அங்குமிங்கும் ஓடுவது (குறைந்தபட்சம் பந்து பொறுக்கவாவது) நல்ல உடற்பயிற்சி :-)

கிட்டத்தட்ட மேட்ச் பாயிண்ட்டில் இருந்து இவான் லெண்டில் தோற்ற காலங்களை மறக்க முடியாது.

ரமேஷ் கிருஷ்ணனிடம் விம்பிள்டனில் மெகென்ரோத் தோற்றவுடன் 'எப்படி தோற்றுப் போனீர்கள்?' என்று நிருபர் கேட்டாராம்.

'எனக்குப் பெண்களுடன் விளையாடி பழக்கமில்லாததால்' என்று மீசை மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டார். ரமேஷ் கிருஷ்ணன் ஆட்டத்தில் passion அதிகம் வெளிப்படாதவாறு ஆடுவார் (இவான் லெண்டிலைப் போல?)

ஆசை/இலட்சியத்தை வெளிப்படுத்தி, சானியா விளையாடுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.

முத்து(தமிழினி) said...

கருத்துக்கு நன்றி பாஸ்டன் பாலா..

டென்னிஸ் பேச ஒரு மூத்த வலைப்பதிவாளரான உங்களின் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது....

சானியா ஒரு சாதனை படைத்த இந்திய வீராங்கனை என்ற விதத்தில் எனக்கும் மகிழ்ச்சிதான்.அவர் மேலும் சாதனை படைக்கவேண்டும் என்ற என் ஆதங்கம் தான் என் விமர்சனத்திற்கும் காரணம்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?