Friday, January 13, 2006

வள்ளுவர் கோட்டத்தை இடிக்கவேண்டும்

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிகளை காணச்சென்ற நான் ஞாயிறன்று இரண்டு மணிநேரம் அருகில் இருந்த வள்ளுவர் கோட்டத்தில் கழிக்க வேண்டியதாயிற்று.

வள்ளுவம் எங்கள் உயிர்மூச்சு. திருக்குறள் எமது மறை என்றெல்லாம் பிதற்றும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்.ஒரு காலத்தில் உள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டுக்கொண்டு இருந்ததாம்.இப்போது இல்லை. முன்பகுதியில் சிறிய கார்டன். இந்தியன் வங்கி புண்ணியத்தில் நன்றாகவே மெயின்டெய்ன் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மெயின் கட்டிடம் பெயிண்ட் செய்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்றோ தெரியவில்லை. அழுது வடிகிறது. உள்ளே ஹாலில் சர்வோதய சங்க கண்காட்சி நடைப்பெற்று கொண்டிருந்தது. அதையும் சகித்துக்கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை.

ஆனால் முக்கிய பகுதி மாடி வராண்டா.இங்குதான் அனைத்து குறள்களையும் அதிகாரங்களாக பிரித்து ஒவ்வொரு தூணில் பொறித்து படங்களுடன் வைத்துள்ளார்கள். இந்த பகுதியை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. சுத்தம் செய்து பல நூற்றாண்டுகள் உருண்டோடி இருக்கும் போல ஒரு தோற்றம். வெற்றிலை எச்சில். காகித குப்பைகள். காண்டம் ஒன்றுதான் இல்லை. பெயிண்ட் செய்து பல நாட்கள் ஆகியிருக்கும்.

சுவர்களில் இருக்கும் படங்கள் துடைக்கப்படுவதில்லை. பாத்ரூம், டாய்லட் என்றெல்லாம் கூறப்படுகின்ற ஒரு பகுதியும் உள்ளே உள்ளது. தயவு செய்து யாரும் உள்ளே நுழைந்து விடாதீர்கள். சுத்தப்படுத்தபடுவதும் இல்லை. தண்ணீரும் இல்லை. மூச்சு திணறி விடும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்புறம் பராமரிக்கப்படாமல் ஒரு பகுதி உள்ளது. அதில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி கழுவப்படாமல் இருக்கிறது.அந்த பக்கமும் போக முடியவில்லை.

யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, என்னே தமிழர் தமிழ் பற்று! வள்ளுவர் பற்று! ஆக நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்தான் என்று நினைத்து வந்து பார்த்தால் நம் மானம் என்ன ஆவது?

சுத்தமாக மெயின்டெய்ன் பண்ணலாம்.அனைத்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கலாம். ஒரு சிறிய நூலகம் அமைத்து அனைத்து திருக்குறள் உரைகளையும் வாங்கி போடலாம். எவ்வளவோ செய்யலாம். பணம் பிரச்சினை என்றால் வசூல் செய்தால்கூட தமிழர்கள் கொடுப்பார்களே.

மாற்று கட்சி அரசு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தது தான் பிரச்சினை என்றால் மாற்றுக்கட்சி அரசாங்கம் அமைத்த அனைத்து ரோடு, பாலம் அனைத்தையும் அரசாங்கம் இடிக்க முன்வருமா?

இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொள்ளலாம்.வருமானமாவது வரும்.

18 comments:

dondu(#11168674346665545885) said...

"இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக்கொள்ளலாம்.வருமானமாவது வரும்."
முற்றிலும் ஒத்து கொள்கிறேன். ஆனால் ஒரு சந்தேகம், 1996-2001 வரையிலான காலக்கட்டத்தில் அது நன்றாகப் பராமரிக்கப்பட்டதா என்று யாராவது கூறுவார்களா?

இப்பின்னூட்டத்தை எழுதும்போது என்னுடைய புது பதிவிற்கு நீங்கள் இட்டப் பின்னூட்டம் கூகள் டாக் வழியாக மேலெழும்பியது. அதற்கு அச்சிடும் ஆணை கொடுத்து விட்டு இங்கு வருகிறேன்.

என்னுடைய இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும், பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

rajkumar said...

திருவாளர் டோண்டு அவர்களே,

கருணாநிதி ஆட்சி காலத்தில் அரசாங்க விழாக்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. எனக்கு தெரிந்து நடந்த விழாக்கள்- தமிழகப் பள்ளிகளில் கணனி்த் திட்ட அறிமுக விழா மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஆகியவை.

அதன் பின்பு மாநாடுகள் சில நடந்தன. தற்போதைய அரசாங்கம் தனியார் விழாக்களுக்கு அனுமதி அளித்து வருமானம் ஈட்டலாம். மாற்று அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டதால் புறக்கணிக்கப்படுகிறது வள்ளுவர் கோட்டமும், குமரி வள்ளுவர் சிலையும்.

G.Ragavan said...

அதிமுக ஆட்சிக்கு வந்தாலே வள்ளுவர் கோட்டத்திற்கு கேடு வந்து விடும். வள்ளுவர் கோட்டம் அரசாங்கப் பராமரிப்பில் உள்ளது. அதைக் கட்டியது கருணாநிதி என்பதால் அதிமுக அரசாங்கங்கள் ( எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ) அதைப் பாழகவே விட்டு விடுகின்றன. அரசாங்க்கத்தைக் குற்றம் சொல்வதே இந்த இடத்தில் சரியாக இருக்குமே ஒழிய, ஷாப்பிங் காம்பிளெக்ஸ் அமைப்பதோ..இடித்து விடுவதோ முறையாக இருக்காது.

Muthu said...

வாங்க புலம்பல்ஸ்,

இங்கிலிபிசுல சொல்லி இருக்கீங்க...நல்லது...இப்போ நான் மங்களுர்ல இருந்த நாலு பேரை கூட்டிட்டு (கன்னட ஆளுங்க தான் கிடைப்பாங்க. பரவாயில்லையா)...சென்னை வந்து உங்களையும் கூட்டிட்டு வள்ளுவர் கோட்டம் போறோம். கிளீன் பண்றோம்னு வையுங்க.....

திரும்பவும் மறுநாளே யாரோ சிலர் உச்சா போறாங்க..அசிங்கப்படுத்தறாங்கன்னு வைங்க..யார் வர்றது? ரயில் டிக்கெட்டோ அல்லது பிளைட் டிக்கெட்டோ நீங்க ஏற்பாடு
பண்ண முடியுமா?

புத்திசாலித்தனமா பேசுறதா நினைச்சுட்டு ஏதாவது உளறவதற்கு முன் சிந்திக்கணும். அப்புறம் அரசாங்கம்னு ஒண்ணு எதுக்கு இருக்கு? --------------அதுக்கா? திரும்பவும் ..படிங்க.
சந்திக்கு இழுத்து சீரழிக்க நினைக்கறதுக்கு முன்னாடி சிந்திங்க...சார்..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் வருத்தம் நியாயம் தான். கருணாநிதி ஆட்சியிலும் கூட இன்னும் சிறப்பாக பராமரிக்க முடியும். கட்டடத்தை இடிப்பது தீர்வு அன்று. அதை நீங்கள் seriousஆக சொன்னதாகவும் நினைக்கவில்லை

Muthu said...

நன்றி திரு.டோண்டு,

தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் இது நன்றாக பராமரிக்கபடாவிட்டால் கேள்வி கேட்க நமக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன்.

பூங்குழலி said...

முத்து,
பொது அரங்கில் இதை எடுத்துவந்து மற்றவரையும் அறியச் செய்ததே ஒரு தொண்டுதான்,

பார்த்து எழுதுங்கள், யாராவது தீவிரவாதியாக்கிவிடப் போகிறார்கள்.
பிறகு நிறைய நகைச்சுவை பதிவுகள் எழுதி சமன் செய்ய வேண்டிவரும்.

:))

நன்றி,
பூங்குழலி

நல்லவன் said...

கருணாநிதி கட்டியதால் இந்த அரசு அதை கவணிக்காமல் விட்டு விட்டதோ?

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

வள்ளுவர் கோட்டம் மட்டும் அல்ல. கன்னியாகுமரி வள்ளுவர் சிலையும் அப்படியே.
அமெரிக்கச் சுதந்திரதேவி சிலை போல் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டிய சிறந்த சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது.

b said...

1996-2001ல் சரியாகக் கவனிக்கப் படவில்லை என்று ஒரு ஜாதி வெறி தீவிரவாதி புலம்புகிறார். ஏன் கவனிக்கபட வில்லையாமா?

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள் முத்து.

வாழிய நலமே!

Anonymous said...

என்னா சார்,

பராமரிகாததெல்லாம் இடிக்க சொல்லுவீங்க போல

அப்படி பார்த்தா டமில் நாட்டுல பாரம்பரிய சின்னம்ன்னு, கலாச்சார சின்னம்ன்னு எதுவுமே இருக்காது போல

ஏன் சார் ஒங்க மெண்டாலிட்டி இடிக்கறதிலேயே இருக்கு

மாத்திக்கோங்கோ சார் இல்லேன்னா எதையாவது இடிச்சி கையும் களவுமா மாட்டிக்கப் போறீங்கோ

இவ்ளே பேசிறீங்களே வள்ளூவர் சொன்னதிலே எதை முழுமையா கடைப்பிடிக்கிறீங்கன்னு சொல்லலையே

நீங்க சொன்னது[யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு]

பினாத்த மட்டும்தான் செய்றீங்களோன்னு தோணுது.

Muthu said...

//நீங்க சொன்னது[யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு]

பினாத்த மட்டும்தான் செய்றீங்களோன்னு தோணுது.//
நன்றி அனானி,

இதை சொல்ல எதுக்கண்ணே அனானியா வறீங்க? முகத்திரையை கிழிச்சிட்டு ஆண்மையோடு இதையே சொன்னாலும் நான் உங்களை என்ன பண்ணபோறேன்?

நிற்க..

உங்க கருத்துக்களில் உள்ள சிந்தனை என்னை வியக்க வைத்தது. நன்றி.
டமில்நாட்டுக்கு பிரச்சினையே இல்லை இனிமேல்.

டிபிஆர்.ஜோசப் said...

சென்னையிலயே இருக்கறவங்க இங்கல்லாம் போறதேயில்லை.. நான் வ.கோ. திறக்கப் பட்ட ஆண்டில் பார்த்ததுதான்.

ஒரு திராவிடர் கட்சி துவக்கியதை மற்றொரு திராவிடர் கட்சி அலட்சியம் செய்வதென்பது நம் த.நாவின் தலையெழுத்து.

சரி, அத விடுங்க முத்து,

என் மருமகன் ஆசைப் பட்டாரே என்று சென்னையிலுள்ள பிர்லா பிலானட்டோரியத்துக்கு குடும்பத்தோடு போயிருந்தோம்.

அதில் அறிவியல் கூடம் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. அதில் சுமார் 80க்கும் மேற்பட்ட சாதனங்கள் பழுதடைந்து காணப்பட்டன. பல சாதனங்களும் தூசு படிந்து.. ஏன் கேட்கிறீர்கள்.

உள்ளே நுழைய கட்டணம் வேறு..

அது தனியார் மேற்பார்வையில் உள்ளதுதானே.. பார்க்கும் இடமெல்லாம் பணியாளர்கள்..

எத்தனை லட்சங்களோ செலவழித்து கட்டப்பட்ட அட்டகாசமான கட்டிடங்கள். இருந்தும் என்ன பயன்? எதற்காக கட்டப் பட்டதோ அதைப் பராமரிக்க முடியாமல்..

அதையும் இடித்துவிடலாமா என்று உங்களுடைய பதிவைப் படித்த பிறகு கேட்க தோன்றுகிறது..

அது சரி முத்து.. புலம்பல்ஸ்சோட பின்னூட்டத்துக்கு நீங்க பட்ட கோபம் கொஞ்சம் ஓவரோன்னு தோனுது..

அதே மாதிரி அந்த அனாமதேயமும் அப்படித்தான்.

பேசாம திருப்பி மாடரேஷனுக்கே போயிருங்க..

Muthu said...

THANKS FOR SHARING YOUR VIEWS...
DONDU

RAJKUMAR

RAGHAVAN

RAVISHANKAR

POONGUZHALI

MOORTHI

VALARTHAVAN

KALVETTU

JOSEPH

LAST BUT NOT THE LEAST ONE AND ONLY ANONY

Muthu said...

//பார்த்து எழுதுங்கள், யாராவது தீவிரவாதியாக்கிவிடப் போகிறார்கள்.
பிறகு நிறைய நகைச்சுவை பதிவுகள் எழுதி சமன் செய்ய வேண்டிவரும்.//


பூங்குழலி,என் டெக்னிக் உங்களுக்கு தெரிந்து விட்டதா?

//வள்ளுவர் கோட்டம் மட்டும் அல்ல. கன்னியாகுமரி வள்ளுவர் சிலையும் அப்படியே. அமெரிக்கச் சுதந்திரதேவி சிலை போல் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டிய சிறந்த சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது//

இதுவும் வருந்த தக்கது தான் கல்வெட்டு

Muthu said...

//என் மருமகன் ஆசைப் பட்டாரே என்று சென்னையிலுள்ள பிர்லா பிலானட்டோரியத்துக்கு குடும்பத்தோடு போயிருந்தோம்.

அதில் அறிவியல் கூடம் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. அதில் சுமார் 80க்கும் மேற்பட்ட சாதனங்கள் பழுதடைந்து காணப்பட்டன. பல சாதனங்களும் தூசு படிந்து.. //

கொடுமை joseph சார்...அறிவியல் கூடத்திற்கும் இதே நிலைமையா....பார்த்து அனானி வந்து உனக்கு அறிவியல்ல என்ன தெரியும் என்று கேட்கபோகிறார்.....



இடிப்பது என்பது சரியான தீர்வு அல்ல என்று நானும் அறிவேன். எரிச்சலில் எழுதியது. நான் அதை சீரியஸாக சொல்லவில்லை என்று அறிந்த நண்பர் ரவிசங்கருக்கு நன்றி.....






.

இரா.சுகுமாரன் said...

கழிப்பரை சுத்தமில்லை என்பதால் வள்ளுவர்க்கோட்டத்தையே இடித்து காசு பண்ணத்துடிப்பது தமிழனின் (முத்து) கோளாரான பார்வை.
இரா.சுகுமாரன் புதுச்சேரி