Thursday, January 12, 2006

புத்தக கண்காட்சியும் வலைப்பதிவு நண்பர்களும்

நான் ஏ.டி.பி டென்னிஸ் மேட்சும் புத்தக கண்காட்சியும் பார்க்க சென்னை வருவதையும் அச்சமயம் சென்னை வாழ் வலைப்பதிவாள நண்பர்களை பார்க்க விருப்பம் என்று கூறி போட்ட பதிவிற்கு பதில் கொடுத்தவர்கள் இரண்டு பேர்.

"என்றும் பதினாறு" டோண்டுவும் "சிரிப்பழகன்" ரஜினி ராம்கியும் தான் அவர்கள்.

ஏற்கனவே டோண்டுஇந்த வரலாற்று சிறப்பு(?) வாய்ந்த சந்திப்பை பற்றி எழுதியுள்ளார். சில நண்பர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.இது எப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு ஆகும் என்று. அந்த நண்பர்கள்
என்னுடைய சோ சம்மந்தமான பதிவுகளை (பின்னூட்டங்கள் உள்பட) பார்த்தால் அது ஏன் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு என்பது தெரியவரும்.

ராம்கியும் அன்றும் அதற்கு மறுநாளும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதித்துள்ளார்(கமெண்ட்ஸ் நச்சுன்னு இருந்தது ராம்கி)

கடந்த சனிக்கிழமை( சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.மதியம் கிழக்கு பதிப்பக ஸ்டாலில் திரு.பத்ரியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அப்போது ஐகாரஸ் பிரகாஷ் வந்திருந்தார்.அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் பத்ரி. சரியாக என் பிளாக்கின் பெயரை கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார் பிரகாஷ். சோ பதிவும் அதை தொடர்ந்து நடந்த சில சமாச்சாரங்களும் என்னை பத்ரி,பிரகாஷ் போன்ற மூத்த வலைப்பதிவாளர்களிடம் அறிமுகப்படுத்தி உள்ளன என்று நினைக்கிறேன்.

பிறகு ஏற்கனவே முடிவு செய்திருந்தது படி மாலை கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு வந்தேன். சுமார் ஆறு அடி உயரம், கழுத்தில் மாட்டிய மொபைல் என்று மாடர்னாக நின்று கொண்டிருந்தார் "என்றும் பதினாறு" டோண்டு.மூன்று மணிநேரத்திற்கும் மேல் நீண்ட எங்கள் பேச்சின் பெரும்பகுதி போலி டோண்டுவை பற்றிய சுழன்று கொண்டு இருந்தது. கம்ப்யூட்டர் தொழில்நுணுக்கம் எல்லாம் எனக்கு தெரியாது என்று கூறியபடியே ஆனால் கம்ப்யூட்டரின் எல்லா நுணுக்கங்களையும் பிட்டு பிட்டு வைத்தார் டோண்டு.கூர்மையான கவனிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ அவருக்கு கைகூடியுள்ள அவருடைய நுண்ணிய பார்வைகள் எனக்கு வியப்பூட்டின.தமிழ்மணத்தில் நடமாடும் போலிகளை பற்றிய ஒரு விஷயத்தில் அவர் தனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தது தான் எனக்கு அவரின் அவதானிப்புகள் சரியாக இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட காரணம். முழுக்க சரி என்று கூறமுடியாவிட்டாலும் தவறு என்று ஒதுக்கமுடியாது.

பிறகு சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி புத்தகத்தை வாங்க டோண்டுவுடன் சில புத்தக ஸ்டால்களில் ஏறி இறங்கினேன். என்னுடன் வந்துக்கொண்டிருந்த டோண்டு சட்டென்று அகராதிகள்( DICTIONARY) விற்கப்பட்டு கொண்டிருந்த ஒரு ஸ்டாலில் நுழைந்தார்.

"ஜெர்மன், பிரஞ்சு கலைச்சொல் அகராதி உள்ளதா" , என்று ஒரு கேள்வியை போட்டு கடைக்காரனை மிரள வைத்தார்.கடைக்காரனும் மிரண்டுப்போய் இல்லை எனவும் இவ்வளவு பெரிய புத்தக கண்காட்சியிலும் தன் ரேஞ்சுக்கு புத்தகம் இல்லை என்று கடைக்காரனுக்கு(எனக்கும்) புரிய வைத்த சந்தோஷத்துடன் கடையை விட்டு வெளியே வந்தார் டோண்டு.

ஆனால் அச்சிலேயே இல்லாத "சீரோ டிகிரி" புத்தகத்தை எழுத்தாளர் திரு.பா.ராகவன் (நிலமெல்லாம் இரத்தம் புகழ்) அவர்களிடம் இருந்து வாங்கி கொடுத்தார். பல தகவல்களை கையில் வைத்திருக்கும் டோண்டு அவர்கள் தினம் ஒரு பதிவு போட்டால்கூட அவருக்கு எழுத சரக்கு இருந்துக்கொண்டே தான் இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

என்னுடைய பதிவின் கடுமையான சில விமர்சனங்களையும் மீறி அவர் சகஜமாக நட்பு பாராட்டியது எனக்கு நிறைவாகவே இருந்தது.நட்பு வேறு என்றும் கருத்து ரீதியில் நான் கடுமையாக மோதுவேன் என்று நான் பிரகடனம் செய்ததை அவர் ரசித்து சிரித்தார்.

பிறகு ராம்கி மூலமாக "கிரிக்கெட்" மீனாக்ஸ், வந்தியதேவன் மற்றும் சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.பெரும்பாலான நேரம் கிழக்கு ஸ்டாலில் தான் அமர்ந்திருந்தோம். அரவிந்தசாமி ஸ்டைலில் லாப் டாப்பில் முழ்கியிருந்த பத்ரி அவ்வபோது சில நேரங்கள் மட்டும் தலையை தூக்கி தனது பதிவுகளை போலவே ரத்தின சுருக்கமாக ஏதாவது கருத்துக்களை சொல்லுவார்.

டி.பி.ஆர்.ஜோசப், ரோசா வசந்த், சந்திப்பு பெருமாள் போன்றவர்களை காண முடியாதது எனக்கு வருத்தம்தான்.ராம்கிதான் தேற்றினார்.ஒரு கெட்-டு -கெதர் மாதிரி நடத்த பிளான் செய்ததாகவும் பல காரணங்களால் அது முடியாமல் போய்விட்டதாகவும் அங்கலாய்த்துக்கொண்டார்.பிறிதொரு நாள் செய்வோம் என்றார்.வலைப்பதிவு சம்மந்தமாக சில ஆலோசனைகளையும் அவரிடம் பெற்றுக்கொண்டேன்.டோண்டு போலவே இவரும் ஸ்போர்டிவ்வாகவே இருந்தார்.

ஜேம்ஸ்பாண்ட் மாதிரி தோளில் மாட்டிய ஒரு பேக், கையில் ஒரு காமிரா செல்பேசி வைத்துக்கொண்டு ராம்கி பண்ணிய அலம்பல் சொல்லி மாளாது. இவரை மீறி ஒரு பிரபலமும் உள்ளே வரமுடியவில்லை.வெளியே செல்ல முடியவில்லை.

நானும் அப்துல் ரகுமான், நக்கீரன் கோபால் , திலகவதி , மனுஷ்யபுத்திரன் போன்ற பிரபலங்களை முதல்முதலாக பார்த்தேன். சா.கந்தசாமி்யை பார்த்து ஜெயகாந்தன் என்று உளறிய என்னை அனுதாபத்துடன் பார்த்த ராம்கி அவர் ஜெயகாந்தன் அல்ல சா.கந்தசாமி என்று விளக்கினார்.

மொத்தத்தில் சென்னை பயணத்தின் புத்தக கண்காட்சி அனுபவமும் நண்பர்களை சந்தித்த அனுபவமும் எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் சென்னை வாழ் நண்பர்களின் மேல் மனதின் ஓரத்தில் சிறிது பொறாமையையும் ஏற்படுத்தியது.தினமும் மாலை புத்தக கண்காட்சி செல்வதும் இலக்கிய பேச ஆட்கள் இருப்பதும் தமிழ்மண்ணில் தான் சாத்தியம். அதுவரை தமிழ்மணம் தான் எங்களை போன்ற ஆட்களுக்கு
ஆறுதல்.


இனி புத்தகங்களை பற்றி

சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

பெருமாள்முருகனின் கூளமாதாரி

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்

சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி

சுந்தர ராமசாமியின் காகங்கள் சிறுகதை தொகுப்பு

ஜெயமோகனின் சுந்தர ராமசாமி நினைவின் நதியில்

காந்தியின் சத்திய சோதனை

VISUAL BASIC BLACK BOOK (என் மனைவிக்கு)

EDUCATION CD (என் மகளுக்கு)

ஒரு கடையில் ஜெயமோகனின் கொற்றவை என்று நூலை பார்க்க நேர்ந்தது. கடைக்காரர் இது ஜெயமோகனின் லேட்டஸ்ட நாவல் என்றும் காப்பியம் என்றும் கூறினார். ஜெயமோகன் தான் எழுதும் அனைத்து நூல்களையும் காப்பியம் என்றுதான் கூறுவார் என்றேன் நான்.ஆனால் இந்த புத்தகம் நன்றாக போவதாக கேள்விப்பட்டேன்.

11 comments:

முத்து(தமிழினி) said...

TEST

santhipu said...

முத்து
பொங்கல் வாழ்த்துக்கள்!
எனக்கு கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லை. சென்னை கொசு கடித்து மலேரியாவில் படுத்து விட்டேன்.
இதனால் தமிழ்மணத்தின் வாசனையை நுகர முடியாத ஏக்கம் மனதை வாட்டிக் கொண்டே இருந்தது.
இன்றைக்கு வந்ததும் தங்கள் பதிவை பார்த்தேன். மகிழ்ச்சியாகவும், சோகமாகவும் இருந்தது. மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் சென்னை வந்தது. சோகத்திற்கு காரணம் உங்களை சந்திக்க முடியாமைக்கு!
எனக்கும் நீண்ட நாள் இந்த ஆசை இருந்தது நம்முடைய பிளாக்° உறுப்பினர்கள் சென்னையில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று அந்த முதல் வாய்ப்பு நழுவி விட்டது.
காலம் இன்னும் இருக்கிறது எதிர்காலத்தில் நிச்சயம் சந்திப்போம்.
உங்களது அனுபவங்கள் இனிமையாக இருந்தது. வலைப்பூ மூலமாக நானும் உங்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது போல் ஒரு பீலிங்... நன்றி முத்து.
அடுத்து உங்கள் தேர்தல் வலைப் பதிவில் மாற்றுக் கருத்துக்காக காத்திருக்கிறேன்

முத்து(தமிழினி) said...

thanks perumal.

i will come up with the next series of election special tomorrow

tbr.joseph said...

என்ன முத்து தலைப்பை சுருக்கிட்டிங்க போலருக்கு. குட்.

காலைல ரொம்ப நேரம் பின்னூட்டம் போடறதுக்கு ட்ரை பண்ணேன்.. அப்புறம்தான் தலைப்பு ரொம்ப நீளமானதுதான் காரணம்னு..

அப்புறம் முத்து.. நானும் 22ம் தேதியிலருந்து லீவ்ல இருந்தேன்.. வீட்லருந்து டைம் கிடைச்சப்பல்லாம் பதிவுதான் போட முடிஞ்சதே தவிர.. பதிவுகள படிக்கறதுக்கு நேரமே கிடைக்கலை.. டோண்டு சார்தான் ஃபோன் பண்ணி சொன்னார். மூத்த பொண்ணு இனி மறுபடியும் வரதுக்கு எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும். அதனால அவ இருக்கறப்போ எங்கயும் போக முடியலை.. We will meet next time..

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,

நன்றி...அவரும் சொன்னார் சனிக்கிழமையன்று நீங்கள் ஏர்போர்ட் சென்று விட்டதாக..கண்டிப்பாக அடுத்த முறை சந்திப்போம்..

எனக்கும் டூர் அது இது என்று படிக்க நேரமே கிடைப்பதில்லை...கடந்த சில நாட்களாக ஒரு புதிய பிராஜக்ட்டில் இருப்பதால் அலுவலகத்திலும் நேரமே இல்லை....பிழைப்பு தானே முதல்ல..உங்கள் நட்சத்திர பதிவுகளி்ல் ஒன்றிரண்டு தான் படிக்க முடிந்தது. வருகிறென்.நம்ப ராம்கி கிட்ட கூட சொன்னேன். மெட்ராஸ்ல ஏதாச்சும் சான்ஸ் கிடைச்சா வந்துறலாம்னு....

dondu(#4800161) said...

"சுமார் ஆறு அடி உயரம், கழுத்தில் மாட்டிய மொபைல் என்று மாடர்னாக நின்று கொண்டிருந்தார் "என்றும் பதினாறு" டோண்டு.மூன்று மணிநேரத்திற்கும் மேல் நீண்ட எங்கள் பேச்சின் பெரும்பகுதி போலி டோண்டுவை பற்றிய சுழன்று கொண்டு இருந்தது. கம்ப்யூட்டர் தொழில்நுணுக்கம் எல்லாம் எனக்கு தெரியாது என்று கூறியபடியே ஆனால் கம்ப்யூட்டரின் எல்லா நுணுக்கங்களையும் பிட்டு பிட்டு வைத்தார் டோண்டு.கூர்மையான கவனிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ அவருக்கு கைகூடியுள்ள அவருடைய நுண்ணிய பார்வைகள் எனக்கு வியப்பூட்டின.தமிழ்மணத்தில் நடமாடும் போலிகளை பற்றிய ஒரு விஷயத்தில் அவர் தனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்தது தான் எனக்கு அவரின் அவதானிப்புகள் சரியாக இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட காரணம். முழுக்க சரி என்று கூறமுடியாவிட்டாலும் தவறு என்று ஒதுக்கமுடியாது.

பிறகு சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி"

நீங்கள் என்னைப் பற்றி எழுதியதைப் பார்க்கும்போது சீரோ டிகிரியை படிக்காமலே உணர்ந்து கொண்டேன். அப்பா ஒரே குளிர்தான் போங்கள்.

இப்பின்னூட்டம் என்னுடைய பிரத்தியேகப் பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்து(தமிழினி) said...

//நீங்கள் என்னைப் பற்றி எழுதியதைப் பார்க்கும்போது சீரோ டிகிரியை படிக்காமலே உணர்ந்து கொண்டேன். அப்பா ஒரே குளிர்தான் போங்கள்.//

நீங்க ஒரேயடியாக குளிர்ந்து போகக்கூடாது என்றுதான் கீழ்க்கண்ட மேட்டரையும் போட்டுள்ளேன். இதை படித்தால் தலை உடம்பு எல்லாம் சூடாகி நார்மல் நிலைக்கு வந்துவிடுவீர்கள்....

//இவ்வளவு பெரிய புத்தக கண்காட்சியிலும் தன் ரேஞ்சுக்கு புத்தகம் இல்லை என்று கடைக்காரனுக்கு(எனக்கும்) புரிய வைத்த சந்தோஷத்துடன் கடையை விட்டு வெளியே வந்தார் டோண்டு.//

முத்து(தமிழினி) said...

இன்னும் ஒரு ஆள் தன்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வரவேண்டி உள்ளது..(ராம்கி எங்க இருக்கீங்க?)

ராம்கி said...

சிரிப்பழகன்?! No கமெண்ட்ஸ்! :-)

முத்து(தமிழினி) said...

/சிரிப்பழகன்?! No கமெண்ட்ஸ்! :-) //

சரி வேண்டாம்..கீழே உள்ளதுக்காவது....

//ஜேம்ஸ்பாண்ட் மாதிரி தோளில் மாட்டிய ஒரு பேக், கையில் ஒரு காமிரா செல்பேசி வைத்துக்கொண்டு ராம்கி பண்ணிய அலம்பல் சொல்லி மாளாது. இவரை மீறி ஒரு பிரபலமும் உள்ளே வரமுடியவில்லை.வெளியே செல்ல முடியவில்லை//

dondu(#4800161) said...

"//இவ்வளவு பெரிய புத்தக கண்காட்சியிலும் தன் ரேஞ்சுக்கு புத்தகம் இல்லை என்று கடைக்காரனுக்கு(எனக்கும்) புரிய வைத்த சந்தோஷத்துடன் கடையை விட்டு வெளியே வந்தார் டோண்டு.//"
This is supposed to pull me down to the earth? Not at all; on reading these lines, I was just amused imagining my facial expression as noticed by you. I do take up such exercises now and then ever since that Sunday that turned my life upside down recently in 1971.

As usal this comment will be copied to my special post for such a purpose.

Regards,
N.Raghavan
P.S. A small glitch with eKalappai. Hence the comment in English.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?