Monday, January 30, 2006

இர்பான் பதானும் போலி டோண்டுவும்

(பிளாக்கர் இம்சை தாளாமல் தலைப்பு சுருக்கப்பட்டுள்ளது.)
இர்பான் பதான் , ரோஜர் ஃபெடரர் ஆகியவற்றை பற்றி பேசும் பதிவில் போலி டோண்டு எங்கே வந்தான் என்பவர்களுக்கு பதில் கடைசியில் இருக்கிறது.

நேற்று சிக்கனை சாப்பிட்டுவிட்டு பல் குத்திக்கொண்டு இருந்தப்போது இர்பான் பதான் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டை சாய்த்தார். ரொம்ப நாட்களாக இர்பான் பதானை பற்றி எழுத வேண்டும் என்று என் மனதில் இருந்த எண்ணத்தை அசைப்போட்டுக்கொண்டு இருக்கும்போதே இரண்டாம் விக்கெட்டையும் சாய்த்தார். அடுத்ததாக மூன்றாம் விக்கெட்டும் சாயந்தது

.ஹாட்ரிக் என்ற சாதனையை முக்கியமான பேட்ஸ்மென்களை வீழ்த்தி சாதித்த 21 வயதான இர்பான் பதான் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். ஒரு ஏழை முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இர்பான் பதான் தனது திறமையால் இப்போது இந்திய அணியின் ஒரு தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராகி விட்டார் என்றும் கூறலாம்.

என்னை பொறுத்தவரை தற்கால கிரிக்கெட்டில் உடல்தகுதியுடன் சேர்ந்து மனஉறுதி, புத்திசாலித்தனம் வேண்டும்.டெக்னிக் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.நம் பாலாஜியும் அணியில் இடம்பெற்றார்.எல்லா பந்துகளையும் எந்தவித வெரைட்டி, திங்கிங் இல்லாமல் அவர் வீசுவதினால்தான் அவரால் அணியில் தன் இடத்தை தக்க வைக்க முடியவில்லை.


இதற்கு மாறாக இர்பான் பதான் புத்திசாலித்தனமாகவும் பொறுப்பாகவும் விளையாடுகிறார்.அரெளண்ட் த ஸ்டிக்கில் இருந்து வலக்கை பேட்ஸ்மென்களுக்கு அவர் வீசும் பந்துகளை எந்த பேட்ஸ்மெனும் இன்னும் சரியாக விளையாட முடியவில்லை. வெளியே செல்லுமா உள்ளே வருமா என்று கணிக்க முடியாமல் புத்திசாலித்தனமாக வீசுகிறார்


முரளிதரனின் பந்துவீச்சை பேட்ஸ்மென்களே சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பிய சூழ்நிலையில் பதான் அழகாக தடுத்து ஆடியதோடு மட்டும் இல்லாமல் ரன்களும் குவித்தது அவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வளர்ந்து வருவதை காட்டுகிறது.(பாகிஸ்தான் டூரிலும் ரன் குவித்தார் இவர்).



ஆட்டகளத்திலும் வெளியிலும் அவரின் நடவடிக்கைகள், அவரின் பேச்சு ஆகியவை பாராட்டத்தக்கவை.



நேற்று ஆஸ்ரேலியன் ஓபனின் ஆண்கள் இறுதிப்போட்டி நடந்தது. உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் "கிங்" ரோஜர் ஃபெடரருக்கும் 56 நிலை ஆட்டக்காரரான மார்க்கோஸ் பக்தாதிசுக்கும் இடையே இறுதிப்போட்டி நடைப்பெற்றது.இந்த மார்க்கோஸ் நமது சென்னை ஓபன் சாம்பியன் லுபிசிக், ஆண்டி ரோடிக் ஆகியோரை வென்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார்.



ஆரம்பத்தில் நன்றாக விளையாடி ரோஜருக்கு தண்ணி காட்டிய மார்க்கோஸ் இரண்டாவது செட்டில் இருந்து களைப்படைய தொடங்கிவி்ட்டார். முதலில் நிறைய தவறுகளை (Unforced errors) புரிந்த ஃபெடரர் தனது முழுதிறமையையும் காண்பிக்க மார்க்கோஸ் சரண்டர். இருந்தாலும் ஃபெடரருக்கு பேக்ஹேண்ட் வீக்(comparatively) என்பது தெரிகிறது.



இந்த வெற்றியின் மூலம் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ஃபெடரர்.இவரின் ஆட்டத்திறனுக்கு ஈடுகொடுக்ககூடியவர் எனக்கு தெரிந்து ரஷ்யாவின் மாரட் சாஃபின்.ஆனால் எப்போதும் இஞ்சுரி தொல்லையிலேயே பாதிக்கப்பட்டு இருக்கும் இவர் எப்போது விளையாடுவார் என்றே கூறமுடியவில்லை. டெம்பரமெண்டும் மோசம்.அடிக்கடி டென்சன் ஆவார்.(மெக்கன்ரோவின் தம்பி எனலாம்)



நமது சானியா மிர்சாவிற்கு இந்த வருடம் ஆரம்பம் சரியில்லை என்று தான் கூறவேண்டும்.ஆனால் இரட்டையர் எக்ஸ்பர்ட்டான லியாண்டரும் பூபதியும் தூள் கிளப்புகிறார்கள்.பூபதி கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றார். லியாண்டர் ஆண்கள் இரட்டையர் பட்டத்தை போராடி நழுவ விட்டார்.டென்னிஸ் உலகில் இந்தியாவின் கொடியை பறக்கவி்ட்டதில் லியாண்டருக்கும் பூபதிக்கும் நிறைய பங்கு உள்ளது.அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.



சரி போலி் டோண்டுவை தலைப்பில் ஏன் இழுத்துள்ளீர்கள் என்பவர்களுக்காக இப்போதெல்லாம் போலி டோண்டுவை பற்றி எழுதவில்லையென்றால் அவர்களை வலைப்பதிவர்களாகவே யாரும் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.அது தான்.ஹி ஹி.

7 comments:

சின்னவன் said...

எல்லா பந்துகளையும் எந்தவித வெரைட்டி, திங்கிங் இல்லாமல் அவர் வீசுவதினால்தான் அவரால் அணியில் தன் இடத்தை தக்க வைக்க முடியவில்லை

Huh ? I thought Balaji is dropped becoz of the injury. He is not even playing for tamil nadu because of his fitness ( or lack of it ).
Maybe you know someone in selection committe to know the "real" reason for Balaji's exclusion from the Indian team ;-)

rajkumar said...

பாலாஜி காயம் பட்டிருப்பதால்தான் அணியில் இடம் பெறவில்லை. மீண்டும் ஆடத்துவங்கும் பட்சத்தில் அணியில் இடம் பெறுவது உறுதி.

பாலாஜியின் லெக் கட்டரும், அவுட் ஸ்விங்கரும் அழகானவை. அவரிடம் வெரைட்டி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

Muthu said...

பாலாஜீ அணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான் ஒரு தமிழன் என்ற முறையில் என் விருப்பமும்..

அவுட் ஸ்விங்கர், இன்கட்டர் எல்லாம் ஒ.கே...இல்லாவிட்டால் அணியில் இடம்பெற்றிருக்க முடியாது..ஆனால் மட்டையாளரை பொறுத்து வியூகத்தை மாற்றி
வீசுவதில்லை...

HE IS NOT SHOWING HIS VARIETY,WHEN THE BATSMEN IS FIRING,...INSTEAD HE ALLOWS THEM TO DOMINATE HIMSELF...

நடுவில் பவுலிங் ஆக்ஷன் மாறியது.....ஸ்லோவாக வீச ஆரம்பித்தார். பார்ப்போம்.திரும்ப வரும்போது நன்றாக வீசி அணியில் இடம்பெற்றால் சரி....

டிபிஆர்.ஜோசப் said...

முத்து,

நீங்க பாலாஜியப் பத்தி சொன்னது கொஞ்சமும் ஏற்க முடியாதது.

சாப்பலே அவர் நலம்பெற காத்திருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறார். இம்ரான் கானும் தன்னுடைய columnல் பாலாஜியை இந்திய அணி மிஸ் செய்வதாக எழுதியிருக்கிறார்.

அவர் அணியில் இடம்பெறுவது தமிழனின் கனவு என்று குறிப்பிட்டு அவரை தரம் தாழ்த்தாதீர்கள்.

நாமக்கல் சிபி said...

//சரி போலி் டோண்டுவை தலைப்பில் ஏன் இழுத்துள்ளீர்கள் என்பவர்களுக்காக இப்போதெல்லாம் போலி டோண்டுவை பற்றி எழுதவில்லையென்றால் அவர்களை வலைப்பதிவர்களாகவே யாரும் மதிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.அது தான்.ஹி ஹி.//

அதை பார்த்துதான் உங்க பதிவையே பார்க்கலாம்னு வந்தேன். ஆனாலும் அவரை சீண்டி பார்க்கரதுல ஒரு அலாதி பிரியம் போல. அவரே சிவனேன்னு போறவரையும் விட்டுடாதீங்க!

Muthu said...

ஜோசப் சார் வருகைக்கு நன்றி...

//அவர் அணியில் இடம்பெறுவது தமிழனின் கனவு என்று குறிப்பிட்டு அவரை தரம் தாழ்த்தாதீர்கள்.//

தமிழனின் கனவு பற்றி நீங்கள் விமர்சித்தது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எந்த அர்த்தத்தில் நீங்கள் சொன்னீர்கள் என்று தெரியாததால்...

பாலாஜீ பவுலிங் பற்றி நான் சொன்னது பொய்யானால் எனக்கும் சந்தோஷமே...

Muthu said...

ஜோசப் சார்,

நானும் ஒரு வேக பந்து வீச்சாளர் ஆக கல்லூரி அணியில் விளையாடிய அனுபவத்தில் கூறினேன். தவறாகவும் இருக்கலாம்.

பாலாஜீ சரி இல்லை என்றால் இருக்கிறவர்கள் எல்லோரும் அவரை விட சுட்டி என்று அர்த்தம் அல்ல..பட் இர்பான் இஸ் பெட்டா தென் ஹிம்..


சிபி நன்றி..சும்மா ஜோக்கு தாங்க..