Sunday, August 06, 2006

வள்ளுவர் கோட்டத்தை காக்கவேண்டும்

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிகளை காணச்சென்ற நான் ஞாயிறன்று இரண்டு மணிநேரம் அருகில் இருந்த வள்ளுவர் கோட்டத்தில் கழிக்க வேண்டியது ஆயிற்று. வள்ளுவம் எங்கள் உயிர்மூச்சு. திருக்குறள் எமது மறை என்றெல்லாம் பிதற்றும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்.ஒரு காலத்தில் உள் நுழைய கட்டணம் வசூலிக்கப்பட்டுக்கொண்டு இருந்ததாம்.இப்போது இல்லை. முன்பகுதியில் சிறிய கார்டன். இந்தியன் வங்கி புண்ணியத்தில் நன்றாகவே மெயின்டெய்ன் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மெயின் கட்டிடம் பெயிண்ட் செய்து எவ்வளவு வருடங்கள் ஆயிற்றோ தெரியவில்லை. அழுது வடிகிறது. உள்ளே ஹாலில் சர்வோதய சங்க கண்காட்சி நடைப்பெற்று கொண்டிருந்தது. அதையும் சகித்துக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை.ஆனால் முக்கிய பகுதி மாடி வராண்டா.இங்குதான் அனைத்து குறள்களையும் அதிகாரங்களாக பிரித்து ஒவ்வொரு தூணில் பொறித்து படங்களுடன் வைத்துள்ளார்கள். இந்த பகுதியை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. சுத்தம் செய்து பல நூற்றாண்டுகள் உருண்டோடி இருக்கும் போல ஒரு தோற்றம். வெற்றிலை எச்சில். காகித குப்பைகள். காண்டம் ஒன்றுதான் இல்லை. பெயிண்ட் செய்து பல நாட்கள் ஆகியிருக்கும்.சுவர்களில் இருக்கும் படங்கள் துடைக்கப் படுவதில்லை. பாத்ரூம், டாய்லட் என்றெல்லாம் கூறப்படுகின்ற ஒரு பகுதியும் உள்ளே உள்ளது. தயவு செய்து யாரும் உள்ளே நுழைந்து விடாதீர்கள்.
சுத்தப்படுத்தபடுவதும் இல்லை. தண்ணீரும் இல்லை. மூச்சு திணறி விடும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்புறம் பராமரிக்கப்படாமல் ஒரு பகுதி உள்ளது. அதில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி கழுவப்படாமல் இருக்கிறது.அந்த பக்கமும் போக முடியவில்லை.யாராவது வெளிநாட்டுக்காரன் நாம் திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் பினாத்திக்கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு, என்னே தமிழர் தமிழ் பற்று! வள்ளுவர் பற்று! ஆக நாம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் வள்ளுவர் கோட்டம்தான் என்று நினைத்து வந்து பார்த்தால் நம் மானம் என்ன ஆவது?

சுத்தமாக மெயின்டெய்ன் பண்ணலாம்.அனைத்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைக்கலாம். ஒரு சிறிய நூலகம் அமைத்து அனைத்து திருக்குறள் உரைகளையும் வாங்கி போடலாம். எவ்வளவோ செய்யலாம். பணம் பிரச்சினை என்றால் வசூல் செய்தால்கூட தமிழர்கள் கொடுப்பார்களே.மாற்று கட்சி அரசு வள்ளுவர் கோட்டத்தை அமைத்தது தான் பிரச்சினை என்றால் மாற்றுக்கட்சி அரசாங்கம் அமைத்த அனைத்து ரோடு, பாலம் அனைத்தையும் அரசாங்கம் இடிக்க முன்வருமா?

இல்லை செய்யமுடியாது என்றால் இந்த வள்ளுவர் கொட்டத்தை (இதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) இடித்து விடுங்கள் அய்யா. தமிழனின் மானமும் திருக்குறளின் மானமும் இப்படி காற்றில் பறக்கவேண்டாம்.அந்த இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிக் கொள்ளலாம். வருமானமாவது வரும்.

***********
மேற்கண்ட இந்த பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எழுதியது.இன்று ஆட்சி மாறியிருக்கும் சூழலில் ,கண்ணகிக்காக வாளை சுழற்றிய கலைஞர் இதற்கும் ஆவண செய்வாரா?

9 comments:

மகேஸ் said...

வள்ளுவர் கோட்டத்தின் உள் அரங்குகளின் பராமரிப்பையும் தனியார் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டால், வெளியே உள்ள பூங்கா போல நன்கு ஜொலிக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வள்ளுவர் கோட்டத்தில் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த துணிகள் தினமலர் செய்தியால் மாற்றப்பட்டன.

இப்போது ஒரு என் தமிழ் ஆசிரியர் சொன்ன சுவையான நிகழ்சி ஞாபகம் வருகிறது.

வள்ளுவருக்கு உருவம் கொடுக்க வேண்டும் என்று தமிழறிஞ்ர்கள் குழு கூடியிருந்தது. எப்படி உருவம் கொடுப்பது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது எல்லோராலும் கருத்தொற்றுமைக்கு வர முடியவில்லை.

அப்போது காற்றில் பறந்து வந்து விழுந்த காகித்தத்தில் ஒளரங்கசீப் பின் படம் இருந்ததாம். உடனே எல்லோரும் பேசி முடிவு செய்து ஒளரங்கசீப் கையில் எழுத்தாணி கொடுத்த்து வள்ளுவராக மாற்றிவிட்டனராம்.

நாமக்கல் சிபி said...

இதைப் படித்த யாரேனும் முதல்வருக்கு தெரியப் படுத்தினால் நல்லது.

நாகை சிவா said...

முத்து அமைதி அமைதி.
எப்பவுமே சூடாவே இருக்கீங்க
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//அப்போது காற்றில் பறந்து வந்து விழுந்த காகித்தத்தில் ஒளரங்கசீப் பின் படம் இருந்ததாம். உடனே எல்லோரும் பேசி முடிவு செய்து ஒளரங்கசீப் கையில் எழுத்தாணி கொடுத்த்து வள்ளுவராக மாற்றிவிட்டனராம்//

இது புதிய செய்தியாக இருக்கிறது!

Muthu said...

மகேஸ்

எனக்கு தெரிந்து வள்ளுவர் படத்தை வரைந்தவர் எங்கள் ஊரை சுாந்த கோபால் சர்மா என்பவர்.(சேலம்ஆத்தூர்)

நீங்கள் சொன்ன தகவல் வதந்தி என்று நினைக்கிறேன்

Muthu said...

sibi

நன்றி.

சிவா,

:))

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.நன்றி சிவா

சந்திப்பு said...

அட்ரா சக்கை. உங்கள் எண்ணம் நிச்சசயம் ஈடேரும் இந்த ஆட்சியில். நம்பிக்கையுடன் சந்திப்பு.

துபாய் ராஜா said...

முத்து,வள்ளுவர் கோட்டம் புதிய ஆட்சியில் பொலிவு பெற எல்லாம்
வல்ல இறைவன் விரைவில் அருள்புரிவானாக!.

லக்கிலுக் said...

////மேற்கண்ட இந்த பதிவு ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எழுதியது.இன்று ஆட்சி மாறியிருக்கும் சூழலில் ,கண்ணகிக்காக வாளை சுழற்றிய கலைஞர் இதற்கும் ஆவண செய்வாரா?/////

கண்டிப்பாகச் செய்வார் என்று நம்புகிறேன்.... என்னால் முடிந்தது CM செல்லுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன்....