சுதந்திர தின உரையை பாரத பிரதமர் குண்டு துளைக்க முடியாத கூண்டுக்குள் இருந்துதான் நிகழ்த்த முடிகிறது. வழக்கம் போல் பாகிஸ்தானுக்கு சவால், ஏழை விவசாய மக்களுக்கு ஆறுதல் என்று அனைத்து மசாலக்களையும் தூவி தயாரிக்கப்பட்ட இந்த உரையில் பெட்ரோலிய பொருள்கள் விலை உயரும் என்று சூசகமாக தெரிவித்தாராம் பிரதமர்.விலைகளை குறைக்க போராடுவோம் என்றுதான் சொல்வது வழக்கம். இப்போது தலைகீழாகி விட்டது. இந்தியா தான் வளருதாமே? கண்டுக்காத மாமே.
இந்த காஷ்மீர் பிரச்சினையில் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய ஒரு அரசாங்கம் நமக்கு கிடைக்கும் வரை அல்லது பாகிஸ்தான் அழியும்வரை இந்த பிரச்சினையை ஒழிக்கமுடியாது என்று தோன்றுகிறது.
***********
இலங்கை பிரச்சினை சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் கணிசமாக பகுதிகளை தங்கள் கைவசம் விடுதலைபுலிகள் வைத்துக் கொண்டிருப்பதாகவும் அங்கே தனி அரசாங்கமே நடக்கிறது என்றும் மற்ற நாடுகளின் அங்கீகரிப்புதான் இப்போதைக்கு தேவை என்றும் பலரும் கூறுகிறார்கள்.ஆயினும் அவர்களுடன் தொப்புள்கொடி உறவு கொண்டிருக்கும் நம்மில் பலபேர் அவர்களை தீவிரவாதி என்று கூறி நம் நடுநிலைமையை நிலைநாட்டுகிறோம்.
ராஜீவ் காந்தி ஒருவருக்காக ஒரு இனத்தையே அழிய விடமுடியுமா என்று தரண் கேட்கும் கேள்வி ஒதுக்கப்படக்கூடியது அல்ல. ராஜீவ்காந்தி இலங்கை பிரச்சினையை அணுகிய விதம் தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று கூறி நடுநிலைமையை நிலைநாட்டும் நாம், அறுபது பச்சிளம் தளிர்களை கொன்ற இலங்கை ராணுவத்தின் அட்டூழியத்தை கண்டிக்காத நாம், எங்கோ அடாவடி பண்ணும் இஸ்ரேலுக்கு தட்டும் ஜால்ராவில் கேட்பவர்கள் காது கிழிகிறது. கண்ராவி.
*****************
துளசியின் இந்த பதிவு இது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழை நக்கல் அடிக்கிறார்கள் என்று வருத்தப் பட்டிருக்கிறார். அவ்வளவு தூரம் போக தேவையில்லை. நம் ஊரிலேயே தமிழை மட்டம் தட்ட பலர் இருக்கிறார்கள்.
ஜெயராமன் தமிழின் போதாமை என்று கூறி சில கருத்துக்களை அள்ளி விட்டுள்ளார். அதற்கு முன் தமிழில் என்ன இருக்கிறது என்ன இல்லை என்று அறிந்து,தெளிந்து கூறியிருக்கலாம்.இதுபோன்ற கருத்துக்கள் வருவதற்கு காரணமே தமிழ் என்பது ஒரு தனிப்பட்ட, தனித்தியங்கக்கூடிய ஒரு மொழி என்ற கருத்தையே இவரை போன்றோர் ஒத்துக்கொள்ளாததுதான். சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் என்ற இவர்கள் அடிப்படை கருத்தே இவ்வாறு திரிந்து வருகிறது.
எப்போதும் அமைதியாக இருக்கும் ராகவன், லைட்டாக உணர்ச்சிவசப்பட்டு அதி ராகவன் ஆகிவிட்டார். இராம.கி மற்றும் குமரன் ஆகியோர் அதற்கு சரியான,விளக்கமாக பதிலை தந்துள்ளார்கள்.
ஜெயராமன் ஒரு மொழி அறிஞர் என்று அடையாளம் காணப்படுபவர் அல்ல. ஆகையால் அவருடைய இந்த கருத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்கத் தக்கதாகிறது. முக்கியமாக கல்வெட்டு கருப்புவின் பதிவில் கூறிய இந்த வரிகள் சிந்திக்கத்தக்கவை.
"உனக்கு ஆயிரம் மொழிகள் தெரிந்து இருக்கலாம். ஆனால், நீ எந்த மொழியுடன் உன்னை அடையாளப்படுத்திக் கொள்ள(இணைத்துக் கொள்ள) மனதால் விரும்புகிறாய் என்பது முக்கியம்.நீ அதுவாகவே ஆகிறாய்.அதனாலேயே அடையாளம் காணப்படுகிறாய்."

10 comments:
////சுதந்திர தின உரையை பாரத பிரதமர் குண்டு துளைக்க முடியாத கூண்டுக்குள் இருந்துதான் நிகழ்த்த முடிகிறது. /////
அருமையாகச் சொன்னீர்கள்.... நம் பாரதத்தை பிடித்த சாபக்கேடு இது....
இலங்கைத் தமிழர் வாழ்வில் ராஜீவ் காந்தி உயிரோடு இருக்கும் போதும் சரி..இப்போதும் சரி...ஒரு தடைக்கல்லாகவே இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக அரசியல்வாதிகள் இன்னும் துடிப்பாக இந்தப் பிரச்சனையை மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கருத்து. பாகிஸ்தானோடு இத்தனை பிரச்சனை இருந்தாலும் அது இது உறவு என்று பேசுகின்ற மத்திய அரசுகளுக்கு இலங்கைத் தமிழர் என்று வருகையில் ராஜீவ் படுகொலை மட்டுமே நினைவுக்கு வருவது மிகவும் வருந்தத் தக்கது.
////சுதந்திர தின உரையை பாரத பிரதமர் குண்டு துளைக்க முடியாத கூண்டுக்குள் இருந்துதான் நிகழ்த்த முடிகிறது. /////
எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே சொல்லிக்கொண்டு இருப்பது. பலதரப்பட்ட மொழிகள் மதங்கள் சாதிகள் கொண்ட இந்த நாட்டில் நம்முடைய செயல்கள் அனைவரையும் திருப்திபடுத்தாது. ஒரே குடும்பத்திற்குள்ளையே ஒவ்வாத கருத்துக்கள் நிலவும்பொழுது இவ்வளவு பெரிய நாட்டில் கண்டிப்பாய் கருத்து வேறுபாடுகள் வருவதை தவிர்க்க முடியாது. பிரதமருக்கு பாதுகாப்பு தராமல் பேச விடுகிறோம். ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு முத்து ( தமிழினி) பொறுப்பேற்கக் கூடுமா?
இந்திய கிரிகெட் அணியின் பாதுகாப்பை பற்றிய கவலையில் சிறிதெனும் இறந்து போன சிறுமிகள்
மீது இந்திய மக்கள்/ஊடகங்கள் காட்டி இருக்கலாம். மத்திய அரசிடமிருந்து ஒரு கண்டண அறிக்கை கூட இல்லை. அதனால் தான் சிங்கள இராணுவ தளபதிகள் "ஆம்! நாங்கள் நடத்திய வான் குண்டு வீசி தாக்குதலில் சிறுமிகள் இறந்தது உண்மை தான். ஸோ வாட்? அவர்கள் தீவிரவாதிகள்" என்று கொக்கரித்து கொண்டிருகின்றனர்.
//ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு முத்து ( தமிழினி) பொறுப்பேற்கக் கூடுமா?
//
சரியாக சொன்னீர்கள் நன்பரே.
எந்த நாட்டில் தான் - எந்த காலத்தில் தான் தேச தலைவர்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வளையம் இல்லாமல் இருந்தது?
Quit Whining!
//இப்போது தலைகீழாகி விட்டது. இந்தியா தான் வளருதாமே? கண்டுக்காத மாமே.//
ஓ இந்திய வளர்ந்தால் பெட்ரோல் பொருட்களின் பயன்பாடு குறைந்து உற்பத்திக் பன்மடங்கு அதிகரித்துவிடுமோ?
இல்லை இந்தியா வளருகிறது என்று பூமிக்கு அடியில் பெட்ரோல் ஊற்றுகள் தன்னிச்சையாக உற்பத்தியாகிவிடுமா?
மற்ற பொருட்களுக்கு subsidy வேண்டும், ஆனால் பெட்ரோல் மீது வரிபோட கூடாது.பெட்ரோலின் விலையையும் subsidize செய்ய வேண்டும்.
குபேரா - உந்தன் கஜானாவை கொஞ்சம் இந்தியர்களுக்கு திறந்துவிடப்பா!
நிலவுநணபனுக்கும் அநபாயனுக்கும்,
1.தீவிரவாதிகளின் பிரச்சினையை இத்தனை ஆண்டுகள் வளரவிட்டு பாதுகாப்பிற்காக பலகோடி செலவழிக்கும் நிலைமை சந்தோஷப்படும் விஷயம் இல்லை என்பது என் கருத்து.அது வரை புலம்பித்தான் ஆகவேண்டும்.பதிவில் இதைப்பற்றி ஒரு சுட்டி வைத்துள்ளேன்.
2.பெட்ரோலிய பொருட்களின் விலையில் முக்கிய அம்சம் வரிகள் தானாமே? ?
//2.பெட்ரோலிய பொருட்களின் விலையில் முக்கிய அம்சம் வரிகள் தானாமே? ? //
அந்த வரிகளை வாங்கி தான் சமையல் எரிவாயுவுக்கும், கிரோசீனுக்கும் மற்ற மிக பெரிய மானியங்களும் கொடுக்கபடுகிறதாமே?

முத்து,
நல்ல பதிவுங்க..
வருடாவருடம் சுதந்திர தினத்தை உயிரை கையில் பிடித்து கொண்டாடுவது ஏன்? ஏன் பிரச்சினைகளின் காரணத்தை கண்டறிந்து அவற்றை தீர்க்கக்கூடாது
samudra,
:)) back to same topic....
Post a Comment