Sunday, August 20, 2006

புலித்தம்பிக்கு அண்ணனின் ஆப்பு

அருமை தம்பி வைகோ கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்ததால்தான் ராஜீவ் பிரபாகரனை சந்திக்கும் ஒரு புரட்சிகரமான திட்டம் கைவிடப்பட்டது என்று அர்த்தம் தெனிக்கும்படி ஒரு கருத்தை அண்ணன் கலைஞர் நேற்று கூறியிருக்கிறார்.

இதை ஆப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது மெஸேஜ் என்று எடுத்துக் கொள்வதா என்று தெரியவில்லை.வைகோ அடக்கி வாசிக்க வேண்டும் என்று அண்ணன் விரும்புவதாக தெரிகிறது.இலங்கை தமிழர் பிரச்சினை என்பது தமிழக மக்களின் உணர்வு பூர்வமான ஒரு பிரச்சினை என்பது ஒருபுறமிருக்க இதை வைத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கபடி விளையாடுவது என்பது பல காலமாக நடந்து வருவதுதான்.

நேற்று மதிமுகவின் குட்டித்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளை ஆதரித்து துப்பாக்கி தூக்குவேன்,தனிதமிழ்நாடு கேட்போம் என்பதுபோன்ற பேச்சுக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் கூறுகிறது.மேலும் கலைஞர் இது தொடர்பாக பிரதமருடன் பேசி வருவதாகவும் என்ன பேசினார் என்று தமிழ் மக்களின் நன்மை கருதி வெளிப்படையாக கூற முடியாது என்று சட்டசபையிலே ஆற்காடு வீராசாமி கூறியிருந்தார்.

அண்ணன் கலைஞர் ஏற்கனவே ஒருமுறை ஆட்சியை இதனால் இழந்தது குறிபபிடத்தக்கது.ஆகவே அண்ணன் இந்த முறை உஷாராக வண்டியை ஓட்ட முடிவு செய்துள்ளார்.தம்பி வைகோவும் அம்மாவின் அணியில் இருப்பதால் அவரும் மிக வெளிப்படையாக எதையும் அம்மாவின் அனுமதியை மீறி பேசிவிடமுடியாது.

சேலத்தில் நடந்த தமிழர் மாநாட்டிலும் குட்டித்தலைகள் பல பிரபாகரனை பகிரங்கமாக ஆதரித்து பேசிய நிலையிலும் மாநாட்டில் பேசிய ராமதாஸ் அடக்கி வாசித்தது குறிப்பிடத்தக்கது. வெற்று பேச்சு கவைக்கு உதவாது என்ற முடிவுக்கு நமது தலைவர்கள் வந்துள்ளது பாராட்டத்தக்கது. அதிகாரம் பறிப்போய்விடும் என்ற பயம் இந்த பக்குவத்தை அவர்களுக்கு கொண்டு வந்திருந்தாலும் நல்லதுதான்.இப்போதைக்கு திருமாவளவன் கொஞ்சம் அதிகமாக பேசிவருகிறார்.ஆனால் அவருக்கு அவர் எல்லை தெரியும்.

இந்த விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசினால் இதை சாக்கிட்டு தமிழ் உணர்வையே கேலி பேசும் சக்திகளின் ஆட்டம் அதிகமாகிவிடும்.ஆனால் மத்திய அரசில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிக சலசலப்பு இல்லாமல் இலங்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்பட கலைஞர், ராமதாஸ்,வைகோ ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

32 comments:

முத்து(தமிழினி) said...

http://thiruvadiyan.blogspot.com/2006/08/blog-post_20.html

இது தொடர்புடைய சுட்டி.

Muse (# 5279076) said...

விடுதலைப்புலிகள் இலங்கை வாழ் தமிழ் இஸ்லாமியரை கொன்று குவிப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இத்தனைக்கும் அவர்கள் வெறும் அப்பாவிகள். இந்த அநியாயம் பற்றி ஊடகங்கள் ஏதும் பேசாமல் இருப்பது அதை விடைப் பெரிய அநியாயம். இது போன்ற நிகழ்ச்சிகள் விடுதலைப்புலிகளின் மேலுள்ள பற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கிக்கொண்டிருக்கின்றன.

முத்து(தமிழினி) said...

muse,

i think you are generalising a issue.do u know the entire episode? if you have any idea about the entire episode can you give me some more information about that...

வெற்றி said...

//விடுதலைப்புலிகள் இலங்கை வாழ் தமிழ் இஸ்லாமியரை கொன்று குவிப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்//

முசே, ஒரு விடயத்தைப்பற்றி எழுத முன்னர் அந்த விடயத்தைப் பற்றி ஆய்வு செய்து விட்டு எழுதுங்கள். சும்மா தெரியாத விடயங்களை உண்மை போல் திரித்து எழுதாதீர்கள். யார் சொன்னது புலிகள் தமிழ் இஸ்லாமியர்களைக் கொல்கிறார்களென்று?

ENNAR said...

வைக்கோ கள்ளத்தோணியில் இலங்கை சென்றாதாக ஒப்புக்கொண்டார் அவர் மீது நடவடிக்கை அரசு எடுக்குமா?
இரண்டு பெண்கள் சண்டைபோட்டால் உண்மை வெளிவரும் என்பார்கள் அது போல அண்ணன் தம்பிக்குள் என்ன வருகிறது என்று பார்ப்போம்.
அன்று ராஜீவை புலி கொள்ள வில்லை என்று சொன்னவர்கள் தான்.
இன்று ராஜீவ் பிரபாகரனை புகழ்ந்தார் என்கிறார் கலைஞர். (பிரபாகரனுக்கு பணம் கொடுத்ததை கலைஞர் சொல்லவில்லை சொல்ல முடியாது)
அதுவும் சரியே ஆனால் கலைஞரின் நிலைதான் பாவம் அதையும் சொல்லமுடியாமல் இதையும் சொல்லமுயாமல் எதாவது ஒன்று சொல்ல காங்கிரஸ் காரர்கள் இது தான் சாக்கு என (ஏற்கனவே மந்திரி பதவி தராததால் நொந்து போயிருக்கும் வேலையில்) சத்தம் போட்டு இங்கும் கவிழ்ந்து அங்கும் கவிழ்ந்து இரண்டும் கவிழ்ந்து. எல்லாம் கவிழ்ந்து வெளிநாடுகள் இலங்கையில் நுளைந்து அரசுபடைக்கு ஆதரவாக சண்டைபோட்டு அற்கு மேல் சொல்ல வேண்டாம்.

செல்வன் said...

இலங்கை பிரச்சனையில் அரசியல் செய்வதை தமிழர் அனைவரும் நிறுத்த வேண்டும்.
ஒரே குரல் மட்டுமே தமிழ்நாட்டில் இவ்விஷயத்தை பொறுத்தவரை ஒலிக்க வேண்டும்.

ராஜிவ் கொலையை பேசுவதை சிறிது காலம் நாம் அனைவரும் நிறுத்த வேண்டும்.சோனியாவே அதை மறந்து நளினிக்கு மன்னிப்பு வழங்கிய பின்னர் நாம் அதைப்பற்றி பேசக்கூடாது.அமெரிக்காவில் இருக்கும் சட்ட பிரச்சனையால் மேலும் இதுபற்றி சில விவரங்களை பேச முடியவில்லை.ஆனால் மறப்போம்,மன்னிப்போம் என்பதை கடைபிடிப்பதே நமக்கு அழகு.அவ்வளவுதான் சொல்ல முடியும்.

மத்திய அரசு நினைத்தால் ஈழப்பிரச்சனை வினாடியில் தீர்ந்துவிடும்.

நினைக்க வேண்டும்.அதுதான் முக்கியம்.

அப்படி நினைக்க வைக்க தமிழர் குரல் ஒரே குரலாய் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

(துபாய்) ராஜா said...

//"மத்திய அரசில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிக சலசலப்பு இல்லாமல் இலங்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்பட கலைஞர், ராமதாஸ்,வைகோ ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்."//

இதுவே எமது வேண்டுகோளும்.

விஜயகுமார் said...

மேற்படியாரின் திஸை திருப்பு முயற்சி. கவனம். கவனம்.

CAPitalZ said...

ஐயா மூசே,

ஒரு சில சோனகர்களை புலிகள் கொன்றிருக்கலாம். அவர்களை தமிழின துரோகிகளாகத் தான் கொன்றிருப்பார்களே ஒழிய ஒட்டு மொத்த சோனகர்களையும் கொல்ல வேண்டும் என்று கொல்லவில்லை. பல சைவ, கிறிஸ்தவ மதத்தவர்களையும் தான் புலிகள் கொன்றார்கள். அவைகளை ஒருபோதும் எமது மதத்திற்கு எதிராக செயற்பட்டதாக கருதவில்லை. தமிழினத் துரோகிகளாகவே தமிழர்கள் பார்த்தார்கள்.

அதனால், உண்மையில் சோனகர்கள் கொல்லப்பட்டிருந்தாலும் அப்படி ஒட்டு மொத்த சோனகர்களைக் கொல்லாமல் அந்த ஒரு சில பேர்வளிகளை கொன்றது அவர்களின் துரோகச் செயல்களுக்கு என்று அறியுங்கள். மொழிக்கு முன் மதத்தைக் கொண்டு வந்து இன்று உலக நாடுகளில் முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதற்கு இதுவே காரணம்.

அருண்மொழி said...

//விடுதலைப்புலிகள் இலங்கை வாழ் தமிழ் இஸ்லாமியரை கொன்று குவிப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//

இந்துத்வியாதியிடம் இருந்து இப்படி ஒரு பின்னூட்டம். அடடா முஸ்லிம்களிடம் என்ன ஒரு கரிஸனம். நம் பாரதத்தில், முக்கியமாக குஜராத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகளை பற்றி முதலில் பேஸுங்கள். பிறகு தமிழீத்தில் நடப்பதை பற்றி பேஸுவோம்.

முத்து பதிவிற்கு ஸம்பந்தமிலாத பின்னூட்டம். மன்னிக்கவும்.

Anonymous said...

தான் ஈழம் சென்றபின்பு, அதை அறிந்தநிலையில்தான் கருணாநிதி டெல்லி சென்று ராஜீவைச் சந்தித்ததாக வை.கோ பதிலளித்துள்ளார்.

பிரம்மா, விஸ்ணு, ஸிவா said...

அற்ப பதர்களே, நேற்று தான் நாங்கள் திருவாளர் மூஸின் கனவில் வந்து நடந்தது, நடப்பது, நடக்கப்போவது ஆகியன தெரிவித்து முக்காலமும் உணர்ந்த ஸித்தனாக ஆக்கியுள்ளோம்.

அவர் ஸொல்வதைக் கேளுங்கள்.

podakkudian said...

ஏனுங்கோ கருணாநிதி ஆட்சி காலத்தில் நடந்தது அந்த சமயத்தில் சொல்லி இருந்தால் நன்மையாய் இருந்து இருக்குமே. இது சுயநலம் இல்லையா?

மகேந்திரன்.பெ said...

கலைஞர் தனது நிலையை சட்ட மன்றத்தில் தெளிவு படுத்தி உள்ளார், விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்பதை விட தமிழர்களுக்கு ஆதரவு எனும் நிலைகொண்டு பார்க்க வேண்டும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் கவலைப்படும் அளவுக்கு அதிகமாகவே இந்தியா இலங்கை குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் மேலும் ராஜிவ் காந்திக்கும் புலிகளுக்கும், கலைஞருக்கும், எம்ஜியாருக்கும் நடந்த விடயங்களை ஆண்டன் பால சிங்கம் தனது புத்தகத்தில தெரிவித்துள்ளார் அதே நேரம் ராஜிவ் காலம் தொட்டு தமிழ் அரசாங்கத்தை நம்பும் புலிகள் மத்திய அரசை அத்தனை தூரம் நம்ப வில்லை இந்தியாவை ஒரு ஏகாதிபத்திய கண்ணோட்டம் கொண்டே பார்த்து வருகின்றனர். இப்போது புலிகள் சொவது கூட அவர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறியிருக்கிரார்கள் என்று எண்ண முடியாது. இந்தியா மீதான புலிகளின் பார்வை வெளியில்(இலங்கைக்கு) ஒன்றாகவும் புலிகளுக்குள் வேறாகவும்தான் இருக்கிரது

மேலும் தகவல்களுக்கு:

இப் பக்கத்தில: அவர்களின் 1980களில் வெளியான கட்டுறைகள் உண்டு, அதில் அமைதிப்படை அனுப்பும் முன்னர் கூட அவர்கள் இந்தியாவை நம்பவில்லை என்பது சொல்லப் படுகிரது. அது அமைதிப்படை அங்கிருந்து வெளியேறிய பின்னர் இன்னும் அதிகமானது

http://www.viduthalaipulikal.com/

பாலசிங்கம் புத்தகம்:
http://kilumathur.blogspot.com/2006/08/blog-post_115536760882455656.html

உங்கள் நண்பன் said...

//"மத்திய அரசில் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிக சலசலப்பு இல்லாமல் இலங்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு ஏற்பட கலைஞர், ராமதாஸ்,வைகோ ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்."//

எமது வேண்டுகோளும் இதுவே!


அன்புடன்...
சரவணன்.

குழலி / Kuzhali said...

//மேற்படியாரின் திஸை திருப்பு முயற்சி. கவனம். கவனம்.

முத்து பதிவிற்கு ஸம்பந்தமிலாத பின்னூட்டம். மன்னிக்கவும்.

அவர் ஸொல்வதைக் கேளுங்கள்.
//
ஹா ஹா இரசித்தேன்..... ஓ.. ஓ... மேற்படியாருக்காக ரஸித்தேன்...

குழலி / Kuzhali said...

//ஆனால் கலைஞரின் நிலைதான் பாவம் அதையும் சொல்லமுடியாமல் இதையும் சொல்லமுயாமல் எதாவது ஒன்று சொல்ல காங்கிரஸ் காரர்கள் இது தான் சாக்கு என (ஏற்கனவே மந்திரி பதவி தராததால் நொந்து போயிருக்கும் வேலையில்) சத்தம் போட்டு இங்கும் கவிழ்ந்து அங்கும் கவிழ்ந்து இரண்டும் கவிழ்ந்து
//
கலைஞர் பாவமாக எல்லாமில்லை, நல்ல வலுவாகத்தான் உள்ளார், மத்தியில் தான் கருணாநிதியின் ஆதரவு காங்கிரசிற்கு தேவை, ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரசு ஆதரவு இல்லையென்றாலும் ஏற்கனவே வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ள பாமக, கம்யூனிஸ்ட்கள் ஆதரவு மட்டுமே போதுமானது.... என்னார் அய்யா தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் பிரசுரிக்கப்படும் கடிதங்களை அப்படியே நம்புவதை குறைத்துக்கொண்டாலோ அல்லது இ.உ.இ. பகுதி படிப்பதை குறைத்துக்கொண்டாலோ அவருக்கு இந்த குழப்பங்கள் ஏற்படுவது குறையலாம் :-) No offence please :-)

நன்றி

உங்கள் நண்பன் said...

//ஹா ஹா இரசித்தேன்..... ஓ.. ஓ... மேற்படியாருக்காக ரஸித்தேன்... //


நானும் ரஸித்தேன்! ஸிரித்தேன்!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

என்னார் ஜயா குழப்புவது புதிதா? அவர்குழப்புறது அவரது பிரச்சினை மற்றவரை குழப்பாது இருப்பது ஏற்புடையது.

Thamil said...

"Muse (# 5279076) Hat gesagt…
விடுதலைப்புலிகள் இலங்கை வாழ் தமிழ் இஸ்லாமியரை கொன்று குவிப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

முசே ஜிகாத்தமுஸ்லீம்கள் கிழக்கில் தமிழரை வெட்டிப்போட்டதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Anonymous said...

Let what LTTE did for sri lankan muslims aside for the moment. What aMUSEimg is the very people who show intolerence against Indian muslims and call names from Pakistanis to terrorists are the people who shed crocodile cry for sri lankan muslims. Does anybody think net veeramani give a damn even for sri lankan muslims? Muse and Veeramani know nothing about what happen in sri lanka, but their hatred against eelam tamilians and dravida politics drive to spew venom against anything that is sympathetic to sri lankan tamilians.

Izzath said...

Please read Tamilcircle.blogspot.com
to know more about this issue.

Regards
Izzath

Izzath said...

http://tamilarangam.blogspot.com/

Please visit the above link to know moreabout the current situation in Slanka...

Anonymous said...

அடபாவிகளா வடபகுதி புலிகளின்
பூரனகட்டுப்பாட்டில் (முக்கியமாக யாழ்ப்பாணம்)இருந்தவேளைமுஸ்லிம்கள்
மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்
பட்டார்கள் ஆயிரக்கணக்கில் ஒரேநாளில்
அவர்களது கோடிக்கணக்கான சொத்துகளும் புலிகளால் அபகரிக்கப்
பட்டன

இன்று இவர்கள் தலைகீழக நின்று நியாயம் கற்பிப்பதுதான் கொடுமை

முத்து(தமிழினி) said...

one comment which criticised fellow blogger removed - admin

Anonymous said...

முஸ்லீம்களுக்கு தமிழீழத்தில் உரிமையுண்டு, ஜிகாத்முஸ்லீம்களுக்கு தமிழீழத்தில் இடம் இல்லை.

நாகை சிவா said...

செல்வன் கூறுவது போல தமிழக அரசியலவாதிகள் இடம் ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஒரே குரலாக மத்தியில் ஒலிக்க வேண்டும். நேபாளம் பிரச்சனையை ஒரு நாளில் தீர்க்க முடிந்தது என்றால், இலங்கை பிரச்சனையை ஒரு மாதத்திலோ ஒரு வருடத்திலோ தீர்க்க முடியாதா என்ன?

கலாநிதி said...

இலங்கை பிரச்சனையில் அரசியல் செய்வதை தமிழர் அனைவரும் நிறுத்த வேண்டும்.
ஒரே குரல் மட்டுமே தமிழ்நாட்டில் இவ்விஷயத்தை பொறுத்தவரை ஒலிக்க வேண்டும்.இதுவே ஈழத்தவனான எனது ஆவா

தமிழ்வாணன் said...

முதல்வர் கருணாநிதி அவர்கள் தனது அரசியல் எதிர்காலத்திற்காக ஈழத்து அரசியலை பயன்படுத்துகின்றாரோ என்ற சந்தேகத்தை மீளவும் பலப்படுத்தும் கூற்றாககவே அவரது பேச்சு இருக்கிறது.

உண்மையில் இவர் பிரபாகரனுடன் பேசி தீர்க்க ஆர்வமாக இருந்திருந்தால் வைகோ வன்னிக்கு போனதை நல்ல அறிகுறியாக எடுத்து ஏன் அதனை முன் கொண்டு சென்றிருக்க கூடாது. ராஜீவ் காந்தி அவர்களே வைகோ மூலமோ அல்லது வாசன் மூலமோ பேச்சுக்கான வழிகளை ஏற்படுத்தும்படிதானே கூறியிருந்தார்.

ஆனால் இப்போது முந்திக் கொண்டுபோன வைகோவால் தான் ஈழப்பிரச்சனை இழுபட்டு போகிறது என சாரப்பட கூறியிருப்பது எதைக் காட்டுகிறது.

வன்னிக்கு போன வைகோ பாதுகாப்பாக திரும்பி வந்தாலே அதுவே போதும் என சொன்ன ராஜீவை ஒரு பக்கத்திலும் அதையே சாட்டாக வைத்து வைகோவை குழிபறிக்க ஆயத்தமான கலைஞரை இன்னொரு பக்கத்திலும் வைத்து இதனை பார்க்கவேண்டும்.

கலைஞர் உண்மையாக சில முன்முயற்சிகளை ராஜீவ் காந்தி சொன்னவாறு எடுத்திருந்தால் ராமு என்றோ ராபி என்றோ பிரித்து பார்க்கவேண்டிய தேவையே வந்திருக்காதல்லவா?

லக்கிலுக் said...

அருமையான பதிவு முத்து.... வாழைப்பழத்தில் ரொம்பவும் அழகாக ரசிக்கும்படியாக ஊசி ஏற்றி இருக்கிறீர்கள்....

/////விடுதலைப்புலிகள் இலங்கை வாழ் தமிழ் இஸ்லாமியரை கொன்று குவிப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?/////

61 மழலைகளை சிங்கள இனவெறி அரசாங்கம் படுகொலை செய்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ம்யூஸ்?

babupriya said...

Selvan - you said - "ராஜிவ் கொலையை பேசுவதை சிறிது காலம் நாம் அனைவரும் நிறுத்த வேண்டும்.சோனியாவே அதை மறந்து நளினிக்கு மன்னிப்பு வழங்கிய பின்னர் நாம் அதைப்பற்றி பேசக்கூடாது"

Rajiv gandhi is not only husband of sonia gandhi, but a tall political personality and a former prime minister and a candidate running for the post again when he was assasinated. Sonia alone cannot decide on this issue although it is an emotive issue for her.

I as a tamil speaking indian was betrayed when our leader was killed by that terrorist organisation and that too in tamilnadu, for all the moral support what tamilnadu gave to the srilankan tamils, this was a betrayal on all of us.

First let us see that LTTE alone is not the representative of the ealam struggle. All the moderate voices are being ejected by this terrorists group.

Anonymous said...

Coming to the muslim issue brought up by Muse, as already said, it was in retaliation to some muslim traitors who, for their own religious/political/economical agenda, betrayed and abled gov't to kill Tamils. Religion is not a major issue in the struggle for Eelam, it is basic human rights. If so, there wouldn't be such a huge Christian pop'n among Tamils in SL. Everyone wants to write fleeting comments to bring to light their opinions, based on little facts. It is human rights that is being violated, because the superior Sinhalese and inferior complex when it comes to Tamils, because of their proximity and relation to TN. An entire ethnic community is burning because a majority wants to prove it's superiority and individalism.

Babupriya,
Rajiv gandhi was not only the husband of Sonia Gandhi, but a tall political personality and a former prime minister(who came reluctantly to a job he was ill-trained for due to Indira Gandhi's assasination) and a candidate running for the post again when he was assasinated. Sonia alone cannot be the deciding factor on this issue although it is an emotive issue for her, and the personal lose is hers and her childrens. How about exploring other factors such as the attrocities faced by Tamils from the Indian army, the resentment harboured for the killings of innocent people by the same people who came to save their lives, the louting of goods by the same people who came to stand to protect them, the raping of women by the same people who came to stop the ill-treatment Tamil women faced by the internal gov't.

I as a Tamil(not Indian)was betrayed when your leader sent forth a peace keeping organization referred then to as IPKF(Indian Peace Keeping Force) and latter dubbed as Innocent People Killing Force(by the abused) and allowed the killing of Tamil men, women and children in the name of politics gone awry. And that too, to Tamils, who have an immediate relation to India, who are descendants from India and who live in close proximation to a state that calls itself TamilNadu. For all the moral support TamilNadu gave to the Tamils in SL, the violence supported quietly by Indian gov't was a betrayal. It was a betrayal on my mother's confidence when she was made to run for safety with one child holding her hand, the other on her hip and me clinging on her sari while the Indian army pursued behind. It was a betrayal to my childhood, that I at 6 had to witness the deaths of a young boy and a young girl while they bled to death from the guns of the Indian army.

Is the betrayal of my innocence/my hope not worthy of notice? The assasination of Rajiv Gandhi is not an excuse to watch Tamils die. No one will say that killing of another is right. It is a betrayal to you when people from another country who were suffering in the hands of an unfair political game retaliated. Was Indira Gandhi's assassination not a betrayal? Was not Gandhi's assassination a betrayal? Do you harbour ill feelings towards people of those communities? I can't understand this division. Is it forgivable because it is within India? Are we all not people?


"All the moderate voices are being ejected by this terrorists group."

Is Karuna part of the moderate group? B/C he has become the stepson of SL gov't. One group is better than 10 groups with their own agenda. That is why the LTTE, being so small, have been able to present the struggles/discriminations of Tamils in SL to the international community. Let us not forget for a minute that most of these international peace-loving communities hail need of peace with left hand and sign papers selling weapons to gov't with their right. First, let peace and stability into the lives of the Tamils in SL.

Speaking to everyone in general...
It is easy to write, sit and chat, speak on stages about support. But the people who are losing their lives are never going to come back. Imagine their hopes and dreams, the hopes and dreams that have perished due to political/economical greediness of politicians. Why do you forget the millions that live in a land full of graveyards because of the actions of a few, due to reasons unknown to the public? Is it because it is easier to shrug shoulders and carry on with our lives if the disasters happen to others, rather than us?

I don't mean to gather sympathy from my anecdote. I would have rather not put it, but I was trying to illustrate to BabuPriya that the betrayal was on both sides. It is upsetting that there is enough power, politically and population-wise, within Tamils at large to put an end to this attrocity. But everyone is sitting by watching as if they are watching a movie. All those little girls killed in that orphanage, and the world-media covers it up. Because the people power from TN is not heard. The power of many is harder to crack than that of a few. But where are they? 70 million Tamils on this earth, yet the cries of 4 million are deaf to most. Some good people with good hearts have fallen because there were not enough people for authorities to take notice. I wish that people of TN will do something about this, else it will go down in history that Tamils watched as Tamils died. And it seems Srilankans are not the only ones happy to see Tamils die, as aid has come their way from Pakistan and China(so I hear).

Pls do read the interview of Vaiko and the article on Bhagat Singh from this weeks Vikatan. How is Bhagat Singh a national hero, but a man some miles away following the same ideals a terrorist? Killing is wrong, and I hate violence. I am sure most due. But look at the situation. But what do you do when the same child you rocked to sleep the night before, is tortured and hunged to a death worse than that animals meet? I wonder this, while I sit helpless and frustrated, hearing news of further bombings in Jaffna by the SL army. How many innocent lives were lost today?

-Kajan

தமிழ்வெளியை பார்த்தீங்களா?