வலைப்பதிவுகளில் தேசப்பக்தி ஆறாக பெருக்கெடுத்து போனதையும் அதில் பல வலைப் பதிவாளர்கள் அடித்துசெல்லப்பட்டதையும் பார்த்திருப்பீர்கள். நண்பர் செல்வனின் பதிவில் இதுப்பற்றி சில சுவையான வாதங்களை பார்க்கமுடிந்தது.
சுதந்திர இந்தியாவின் சிறுமைகளை பேச வெட்கப்பட்டுக்கொண்டு முன்னேறிய ஒரு சிறிய சதவீத மக்களைப்பற்றி மட்டுமே பேசி புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருந்தால் இந்தியா முன்னேறாது. மாறாக சுதந்திரம் பெற்று ஐம்பது வருடங்களுக்கு பிறகும் இங்கு நிலவும் பல்வேறு சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாய மேடுபள்ளங்கள் இவற்றைப்பற்றி யோசித்தவர்களால் தான் நாடு இந்த அளவாவது முன்னேறியுள்ளது.
என்று ஒரு பெண் நடுநிசியில் சுதந்திரமாக உலவ முடிகிறதோ அன்றுதான் நிஜமான சுதந்திரம் என்று காந்தியார் கூறியது போல் என்று அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தால்தான் நிஜமான சுதந்திரம் என்று நினைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது.நினைத்தபடி வாழ்ககையை அமைத்துக்கொண்டவர்களுக்கு முழுதிருப்தி என்றால் முழுதிருப்தி இல்லாத ஆட்களுக்கு அவர்கள் வருத்தத்தை பகிர உரிமை உள்ளது.
மூச்சை அடைத்துக்கொண்டு ஜெய்ஹிந்த் போடாதவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்றும் இந்தியாவை கூறு முக்கால் ரூபாய் என்று விற்பவர்கள் என்றும் கூறுவது நகைப்பிற்குரியது.தேசபக்தியை இதை வைத்து அளக்கமுடியாது. நாடு என்ற கற்பிதத்தை போலியாக போற்றுவதை விட அதில் உள்ள பெரும்பான்மையான மக்களின் நலனுக்காக பேசுவது கண்டிப்பாக சிறந்ததுதான்.
லிவிங் ஸ்மைல் போன்றவர்களுக்கு இந்த நாடு என்ன செய்தது என்பதை "நாட்டுக்கு நீ என்ன செய்தாய்" போன்ற குழந்தைத்தனமான கேள்விகளை கேட்டு மறைக்கமுடியாது. அவர் நிலையில் இருந்து அதை பார்க்க வேண்டும். அதே போல் ஒரு லிவிங் ஸ்மைல் இன்று ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டதை வைத்து இந்த நாட்டில் திருநங்கைகள் வாழும் வாழ்க்கையை எடை போட்டுவிட முடியாது.அப்துல் கலாம் ஜனாதிபதியாகிவிட்டதால் முஸ்லீம்களின் குறைந்த கல்வி அறிவு சதவீதத்தை நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கமுடியுமா?
ஆந்திராவில், மகராஷ்ட்ராவில் தற்கொலை செய்துக்கொண்டு இறக்கும் ஏழை விவசாயிக்கு நாடு என்ன செய்தது என்று கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த கேள்விக்கும் அவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் பதிலா? இந்த நாட்டில் அறுபது சதவீததிற்கும் மேலான மக்கள் வாழும் வாழ்க்கைத்தரம் என்ன?அதை வைத்துத்தான் நாட்டின் முன்னேற்றத்தை எடை போடமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து.
முன்னேறியவர்கள் தங்கள் நலத்தை மட்டுமே பார்த்துக்கொள்வதும் அந்த சுயநலத்தில் பொதுநலன் இருப்பதாக பில்ட் அப் செய்வதும் ஆபாசமானது. பல நிறுவனங்களை சாம, பேத, தான தண்ட முறைகளில் அழித்த மைக்ரோசாப்ட் நிறுவனம் எய்ட்ஸ் ஒழிப்பிற்கு பல கோடிகளை அள்ளி விடுவதை பாராட்டும் நம் மிடில் கிளாஸ் மனசாட்சிதான் இதில் தெரிகிறது. அதாவது அவர் சம்பாதிக்க எந்த வித நெறிமுறையும் இல்லாமல் கொள்ளை அடிக்கலாமாம்.ஆனால் ஏழைகளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்தால் சரியாகிவிடுமாம்.என்ன கூத்து இது?
மத்திய அரசு பணிகளில் 1980 களில் தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வந்தது என்பதே ஒரு அதிர்ச்சிதகவல்.இன்று அதே மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டி உள்ளது.இதை நினைத்து நாம் என்ன பெருமைப்படுவது? இன்று அரசியல் அரங்கில் பிற்படுத்தப்பட்டவர்களின் அதிகாரம் செல்லுபடியாகும் இந்த சூழ்நிலையிலும் இந்த சட்டம் இந்த பாடுபடுகிறது.இது சந்தோஷப்படக்கூடிய செயல்பாடா?
14வது மக்களவையில் 136 எம்.பி.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்களாம்.இதில் பெருமைப்பட ஏதாவது உள்ளதா?
நாடு சரியில்லை என்று புலம்புபவர்கள் அதை மட்டும் செய்வதில்லை.அது சம்பந்தமாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். நம்மிடம் இருக்கும் பிரச்சினைகளைப்பற்றி ஒரு பொதுகருத்து எட்ட முயல்கிறார்கள்.ஆனால் நம்மிடம் பிரச்சினையே இல்லை என்று கூறுபவர்கள் பிரச்சினைகளை மறைக்கிறார்கள் என்பதுதான் எங்கள் புலம்பல்.நாட்டில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுபவன் தீவிரவாதி என்றும் தேசத்துரோகி என்றும் சித்தரிப்பது பலகாலமாக நடப்பதுதான்.
போராடுபவன் ஏன் போராடுகிறான் ? எவனும் தற்கொலை படையாக ஆக விரும்பி வரமாட்டான். எவனும் நக்சலைட்டாக ஆகவேண்டும் என்று வரம் வேண்டி ஆவதில்லை. அவன் தரப்பு நியாயத்தை அவன் நிலையில் இருந்து பார்க்கவேண்டும்.காஷ்மீரிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய தேசியத்தின் தவறான கொள்கைகள்தான் இந்தியாவிற்கு பிரச்சினைகள் ஏற்படுத்தி உள்ளன என்று கூறினால் அது தேசவிரோதமா?
"எனக்கு இந்தியா மேலே நேசம் இருக்கே ஒழிய பக்தி இல்லை. அதனால அதன் குறைகளை குறிக்கவோ, ஒழிக்க முனைவதிலோ எனக்கு தயக்கமில்லே" என்று சொல்வேன்.அதனால, "போங்கடா நீங்களும் உங்க 'ஜெய் ஹிந்த்'" ம்னு கண்டிப்பா சொல்வேன்" என்று ஒருவர் கூறிய கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.
லோக்பிரதான் தேர்தலில் நின்றபோது ஓட்டு விழவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.லோக்பிரதானின் யோக்கியதை சில நாட்களிலேயே பல் இளித்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
//நல்லவேளை ஏழை ஜனம் தேசபக்தியோடு இருப்பதால் நாம் தப்பிக்கிறோம்.இல்லாட்டா நம் நாட்டின் கதி என்ன?//
இந்த வாக்கியம் பயங்கர காமெடி செல்வன், குழந்தை மாதிரி பேசறீங்க என்று நான் சொன்னதற்கு ஒரு கிளாசிக் உதாரணம் இது.இது போல் பல இடங்களில் பின்னூட்டங்களில் சொல்லி உள்ளீர்கள்.குழாயில் தண்ணீரை அண்ணன் தரவில்லை என்றால் அம்மாவை அடிப்பது முறையா?(இது காவிரி பிரச்சினைக்கு நீங்கள் தரும் பதில்.மேலும் தமிழக அரசு இந்த விஷயத்தில் சரியாக நடந்துக் கொள்ளவில்லை என்ற ஜல்லியை அடிப்பீர்கள்.நாமெல்லாம் ஒரே தேசியம்தானே.அப்புறம் ஏன் அவர்கள் மறுக்கவேண்டும் என்பதுதான் கேள்வியே. அப்படியானால் தேசியம் என்பதில் புத்திசாலியாக( as you said Clever) இருப்பவன் பிழைத்துக்கொள்ளலாம்.மற்றவன் தற்கொலை செய்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதானா?
//ஒருவன் ஏழையாக பிறப்பது கண்டிப்பாக அவன் குற்றம் இல்லை.ஆனால் ஒருவன் ஏழையாக சாவது என்பதில் அவன் மீது அரை சதவிகிதமாவது தப்பு இருக்கும்.போராடினால் தான் வெல்ல முடியும்.போராடாத மனிதன் மண்புழு தான்.//
இதையும் நீங்கள்தான் சொல்கிறீர்கள்.இது நியாயமா என்று ஒருகணம் யோசிக்கவும். சினிமாவில் தான் கதாநாயகனுக்கு லாட்டரி அடிக்கும்.அல்லது ரஜினியின் அண்ணாமலை படம் போல் ஒரு பாட்டு முடிவதற்குள் பெரிய ஆள் ஆகமுடியும்.நிஜ வாழ்வில் ஒரு அரசாங்கத்தின் கடமை அனைவருக்கும் வாய்பபு ஏற்படுத்து தருவதே,
//சிதம்பரம் கோயிலில் மணியாட்டுபவன் தமிழ் பேசவில்லை என்றால் மொழியுரிமை இல்லை என்பது டூ மச்.தமிழ் மொழிக்காக பல போராட்டங்களை செய்தோம்,இன்னும் பலவற்ரை செய்ய வேண்டியுள்ளது.அதை எல்லாம் மறுக்கவில்லை.ஆனால் மொழி உரிமை இல்லை,தமிழ் ஒடுக்கப்படுகிறது என்பதெல்லாம் மிக மிகைப்படுத்தப்ப்ட்ட கூற்று.//
ஹிஹி.....மொழியின் அருமையைப்பற்றி பதிவு போட்ட செல்வனா இது?
//தமிழன் தான் இன்று நாட்டின் முதல் குடிமகன்.மத்திய அரசை தாங்கி நிற்பவன் தமிழன்.பெரும் பொறுப்புக்களில் தமிழன் இன்று மத்தியில் ஆளுகிறான்.இதை எல்லாம் பயன்படுத்தி மொழிக்கும்,நாட்டுக்கும் வேண்டியதை சாதித்துக்கொள்ள வேண்டியது அவன் கடமை.//
ஹிஹி இதுவும் ஜோக..என்ன செய்யமுடியும் இந்த சூழ்நிலையில்? ஒரு இடஒதுக்கீட்டுக்கு போராடிய தமிழன் சகதமிழனிடம் கூட மரியாதை இல்லாம நிக்கிறான்.உதாரணத்திற்கு இடஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து என்ன என்று விளக்கமாகவும் வெளிப்படையாகவும் உங்களால் சொல்லமுடியுமா?
அப்துல்கலாமை நினைத்து புளகாங்கிதப்பட என்ன இருக்கிறது என்று நிஜமாகவே எனக்கு புரியவில்லை.நல்லவர்தான். குழந்தைகள் மேல் பாசம் உள்ளவர்தான்.ஆனால் அவரால் ஜனாதிபதியாக என்ன மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த முடிந்தது?
//அமெரிக்காவில் இப்படித்தான் பெண்ணுரிமை இல்லை,சம உரிமை இல்லை,என்று வருஷம் முழுக்க போராடுவார்கள்.ஜூலை 4 வந்தால் அனைவரும் சேர்ந்து கொடியேற்றி சல்யூட் அடிப்பார்கள்.அடுத்த நாள் மீண்டும் ஊர்வலம் போவார்கள்.//
அவங்கவங்க பாதிப்போட அழுத்தத்தை பொறுத்தது அது செல்வன்..இங்க அடிப்படை தேவைகளே பூர்த்தியாகாத ஆட்கள் நிறைய இருக்காங்க

//கலவரம்,வன்முரை இவை இல்லாத நாடு என ஏதேனும் உண்டா?ஒரு நாடு கூட இல்லை.//
அப்படியா? ...நான் ஏதோ நம்மளை மாதிரி சில நாடுகள் தான் சுதந்திர தினத்தைக்கூட பயந்து பயந்து கொண்டாடுவதாக நினைத்தேன்.:))
இவையெல்லாம் மாற்றுக்கருத்துக்கள்தான். ஆனால் இதை சொல்பவர்கள் எல்லாம் இந்தியாவை கூறுக்கட்டி விற்பவர்கள் என்று கூறினால் அது மிகப்பெரிய காமெடியாகத்தான் இருக்கும்.
27 comments:
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_115632792939907853.html
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_15.html
related posts
வாங்க வாத்யாரே....
எப்போதுமெ ஆபத்பாந்தவரா வந்திரீங்களே......
எத விட.. எத அள்ளன்னு தெரியலை.... தவிக்கிறேன்.... (தேசியம்கிற விசயம் பிரிந்து போகும் உரிமை பற்றியதுதானே....?)
இது மாதிரி நேக்கு போக்க, கரெக்டா பாயின்ட்ல அடிக்கிற வித்த நமக்கு இன்னும் கைகூடி வரல....
சும்மா வழ தொள தொளன்னுதான் எழுதிக்கிட்டிருக்கேன்...
//"எனக்கு இந்தியா மேலே நேசம் இருக்கே ஒழிய பக்தி இல்லை. அதனால அதன் குறைகளை குறிக்கவோ, ஒழிக்க முனைவதிலோ எனக்கு தயக்கமில்லே" என்று சொல்வேன்.அதனால, "போங்கடா நீங்களும் உங்க 'ஜெய் ஹிந்த்'" ம்னு கண்டிப்பா சொல்வேன்" என்று ஒருவர் கூறிய கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.
//
இதச் சொன்னவர் வணக்கமுடன் என்ற அன்பர்.
இதில் எனக்கு முழு உடன்பாடு....
//லோக்பிரதானின் யோக்கியதை சில நாட்களிலேயே பல் இளித்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.//
அது ஒரு இந்துத்துவ சக்தி என்பதுதான் அதன் தத்துவ பக்கத்தை ரொம்ப கஸ்டப்பட்டு படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.
அதோட யோக்யதை பல்லிளிச்ச சம்பவத்த கொஞ்சம் சொல்லுங்களேன்...
////நல்லவேளை ஏழை ஜனம் தேசபக்தியோடு இருப்பதால் நாம் தப்பிக்கிறோம்.இல்லாட்டா நம் நாட்டின் கதி என்ன?/////
இவர்களின் தேசம் டாலரை குடித்து அமெரிக்க செருப்பை நக்கி வாழும் வர்க்கத்தின் தேசம்......
இந்த பொய் தேசத்தின் மீதான பக்தியை களைத்தால் அந்த பெரும்பான்மை மக்கள் இவர்களை தூக்கி போடும் இடம் ரொம்ப கெவலமான இடமாக இருக்கும்.
இங்கு மருதையனின் வரிகள் ஞாபகம் வருகிறது:
"இந்த நாட்டின் எல்லைக் கோடுகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை. நாட்டின் குறுக்காக ஓடுகிறது"
****
அப்துல் கலாமைப் பற்றி நான் சொல்கிறேன்... அவர் ஒரு அரசவைக் கோமாளி ஆனால் காரியவாதமான கோமாளி....
*******
ஐய்.....
என்னோட பதிவுகள ரிலேடட் பதிவுல போட்டிருக்கீங்க
படிச்சுகிட்டே கொஞ்ச கொஞ்சமாக கீழிறங்கி வந்தா உங்களோட கமென்ட்ஸ் first இருந்தது....
அடடா.... நம்மாளும் கடைசியில பின்னூட்ட கயமைத்தனத்த, நம்மள மாதிரியே செய்ய வேண்டியதா போச்சேன்னு உள்ள பாத்தா.....
கருத்துக்களை பரவலாக்க செய்யும் தங்களது பங்களிப்புக்கு மிக்க நன்றி....
இன்னைக்கு காலையிலதான் நெனச்சேன் என்ன முத்து தமிழினி ஆளக்கானுமேன்னு..... சரியா வந்து குத்து விட்டிருக்கீங்க......
நன்றி,
அசுரன்.
நல்ல கட்டுரை முத்து தமிழினி அவர்களே!
செல்வன் எழுதியதில் சில நியாயங்கள் இருந்தன ,ஆனாலும் உங்கள் படிவுடன் என்னால் பெரும் பாலும் ஒத்துப் போக முடிகிறது.நாடு என்பதே கற்பிதம் என்கின்ற எண்ணம் கொண்டவன் நான் ..நாடு என்பது எல்லைக் கோட்டைக் கொண்டு முடிவு காண்பதா ..இல்லை உணர்வு சார்ந்தது என்றால் ஒரு இந்தியனுக்கு பாகிஸ்தான் மேல் பாசம் வைக்கும் எல்லா உரிமையும் உண்டு ...பெரும்பாலோனோர் மக்களின் மேல் எந்த அக்கறையும் இல்லாமல் அரை வேக்காட்டுத் தனமான் நாட்டுப் பற்றை சுமந்து திரிகின்றனர் ,சிலருக்கு கிரிக்கெட்ட் தான் தேச பக்தியே ..மோடி தானே இங்கு தேசப் பக்திக்கு உதாரணம் ..
நாடும் ஒரு கற்பிதம் என்ற கருத்தில் எனக்கும் உடன் பாடு உண்டு ..நாடு ஏன்பது பல் பேருக்கு வரை ப்டம் தான் ..அங்கு வாழும் மக்களைப் பற்றீ க்வலைப் ப்டுவதில்லை ..உலகப் பணக்காரர்களில் இரண்டு இந்தியர்கள் வந்து விட்டாலும் ,அமெரிக்க செனட்டிற்கு இந்தியத் பெற்றோரின் மகன் தேர்ந்தெடுக்கப் பட்டாலே புளாங்கிதம் அடையும் மக்கள் தான் இங்கு அதிகம் .. சாக்கடைஅள்ளுபவனும் ரிக்ஷா இழுப்பவனும் நாட்டிற்கு எதுவே செய்யா வில்லை அவன் உழைத்து முன்னேறாமல் நாட்டை குறை சொல்லுகிறார்கள் என உழைத்து (சுரண்டி) முன்னேறியவ்ர்கள் a/c ரூமிலிருந்து எழுதிக் கொண்டு இருப்பார்கள்..இந்த நாட்டுப் பற்றாளர்கள் எல்லாம் நாட்டுக்காக இங்க (அமெரிக்கா) ல இருந்து தான் உழைப்பாங்க ..
ஏதோ என்னால் முடிந்தது...வருமான வரியினை ஒழுங்காக கட்டுவது...இது போதாதா?
என் வயசு காலத்தில், பெற்றோர்-பிள்ளைகள் பாசம் என்பதைக் கேள்வியாக்கி நண்பர்களிடம் அடிவாங்கிய போதும் சரி, இப்பவும் சரி, நம்முடைய பாசங்களும், பக்திகளும் அளவுக்கு மீறும்போதுதான் பிரச்சனைகள் என்பதே என் கருத்து.
அமெரிக்காவிலும் பிள்ளைப் பாசத்தோடுதான் மக்களைப் பார்த்தேன். ஆனால் எப்போதும் தன் முந்தைனையில் வளர்ந்துவிட்ட பிள்ளையைக் கூட முடிந்தே வைத்திருக்க வேண்டுமென்ற possessiveness-யைப் பார்க்கவில்லை. தேவைக்கதிகமான sentiments, தங்கள் உள்மன உணர்வுகளையும் கூட, சந்தோஷமோ, கவலையோ, ஊரையே கூட்டிச் சொல்ல வேண்டுமென்ற நம் மனதின் வெளிப்பாடுகள் - இவைகள் எல்லாம் ஒருவித வேஷமே. வேஷங்கள் பழகிப்போய் இப்போது வேஷமே வாழ்க்கையாகிப் போச்சு.
நிரம்பவும் practical ஆக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
still with 1 comment? :-(
//ஒருவன் ஏழையாக பிறப்பது கண்டிப்பாக அவன் குற்றம் இல்லை.ஆனால் ஒருவன் ஏழையாக சாவது என்பதில் அவன் மீது அரை சதவிகிதமாவது தப்பு இருக்கும்.போராடினால் தான் வெல்ல முடியும்.போராடாத மனிதன் மண்புழு தான்.//
இப்படி யாரோ சொன்னத சொன்னீங்கள்ள, இதுகெல்லாம் என்னத்தங்க சொல்ல முடியும். ஒரே தட்டை கழுவி கழுவி வீட்ல இருக்கிற அத்துனைப் பேரும் சாப்பிடறது. இல்லன்ன, ஒருத்தருக்கு இன்னொருத்தர் விட்டுக்கொடுத்து சாப்பிடாம பட்டினிய தூங்கப் போகணும் அப்படிங்கிறதெல்லாம் இந்த மாதிரி ஆட்களுக்கு ச்சும்மா நாவல்களில் படிச்சுட்டு மண்புழுக்கள் அப்படின்னு புத்தகத்தை மூடுவதோடு, முடிஞ்சது கவலை.
இல்லைன்ன சொந்த காசே சிலவு பண்ணிகிட்டு நாங்கெல்லாம் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து படிக்க முடியுமா... நீங்ககெல்லாம் உருப்பிடவே மாட்டாத மண்புழுக்கள்.
இப்படி பொலம்பி பொலம்பியே சாக வேண்டியதுதான் போங்க...
முத்து,
செல்வன் இப்போது இருக்கும் இந்திய தேசிய அமைப்பு வலுவானது.அதில் இருக்கும் குறைப்பாடுகளை நாம் அனைவரும் தான் பொருப்பேற்று செப்பனிட வேண்டும் என்கிறார். எனக்கும் அதில் உடன்பாடு உண்டு.
உங்களுக்கு இந்திய தேசியத்தில் நம்பிக்கை உண்டா?
உண்டெனில் இந்திய தேசியத்தின் இப்போதைய குறைபாடுகளை களைவதில் செல்வனின் அணுகுமுறையோடு வேறுபடுகிறீர்களா? என்ன மாதிரியா அணுகுமுறை இந்த குறைகளை களையும் என நினைக்கிறிர்கள்?
தற்போது இருக்கும் தேசிய அமைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் அதற்கு மாற்றாக என்ன மாதிரியான அமைப்பை நீங்கள் முன் வைக்கிறிர்கள்?
இதை ஆரோக்கியமான விவாதமாக எடுத்துச் செல்லலாமென நினைத்துக் கேட்கிறேன்.
நன்றி.
//செல்வன் இப்போது இருக்கும் இந்திய தேசிய அமைப்பு வலுவானது.அதில் இருக்கும் குறைப்பாடுகளை நாம் அனைவரும் தான் பொருப்பேற்று செப்பனிட வேண்டும் என்கிறார். எனக்கும் அதில் உடன்பாடு உண்டு.//
அப்பன்ன இத்துனை நாளும் இந்தியாவில் பிறந்து வளர்ந்து செத்து கொண்டு இருந்தவர்கள் எல்லாம், பிடிங்கி கொண்டு இருந்து விட்டு மாண்டு போனார்களா? ஏனுங்கய்யா சும்மா பேப்பர் டைகர இருந்து கிட்டு, இப்படி அநியாத்திற்கு தேசியப் பற்றோட இருக்கீங்க.
அப்படி ரொம்ப பொங்கி பிரவாகமெடுத்தால் ஏன் குடும்பத்தோட அமெரிக்காவிலிருந்து அடுத்த பிளைட் பிடிச்சி இந்தியா வந்து போராட கூடாது. என்னமோ பிழைச்சு தப்பி ஓடிட்டோமின்னு பேசிகிட்டு இருக்கீங்க. என்ன பண்றது எல்லாம் நேரந்தான்.
பேசுங்க, கேட்டுக்கிறோம்.
அருமையான பதிவு முத்து.. கிட்டத்தட்ட முழு பதிவுடன் ஒத்துப்போகிறேன்..
செல்வன் பதிவில் நான் இட்ட பின்னுட்டத்தையே இங்கும் (பொருந்தும் என்பதால்) சொல்கிறேன் ..
"சுதந்திர நாள் கொண்டாட வேன்டியது அவசியம்.. அதனை விட அவசியம் அந்த சுதந்திரத்தினை முறையாக அனுபவிக்க இடையூராக இருக்கும் சக்திகளை அடையாளம் கண்டு களைவது... அத்ற்கான முயற்ச்சிகளே உண்மையான சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு விதம்தாம்...அதுவே மேலான விதமும் கூட... அதனையே குழலி செய்கிறார்...."
கேள்விகள் கேட்பவரே,
//உங்களுக்கு இந்திய தேசியத்தில் நம்பிக்கை உண்டா?//
நிகழ்வுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பதே இதற்கு பதில்.
//இந்திய தேசியத்தின் இப்போதைய குறைபாடுகளை களைவதில் செல்வனின் அணுகுமுறையோடு வேறுபடுகிறீர்களா? என்ன மாதிரியா அணுகுமுறை இந்த குறைகளை களையும் என நினைக்கிறிர்கள்?//
குறைபாடுகள் பற்றி நிறைய பேசியாயிற்று.இந்த குறைபாடுகளை நீக்க நீங்கள் கூறும் வழிமுறைகளை கொஞ்சம் சொல்லமுடியுமா முதலில்?ஐம்பது வருடங்களாக இவை எந்த அளவில் பயனளித்தன என்பதையும் விளக்கமாக எழுத முடியுமா?
ஆரோக்கியமாக விவாதத்திற்கு உண்மை முகத்தோடு வந்தால் நன்றாக இருக்கும்:))
இந்த மாதிரி அமெரிக்காவில சொந்த காசு செலவு பண்ணிகிட்டு நம்ம வீட்டு தரித்திரியம் பேசுற ஆட்கள கொண்டுவந்து எங்கவாவது இருக்கிற பொட்டாம் பட்டி கிராமத்தில கொண்டு போயி விட்டு, அவங்க பிள்ளைங்கள அந்த ஊரு அரசாங்க பள்ளிகள்ள படிக்க வைச்சிகிட்டு 'தேசியம்' பேசினா எவ்வளவு சந்தோசமா இருக்கும்.
//அப்பன்ன இத்துனை நாளும் இந்தியாவில் பிறந்து வளர்ந்து செத்து கொண்டு இருந்தவர்கள் எல்லாம், பிடிங்கி கொண்டு இருந்து விட்டு மாண்டு போனார்களா? ஏனுங்கய்யா சும்மா பேப்பர் டைகர இருந்து கிட்டு, இப்படி அநியாத்திற்கு தேசியப் பற்றோட இருக்கீங்க//
கழக பேச்சாளர்கள் மாதிரி பேசறிங்க. சாந்தமாதான் பேச பாருங்களேன். உங்களுக்கு நான் உபதேசம் பண்ணலிங்க. அப்படி பண்ற மாதிரி இருந்தா அது என் தப்புதான். கோவிக்காதிங்க.
இந்தியாவில யாரும் பிடுங்கிட்டெல்லாம் இல்லிங்க நிறைய நல்ல தலைவர்கள் வந்தாங்க. நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாங்க. நாமலும் கொஞ்சம் வளர்ரோம். வளர்ச்சி மெதுவா இருக்கு. குறைகள் இல்லாத தேசமுனு நான் சொல்ல்லீங்க. இருக்கறத எப்படி நிவர்த்தி பண்ணலாமுனு கேட்கலாம் நினைச்சேன்.
பெரிய பெரிய வார்த்தையா போட்டு பேசறீங்க.
இரண்டு பத்தி எழுதியிருக்கிங்க. ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல்லியே.
யோசிங்க பேச்சாளரே.யோசிச்சு பதில் சொல்லுங்க. அப்படியும் தெரிலேனா பர்சனாலா தாக்கி எழுதுங்க.நமக்கு எது தெரியுதோ அதைதானே செய்ய முடியும்.
பதில் சொல்பவரே,
ரொம்ப சூடாக எழுதுவது போல் தெரிகிறது. கொஞ்சம் குறைத்துக்கொள்ளவும்.
தமிழ்மணம் புதிய நிர்வாகிகளின் பதிவை பார்த்தீரா?:))
//இந்த மாதிரி அமெரிக்காவில சொந்த காசு செலவு பண்ணிகிட்டு நம்ம வீட்டு தரித்திரியம் பேசுற ஆட்கள கொண்டுவந்து எங்கவாவது இருக்கிற பொட்டாம் பட்டி கிராமத்தில கொண்டு போயி விட்டு, அவங்க பிள்ளைங்கள அந்த ஊரு அரசாங்க பள்ளிகள்ள படிக்க வைச்சிகிட்டு 'தேசியம்' பேசினா எவ்வளவு சந்தோசமா இருக்கும்//
நான் அரசாங்க பள்ளிதான். ஆகாயத்திலேருந்து வந்திடல. விவாதிக்கலாம் நினைச்சேன். மன்னிச்சிடுங்க. உங்கள்ட்ட பேசற அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரலை. உத்தரவு வாங்கிறேன்.
பதில் சொல்பவர் மற்றும் கோடரி,
உங்களின் பின்னூட்டங்கள் தலா ஒன்று மட்டுறுத்தப்பட்டன. ஏன் இந்த கலவரம்? ஏன் இந்த கொலைவெறி? :))
Indian nationalism is not perfect.As a nation we have a long way to go. But the answer to that is that chavunisim in name of language or religion or caste.
That is worse than nationalism.
You are happy in promoting chauvinism of all sorts.Suba.Veerapandian exemplifies Tamil chauvinism.
The irony is that chauvinists
like you and he call themselves
as rationalists and humanists.
அவர் சம்பாதிக்க எந்த வித நெறிமுறையும் இல்லாமல் கொள்ளை அடிக்கலாமாம்.ஆனால் ஏழைகளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்தால் சரியாகிவிடுமாம்.என்ன கூத்து இது.
Good question, are you talking about the families of MK and Maran.
But the answer to that is that chavunisim in name of language or religion or caste.
oops
But the answer to that is not chavunisim in name of language or religion or caste.
anony,
//அவர் சம்பாதிக்க எந்த வித நெறிமுறையும் இல்லாமல் கொள்ளை அடிக்கலாமாம்.ஆனால் ஏழைகளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்தால் சரியாகிவிடுமாம்.என்ன கூத்து இது.
Good question, are you talking about the families of MK and Maran//
உள்ளூர் திருடன், இண்டர்நேஷனல் திருடன் எல்லாரையும் தான் சொல்கிறேன்:)).நான் திமுக காரன் என்று நீங்களாக முடிவு செய்தால் நானா பொறுப்பு? :)
2.what kind of chavunism you are finding in my writings? Fighting for legitimate rights is not chavunism.
செல்வன் போட்டிருக்கிற பதிவு வழக்கம் போல முன்னுக்கு பின் முரனாகா அவர்மேல் நான் வைத்த விமர்சனத்திற்க்கு இன்னுமொரு எடுப்பான எடுத்துக்காட்டாக உள்ளது..
ஆனால் ஒரு விசயம் தூக்கலாக தெரிகிறது..
மக்களே மக்களுக்கு செய்ய வேண்டுங்கற முற்போக்கு கருத்துல இப்போ அவர் தன்னொட பிற்போக்கு கருத்த ஒளிச்சு வைச்சிறுக்கிறாரு.
ரிலையன்ஸ் நிறுவனம், மைனர் குஞ்சு மாதிரி அட்டுழியும் பன்றதுக்கு விவேக அப்பா நாட்டமை மாதிரி அட்வான்ஸ் வாங்குற TRAI, உரிமை கேட்டு போராடின ஒரிஸ்ஸா பழங்குடியினர பன்னாட்டு முதலாளிகளுக்காக சுட்டுக் கொன்னு போட்ட அரசு, உறபத்தி செய்ற விவசாயி நாண்டுகிட்டு சாவிறது, தண்ணிக்கு நாம அடிச்சுக்கும் போது கர் நாடக தமிழ் நாடுன்னு எந்த பேதமுமில்லாமல் சுரண்ட MNCக்களுக்கு போலிசு பாதுகாப்பு கொடுக்கிறது....
இப்படி சுரண்டலை சட்டபூர்வம்மாக்கி வைத்துள்ள அரசும், அதை வன்முறை கொண்டு நடைமுறைப்படுத்தும் அரசு இயந்திரங்களும்(போலிசு, ராணுவம்) இருக்கும் போது.... அதப் பத்தி ஒரு மசிறக் கூட இது வரைக்கும் புடுங்கிப் போடாம.... போராடும் மக்களோட போராட்ட முறைகளை பத்தி அமேரிக்காவில உக்காந்திகிட்டு விமர்சனம் செய்ராறே என்னார் ஐயாவை மட்டும் ஐயா என்று கூப்பிடும் செல்வன்.....
அவரை என்ன பெயர் கொண்டு அழைக்க.....
இப்படி நிலம இருக்கும் போது லிவிங் ஸ்மைல் சேரிக்குப் போயி டீச்சர் உத்தியோகம் பாக்கட்டும், சேரில இருக்கிறவன் தன்னோடது தானே பாத்துக்கட்டும், அதுக்கு ஒரு 100 மீட்டர் அந்த பக்கமே நம்ம செல்வன் விளம்பர தரகனா வேல பாக்குற ஒரு MNC நாட்ட சுரண்டட்டும்.... அப்புறம் என்ன மசிற புடுங்கறதுக்கு இந்த அரசாங்கம் இருக்கு.......
அத தூக்கி வீசுன்னு சொலறதுல என்ன தப்பு இருக்கு.......
அத சொன்னா தேசப்பக்தி இல்லன்னு சொல்றதுல இருந்து ஒரு விசயம் தெளிவா தெரியுது....... செல்வனோட தேசபக்தி அந்த சுரண்டும் வர்க்கத்தின் இருப்பை கேள்வி கேக்காத தேசபக்தி.......
உழைக்கும் மக்களுக்கு நம்ம செல்வன் அறிவுரை சொல்றாரு.... உன்னோட நலன்களை நீயே கவனிச்சுக்க.....
கவனிச்சுக்கறேன்... அதுக்காக எனக்கு தேவையான வளங்களை MNCட்ட இருந்து புடுங்கினா துப்பாக்கி தூக்கிட்டு இந்த அரசு வராது அப்படிங்கறதுக்கு நம்ம $சல்வன் உத்திரவாதம் கொடுப்ப்பாரா?.... மாட்டாரு....மாறாக அமேரிகாவில இருக்குற அவரோட சொந்தக்காரங்கிட்ட சொல்லி ஒரு லேட்டஸ்ட் துப்பாக்கி வாங்கி, அந்த சேரில இருக்கிற என்னோட சொந்தக்கார கஸ்மாலங்களையும், லிவிங் ஸ்மைல் களையும் சுட்டுக் கொள்வர்ர்.. ஒளிஞ்சிருந்து.....
அவருடைய நோக்கம்..... தனது எழுத்துக்களுக்கு விளம்பரம்....
இது பற்றிய எனது விமர்சனம் மிகச் சரியாகவே உள்ளது என்ற நம்பிக்கை வலுப்படுகிறது..
நன்றி,
அசுரன்.
முத்து(தமிழினி),
கொஞ்ச நாள் வர முடியலை, இன்னும் கொஞ்ச நாள் ஆகும் வந்து மொத்தமா வாசிக்கிறேன். இத போல நான் பேசிக்கிட்டு திரிஞ்சதால என்னை தேச த்ரோகி ரேஞ்சில பார்த்தாங்கனு மூட்டைக்கட்டி வச்சேன் நீங்களும் இதே ரேஞ்சில போனா பிரிவினைவாதினு சொல்லிடுவாங்க பார்த்து சூதனமா இருங்க்க
தமிழினி
இந்தியா ஒளிர்கிறது
அதனால தான் பலபேருக்கு தேச பக்தி பொங்கி வழியிது.
செல்வத்திடம் கொஞ்சம் சொல்லுங்க.
// //"எனக்கு இந்தியா மேலே நேசம் இருக்கே ஒழிய பக்தி இல்லை. அதனால அதன் குறைகளை குறிக்கவோ, ஒழிக்க முனைவதிலோ எனக்கு தயக்கமில்லே" என்று சொல்வேன்.அதனால, "போங்கடா நீங்களும் உங்க 'ஜெய் ஹிந்த்'" ம்னு கண்டிப்பா சொல்வேன்" என்று ஒருவர் கூறிய கருத்தில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.
//
இதச் சொன்னவர் வணக்கமுடன் என்ற அன்பர்.
இதில் எனக்கு முழு உடன்பாடு....//
எனக்கும் எனக்கும்.. ஏதோ என்னால முடிஞ்ச ஒரு பின்னூட்ட கயமை/உதவி!!
Post a Comment