Sunday, November 02, 2008

கலைஞரை கும்முவது தவறா?

இலங்கை தமிழர்கள் யார், இந்திய தமிழர்கள் ,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளின் வரலாறு என்ன என்று எந்த வரலாறும் தெரியாமல ( என் அலுவலக நண்பர் ஒருவர்.நன்கு படித்தவர்.அவரே என்னிடம் " தமிழன் ஏன்யா அடுத்த நாட்டில் போய் உட்கார்ந்துகிட்டு தனிநாடு கேட்கிறான்" என்றார்) சகலரும் சகட்டுமேனிக்கு இலங்கை பிரச்சினை பற்றி போட்டு தாக்குகிறார்கள். உனக்கு என்ன வரலாறு தெரியும் என்று எசிரி போடாதீங்க சாமி.அதை அப்புறம் பார்ப்போம்.

ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட ஒருவர் வசதியாக வீட்டில் அமர்ந்துக்கொண்டு, சத்யராஜ் ஏன் போர்முனைக்கு போகவில்லை என்றெல்லாம் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார். சிபிராஜ் இன்னும் ஃபீல்டில் செட் ஆகவே இல்லை. அதுக்குள்ள சத்யராஜ் ஏங்க போர்முனைக்கு போகவேண்டும்? இல்ல நாம தான் போர்முனைக்க போவமா? எதுக்கு அலம்பல்?

அப்பாவி மக்கள் இலங்கை அரசாங்கத்தால் கொடுமையாக தாக்கப்பட்டாலும், இந்த முறை கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதால்தான் விடுதலைப்புலிகளின் வேண்டுக்கோளுக்கிணங்க தமிழக அரசியல்வாதிகள் சவுண்ட் கொடுப்பதாக ஆங்கில ஊடகங்கள் எழுதி வருகின்றன. புரட்சித்தலைவியும் இதுப்பற்றி பேசி உள்ளார் என்று நினைக்கிறேன்.

இந்த பின்னணியி்ல் உண்ணாவிரதம்,மனித சங்கிலி என்றெல்லாம் நடத்தினாலும் கலைஞர் சொதப்பிவிட்டார் என்றெல்லாம் பரவலாக குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைவரை கொலை செய்ததாக விடுதலைப்புலிகள் மீது இந்திய நீதிமன்றங்களில் வழக்கு இருக்கும்போது விடுதலைப்புலிகளுக்கு காங்கிரஸ் உதவும் என்று நினைப்பது கொஞ்சம் அதிகப்படிதான். மத்திய அரசு ஏற்கனவே தன்னுடைய கடைசி கட்டத்தில் உள்ளது. அடுத்த தேர்தலிலும் வெல்ல வாய்ப்பே இல்லை என்பதுதான் நிலைமை. கலைஞருக்கும் மாநிலத்தில் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ள ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசை விட்டால் வேறு வழியே இல்லை.

ராமதாசு ஐயா விஜயகாந்த் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என்று அறிந்தால் விஜயகாந்த் உள்ள கூட்டணியில் துண்டை வீசி இடம் பிடித்துவிடலாம். கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கனவே விஜயகாந்திடம் சரண் அடைந்தாகிவிட்டது.

திமுக மட்டுமே தமிழகம் இல்லை. திமுக அளவிற்கு பெரிய கட்சியான அதிமுக இருக்கிறது. அரசியலுக்கு வந்தவுடன் இலங்கை பிரச்சினையில் ஆச்சர்யமான அமைதி காக்கும் விஜயகாந்த் இருக்கிறார். இவர்கள் யாராவது ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அளவிற்கு கூட தமிழகத்தில் சலசலப்பு இருந்திருக்காது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பதவியை இழந்து சூடுபட்டவர் கலைஞர்.ஆகவே அவரை கும்முவதை விட்டுவிடுவதே நல்லது.

**********************


நேற்று என்னுடைய் நண்பன் தேசிகவிநாயகத்துடன் ( பெயர் பொருத்தத்தை கவனிக்கவும்) பேசிக்கொண்டிருந்தேன். ஆளு பக்கா தேசியவாதி என்றாலும் இலங்கையில் தமிழரின் சுயநிர்ணய போராட்டத்தையும் ஆதரிப்பான். கேட்டால் ஒருவேளை நாளைக்கு ஈழத்தமிழருக்கு தனிநாடு கிடைச்சிடுச்சின்னா என்ன பண்றது என்பான்.

"இலங்கைக்கு இந்தியா ஆயுதங்கள் மற்றும் ரேடார் எல்லாம் தருவது எப்படிடா நியாயம், அதை வைச்சி தான அவன் தமிழனையே கொல்றான்",என்றேன்.

"அதுல தாண்டா நம்மோட ராஜ தந்திரமே இருக்கு, தமிழக அரசியல்வாதிகளும் சரி,நீயும் சரி இதை புரிஞ்சுக்கலை", என்றான்.

"எப்படிடா"

"நம்மோட ரேடாரதான இலங்கை ராணுவம் பயன்படுத்துது, நம்ம கொடுக்கலின்னா சீனாகாரன் கொடுத்திருப்பான், ஒருவேளை சீனாக்காரன் ரேடாரா இருந்திருந்தா விடுதலைப்புலி விமானத்தை அந்த ரேடார் கண்டிபிடிச்சிருக்காதா, அதுனாலதான் முந்திக்கிட்டு நாம கொடுத்துட்டோம்" , என்றானே பார்க்கலாம்.

டர்ஜ் ஆனேன் நான். இப்படியெல்லாமாடா டேய்!!!
.
.
.
.

.
.
.
.
.
(காமெடியை காமெடியாத்தான் எடுத்துக்கணும்)

13 comments:

சயந்தன் said...

காமெடி இல்லைங்க.. இலங்கையில சில சிங்கள கட்சிகளிடம் இந்த எண்ணம் இருக்கு. ஜேவிபி என்ற சிங்கள கட்சி இந்திய ராடார்களை இயக்கும் இந்தியர்கள் மேல் சந்தேகம் தெரிவித்திருக்கிறது.

சிங்கள கருத்து களங்களிலும் இப்படித்தான் சிலர் சொல்கிறார்கள். முந்தநாத்து புலிகளின் விமானத்த ராடர் காட்டவே இல்லையாம் :(

ஒருவேளை ராடருக்கு மனிதாபிமானம் ஏதாவது இருக்குமோ ?

Muthu said...

சில சிங்கள கருத்து களங்களின் சுட்டி குடுங்களென்.

Voice on Wings said...

உங்களுக்கு ஒரு மொழிப் பாடம் :)

ஒரு வாக்கியத்தை வினா வடிவில் அமைக்கும் போது, நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கு எதிர்மறையா அமைக்கணும். உ-ம், "நான் கெட்டவனா?" "இல்ல, நல்லவன்" என்பதுதான் அது உணர்த்தும் பொருள்.

அதப் போலவே, "கலைஞரை கும்முவது தவறா?" என்பது "இல்ல, சரியானதுதான்" என்ற பொருளைத் தருது. அதுக்கு பதிலா, "கலைஞரைக் கும்முவது சரியா?"ன்னு தலைப்பு வச்சிருந்தீங்கன்னா, உங்க பதிவின் கருத்துக்கு பொருந்தி வந்திருக்கும்.

(இந்த மொழிக் கூறுகள் தெரிந்தும், தலைப்பை வேணும்ன்னே மாற்றி வைத்து எதாவது 'அதிர்ச்சி உத்தி' எதாவது கடைப்பிடிச்சிருக்கீங்களான்னு தெரியாது :) நீங்கதான் உறுதி செய்யணும்)

Santhosh said...

ராடார் மேட்டர் இருந்தாலும் இருக்கலாம் :))..

அத்திரி said...

காமெடி என்பதை விட ரேடார் மேட்டர் கண்டிப்பா உண்மையாக இருக்கலாம். இதை படிச்சதும் 23ஆம் புலிகேசி படத்தின் நகைச்சுவை காட்சிதான் ஞாபகம் வருகிறது.
மனோபாலா-வடிவேலு.

கலைஞரை கும்முவதில் தவறே கிடையாது.

Muthu said...

வாய்ஸ்,

நீங்கள் கூறுவது சரிதான்.ஆனால் நான் "தவறா" என்று எழுதிய காரணம் என்னவென்றால் "சரியா" என்று எழுதும்போது எழுத்துக்கள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறிவிடுகிறது. ஏதோ கூகிள் செட்டிங்ஸ் கோளாறு. பல நாட்கள் ஆகிவிட்டன அல்லவா? இன்று சரி செய்கிறேன்.

Muthu said...

அதிர்ச்சி உத்தி ?! இதுவும் நல்லாத்தான் இருக்கு..

Unknown said...

முத்து,மஞ்ச துண்டுக்கு உங்களைப் போன்ற ஓசி பிரியாணி கண்மணிகள் ஜல்லி அடிப்பது தான் கேவலமான தவறு.மஞ்ச துண்டை கும்முவது அல்ல.

மருது பாண்டியன்

Muthu said...

வாங்க மருது அய்யா,

பதிவை படிக்கவே இல்லையா? சரி சரி... கடமை முடிஞ்சதா..போயிட்டு வாங்க...

Thamira said...

சீரியஸையும் சரி, ஜோக்கையும் சரி ரசித்தேன்.!

Pot"tea" kadai said...

டர்ஜ் என்றால் என்ன?

Muthu said...

பொட்டீக்கடையாரே,

ஜெர்க் ஆவது,ஸ்டன் ஆவது,அசந்து போவது போன்ற உபயொகப்படுத்தலாம்

மாயவரத்தான் said...

Attendance :

Present Sir!!!