Saturday, November 08, 2008

we the people supporting eelam

வீ த பீப்பிள் என்றால் நாம் எல்லாரும் தான் என்று நினைத்துவிட வேண்டாம். we the people என்ற பதிவர் சமீபத்தில் குழலியின் பதிவொன்றில் குழலி தன் அணியில் சேர்ந்து விட்டதாக புளகாங்கிதப்பட்டுள்ளார். ரொம்ப சந்தோசம். ஏத்தி விடுவதற்கு முன் அந்த செய்தியின் பின்னூட்டங்களில் ஈழத்தமிழன் சொல்லியிருக்கும் அனைத்து விசயங்களையும் மேற்படி தேசியவாதி ஒத்துக்கொள்கிறாரா என்பதை சொன்னால் பரவாயில்லை. அல்லது அவரது தலைவி பாணியில் செலக்டிவ்(?) நச் போடுகிறாரா?

அன்புமணி ஏதாவது ராஜீனாமா செய்து கீய்து விட்டாரா என்று அனைத்து பேப்பரையும் புரட்டி பார்த்தேன். அப்படி எதுவும் செய்தி இல்லை. தீடிரென்று கலைஞர் ஈழபிரச்சினையில் வெறும் அரசியல் தான் செய்கிறார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை.

கலைஞரை தாண்டி நாம் ஏன் சிந்திப்பதில்லை? ஊர் ஊருக்கு எத்தனை தமிழன் போராட்டம் நடத்தி கைதானான்? எத்தனை கட்சிகள் இன்று ஈழத்தமிழர்களுக்காக கச்சை கட்டி நிற்கின்றன? ஒரு பதிவில் பார்த்தேன்.(வீ.எம்). அமீரையும் சீமானையும் பாராட்டினாராம் புலிக்கோ. ஆனால் புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)

ராமதாஸ் தன் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்வதை எது தடுக்கிறது என்று புரியவில்லை. தேர்தலும் நெருங்கும் நேரம். ரொம்ப நஷ்டம் வராது. ஒருவேளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ரொம்ப படம் காட்டினால் நாளை ஜெயா கூட்டணியில் சேர முடியாதே என்று காய் நகர்த்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன் ஒரு நாடகம் நடத்தியது.ஏதோ ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக என்று உண்ணாவிரதமோ என்னமோ. கடைசியில் அது அதிமுக வுடன் கூட்டணி சேர ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாம். அதையும் விஜயகாந்த் கெடுத்துவிட்டார் :)

ஆக நாம் தமிழர்கள் அனைவரும் யாரையாவது குற்றம் சாட்டி இந்த பிரச்சினையில் நாம் நல்லவனாக முயற்சிக்கிறோம். இருக்கவே இருக்கார் தாத்தா. ஏற்கனவெ வயதாகி குடும்பம் உள்பட யாரையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறார்.போட்டு தாக்கு. எல்லாவற்றையும் கலந்து கட்டி ஊடு கட்டலாம்ல.

இந்த மாதிரி திசை திருப்பல்களை தவிர்ப்பதற்காகவாவது கலைஞர் அரசியலிருந்து விலகிவிடுவது நல்லது.

14 comments:

நாமக்கல் சிபி said...

:)

Pot"tea" kadai said...

Me Too!!!

- We the People supporting TAMIL EELAM

;))

லக்கிலுக் said...

ஆவேசம் வந்து தாத்தா துப்பாக்கியத் தூக்கிக்கிட்டு ஈழத்துக்கு போறவரைக்கும் சும்மா இருக்க மாட்டாங்க போலிருக்கே? :-)

முத்து தமிழினி said...

பொட்டீ,

உள்ள தள்ளாம விட மாட்ட போல இருக்கே....

லக்கி,

தாத்தாவை மட்டும் அனுப்பறதில எல்லாரும் குறியா இருக்காங்க.விஜயகாந்தை ஏன் அனுப்ப மாட்றாங்க?

லக்கிலுக் said...

//விஜயகாந்தை ஏன் அனுப்ப மாட்றாங்க?//

அவரு க்ளைமேக்ஸுக்கு தான் போவாரு. துப்பாக்கியோட வர்ற சிங்கள ராணுவம் மொத்தத்தையும் காலாலேயே எட்டி உதைச்சி அழிச்சி தமிழர்களை காப்பாரு!

வாக்காளன் said...

குழலி பதிவில் இன்னும் 2 வாரத்தில் மாற்றம் வரலாம்... இன்னைக்கு தலைப்பு செய்தி பார்த்தீங்களா? விடுங்க தமிழிணி :) .. கோபாலபுரத்துக்கும் தைலாபுரத்துக்கும் நடுவில் இருக்கும் இழையின் அள்ளவுதான் தான் நம்ம குழலி பதிவின் காட்டம்.. " விடுங்கோ..

எல்லோரும் பொழுதை ஓட்டனுமே .. கலைஞரை விட்டா காலத்தை ஒட்ட வேற வழி என்ன...

கோவி.கண்ணன் said...

//அமீரையும் சீமானையும் பாராட்டினாராம் புலிக்கோ. ஆனால் புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)//

சூப்பரு !

manasu said...

//புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)//


உட்கார்ந்தா?????????

முத்து தமிழினி said...

//புலிக்கோ ஜெயா முன்னாடி உட்கார்ந்து பேச மாட்டாராம்:)//
உட்கார்ந்தா?????????//

ஹிஹி ஒரு மரியாதைதான்...

செந்தழல் ரவி said...

///அவரு க்ளைமேக்ஸுக்கு தான் போவாரு. துப்பாக்கியோட வர்ற சிங்கள ராணுவம் மொத்தத்தையும் காலாலேயே எட்டி உதைச்சி அழிச்சி தமிழர்களை காப்பாரு!///

ஏற்கனவே காஷ்மீர் தீவிரவாதிகளை பிடிச்சவர்தானே நம்ம ரெட் ஐ ரெண்டுங்கெட்டான்...

எப்படியாவது போய் ராஜபக்சேவை திருத்திட்டு வந்திருவார்...

ஸாரா said...

என்னது கலைஞர் அரசியல விட்டு....போப்பா அவருக்கு இப்பவே குடும்பத்தில பவரு குறைஞ்சுகிட்டு இருக்கு.....இதையும் விட்டுட்டா அம்புட்டுதான்!

வரவனையான் said...

sixer thalai !!!

Dravidan said...

நம்ம கேப்டன விட்டு ஒரு அரை மணி நேரம் ஏதாவது டயலாக் பேச சொன்னா போதும், ராஜபக்சேயோ இல்ல ஆர்மியோ எல்லாம் தெரிச்சு ஒடிடுவாங்க!

We The People said...

வணக்கம் முத்து! உங்க பதிவை இன்று தான் பார்த்தேன்!

என பதில் இங்கே சொடுக்கி பார்க்கவும்!

நன்றி,

நா.ஜெயசங்கர்

தமிழ்வெளியை பார்த்தீங்களா?