Saturday, March 03, 2007

30,கும்மி மற்றும் ஹிப்போகிராட்

தமிழ்மணத்திற்கு வந்து இரண்டு பதிவுகளாவது படிப்பது என்பதே இப்போது எல்லாம் எனக்கு ஒரு சாதனை போல் ஆகிவிட்டது. அப்புறம் எங்கு பதிவுகள் போடுவது?

ஆனாலும் சில நண்பர்கள் நம்மை இன்னும் நினைவு வைத்து அவ்வபோது நம்மை பற்றி "நல்ல மாதிரி" எழுதுவது ஒரு "கிக்"க்காக தான் இருக்கிறது. உடனே உணர்ச்சி வசப்பட்டு "பாப்பார அடிவருடி" "திராவிட குஞ்சு" என்றெல்லாம் எழுதிக்கொண்டு நேரத்தை வீண் செய்யவேண்டாம் என்று நினைக்கிறேன்.(அப்படி எல்லாம் எழுதியதும் இல்லை)ஆனால் இதுபோன்ற புனித பிம்ப கருத்துக்களை வைத்து சில கோமாளிகள் பொது கருத்துக்களை உருவாக்கிய காலம் எல்லாம் மலையேறி விட்டது என்பதை உணராமல் எழுதி தீர்க்கிறார்கள் என்பது எனக்கு வருத்தம் தான்.

*********

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களுக்கு உயரெல்லை வகுத்தது பற்றி படித்தேன். ஒரு பதிவில் 20 பின்னூட்டத்திற்கு மேல் வந்தால் அது விவாதம் என்ற எல்லையை கடந்து விதண்டாவாதம் என்ற எல்லையில் நுழைந்துவிடுவதாக ஏற்கனவே ஒரு நண்பர் எழுதியிருந்தார். ஆனால் வலைப்பதிவுகளின் பலத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால் திரட்டிகளின் ஆகப்பெரிய பலங்களில் ஒன்றான இந்த மறுமொழி காட்டும் சேவையின் பலனை இந்த உயரெல்லை வகுத்தல் குறைப்பதாகவே நான் கருதுகிறேன்.

அது ஒருபுறம் இருக்க, இந்த உயரெல்லை வைக்க நேர்ந்ததின் காரணம் பற்றி ஒரு தகவலை கேள்விப்பட்டேன். சில நண்பர்கள் (நமது நண்பர்கள் தான்:) அடிக்கடி பின்னூட்ட விளையாட்டு விளையாடுவதால் இவ்வாறு செய்ய நேர்ந்ததாம். அப்படியானால் இதுபோன்ற பின்னூட்ட விளையாட்டு இப்போது தான் முதன்முறையாக நடக்கிறதா?பலநாட்களாக இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்பது தான் என் புரிதல். விளையாட்டு விளையாடிவர்கள் யார் என்பதில் தான் வித்தியாசம்.

முதலில் விளையாடியவர்கள் ஏதோ ஒரு உயர்ந்த வகை நகைச்சுவை பதிவுகள்/பின்னூட்டங்கள் எழுதுவது போலவும் பின்னால் விளையாட ஆரம்பித்தவர்கள் ஏதோ தாழ்ந்த ரக விளையாட்டு விளையாடுவது போலவும் சிலர் கூறுகிறார்களாம். பெரும்பாலோனோரின் கருத்து,ரசனை,பார்வை என்ன என்பதை மிகச்சிலர் உருவாக்குவதற்கு கிளாசிக் உதாரணமாக இதை சொல்லலாம்.

சரி..நான் தரும் தீர்வு/யோசனை என்ன?

மறுமொழி காட்டும் சேவை பகுதியை இரண்டாக பிரிக்கலாம். 30 அல்லது 40 பின்னூட்டம் தாண்டிய பதிவுகளை முகப்பு பக்கத்தில் ஒரு சிறிய பகுதியில்( ஒரு நாலு பதிவுகளை மட்டும் காட்டும் வண்ணம்) அமைக்கலாம். மற்ற (30 பின்னுட்டங்களுக்கு குறைந்த) பதிவுகளை வழக்கம் போல் காட்டலாம்.
இன்று அமர்ந்து பிளாக்கர் பீட்டாவில் பதிவை மாற்றி பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் தெரிந்த என் பதிவு பக்கத்தை சரி செய்துள்ளேன். இன்னமும் காமெண்ட் எழுதும் பதிவர்களின் பெயர் மட்டும் சரியாக வரவில்லை.ஏதாவது நிரல்துண்டு உள்ளதா?

*****************

பதிவுகள் எழுதாமல் இருந்த காலகட்டத்தில் ஒருநாள் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் சமீப காலமாக வலைப்பதிவில் ஆக்டிவ்வாக இயங்குகிறவர்.நன்றாகவும் எழுதக்கூடியவர். கும்மி பதிவுகள் மற்றும் ரவுசு பதிவுகள் சம்பந்தமாக பேச்சு வந்தபோது பூங்காவில் வருவது போன்ற தரத்தில் மட்டுமே பதிவுகள் எழுதுவது தம் லட்சியம் என்றும் கும்மிகள்,ரவுசு பதிவுகள் தனக்கு பிடிக்காது என்றார். ஆனால் அதே நண்பர் இன்னொரு நண்பரிடம் ஒரு நண்பரின் பதிவுக்கு கும்மியடிக்க ஆள் வேண்டும் என்று கேட்டதாக கேள்விப்பட்டு பேஜார் ஆகிவிட்டேன்.

கும்மி அடிப்பவர்கள் பூங்கா தரத்திற்கு எழுதமுடியாதா என்ன?எழுதுவதில்லையா?

உரக்க சொல்லுங்கள் "கும்மி என்பது கொண்டாட்டம்"

****************

தர்மபுரி கலவரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்திகளை வைத்து வலைப்பதிவில் கும்மி அடிக்கபட்டதை பார்த்தேன்.

நானும் கொஞ்சம் கும்மி அடித்துக்கொள்கிறேன். இந்த தீர்ப்பை பொறுத்தவரை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம்,ஜனாதிபதி கருணை மனு அது இது என்று வருவதற்கு பதினைந்து வருடம் ஆகும் என்று நினைக்கிறேன்.அப்போது தான் இதைப்பற்றி சீரியஸான விவாதம் வரும். அது வரை இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது நிறைய உள்ளது.ஆனால் நிறைவேற்ற படுவது ரொம்ப கொஞ்சம்தான்.அப்சல் விஷயத்தில் மரண தண்டனை வேண்டாம் என்று கருத்து சொன்னவர்கள் இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்றெல்லாம் பல கருத்துக்கள் இங்கு எழுதப்பட்டன.ப்ரீமெச்சூர்.

அப்சல் மரண தண்டனையை எதிர்த்து எழுதியவன் என்ற முறையில் என் பதில் இதுதான். மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பதைவிட அப்சல் விவகாரத்தில் உள்ள அரசியல் பகுதியை பற்றி மட்டும்தான் நான் தொட்டிருந்தேன். அந்த வழக்கையும் இந்த வழக்கையும் நான் எழுதியிருப்பதின் அடிப்படையில் ஒப்பிட முடியாது என்று நினைக்கிறேன்.
************************

13 comments:

சிவபாலன் said...

முத்து வாருங்கள்,

வரும்போதே சரியான கருத்துடந்தான் வந்துள்ளீர்கள்..

வாரத்திற்கு ஒரு பதிவு என சொன்னீர்கள்.
ஆனால் உங்கள் இரசிகர்களை ஏமாற்றி வருகிறீர்கள்...

நேரத்தை அடஜெட் செய்து பதிவிடுங்கள்!!

Anonymous said...

பலநாட்களாக இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்பது தான் என் புரிதல். விளையாட்டு விளையாடிவர்கள் யார் என்பதில் தான் வித்தியாசம்.

நீங்கள் சொல்வதும் சரிதான். இதைப் பார்த்தே கடுப்பேறினார்களாக்கும். தமிழ்மணத்திலேயே அறிவிப்பும் போட்டார்களே
http://mkarthik.blogspot.com/2007/02/blog-post_21.html
http://mkarthik.blogspot.com/2007/02/300.html
மட்டுறுத்தினாலும் கொஞ்சப்பேர் அடிக்கறாங்க. மட்டுறுத்தாம விட்டாலும் கொஞ்சப்பேர் அடிக்கறாங்க.
பின்னூட்டத்துக்கு எல்லை போட்டாலும் கொஞ்சப்பேர் அடிக்கறாங்க. எல்லை போடாமெ விட்டாலும் கொஞ்சப்பேர் அடிக்கறாங்க.
தமிழ்மணம் பெயருக்கு பதிலா அவங்க தமிழ்மத்தளம் அல்லது தமிழ்மரம் என்று பேரை மாத்திக்கலாம்

:))

நன்மனம் said...

வாங்க முத்து....

Muthu said...

ஒரு காமெண்ட் மட்டுறுத்தப்பட்டுள்ளது.

வயிற்றெரிச்சலுக்கு நன்றி நண்பரே.உங்கள் காமெண்டுகள் எனக்கு உற்சாகமூட்டுகின்றன.ஆனால் வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.:))

அடிக்கடி எழுதவும்.நன்றி.

ilavanji said...

முத்து,

எப்படி இருக்கீங்க? :)

சொல்லிட்டேன்! கும்மி என்பது கொண்டாட்டம் :)

அளவோடு கும்மியடித்து வளமோடு வாழ்க!

இளவஞ்சி

Anonymous said...

திராவிட ராஸ்கல்களின் தலை அவர்களுக்கு வணக்கம்.

பதிவு அருமை.

இன்னும் உரக்கச்சொல்லுவோம் "கும்மி என்பது கொண்டாட்டம்"


வரவனையான்
(பீட்டா சொதப்பல்)

Pot"tea" kadai said...

தலைக்கும்மியைத் தொடர்ந்து வால்களும் வாளாய் வீசும் என அமுக அவுசுதிரேலாசியா சார்பில் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

ஐயா.. டெம்ப்ளேட்டைக் கொஞ்சம் சரி பண்ணுங்க... இங்க பார்த்தா செய்யலாம்...

வஜ்ரா said...

//
இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்றெல்லாம் பல கருத்துக்கள் இங்கு எழுதப்பட்டன.ப்ரீமெச்சூர்.
//

கருத்துக்கள் வைக்காமல் இருப்பது இம்மெச்சூர் !

அறிவு சீவிக்களின் இம்மெச்சூரிட்டியை ப்ரீமெச்சூராக கேட்டு விட்டார்கள் பாவம்.! சரி சரி, கொஞ்ச நாள் கழிச்சு கேட்டால் மட்டும் பதில் சொல்லப் போறிங்களாக்கும் ? எதுக்கு வெட்டி ஜம்பம் ?

மடியில கனமில்லைன்னா வழில பயமில்லன்னு சொல்லுவாங்க. வங்கி அதிகாரிக்குத் தெரியாமல் இருக்குமா இந்தப் பழமொழி!

Muthu said...

thanks friends...

pons,

since iam using old template i added gopi's scripts..when u select comments u can see the name of the bloggers..but blogger page is not showing that..any solution? the page u have shown will work only for new blogger templates it seems (same for jagat's scripts):(


vajra,

tension aagavendam...see i have answered already...

(one news: iam not bank officer anymoer..i shifted out:))

லக்கிலுக் said...

அப்படிப் போடுங்க அருவாளை!

கும்தலக்கடி கும்மாவா
கும்மின்னா சும்மாவா?

தலைவரே! ஆடிக்கொரு வாட்டி அமாவாசைக்க்கொரு வாட்டி வந்தாலும் வாட்டி எடுத்துடறீங்க சில பேரை!

அமர்க்களம் தொடரட்டும்...

சோமி said...

முத்து நல்லா இருகியளா?
நிறய வாசிக்கிறீங்க போல
வாழ்த்துக்கள். பிஒன்னூட்டப் பகிடியள் எல்லாம் சொல்லியிருகிறியள்.

வரவனையான் said...

ஆனா முத்து, நீங்க சும்மா ஒரு பதிவு போட்டாகூட சிலருக்கு அழுவாச்சி வருது....

அதுக்காவே வாரம் ஒரு கும்மி பதிவு போடவும்


:)))))))))))))