Sunday, March 11, 2007

முத்துகுமரா பதில் கிடைச்சதாப்பா?

நண்பர் முத்துகுமரன் எழுதிய சம்ஸ்கிருத சுலோகங்களுக்கு பதிவை படிக்கும்போது ஒரு பரபரப்பாக இருந்தது. தேவபாடையில் பரிச்சயம் கொண்ட ஆன்மீக அன்பர்கள் நிறைந்துள்ள இந்த தமிழ்மணத்தில் இதற்கான சரியான அர்த்தம் உடனடியாக தந்து முத்துகுமரனின் வாயை அடக்கிவிடுவார்கள் என்று நினைத்தேன். அனைத்து பின்னூட்டங்களையும் ஆவலுடன் படித்தும் எந்த பதிலையும் காணவில்லை.

வழக்கமாக காவடி தூக்கும் நண்பர்களைக் கூட காணோம். வழவழா கொழகொழ என்று சிலர் நழுவுவதை பார்க்கும்போது ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது. சில நழுவல்களையும் பல்டிகளையும் பார்க்கும் போது எனக்கு தோன்றிய ஒரு கதை.

___________

ஒரு ஊரில் ஒரு புருசன்,பொண்டாட்டி இருந்தார்களாம். புருசன் அடிக்கடி கோவிச்சுக்குட்டு வீட்டை வீட்டு போகிறேன்னு போவானான். ஆனால் வீட்டுக்காரி, பக்கத்துவீட்டுகாரங்க என்று எல்லாரும் சமாதானம் பண்ணி விட்டுவாங்களாம்.

அடிக்கடி இவன் இம்சை தாங்காம ஒரு நாள் எல்லாரும் பேசி வெச்சு விட்டுட்டாங்களாம். சப்பை மேட்டருக்கு சண்டைய போட்டுட்டு நம்மாளு கிளம்பி போறானாம்.யாரும் சமாதானம் பண்ண வரல்லையாம்....ஆளுக்கு கிலி கண்டுடுச்சு...ஆனாலும் ரோசமாக ஊரை விட்டே கிளம்பி போயிட்டானாம்....

பொண்டாட்டி ஒப்பாரி வெக்க ஆரம்பிச்சுட்டாளாம்..ஊரில் எல்லாருக்கும் ஆச்சரியமாம்..ஆனா ஒரு பெரிசு மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் பாருங்கன்னாராம்..

சாயந்தரம் ஆச்சாம்..ஊருக்கு வெளியே மேய்ச்சலுக்கு போயிருந்த மாடெல்லாம் திரும்ப வரும்போது ஒரு மாட்டோட வாலை புடிச்சுகிட்டு நம்மாளு வரானாம்..

"வரமாட்டேன்..என்னை கட்டாய படுத்தாதே" என்று வசனம் வேற பேசறானாம்....

________
கி.ரா வின் கதை என்று நினைக்கிறேன். அவர் பாணியில் பேச்சு நடையில் தந்துள்ளேன்.

இந்த கதை இங்கே எப்படி வந்தது , எப்படி பொருந்தும் என்றெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம். பிறகு மீண்டும் ஒரு முறை அந்த நண்பர் மாட்டு வாலை பிடிக்க வேண்டி வரும்..மாடு பாவம்....:))

11 comments:

முத்துகுமரன் said...

துபாய் நேரம் ஞாயிறு மாலை 5.00 மணி வரை எதுவும் வரவில்லை செயல். வந்தா சேதி சொல்லி அனுப்புறேன்.

சிவபாலன் said...

முத்து

கதை சூப்பர்..

எப்படி இப்படி எல்லாம்.. :)

Anonymous said...

என்னங்கோ, சுட்டி கொடுக்காம விடறது ஒரு பெரிய ட்ரெண்ட் ஆயிடுச்சு போல - எந்தப் பதிவுங்க? ஒரு சுட்டி கொடுக்கத் தாவலை? துண்டறிக்கை மாதிரி மொட்டைக் கட்டையா சொன்னா எப்படி?

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
துபாய் நேரம் ஞாயிறு மாலை 5.00 மணி வரை எதுவும் வரவில்லை செயல். வந்தா சேதி சொல்லி அனுப்புறேன். //

இப்படிச் சொன்னா எப்படி முத்துக்குமரன்? அவங்கதான் சொல்லலை. நீங்களாவது சொல்லனும். நீங்க சொல்லும் போது யாரும் வந்து கேட்டா...அதுக்குத்தான் முன்னாலயே பதிவு போட்டேன். அப்ப ஏன் சொல்லலைன்னு கேக்கலாமே. சீக்கிரம் சொல்லுங்கய்யா....காய வெக்காதீங்க.

சாலிசம்பர் said...

எனக்கு புரிஞ்சு போச்சு.வால் பிடி வீரர் வலைமுனி தானே!

கருப்பு said...

ஹிஹிஹி

நலமாய்யா முத்து?

ஐயர் said...

நேக்கு இது ஒன்னும் நன்னா படலே.

Anonymous said...

இந்த பதிவை பாத்தீங்களா?

நாமக்கல் சிபி said...

என்ன நடக்குது இங்கே?

லக்கிலுக் said...

முத்துகுமரனுக்கு பதில் இன்னமும் கிடைக்கலியா? :-)))

Dhavappudhalvan said...

வாலைப்பிடித்த நம்ம ஆளு கதை நல்லா இருந்தது