கடந்த வாரம் தஞ்சாவூரில் நடந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பதினைந்தாம் ஆண்டுவிழாவினை கண்டுகளித்தேன்.அதைப்பற்றி எழுதலாம் என்று தோன்றியது.வேலைபளு இருந்தாலும் இதை பதிவு செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.
தீவிர வாசிப்பு, தீவிரமான சமூக பார்வை, சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் இவைகளை பற்றிய நினைக்கும் போது தினமலர்,தினகரன் பாணி அரசியலையும் ,சோ போன்ற ஆட்கள் நம் மனதில் திணிக்கும் அழுக்கு அரசியல் சிந்தனைமுறையை தாண்டியும் நம் பார்வையை விஸ்தரிக்கும்போது பொதுவுடைமை கொள்கையை,அதன் வீச்சை புறக்கணிக்க முடியாது.
நம்மில் பலர்மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரை தமிழகம் முழுவதும் பரவலாக சுவர் விளம்பரங்களிலும் தட்டிகளிலும் நாம் அனைவருமே பார்த்திருப்போம். பகத்சிங்கின் படம் ஒன்று வரையப்பட்டிருக்கும். ஏற்கனவே நண்பர்( இலக்கிய நண்பர்) ஒருவரின் கையில் இந்த அமைப்பின் புத்தகங்களை பார்த்திருக்கிறேன்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை மற்றபடி நாட்டில் உள்ள எத்தனையோ அமைப்புகளில் அதுவும் ஒன்று என்ற அளவில் தான் இருந்தது.
இந்த ம.க.இ.க என்ற அமைப்பும் அடிப்படையில் கம்யூனிச அமைப்புதான். இவர்கள் மொத்தம் நான்கு அமைப்புகளாக இயங்குகிறார்கள்.ஆனால் இந்தியாவில் இருக்கும் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் இவைகளை தான் இவர்கள் அதிகமும் தாக்குகிறார்கள். அசுரன் பதிவுகளை பார்த்திருப்பீர்கள்.இதைப்பற்றி நான் அதிகம் சொல்லதேவையில்லை.
நான் பார்த்த அந்த கருத்தரங்கம் இரு அமர்வுகளாகவும் இரவு கலைநிகழ்ச்சி என்றும் கூறப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் துவங்கி நேரந்தவறாமல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. கருத்தரங்கம் நடைபெறும் போது விழா பந்தலில் யாரும் தூங்கி விழும் சில மக்களை முகம் கழுவி வருமாறு தொண்டர் படையினர் கேட்டுக்கொண்டு இருந்தது வித்தியாசமாகப்பட்டது.
சுமார் பத்தாயிரம் பேர் வரை அமரக்கூடிய அந்த பந்தல் நாள் முழுவதும் முக்கால் சதவீதம் நிரம்பித்தான் இருந்தது. நிறைய மக்கள் குடும்பம் குடும்பமாக இந்த கலைவிழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்தது ஒரு புதுமையான காட்சி.
காலை நிகழ்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒரு உரை திப்பு சுல்தான் பற்றியது. திப்பு பிரச்சார சமிதி என்ற கர்நாடகத்தை சேர்ந்த அமைப்பில் இருந்து வந்திருந்த சிக்கே ரங்கே கவுட என்பவர் திப்பு சுல்தானை பற்றி ஒரு அருமையான உரையை மொழிபெயர்ப்பாளர் துணையுடன் நிகழ்த்தினார்.
ஐதர் அலி அவன் மகன் திப்பு சுல்தான் ( சாதாரண பின்னணியில் இருந்து மன்னர் ஆனவராம் ஐதர் அலி) ஆகியோரின் தொலைநோக்கு பார்வையும் வீரமும் உண்மையிலேயே மிகவும் போற்றத்தக்கவை.எந்த மன்னன் ஆண்டாலும் நீ இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து வயிறு வளர்க்கும் கும்பலை எல்லாம் திப்பு என்றுமே கூட வைத்திருந்தது இல்லை. துரத்திவிட்டுவிடுவான் என்று ரங்கே கவுடா கூறியதை கூட்டம் வெகுவாக ரசித்து சிரித்தது..சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.கவின் அமைச்சர் ஒருவர் திப்புவை பற்றி அவதூறு சர்ச்சையின் பின்னணியில் பல விஷயங்களை புரிந்துக்கொள்ள முடிந்தது.
அடிமை மோகத்தை பற்றி துரை.சண்முகம் என்பவர் எளிமையாக பேசினார்.ரசிக்கக்தக்க உரை.
மாலையில் பகத்சிங்கை பற்றி புத்தகம் எழுதிய பேராசிரியர் சமன்லால் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தினார். பகத்சிங்கை பற்றிய நிறைய தகவல்களை அடங்கிய அருமையான உரை அது.
இந்து நாடு, இந்திய நாடு, மாட்டுக்கறி தடை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் உரக்க குரல்கள் எழும் பின்னணியில் இந்த விஷயத்தை அணுக வேண்டும். மாட்டுக்கறி போடும் விவகாரத்தில் தான் மங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு கலவரம் வந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இந்த விழாவில் மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சில்லி ஆகியவை அரங்கின் உணவுக்கூடத்தில் கிடைத்தன. தமிழ் மக்கள் இசைவிழாவில் மாட்டுபிரியாணி... கோமாதா கறி நல்ல டேஸ்ட்டாக இருந்தது என்பது என்னவோ உண்மை.
மாலையில் மருதையன் பேச்சு. மருதையனின் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நான் ஏற்கனவே படித்திருந்த அடிப்படையில் பார்க்க போனால் அன்றைய பேச்சு சற்றே சூடு குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். பிறகு நண்பர் ஒருவர் பரிசளித்த திரைப்பட விமர்சன கட்டுரை தொகுப்பு குறிப்பிடத்தக்க ஒரு புத்தகம்.
சொந்த வேலைகள் நெருக்கியதால் கலைநிகழ்ச்சிகளை நான் முழுமையாக இருந்து பார்க்க முடியவில்லை. அதற்குள் நான் பார்த்த ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி தப்பாட்டம் என்ற கலை.தஞ்சாவூரை சேர்ந்த சில கலைஞர்கள் நிகழ்த்திய அந்த கலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.
இடையன் என்ற நண்பர் விரிவாக இந்த விழாவை பற்றி எழுதிய பதிவு இங்கே...
மக்களை அரசியல் மயப்படுத்துவது என்பது இந்த அமைப்பின் கொள்கைகளில் ஒன்று என்றார் நண்பர் ஒருவர். அரசியல் எல்லாரிடமும் இருக்கிறது. அரசியல் இல்லாத ஆத்மா என்று நம்மில் எவரும் இல்லை. பெரும்பாலோனோர் செய்யும் அரசியல் தன் நிலையை(உயர்நிலை) காக்க போராடுவது. அதற்கு பொதுநல சாயம் பூசுவது. உடன்போக்கு அரசியல் வலையுலகில் பரவலாக பேசப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
என்னை பொறுத்தவரை அரசியலில் யாரை ஆதரிப்பது என்பதில்கூட சில நேரம் குழப்பம் இருக்கும். தேர்தல் அரசியலில் பலநேரம் கலைஞரை ஆதரிப்பேன்,சில நேரம் ராமதாசை கூட ஆதரிப்பேன்.ஆனால் யாரை எதிர்ப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்.அந்த அடிப்படையில்தான் இந்த அமைப்பின் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். வந்திருந்த மக்களில் பெரும்பாலோனோர் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். எப்படி இந்த மக்கள் அரசியல் மயப்படுத்த பட்டார்கள் என்பதை பற்றி ஒரு நண்பருடன் விவாதம் ஏற்பட்டது. ஏதோ பிரச்சினையி்ல் பாதிக்கப்படும் மக்கள் அதன்பின் இருக்கும் அரசியலை உணர்ந்து அதன்மூலமே அரசியலை புரிந்துக் கொள்கிறார்கள் என்றார் நண்பர்.திருநெல்வேலியில் கோக்குக்கு எதிரான போராட்டத்தை பெரிய அளவில் நடத்தியதும் பெரியார் சிலை உடைப்புக்கு எதிரான போராட்டத்தை நடத்திய வகையிலும் இந்த அமைப்பு அரசியல் சாரா அமைப்புகளில் சமரசம் இன்றி இயங்குகிறது.
எந்த அரசியலும் பாதிக்கப்படாமலும்( கடுமையாக பாதிக்கப்பட்டாலும் நேரடியாக நாம் பாதிக்கப்படவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்க மக்களையும் படித்தவர்களையும் அரசியல் மயப்படுத்துவதில் தான் இதுபோன்ற அமைப்புகளின் வெற்றி அடங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.
Sunday, March 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//படித்தவர்களையும் அரசியல் மயப்படுத்துவதில் தான் இதுபோன்ற அமைப்புகளின் வெற்றி அடங்கி உள்ளது என்று நினைக்கிறேன்//
முத்து அய்யா,
எம் மக்கள் படித்து ஓரளவுக்கு முன்னேற ஆரம்பித்துவிட்டால்,இது போன்ற கீழ்த்தரமான நக்சல் கும்பலின் தோல்வி அடங்கி உள்ளது என்று நினைக்கிறேன்.இந்த கும்பலின் கொள்கை என்னவென்றால், எம்மக்கள் அனைவருக்கும் ஒரு கையில் மலம்,இன்னொரு கையில் திருவோடு.ஆனா இந்த நக்சல் கும்பல் மட்டும் சிலி பீஃப் சாப்பிடணும்.சந்தா வசூல் செய்தும்,மற்றும் கொலை/கொள்ளை செய்தும் ,ஏழை மக்களை முன்னேற விடாமல் தடுக்கும் நாச சக்தி தான் நக்சல் கும்பல்.இந்த மூஞ்ஜிகளுக்கு,நீங்க கூஜா தூக்கும் திராவிட அயோக்ய கும்பலே தேவலை.
பாலா
முத்து, அருமையான பகிர்தலுக்கு நன்றி. அசுரன், இடையன் ஆகியோரின் சுட்டிகளை உள்ளிடுகிறீர்களா?
இந்து நாடு, இந்திய நாடு, மாட்டுக்கறி தடை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் உரக்க குரல்கள் எழும் பின்னணியில் இந்த விஷயத்தை அணுக வேண்டும். மாட்டுக்கறி போடும் விவகாரத்தில் தான் மங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு கலவரம் வந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இந்த விழாவில் மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி சில்லி ஆகியவை அரங்கின் உணவுக்கூடத்தில் கிடைத்தன. தமிழ் மக்கள் இசைவிழாவில் மாட்டுபிரியாணி... கோமாதா கறி நல்ல டேஸ்ட்டாக இருந்தது என்பது என்னவோ உண்மை.
Sir, If RSS and VHP oppose Pepsi and Coke will those also be sold
by this 'left' group. SJM
(swadeshi jagran manch) an outfit
in which Gurumurthy plays an important role opposes entry of wal mart.So I hope that this 'left' organisation will
support opening of Wal Mart.
Btb did they sell pork also.
Or as pork is haram for muslims
that is also haram for this
'left' organisation ?
bala,
nanri...neengal pirathinithithuvam seiyum kumbalin karuthu ingu pathivathu nallathu...
sundar,
pls see poar-parai.blogspot.com
ravisrinivas,
thanks..i will respond when i get time...
மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒரு சமூக அக்கறையுள்ள அமைப்பு.
வியாபார நோக்கமின்றி அவர்கள் நடத்தும் இரண்டு பத்திரிக்கைகள் அவர்களின் சமூக அக்கரையை வெளிப்படுத்தும். நான் தவறாமல் வாங்கும் பத்திரிக்கைகளில் அவை இரண்டும் உண்டு. சுமார் 21 ஆண்டுக்ளுக்கு மேலாக அந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றி நான் அறிவேன்.
நிச்சயம் அவர்கள் நடத்திய இசைவிழா உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
தமிழ் மக்கள் இசை விழா கடந்த இரண்டு வருடங்களாக இல்லை. விசாரித்ததில் ம.க.இ.க வினர் ஒரு ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பொருள் கிடைக்க போராடியதாலும், ஒரு ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பொருள் கிடைக்க போராடியதாலும் இசை விழா இல்லை என்றனர்.
15000 க்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். கருத்தரங்கமும் கலைவிழாவும் சிறப்பாக இருந்தன.
'நாச சக்தி தான் நக்சல் கும்பல்' - பாலா சுய னினைவோடு பேச வேண்டும்.
நக்சல்பாரிகள் தேசபக்தர்கள். அவர்களை விட்டால் வேறு னாதியில்லை.
- செல்வம்.
Post a Comment