பல சிறந்த கட்டுரைகளையும்,கதைகளையும் படிக்க இயலாமல் போகிறது. அதிஷ்டவசமாக சந்திப்பு எழுதிய கட்டுரையையும் அதற்கு பதிலாக அசுரன் எழுதியதையும் படிக்க நேர்ந்தது.சமீப காலத்தில் இணையத்தில் படித்ததிலேயே சிறந்த எழுத்தாக இதை கூறலாம். கலக்கி கொண்டிருக்கும் இன்னொரு தோழர் சுகுணா திவாகர். இணையத்தில் சிந்தனைக்கு (நவீன சிந்தனை எனலாம்).சிலர் வேதம்,வெங்காயம் எழுதி காலவெள்ளத்தில் பின்னோக்கி துடுப்பு போடும்போது இந்த தோழர்களின் எழுத்து ஆறுதல் அளிக்கிறது.
நண்பர் சந்திப்பின் கருத்துக்கள் ஏமாற்றத்தை அளிக்கிறது. கட்சியின் நிலையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைப்பது என்பது தான் அவர் நிலை. பலமுறை இதைப்பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவுடைமை கட்சிகள் வளராததற்கு காரணம் திராவிட இயக்கம்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு அடிக்கடி (என்ன ஆதாரம் இதற்கு என்று தெரியவில்லை.அப்படியானால் திராவிட இயக்கம் இல்லாத மற்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் கோலேச்சுகிறார்களா? என்று கேட்கலாம்.)
திராவிட இயக்கங்களையும் அவ்யபோது சமுத்ரா,வஜ்ரா ஆகியோருடம் சேர்ந்துகொண்டு திராவிட கருத்தாக்கத்தையுமே தாக்குவது நண்பரின் பொழுதுபோக்கு.
ம.க.இ.க மக்களை அரசியல்மயப்படுத்துவது தான் எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஆயுத போராட்டம் என்றெல்லாம் எதையும் செய்ததாக எனக்கு தெரியவில்லை.பல்வேறு சமுதாய பிரச்சினைகளில் அவர்கள் நிலை என்ன என்பதும் முக்கியமாக அவர்களிடம் உள்ள தீர்வு (விரிவாக) என்ன? என்பதைப்பற்றி எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் (சரியான புத்தகங்கள் கிடைக்கவில்லை) அவர்களுடைய கலைவிழா உள்பட எல்லாவற்றையும் கேவலமாக கொச்சைப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது? என்பது என் கேள்வி.
துப்பாக்கிசூடு செய்து பி.ஜே.பியிடம் பேச்சு வாங்கி கட்டுவதும் இல்லாமல் பிணங்களை மறைக்கும் அளவிற்கும் போகிற இவர்களுக்கு கலைஞர் கடந்த வாரம் பேட்டியில் வைத்த உள்குத்து தேவைதான்.(சென்னை மாநகராட்சி தேர்தலின்போது இவர்கள் போட்ட நல்ல மனுசன் வேஷத்தை தாக்கினார் அவர்)
அரசியலில் ஆயிரம் நாகரீகம் பேசும் இவர்களின் பவிசு நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்ததில் தெரிந்ததே.என்ன சந்திப்பு சார்? என்ன நடக்குது?எனக்கு பதில் வேண்டாம்.அசுரனுக்கு சொல்லுங்க.அதை விட்டுட்டு இந்துத்வா வாதிகள் பாணியில் போலீசு,இண்டர்போல் என்று காமெடி பண்ணாதீங்க.
நடுவில் நண்பர் செல்வன் வந்து சந்தில் பாடுகிறார்.கர்நாடக நக்சல் இயக்கம், தமிழக நக்சல் இயக்கம் ஏதாவது காவிரி பிரச்சினை பற்றிய அவர்கள் கருத்தை உங்களிடம் சொன்னார்களா? அவர்கள் பேசும் தளம் என்னவென்றே தெரியாமல் குழப்பாதீர்கள். வேடிக்கை பாருங்கள்.கடைசியில் வழக்கம்போல் வென்றவர்களுடன் சேர்ந்து ஒரு பாராட்டு பதிவு போட்டால் முடிந்தது நம் உடன்போக்கு பாணி.இதுக்கு எதுக்கு கஷ்டப்படறீங்க?
Monday, March 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
முத்து வணக்கம்.
இருவரின் விவாதத்தையும் பொறுமையாக படித்ததற்கு. தங்களது எதிர்பார்ப்பு என்ன என்று புரியவில்லை? மார்க்சிய ஆசான் காரல் மார்க்° சொல்வார், “எந்த ஒரு கருத்திற்கும் ஒரு வர்க்க அடிப்படை இருக்கும்” என்று அதுபோல், நான் ஏதோ கட்சியின் கருத்தை மட்டுமே முன்வைப்பது போலவும், அசுரன் சுயமான சிந்தனையில் இயங்குவது போலவும் முன்வைத்துள்ளீர்கள். தனிப்பட்ட முறையில் அசுரனிடமோ, அல்லது முத்துவிடமோ எந்தவிதமான முரண்பாட்டையும் மேற்கொள்வது என் நிலைபாடல்ல. மாறாக, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நாம் இயங்கும் தளங்கள் முற்றிலும் வேறுபாடானது என்பதை மறக்கத் தேவையில்லை. நமக்கென்று பொதுவான எதிரிகள் இருக்கலாம். அந்த விஷயத்தில் ஒன்றுபடுவதும், அதற்காக ஒருமித்த குரலெழுப்புவதும் தொடர்ந்து நடைபெற வேண்டும். நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம், திராவிட இயக்கம் குறித்து என்னுடைய நிலைபாட்டை முன்வைக்காமல் இருக்க முடியாது. மேலும், நாம் விவாதித்தது, தமிழகத்தில் ஏன் கம்யூனி°ட் கட்சி வளரவில்லை என்பதுதான்? இதே கேள்வியை இந்தியா முழுவதும் ஏன் வளரவில்லை என்று எழுப்பியிருந்தால் அது சார்ந்து விவாதித்திருக்கலாம். உங்களுக்கு உள்ள முரண்பாட்டை, இங்கே வெளிப்படுத்துவது இந்த நேரத்திற்கு சரியா? என்பதை நீங்கள்தான் யோசிக்க வேண்டும். அத்தோடு நிற்காமல் சமுத்ரா, வஜ்ராவோடு சேர்ந்துக் கொண்டு திராவிட இயக்கத்தை தாக்குவது என்பது நண்பரின் பொழுது போக்கு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். என்னுடைய செயல் பொழுது போக்கு என்றால், நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? சரி, அதை விடுவோம்! சமுத்ராவோடும், வஜ்ராவோடும் சேர்ந்துக் கொண்டு பார்ப்பனீயத்துக்கோ அல்லது சங்பரிவார பாசிச சக்திகளுக்கு ஆதரவாகவோ நான் செயல்பட்டதாக நீங்கள் குற்றம் சாட்டினல் அது ஆரோக்கியமாக இருக்கும்! இவ்வாறு அபாண்டமான கோயபல்° பாணி பழி தூற்றுவது யாரை சந்தோஷப்படுத்திட? அதாவது, நான் உங்களது திராவிட சித்தாந்தத்திற்கு துணைபோகவில்லை என்பதால் நீங்கள் இங்கே சந்தில் சிந்து பாடுபவதாக கொள்ளலாமா? பொதுவாக இணையத்தில் நடக்கும் கூத்து என்ன? ஒட்டுமொத்த பார்ப்பனர்களையே இழிவுபடுத்தும் செயல்தான நடைபெறுகிறது. பார்ப்பனர்களுக்கும் - பார்ப்பனீய தத்துவத்தை தோலுரிப்பதற்கும் உள்ள வித்தியாசமே புரியாமல் அல்லவா பல பேர் இயங்குகின்றனர். நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ளது சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது. இருப்பினும், நந்திகிராமத்தையே கடந்த மூன்று வாரங்களாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்குள்ள சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவும், இத்தகைய நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு முன், ஜனநாயக ரீதியாக பல்வேறு எச்சரிக்கைகளை செய்திருக்கிறது. இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை. அதற்கான எந்த உறுதியையும் கூட அரசு கொடுக்கவில்லை. உண்மை இவ்வாறு இருக்கையில், சி.பி.எம். மீது எப்படியாவது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்களின் செயலுக்கு தாங்களும் துணைபோவது வேடிக்கையாக இருக்கிறது. திராவிட சித்தாந்தம் மூடநம்பிக்கைக்கு எதிரானது, இதனை நீங்கள் நம்புவதென்றால், உண்மையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அதில் ஏற்பட்ட குறைபாடுகளை விமர்சன ரீதியாக சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதை விட்டு, விட்டு, போகிற போக்கில் நானும் போடுகிறேன் தர்ம அடி என்று போடுவது ஒரு செயலா? இறுதியாக அசுரனுக்கும் எனக்கும் தத்துவார்த்த ரீதியான விவாதம் எங்கே வந்தது? அசுரனோடு தத்துவார்த்த ரீதியான விவாத்தை நடத்துவதற்கு நான் தயார், அதனை நானே ஆரம்பிக்கிறேன். ஆனால், ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கும் போது தத்துவ பாசம் பொழிவது யாருக்காக? சட்டி°கரில் 50 பழங்குடியின காவலர்களை கொன்ற நக்சலிச சித்தாந்தத்தின் அடிப்படை என்ன? என்று நான் ஒரே ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு செல்ல முடியும். நக்சலிசவாதிகள் 1967 கட்சியை ஆரம்பித்து இன்றைக்கு பல பல துண்டுகளாக சிதறியதுதானே மிச்சம் அதில் மிஞ்சியதுதானே இந்த ம.க.இ.க., இன்னும் சொல்லப்போனால் ம.க.இ.க.வின் தத்துவ விவாதம் எப்படியிருக்கும் என்பதற்கு சந்திப்பை தாக்கி பி. இரயாகரன் எழுதியுள்ளதையும் படியுங்கள். தொடருவோம் நம் விவாதத்தை... வாழ்த்துக்கள்.
முகமூடிகளை தோலுரித்துக் காட்டுவதில் தோழர் முத்து(தமிழினி)க்கு நிகர் அவரே தான். வழக்கம்போல அட்டகாசமான நக்கல்
Both CPI(M) and Ma.Ka.I.ka accept Stalinism in some form or other.Both think that repression
is necessary in the name of proletarian dictatorship.Both have
little respect for dissent or critique from within or outside.
Some would say that both represent reductionist and vulgar marxism.
Repression and mass killings are
not new in communist rule.It ranges
from 50s,100s and killings in thousands and lakhs.For me the
marxism of both CPI(M)and Ma.Ka.I.Ka are irrelevant and
useless.They are like different
sides of an useless coin that
has no value even as an old coin.
It is fun to watch these
marxists to argue against each
others.When dravida fundamentalists
and anti-brahmins haters and
persons like Suguna Diwakar join
in it becomes funnier- all sound and fury with little substance.
santhipu,
tension irukara aalavukku pathil illayee..try pannunga..
unga katchi nilaiyulum thavaru irukkum enbathai muthalil unara tayaraagungal..
//சட்டி°கரில் 50 பழங்குடியின காவலர்களை கொன்ற நக்சலிச சித்தாந்தத்தின் அடிப்படை என்ன? //
:)) oh..appa ithai patri ungalluku unmaiyil ethuvum theiryathaa..good..
சந்திப்பு அவர்களே,
பி. ரயாகரன் அப்படியொன்றும் தவறாக எழுதவில்லை. வெறும் புரளீகளை மட்டும் நம்பி நீங்களும், $சல்வன் உள்ளிட்டவர்களும் எழுதும் பொழுது, பி. ராயகரன் சில அடிப்படை கேள்விகளை கேட்ப்பதன் மூலம் உங்களது நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துவதின் ஊடாகத்தான் நாய்கள் என்ற தனது கருத்தை வைக்கிறார்.
நீங்களோ அவர கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல வழியின்றி, அந்த கேள்விகளின் அடிப்படையில் அவர் நிறுவும் ஒரு உண்மையின் கடுமையான அம்சத்தை மட்டும் முன்னிறுத்துகிறீர்கள்(அதாவது நாய்கள் என்ற விசயத்தை).
உங்களால் பி ராயகரனின் கருத்துக்கள் தவறு என்று நிரூபிக்க முடியுமானால், நாய்கள் உள்ளிட்ட கருத்துக்கள் அவரையும் உள்ளிட்டு அவர்து கருத்து சார்ப்புடைய எம்மையும் சேரும். அப்படியொன்று நடந்தால் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் தைரியம் எமக்கு உண்டு. நாம் அப்பொழுது அடிப்படை தர்க்கங்களை விட்டு விட்டு அதன் அடிப்படையிலான கருத்துக்களில் ஆதங்கப்பட்டு நிற்க்க மாட்டோ ம்.
தர்க்கங்கள் நியாயம் எனில் அதன் மீதான் கருத்துக்களும் நீயயமே. அவற்றை விமர்சனமாகவே நாங்கள் பார்ப்போம். அதுவே கம்யுனிஸ் அனுகுமுறை.
http://tamilarangam.blogspot.com/2007/03/blog-post_18.html
மாவோயிஸ்டுக்ளின் நடவடிக்கைகளில் எனக்கு ஒப்புதல் கிடையாது என்பதிருக்க,. ஆனால் செத்துப் போன அந்த மக்கள்வீரொதிகள் விசயத்தில் எமக்கு மகிழ்ச்சியே. அவர்களுக்கான வக்காலத்து வாங்கி வ்ரும் கோஸ்டிகள் லட்சக்கணக்கில் செத்து போன எமது மக்கள்- விவசாயிகளின் இழவு வீட்டில் பிடில் வாசித்த பன்றீகள்தானே?
இந்த அடிவருடிகளீன் ஒரே தடுப்பரணாக மாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் உள்ளன.
அசுரன்
அசுரன் நான் எழுப்பியுள்ள ஐந்து கேள்விகளுக்கு என்ன பதில்! விவாதத்தை அங்கிருந்து துவங்கலாமே. உங்களின் விவாதத்தை எதிர்பார்த்து! யார் மக்களின் எதிரிகள் என்பதை இந்திய மக்கள் தீர்மானிப்பர்.
//அதாவது, நான் உங்களது திராவிட சித்தாந்தத்திற்கு துணைபோகவில்லை என்பதால் நீங்கள் இங்கே சந்தில் சிந்து பாடுபவதாக கொள்ளலாமா? பொதுவாக இணையத்தில் நடக்கும் கூத்து என்ன? //
எனக்கு மட்டும் என்ன திராவிட தனி நாட்டில் எல்லாத் தீர்வு உள்ளது என்றா கொள்கை?
முத்து தமிழினி உள்ளிட்ட பலரும் கம்யுனிசம், நகசலிசம் சரி என்று உறுதியாக நிலை எடுக்கவில்லை. அவர்கள் ஒரு பார்வையாளர்களாக தமது பிரச்சனைகள் என்றூ கருதும் விசயங்களுக்கு தீர்வு கொடுப்பது எது என்று தேடிக் கொண்டு இருக்கீறார்கள் என்று கருதுகிறேன்.
அதில் முத்து தமிழினி உள்ளிட்டவர்கள் திராவிட தேசம் என்பதை தீர்வு என்றூ கருதுகிறார்கள். அதனுடன் முரன்படுவது குறைந்த பட்சம் தமிழ்மணத்தில் தேவையில்லை என்று கருதியதால அதனை முன்னிறுத்தி நான் பேசவில்லை.
எமக்குள் உள்ள பொது அம்சங்களை கணக்கிட்டே இணைந்து செயல்பட்டோ ம். தேசியம் குறித்த வேறுபாடுகளை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்ளும் சாத்தியம் உள்ளதை நம்பியே இந்த அனுகுமூறை.
மாறாக இந்த அம்சத்தையும் கூட முதன்மைப் படுத்தி அரசியல் செய்து தனிமைப் பட்டது யார்?
இவையெல்லாம் வெறுமனே நடவடிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்ல.
மாறாக, இந்திய சமூகத்தை வரையறுப்பதில் ஆரம்பித்து அதன் வர்க்க சக்திகளை பிரிப்ப்து, நட்பு சக்திகளை தீர்மானிப்பது, எதிரிகளின் சித்தாந்த மூலத்தை வரையறுபப்து என சித்தாந்தத்தை செயல்படுத்தி ஆய்வு செய்வதில் உள்ள CPM ன் சித்தாந்த குறைபாடுகளே.
புதிய ஜனநாயக சித்தாந்த பலம் எனக்கு திராவிட சித்தாந்தம் என்பது ஒரு தேசிய முதலாளித்துவ கோரிக்கை என்பதை தெரியப்படுத்துகிறது. தேசிய முதலாளீத்துவமும் இங்கு ஒடுக்கப்படும் வர்க்கம் என்பதால் அவர்கள் போராடுகிறார்கள் அவர்களை ஒடுக்கும் பார்ப்ப்னியம், ஏகாதிபததியத்திற்க்கு எதிராக அவர்க்ளுடன் இணைந்ததாக இருந்தது.
ஆனால் தேசிய முதலாளி என்பவன் ஒடுக்கப்படும் வர்க்கம் என்பதையே CPM ஏற்றுக் கொள்வதில்லை(மாறாக, பெரு முதலாளி என்று ஒன்றை பொதுவாக வரையறுக்கிறார்கள் அதில் தரகு மற்றும் தேசிய பெரு முதலாளிகள் இருவரும் இருக்கிறார்கள்). ஆயின் தேசிய இனக் கோரிக்கை எங்கு முளைக்கிறது எனப்த்ற்க்கு எதுவும் தெளீவாக பதில் அவர்களிடம் இருப்பது போல தெரியவில்லை.
///இணையத்தில் நடக்கும் கூத்து என்ன? ஒட்டுமொத்த பார்ப்பனர்களையே இழிவுபடுத்தும் செயல்தான நடைபெறுகிறது. பார்ப்பனர்களுக்கும் - பார்ப்பனீய தத்துவத்தை தோலுரிப்பதற்கும் உள்ள வித்தியாசமே புரியாமல் அல்லவா பல பேர் இயங்குகின்றனர். ///
அதென்ன வித்தியாசம்? இந்த கேள்வி எதிர்த்து வாதாடுவதற்க்காக கேட்டதல்ல. ஆயினும் பார்ப்பனர்கள் பார்ப்ப்னியம் என்று எதை புரிந்து கொண்டு சந்திப்பு இந்த வரிகளைக் கேட்க்கீறார் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவே கேட்ட்கிறேன்.
அசுரன்
///இந்த அடிவருடிகளீன் ஒரே தடுப்பரணாக மாவோயிஸ்டுகளின் இடது சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் உள்ளன.//
The above is wrong.
The correct one is below.
///இந்த அடிவருடிகளின் தவறுகளை மறைக்கும் முகமூடிகளாக மாவோயிஸ்டுகளின் இடது சந்தரப்வாத நடவடிக்கைகள் உதவி செய்கின்றன.////
asuran
சந்திப்புக்கு
-----------
ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட
வெட்கமாக இல்லயா ?
ஏன் ?
என்று கேட்கிறீர்களா !
அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்
கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்
கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ?
ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,
அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.
ஏன் ?
எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?
சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்
நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,
தோழர் லெனினுடைய மாணவர்கள்,
கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்
பாருங்கள்.
சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்
எட்டிப்பாருங்கள், அப்படியே
உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்
Post a Comment