Thursday, February 01, 2007

என்னன்னு சொல்வேனுங்கோ...

இரண்டு மாதங்களுக்கு முன் வலைப்பதிவுக்கு ஒரு மாதம் விடுமுறை விடுவதாக அறிக்கை விட்டு என் லட்சோப லட்ச வாசகர்களை நட்டாற்றில்( சரி சரி...விடுங்க) விட்டபோது இந்த இடைவெளி இவ்வளவு பெரிதாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை. மாட்டு லோன் தரும் தொழிலை விட்டுவிட்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்து இத்தனை நாட்கள் ஆகியும் வலையுலகிற்கு ( வலையுலகம் என்கிற போது வலையுலக அரசியல் என்ற வார்த்தையையும் கூடவே வருகிறது..கொடுமைடா சாமி) வர முடியாமலே இருந்த வந்தது. இனிமேல் குறைந்தது வாரம் ஒரு பதிவாவது எழுதுவது என்று முடிவு எழுத்துள்ளேன்.( பழைய வேகம் இருக்காது. இருக்கக்கூடாது என்று நினைத்துள்ளேன்)

கடந்த நவம்பர் வலைப்பதிவர் சந்திப்பின்போது எழுதுவதை நிறுத்தினேன். நாளை சனியன்று நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பை ஒட்டி மீண்டும் வலையுலகில் இயங்க துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். லேட்டஸ்ட் வலையுலக சென்சேசன் நண்பர் வரவணையான் செந்தில் சென்னை வருகிறார். அவர் நண்பரும் சமீப காலமாக வலையுலகில் ஆழமாகவும் அகலமாகவும்(?) உழுது வருபவரும், வலைப்பதிவு மீட்டிங் என்றாலே எட்டி குதித்து எஸ்கேப் ஆகும் கவிஞர் எழுத்தாளர் சுகுணா திவாகரும் இதில் கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன். பெங்களூர் கிளை ( சேச்சே..அந்த கிளை இல்லைங்க) சார்பாக நானும் செந்தழல் ரவியும் வர இருக்கிறோம்.ஆங்காங்கே இருக்கும் வலைப்பதிவாளர்கள் அனைவரும் சனியன்று(பிப்ரவரி 3ந்தேதி) மாலை நண்பர் லக்கியாரோ அல்லது பாலாவோ சொல்லும் இடத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

சமீபத்திய புத்தக கண்காட்சியில் படித்த சுவையான புத்தகங்களைப் பற்றி ஒரு கலைந்துரையாடல் நடத்தலாம் என்று நான் நினைக்கிறேன். மற்ற நண்பர்களும் ஏதாவது திட்டம் இருந்தால் கூறலாம்.


மற்றபடி இந்த இரண்டு மாதங்களில் பலமுறை வலையுலகில் எழுதலாம் என்று கை பரபரத்தாலும் சொந்த வேலைகளும் அலுவலக ஃபயர்வால்களும் என்னை தடுத்து வைத்தன.பல நண்பர்கள் மூலமாக வலையுலக கலவரம்,அடிதடி,குத்துவெட்டு ஆகியவை பற்றிய தகவல்கள் கேள்விப்பட்டேன். இவர் தான் அவர் , அவர் தான் இவர் என்று எனக்கு இந்த இரண்டு மாதத்தில் எனக்கு இலவச விளம்பரம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.ஒரு நண்பர் நான் தமிழ்மண ஆலோசனை குழுவில் இருப்பதாக ஒரு போடு போட்டாராம். அடடே நமக்கு இப்படி ஒரு விளம்பரமா என்று சந்தோஷப்படுவதற்கும் தமிழ்மண குழுவினரின் மொத்த பெயரும் வெளிவந்துவிட்டது. எனக்கு வருத்தம்தான்.


ஓன்றிரண்டு பூங்கா இதழ்களை படித்தேன். தமிழ்மண பூங்கா பல்வேறு தடைகளை தாண்டி தரமான முறையில் வளர்ந்து வருவது சந்தோஷமளிக்கிறது.



இதோ வண்ட்டண்ணா.....

15 comments:

Anonymous said...

//தமிழ்மண பூங்கா பல்வேறு தடைகளை தாண்டி தரமான முறையில் வளர்ந்து வருவது சந்தோஷமளிக்கிறது//
அது சரி.. உங்க பயர்வால் தடைகளையே தாண்டி வந்திருக்கே!!

Anonymous said...

Welcome Back muthu !

valayulaga arasiyalil ungaL itam innum kaaliyaaka vee irukiRathu athai nirapum aatral ungaluku mattumee undu varuga varuga

:)

மனதின் ஓசை said...

:-)சீக்கிரம் ஆரம்பிங்க..

இந்தா வாரம் ஒரு பதிவு ருல்ஸ் எல்லாம் ஒத்து வராது முத்து.. ஆரம்பிங்க.. பாக்கலாம்.

Anonymous said...

ஹோய்...
வருது.. வருது...
விலகு.. விலகு...
வேங்கை
வெளியே
வருது....

ஹோய்...
வருது.. வருது...
விலகு.. விலகு...
வேங்கை
வெளியே
வருது....

ரவி said...

அய்யா,

நடேசன் பூங்காவில் தான் ( பனகல் பார்க் அல்ல), மாலை ஐந்து மணிக்கு சந்திப்பு...

கும்மியடிக்கும் கொலசாமிகளுக்கு வரவேற்பு...

அதை எழுதும்....:)))))))

குழலி / Kuzhali said...

//ஒரு நண்பர் நான் தமிழ்மண ஆலோசனை குழுவில் இருப்பதாக ஒரு போடு போட்டாராம். அடடே நமக்கு இப்படி ஒரு விளம்பரமா என்று சந்தோஷப்படுவதற்கும் தமிழ்மண குழுவினரின் மொத்த பெயரும் வெளிவந்துவிட்டது. எனக்கு வருத்தம்தான்.
//
எனக்கும்

செயல் தலை முத்தே
செயல் சிங்கம் எங்கள் சொத்தே
நீ இல்லாத நேரத்தில்
மாயைகளை விரட்ட
அன்பு தம்பி(?) வரவனையும்
கலைஞரின் தம்பி லக்கிலுக்கும்
வசந்தசேனைகளை வகுந்தெடுக்க
வாயு போல வா!
வந்து சதிராடு
பந்தாடு
வந்தாடு
ஒரு குத்தாட்டம் போடு

Pot"tea" kadai said...

:-))

வருக வருக்க வறுக்க...

சீக்கிரமாக கொல சாமிகளுக்கு படையல் போடவும்!

வலையுலக அரசியலா?

அப்டின்னா என்னா?

அப்பப்போ நம்மோ பரட்டையன் மேட்டரையும் எழுதுங்கோ...கை நன்னா அரிக்கறது

Anonymous said...

//நடேசன் பூங்காவில் தான்//

அட! அங்க தானா... நான் ஆஜர்!! சரியா 4.45க்கு வாசலில் இருப்பேன்.

வினையூக்கி said...

vaanga vaanga

அருண்மொழி said...

வாங்கோண்ணா அட வாங்கோண்ணா

அருண்மொழி said...

//மாட்டு லோன் தரும் தொழிலை விட்டுவிட்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்து இத்தனை நாட்கள் //

அய்யய்யோ அப்ப இனிமேல் மாட்டுலோன் குடிதாங்கி என்று அழைக்க முடியாதா :-(.
அவார்களே ஒரு ஸ்பெஷல் பட்டம் ரெடி பண்ணுங்கோ.

Anonymous said...

வந்திட்டிங்களா? நான் எழுத ஆரம்பித்த நேரம், நீங்க காணம போய்ட்டிங்க..உங்க புகைப்படம் பார்த்திருக்கிறேன் :) (கடந்த கூட்டத்தில்)

Anonymous said...

முத்து,

வாங்க வாங்க... வரவு நல்வரவாகட்டும்...

Anonymous said...

இணையத்தின் திருவிளக்கே

இனமானப் போர்வாளே

முத்தே

எங்கள் சொத்தே

வருக!வருக!

நியோ / neo said...

varuka varuka thalaivar muthu avarkaLE!

ungalin ithap pathivai naan kaanavillai ithuvarai!

thodarnthu ezuthungal! :)