Saturday, February 10, 2007

டோண்டு சமாச்சார்

மூத்த பதிவர் டோண்டுவை நேற்று வந்து சோட்டா பதிவர்கள்வரை அனைவரும் போட்டு பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்
ரொம்ப நல்லவர்தான்.எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்தான்.அதற்காக அடிப்பதற்கு ஒரு அளவில்லையா? எவ்வளவு நேரம் அவர் வலிக்காத
மாதிரியே நடிக்க முடியும்? விட்டுடுங்க போதும்......

என்றெல்லாம் நாம் சொல்ல நினைத்தாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை.யுத்த தந்திரம், யுக்தி என்று பலவாறாக பேட்டி
தருகிறார். அவரை தூண்டி விடும் நண்பர்களும் ( அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.அப்படி நாம் நினைத்து கொண்டு இருக்கும் பல பதிவர்கள் அவரே தான் என்று இப்போதுதான் தெரிகிறது:))இப்போது அவரை கைவிட்டு விட்டார்கள். அவரை மிகவும் நம்பியிருந்த ஜோசப் சாரும் டோண்டுவின் மேல் வருத்தப்பட்டதை படிக்க நேர்ந்தது.


ஒன்றை அவர் புரிந்துக்கொள்ளவேண்டும். அனானி ஆப்சன்,எலிக்குட்டி சோதனை போன்ற சமாச்சாரங்களை பேசிய அவரே பல போலி
ஐ.டிக்களை வைத்து பின்னூட்டலாமா? பதிவிடலாமா? என்பது தான் அடிப்படை கேள்வி. அதர் ஆப்சன்,அனானி ஆப்சன் பதிவில் இருப்பதே குற்றம் என்று கூறிவிட்டு அவரே இப்படி செய்யலாமா?அவர் இணையத்தில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால் பல பதிவுகளும் அவர் வைத்திருக்கக் கூடும்.


அடுத்த அதிர்ச்சியாக சாமியை கும்பிட்டு நரபலி கொடுப்பது போல் டோண்டுவிற்கு அவர் நண்பர்களே அவருக்கு ஆப்பு வைத்தார்கள் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. அவருக்கு இப்போது ஆதரவு தெரிவிப்பவர்களும் முகத்தை காட்டி ஆதரவு தெரிவிப்பதில்லை.

அதற்கு மேலும் உட்லண்ட்ஸ் மீட்டிங்கிக்கு வருகிறேன் என்று சொல்லும் நண்பர் ஒருவரின் ஆண்மை(!)க்கு தலைவணங்குகிறார். இது போன்று புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்று அவர் நினைத்து எழுதும் வாக்கியங்கள் தான் அவரை ஒழிக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது. இந்த ஆண்மை என்ற வார்த்தையும் அதற்கீடான பெண்மை என்ற வார்த்தையும் அவர் நினைத்த பதத்தில் உபயோகித்துள்ளேன். ஆன்மீக அன்பர்கள் முதற்கொண்ட பெண்ணியவாதிகள் அறசீற்றம் கொள்ள வேண்டாம்.:).

இணையத்தில் எழுதும் அனைவருக்கும் ஒரு எல்லை உண்டு. எதிரி அந்த எல்லையை மீறி செல்ல தயார் என்று அறைகூவும் போது நாம் ஆட்டத்தில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது என்பது பெரும்பாலோனோரின் நிலைப்பாடு. டோண்டு அந்த நிலையை எடுக்கவில்லை. அது அவர் உரிமை. ஆனால் அவர் மற்றவர்களையும் அவர் எடுக்கும் நிலையை எடுக்க தூண்டுகிறார். மேற்கண்ட ஆண்மை போன்ற வார்த்தைகளை அவர் உபயோகிப்பது அதற்குத்தான்.தைரியம் என்று எதை அவர் நினைக்கிறார் என்றே நமக்கு புரியவில்லை.


பெயர்களில் உள்ள சாதியை எடுப்பது சம்பந்தமாக அவர் வைக்கும் வாதங்களும் கோக்கு மாக்காக உள்ளன. வலைப்பதிவு சந்திப்பின்போது
பூபாலன் ஐய்யங்கார் என்று தன்னை அழைத்துக்கொள்ளலாமா என்று கேட்டாராம்.இவரும் சரி என்றாராம். இது கொஞ்சம் ஓவராக
இல்லையா டோண்டு சார்? சமுதாயத்தில் உள்ள எல்லாரையும் ஐயராகவோ ஐய்யங்காராகவோ ஆக்குவதா நமது வேலை?


என்னவோ போங்க....

13 comments:

கண்மணி/kanmani said...

தமிழினி அவர்களுக்கு 'சமீபத்தில்' டோண்டு பற்றிப் பதிவெழுதி குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கூம் 'சோட்டா' பதிவர்களில் நானும் ஒருத்தி.உங்க பதிவின் ஆரம்பத்தைப் பார்த்து கோபமாக சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்.நீங்களும்ம் அவர வச்சி காமெடி பண்ண கெளம்பிட்டீங்க.
வலைக்கு புதியவளாக இருந்தாலும்,வந்த நாள் முதல் எங்கும் டோண்டு எதிலும் டோண்டு என்று இருப்பதால்,ஆர்வமாகி நான் அறிந்த விஷயங்களை என் பாணியில் நகைசுவையாக பதிவிட்டிருக்கிறேன்.
அவரும் அதை இரசித்து,பின்னூட்டம் இடுகிறார் என்பதுதான் ஹை லைட்.
இது குழந்தத்தனமா.டி.ஆர்.பி டகால்டியா தெரியவில்லை.ஒருவரே பல வலைப் பக்கம் வைத்திருப்பதில் தவறில்லை.வெவேறு பெயரிலும் வைத்திருக்கலாம்.ஆனால் பிரச்சினை உண்டாக்கும் பதிவோ பின்னூட்டமோதான் இப்படிப்பட்ட சூழலுக்கு வழி வகுக்கிறது.
'சோட்டா' பதிவர் என்றால் இளப்பமா?பதிவுக்கு என்ன சோட்டா,மோட்டா வேண்டியிருக்கு.எழுதும் பொருள் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் போதும்.யார் யார் எதை எதை எழுத வேண்டும் விதிமுறை ஏதெனும் உள்ளதா என்ன?

dondu(#11168674346665545885) said...

//டோண்டு அந்த நிலையை எடுக்கவில்லை. அது அவர் உரிமை. ஆனால் அவர் மற்றவர்களையும் அவர் எடுக்கும் நிலையை எடுக்க தூண்டுகிறார்.//

இப்போது அப்படி இல்லை. நண்பர் மதுசூதனன் அவர்கள் பதிவில் எனது பின்னூட்டங்களை பாருங்கள்.

http://puthuyugam.blogspot.com/2007/02/blog-post_09.html

//அதற்கு மேலும் உட்லண்ட்ஸ் மீட்டிங்கிற்கு வருகிறேன்...//

இப்போது அது நடேச முதலியார் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனது அதற்கான பதிவில் லேட்டஸ்ட் விவரங்கள் உண்டு. உங்களுக்கும் அழைப்பு உண்டு.

//அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.அப்படி நாம் நினைத்து கொண்டு இருக்கும் பல பதிவர்கள் அவரே தான் என்று இப்போதுதான் தெரிகிறது.//
இல்லை.

//இப்போது அவரை கைவிட்டு விட்டார்கள். அவரை மிகவும் நம்பியிருந்த ஜோசப் சாரும் டோண்டுவின் மேல் வருத்தப்பட்டதை படிக்க நேர்ந்தது.
யாரும் யாரையும் நம்பி இல்லை. நிச்சயமாக எனது யுத்தத்தை நானே நடத்திக் கொள்வேன். அதன் விளைவுகளையும் எதிர்க் கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நீங்கள் நினைப்பது போல இல்லை. பல நண்பர்கள் உண்டு. மற்றப்படி எல்லோரும் நானே என்று நீங்கள் நினைப்பது உங்கள் உரிமை.

//அதர் ஆப்சன்,அனானி ஆப்சன் பதிவில் இருப்பதே குற்றம் என்று கூறிவிட்டு அவரே இப்படி செய்யலாமா?அவர் இணையத்தில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால் பல பதிவுகளும் அவர் வைத்திருக்கக் கூடும்.//
தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அனானியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் அதர் ஆப்ஷந்தான் ஆபத்தானது என்பதில் எந்த மாற்றமுமில்லை. அதரும் அனானியும் சேர்ந்து வருவதால் நான் கூறிய பரிந்துரை அவ்வாறு அமைந்தது. அப்படியே அதர் ஆப்ஷன் இருந்தாலும் அதை சரியாக எதிர்க்கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினேனே. இப்போது எனக்கு அந்த தன்னம்பிக்கை வந்துள்ளதால் நான் இவ்வாறு முடிவெடுத்தேன்.

கெட்டதிலும் நல்லது என்பது போல இந்த முரளி மனோஹர் விஷயம் வருவதற்கு முந்தைய நாளே நான் அந்த முடிவை செயல்படுத்தி விட்டதால் அடித்திருக்கப்பட வேண்டிய பல ஜல்லிகள் செயலற்று போயின.

மாறுதல்களுக்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்வதுதான் நலம். அப்போது அப்படி செய்தாயே இப்போது இப்படி ஏன் என்றெல்லாம் கேட்டால் யுத்த யுக்திகள் மாறுவது போல என்று கூறுவேன்.

நண்பரே, என் மேல் உள்ள அக்கறையினால் கூறப்பட்ட உங்கள் யோசனைகளுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

TBR. JOSPEH said...

வாங்க முத்து,

ரொம்ப நாள் கழிச்சி வந்துருக்கீங்க. சந்தோஷம்.

நான் ராகவன் சார் மீது கோபப்பட்டு அவர் கூட்டும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள மறுக்கவில்லை..

நான் அவரை தொடக்கத்திலிருந்தே என்னுடைய நண்பர்களுள் ஒருவராக கருதியிருந்தேன். அவர் இத்தகைய செயல்களை சாடி வந்தவர் என்பதும் ஒரு காரண்ம்.

துவக்க முதலே வரும் பின்னூட்டங்களுக்காக மட்டுமே பதிவுகளை இடுவதில் உடன்பாடில்லாதவன் நான். என்னுடைய கருத்துக்கு ஒத்த பதிவாளர்கள் அனைவரையும் என்னுடைய நண்பர்களாகவே கருதிவந்துள்ளேன். உங்களையும் ஜோவையும் சேர்த்து..

அதை ராகவன் சாரே மீறியதும் நான் உண்மையிலேயே வெறுப்படைந்துபோனேன். அதற்காக அவரை பலரும் பழித்துரைத்தது சற்று அதிகம்தான் என்றாலும் அதற்கு அவரும் ஒரு காரணிதானே என்றுதான் நினைக்கத் தோன்றியது.

மேலும் ஒரு பதிவாளாவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் இருந்தேன் என்பதைக் காரணம் காட்டி என்னை சிலர் பழித்துரைத்தபோது ராகவன் சார் எனக்காகப் பரிந்து பேசினார் என்பதை நான் கேள்விப்பட்டேன். அதை நான் அறிந்திருக்கவில்லை. என்னுடைய வேலைப்பளுவைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள். அலுவல்களுக்கு மத்தியில் நேரம் கிடைக்கும்போது உங்களைப் போன்றோர் பதிவுகளுடன் நான் நிறுத்திக்கொள்வது வழக்கம். ஆகவே என்னை பழித்துரைத்தைப் பற்றியோ அல்லது ராகவன் சார் எனக்காக பரிந்து பேசியதைப் பற்றியோ நான் அறிந்திருக்கவில்லை.

ஆனால் என் மகள் வயதொத்த ஒரு பெண் வலைப்பதிவாளர் என்னைப் பற்றி தேவையில்லாமல் தன்னுடைய பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் படித்தபோது இதற்கு ராகவன் சாரும் ஒரு காரணம் என்பதில்தான் எனக்கு அவர் மீது வருத்தம்.

அன்றே முடிவு செய்தேன் இதிலிருந்து சற்று விலகியிருப்பதென்று. அதனுடைய தொடர்ச்சிதான் அவர் கூட்டிய கூட்டத்திற்கு வர இயலவில்லை என்று நான் தெரிவித்தது..

அத்துடன் இன்றைய தமிழ்மண சூழலில் தொடர்ந்து எழுதுவது இதை விட்டுவிட்டு போக வேண்டாமே என்ற எண்ணத்தில்தான். முன்பிருந்த ஆத்மதிருப்தி இப்போதெல்லாம் கிடைப்பதில்லை..

Muthu said...

கண்மணி,

நீங்கள் சோட்டாவா அல்லது மோட்டாவா என்பதைப்பற்றி எனக்கு விவாதம் செய்யும் ஆர்வம் இப்போது இல்லை.அது பிரச்சினைகளை நன்றாக தெரிந்த என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டது. மேலும் இதில் காமெடி எதுவும் இல்லை. அது டோண்டுவிற்கு தெரியும்.

//டோண்டு அந்த நிலையை எடுக்கவில்லை. அது அவர் உரிமை. ஆனால் அவர் மற்றவர்களையும் அவர் எடுக்கும் நிலையை எடுக்க தூண்டுகிறார்.//


இதுதான் விஷயம்.மேட்டர்.மெசேஜ். இது உங்களுக்கு தெரியாததில் எனக்கு ஆச்சரியம் இல்லை.ஏனென்றால் நீங்கள் புதுசு

Muthu said...

டோண்டு சார்,

நன்றி.விரிவாக பேசுவோம்.

ஜோசப் சார்,

நீங்கள் சொன்னதை த்தான் நானும் சொல்லலியிருக்கிறென். சுருக்கமாக.

thiru said...

//சமுதாயத்தில் உள்ள எல்லாரையும் ஐயராகவோ ஐய்யங்காராகவோ ஆக்குவதா நமது வேலை?//

மீண்டும் எழுத வாருங்கள் முத்து! நலமா?

நல்ல கேள்வியும், இந்த பிரச்சனை பற்றிய அலசலும். இந்த சண்டைகளுக்கிடையில் முக்கியமான பிரச்சனைகள் பற்றி தமிழ் பதிவுகள் வருவது குறைகிறது :((

Unknown said...

வாங்க பிரதர்.நீங்க மட்டும்தான் பாக்கி.
உங்க பங்குக்கு டோண்டுவ கும்முங்க.

Anonymous said...

வாங்க பிரதர்.நீங்க மட்டும்தான் பாக்கி.
உங்க பங்குக்கு டோண்டுவ கும்முங்க

வினையூக்கி said...

சார் வாங்க வாங்க, தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர் நோக்கும் "சீனீயர்" சோட்டா பதிவர்.

வினையூக்கி

பிரசாத் said...

hello friends,
உங்களுக்கெல்லாம் வேற வேலை ஏதும் இல்லயா? இப்படி ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறீங்களே. உருப்படியாக ஏதாவது பண்ணுங்கப்பா.

ஓகை said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள், முத்து.

பொன்ஸ்~~Poorna said...

//ஆனால் என் மகள் வயதொத்த ஒரு பெண் வலைப்பதிவாளர் என்னைப் பற்றி தேவையில்லாமல் தன்னுடைய பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் படித்தபோது //

ஜோசப் சார்,
இதை நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் சொல்லி இருப்பதால், இந்தப் பின்னூட்டம்:

உங்கள் பெயரை மரியாதையோடு குறிப்பிட்டதைத் தவிர்த்து வேறேதும் தவறாகவோ, பழியாகவோ ஏதும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. அவ்வாறு பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டவர்கள் வேறு சிலராக இருந்தாலும், நான் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு பதில் எழுதியதையும் வருத்தத்திற்குரிய தேவையில்லாத நிகழ்வாக நீங்கள் நினைப்பதால், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் :(. இனி எங்கும் உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் கவனமாக இருக்க முயல்வேன்.

மற்றபடி, மூன்றாம் யோம்கிப்பூரும் வந்துவிட்ட இன்றைய நேரத்தில், பதிவைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை :). நல்லது நடந்தா சரிதான்...

fhygfhghg said...

வருக வருக முத்து.

அப்படியே இதையும் செய்திடுங்க தல.