Thursday, September 14, 2006

சென்னை வலைப்பதிவாளர்களுக்கு ஜே

சென்னை வருகிறேன் என்றும் நண்பர்களை சந்திக்க ஆசை என்றும் ஒரு பதிவு போட்டிருந்தேன். என் வேண்டுகோளை ஏற்று நண்பர் பாலபாரதி ஒரு வலைப்பதிவாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். பாலபாரதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை மாதிரி தூர தேசத்தை சேர்ந்த வலைப்பதிவாளர்கள் சென்னையில் ஒவ்வொரு நண்பராக போய் சந்திப்பதைவிட இது போன்ற வலைப் பதிவாளர்கள் சந்திப்புகளின் மூலம் சென்னை நண்பர்களை சந்திப்பது நல்ல முறை. இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள தூத்துக்குடியில் இருந்து வருகை தந்த நண்பர் வரவணையான் தன் நண்பர் கவிஞர் சுகுணா திவாகரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஒரு இரவு பதினொரு மணிவரை எனக்கு பின்நவீனத்துவம், அமைப்பியல் ஆகியவற்றைப்பற்றி எளிமையாகவும் பொறுமையாகவும் விளக்கினார்.அதைப்பற்றி பிறகு பார்ப்போம். வெள்ளியன்று நானும் வரவணையானும் கிளம்பி சந்திப்புக்கு செல்வது என்று முடிவாகியது.

மாலை பூங்காவிற்கு சென்று இறங்கியவுடன் முன்வாசலிலே சில இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். "அனானி ஆப்சனை நீக்க வேண்டும்" என்ற கோர்ட்வேர்டை அவர்கள் சொல்லாததால் நாங்கள் அவர்களை கடந்து சென்றுவிட்டோம்.பின்னர் பூங்காவின் மையப்பகுதிக்கு சென்று கைத் தொலைபேசியில் பாலபாரதியைஅழைத்தேன். பிறகுதான் தெரிந்தது. பூங்காவின் வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்கள் நம் ஆட்கள் தான் என்று.

சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் வலைப்பதிவுகளை விட்டு விலகுவதாக அறிவித்த அணில்குட்டி புகழ் கவிதா வந்திருந்தது சர்ப்ரைஸ். குப்புசாமி செல்லமுத்து, முத்துக்குமரன் ப்ரியன்,பரஞ்சோதி ஆகியோர் அருகிலேயே நின்றிருந்தனர். இந்த குப்புசாமி செல்லமுத்துவை நான் அய்யா குப்புசாமிக்கு என்று விளித்து ஒரு பதிவே போட்டிருந்தேன்.ஆனால் மனுசன் இளவட்டம்.

பாலபாரதி பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். அமீர்கான், சாரூக்கான், சல்மான்கான் என்றெல்லாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம். நேரில் அன்றுதான் பார்த்தேன். முகம்மது பாலா உசேன் அவ்வளவு அழகாக இருந்தார். பரஞ்சோதி(குழந்தைகளுக்காக கதை புகழ்) முத்துகுமரனுடன் வந்திருந்தார்.

ஜெய்சங்கர் (We the People) வந்தார். எங்கங்க மத்த ஆளுங்கள்ளாம் என்றேன் நான். திரும்பி திரும்பி பார்த்தார்.We the people என்பது அவர் ஒருவர்தானாம். ஒரு கூட்டமே இருக்கும் என்று என்னை போல் பலரும் நம்பி ஏமாந்ததாக கூறியது என் மனதிற்கு ஆறுதலை தந்தது.பிறகு சிமுலேசன்,பொன்ஸ்,சந்திப்பு,அருள், சிவஞானம்ஜி, கெளதம், வினையூக்கி,சீனு, ரோசா என்று பலரும் கூட கூட்டம் இனிதே துவங்கியது.

சிவஞானம்ஜீக்கு சிறப்பு நன்றிகள்

அய்யா சிவஞானம் ஆர்வத்துடன் வந்து சந்திப்பில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. பின்னர் பேசிய சிவஞானம் அவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் சிலர் பொறுப்பில்லாமல் தவறான தகவல்கள் எழுதுவது மனநிம்மதியை குலைப்பதாக உள்ளது என்றும் அத்தகைய ஒரு பின்னூட்டத்தினால் ஒரு இரவு தூக்கமே போய்விட்டது என்று வருத்தத்துடன் பகிர்ந்துக்கொண்டார்.வருத்தமாக இருந்தது.

நண்பர் வினையூக்கி முதன்முதலாக வலைப்பதிவாளர் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அதிகம் பேசவில்லை அவர்.அவருடன் அதிகம் பேச முடியவில்லை என்பது எனக்கு குறைதான்.

பின்னர் அறிமுகம் நடைபெற்றது. பிறகு பேசிய நண்பர் சந்திப்பு திராவிட தமிழர் வலைத்தளம் துவக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்ற தன் கருத்தை விவாதத்திற்கு எடுத்து வைத்தார். பலமுறை அவரிடம் தளத்திலும் தனிப்பட்ட முறையிலும் விவாதித்த ஒரு விஷயம் தான் இது.

ஒரு பொதுஇடத்தில் திராவிடம்,தமிழுணர்வு,இடஒதுக்கீடு போன்ற கருத்தாக்கங்களை பேசுவதே கேவலம் என்று கட்டமைக்கப்படுவதை எதிர்க்க தன்னிச்சையாக உருவான அமைப்பே அது என்று ஆயிரத்து எண்ணூறாவது முறையாக எடுத்துக் கூறினேன் நான்.

சந்திப்பு அவர்களின் உள்ளங்கனிந்த சிந்தாந்தமான, பொது உடைமை, அதைப்பற்றி முழுதாக தெரியாதவர்களால் கடுமையாக தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு சில நாட்களில் கம்யூனிசத்தைப்பற்றி பேசுவதே ஆபாசம் என்று சிறிது சிறிதாக கட்டமைக்கப்படும்போது தான் இந்த உணர்வை அவர் புரிந்துக்கொள்வார் என்று நினைக்கிறேன். மேலும் தமிழகத்தில் கம்யூனிசம் வளராமல் போனதற்கு திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவரிடம் உள்ளது.அதனால் அவருக்கு திராவிட கருத்தாக்கத்தின் மீது உள்ள கடுமையான எதிர்ப்புணர்வினால்(முத்திரை) சில சமயம் இந்துத்வாவாதிகள் அளவிற்குக்கூட போய் எழுதிவிடுகிறார்:).இந்த விஷயத்தில் விவாதங்களை கடந்த நிலையில் அவர் உள்ளதாகவே நான் புரிந்து வைத்துள்ளேன்.காம்ரேடுகள் இந்திய சமுதாய முறையை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறு செய்வது இங்குதான் என்று தோன்றுகிறது.

கலவரம்,கொலைவெறி ஆகியவற்றை கிளப்பும் அனானிகளைப் பற்றி பேசும்போது பலரும் லக்கிலுக்கை திரும்பி பார்த்தனர். ஆயினும் மனுசன் நிதானமாகவே இருந்தார். தனிப்பேச்சின் போது தெளிவாக ஒரிஜினாலிட்டி என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும் என்பதை நாசுக்காக எடுத்துக்கூறினார்.

ஆயினும் தனிமனித தாக்குதல் போல் வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது நல்லது என்று பலரும் கூறினார்கள். தனிமனித தாக்குதல் என்பதை எப்படி நிர்ணயிப்பது என்ற அடுத்த கேள்வி வந்தது. இது ஒரு மாயச்சூழல் என்று சிலர் கூறினார்கள். தனிமனித தாக்குதல் இருக்கும் பதிவுகளை இக்னோர் செய்வதுதான் சரியான முறை என்பது பலரின் கருத்து.
வலைப்பதிவர்கள் என்ற அடிப்படையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியுமா என்று நான் ஒரு கேள்வியை கேட்டேன். அது சாத்தியமில்லாதது என்று சில நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் எனக்கு இன்னமும் அதன் சாத்தியகூறுகளைப்பற்றி நம்பிக்கை உள்ளது.

எட்டு மணிக்கு பூங்கா மூடப்படும் என்பதால் 7.45 மணிக்கே மசால்வடை வினியோகம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நடக்க இருந்த தி.த. கூட்டத்தை கவர் செய்ய வந்த உண்மை நிருபர்களுடன் வந்த கவிஞர் வளர்மதி வலைப்பதிவாளர்கள் கூட்டத்தை தி.த கூட்டம் என்று கருதி பேச ஆரம்பித்த போது துள்ளி எழுந்த சிமுலேசன் நிலைமையை விளக்கினார்.

சிமுலேசன் அவருடைய வலைப்பதிவில் உள்ள புகைப்படத்தை விட இளமையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்.அவரிடம் அதிகம் பேசமுடியாமல் போய்விட்டது. இதே போன்று பல நண்பர்களுடன் அதிகம் பேசமுடியாமல் போய்விட்டது.இனி அடிக்கடி சென்னையில் மீட்டிங்கில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நண்பர் பாலா கூறியது போல் குறைந்த கால அவகாசத்தில் கூட்டப்பட்டது என்றாலும் நிறைய நண்பர்கள் வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.இது போன்ற கூட்டங்களை மாதம் ஒரு முறையாவது நடத்தலாம்
வலைப்பதிவர் என்ற ஒற்றுமையை தாண்டி அவரவர்களுக்கு தனித்தனி கருத்துக்கள், அரசியல் ஆர்வங்கள் இருக்கிறது என்பதையும் அது இயற்கையானதுதான் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வலைப்பதிவர் கூடிப்பேச குழுமத்தில் இயங்குவது முட்டுக் கட்டையாகிவிடக்கூடாது.கவிதை பிடித்தவர்கள் சேர்ந்து கவிதைக்கு குழுமம் அமைப்பது போல் ஒரு அரசியல் கருத்தை பிடித்திருப்பவர்கள் அதை சார்ந்து குழுமம் அமைக்கலாம்.இத்தனையையும் மீறி மாற்று கருத்து இருப்பவர்களுடன் நண்பராக பழகலாம்.அது தான் வளர்ச்சி.முதிர்ச்சி இந்த தெளிவு சென்னை வலைப்பதிவாளர்கள் பலருக்கும் இருப்பது ஒரு ஆரோக்கியமான கூறு.எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது.இதற்காக சென்னை வலைப்பதிவாள நண்பர்களுக்கு ஒரு ஜெ போட்டுக்கொள்கிறேன்.

இந்த பக்குவம் இல்லாத ஒரு ஆத்மா கூட்டுவலைத்தளத்தில் கடந்த வாரம் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்து குழுமம் கலைக்கப்படுமா என்று அனானியாக கேட்டது ஞாபகம் வருகிறது.

அடுத்த வலைப்பதிவாளர் கூட்டத்தில் இருந்து கூட்டத்தில் என்ன பேசுவது என்பதை முதலிலேயே முடிவு செய்துவிட வேண்டுமாய் சந்திப்பை ஒருங்கிணைக்கும் சென்னை நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். அறிமுகத்திற்கு பிறகு,கவிதை படிப்பது, கட்டுரை படிப்பது அல்லது ஏதாவது தலைப்பில் விவாதம்(கலந்துரையாடல் செய்வது) என்று வைத்துக் கொள்ளலாம்.

நாகேஸ்வரா பார்க் என்பது எழு மணிக்கு மேல் இருட்டி விடுகிறது. யார் வருகிறார்? யார் போகிறார் என்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. சென்னையில் இருப்பதாக கூறப்பட்ட அந்த மனிதரையும் டோண்டுவையும் சந்திக்க வைத்து சூழலை சரியாக்கலாம் என்று நினைத்து இருந்தேன். அது சரியாக அமையவில்லை. என் பெருந்தலைவர் ஜோசப் வராதது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அடுத்த முறை சந்திப்பை வெளிச்சம் இருக்கும் இடத்தில் நடத்தலாம். மெரினாவில் கூட முயற்சி செய்யலாம்.

மதுரையில் தீபாவளி சமயத்தில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்பது என் ஆசை. மதுரையை சேர்ந்த நண்பர்கள்( லிவிங் ஸ்மைல், தருமி, ராம்,பிரபு ராஜதுரை உள்ளிட்டோர்) தொடர்பு கொண்டால் இதைப்பற்றி மேலும் விவாதிக்கலாம்.

(திராவிட ஃபிகர் மேட்டரை பற்றியும் வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மப்பாகி மயக்கம் அடைந்தவரைப்பற்றியும் வரும் பாகங்களில் )

31 comments:

லக்கிலுக் said...

//வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மப்பாகி மயக்கம் அடைந்தவரைப்பற்றியும் வரும் பாகங்களில்//

இது நானில்லையே? :-)

யாத்ரீகன் said...

அடுத்தமுறை தவறாமல் தகவல் தருவேண்டும் என ப்ரியனை கட்டாயப்படுத்தியிருகிறேன்..

தீபாவளியின்போது மதுரையில் சந்திப்பு நடந்தால் கட்டாயம் என்னால் வர முடியும்.. கொஞ்சம் முன்கூட்டியே பலரும் அவரவர் தளத்தில் தகவலை பதித்தால் நன்றாய் இருக்கும்..

- யெஸ்.பாலபாரதி said...

//முகம்மது பாலா உசேன் //

தல இது எந்த குத்து. எங்க அம்மணிகிட்ட சொல்லிடுவேன். நாங்களே இன்னும் பெயரை முடிவு செய்யாத போது உமக்கு என்னத்துக்கு இந்த வேலை.

இதுல அடுத்த பதிவு வேறயா?

ரவி said...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடத்தவும் திட்டம் போடுங்க..

பொன்ஸ்~~Poorna said...

//முகம்மது பாலா உசேன் //
பா.க.ச. உறுப்பினர் அட்டை வாங்கிப் போன தகவலே சொல்லலியே!!

//நாகேஸ்வரா பார்க் என்பது எழு மணிக்கு மேல் இருட்டி விடுகிறது. யார் வருகிறார்? யார் போகிறார் என்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை.//
உண்மைதான்.. அடுத்தமுறை மெரினாவில் வைத்துக் கொள்வது நல்ல யோசனை..

லக்கிலுக் said...

///நாகேஸ்வரா பார்க் என்பது எழு மணிக்கு மேல் இருட்டி விடுகிறது.///

அதனால் தான் சென்னையில் ரொம்ப பேருக்கு வசதியாக இருக்கிறது :-))))))))

Anonymous said...

"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."

அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.

அ மு க
செந்தழலார் பாசறை
அல்சுர், பெங்களூர்

லிவிங் ஸ்மைல் said...

// மதுரையில் தீபாவளி சமயத்தில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்பது என் ஆசை. மதுரையை சேர்ந்த நண்பர்கள்( லிவிங் ஸ்மைல், தருமி, ராம்,பிரபு ராஜதுரை உள்ளிட்டோர்) தொடர்பு கொண்டால் இதைப்பற்றி மேலும் விவாதிக்கலாம்.//

I'm expecting and no doubt, defenately smile will be there if any so,


//(திராவிட ஃபிகர் மேட்டரை பற்றியும் வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மப்பாகி மயக்கம் அடைந்தவரைப்பற்றியும் வரும் பாகங்களில்)//

இதப் பத்தி ஏற்கனவே ஒருத்தர் சொன்னார் but, எனக்கு சரியா புரியல... மத்தபடி வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மயக்கமானவர பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப்பப ஆர்வமா இருக்கேன்...

மணியன் said...

//நாகேஸ்வரா பார்க் என்பது எழு மணிக்கு மேல் இருட்டி விடுகிறது.//
நாகேஸ்வரா பார்க் மட்டும் தானா :))
சென்னை வலைப்பதிவர்களில் அண்ணா பல்கலைக்கழக (கிண்டி பொறியியல்) முன்னாள் மாணவர்கள் இல்லையா ? அவர்களின் அலம்னி கிளப் நல்ல சந்திப்பு இடம்.

லக்கிலுக் said...

//மத்தபடி வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மயக்கமானவர பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப்பப ஆர்வமா இருக்கேன்...//

அவர் யாராக இருந்தாலும் சூசமாக குறிப்பிடவும் :-)

வெளியே தலை காட்ட முடியலை :-(

Muthu said...

லக்கி,

இப்படி எல்லாம் கேட்டா அது நீங்க இல்லைன்னு ஆயிடுமா?:))

(ச்சும்மா ஒரு பரபரப்புக்கு சொன்னேன்யா)

PRABHU RAJADURAI said...

madurai welcomes you

தருமி said...

MEET in madurai during deepavali - great idea.

Pot"tea" kadai said...

goodonya

அருள் குமார் said...

இந்த சந்திப்பையும் அதில் நடந்த விவாதங்களையும் மிகத் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் முத்து. அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :)

Anonymous said...

உள்ளதைச் சொன்னேன்-நமக்கு நல்லதைச் சொன்னேன்;
இதற்கு நன்றியா..!
அதுவும் சிறப்பு நன்றியா...!
உண்மையில்
'பாலபாரதி வட்ட'த்திற்குத்தான்
நன்றி power நன்றி
சொல்லனும்!

ஜோ/Joe said...

////மத்தபடி வாட்டர் பாக்கெட்டை முகர்ந்து மயக்கமானவர பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப்பப ஆர்வமா இருக்கேன்...//

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்

(இந்த பாட்டுக்கும் லக்கிலுக் MGR ரசிகராயிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை)

Simulation said...

"இந்த கூட்டத்திற்கு பிறகு நடக்க இருந்த தி.த. கூட்டத்தை கவர் செய்ய வந்த உண்மை நிருபர்களுடன் வந்த கவிஞர் வளர்மதி வலைப்பதிவாளர்கள் கூட்டத்தை தி.த கூட்டம் என்று கருதி பேச ஆரம்பித்த போது துள்ளி எழுந்த சிமுலேசன் நிலைமையை விளக்கினார்."

நிலைமையை விளக்கியது நானல்ல. ஜி.கௌதம் என்று நினைக்கிறேன். லக்கியும் அவ்வாறே எழுதியிருந்தார்.

இனிமேலானும் அ.கொ.தீ* கழகக் கூட்டம் போலல்லாமல், வெளிச்சத்தில் கூட்டம் நடத்த வேண்டுகிறேன்.

*முத்து காமிக்ஸ்

- சிமுலேஷன்

siva gnanamji(#18100882083107547329) said...

//உள்ளதைச் சொன்னேன்-நமக்கு
நல்லதைச் சொன்னேன்...//

என் பின்னூட்டம் anonymous பெயரில் வந்துள்ளதே!

அனானி பின்னூட்டங்களைக் கட்டுப்படுத்தனும்னு நான் பேசியதற்குத்
தண்டனையா?

அனானி பெயரில் என் பின்னூட்டம் வருவது இதுவே முதல் முறை.

ஒருவேளை water pocket மயக்கம் இன்னும் தீரவில்லையோ?

Muthu said...

simulation,

//நிலைமையை விளக்கியது நானல்ல. ஜி.கௌதம் என்று நினைக்கிறேன். லக்கியும் அவ்வாறே எழுதியிருந்தார்//

ஹிஹி இருட்டுல யார்னு தெரியலை..ஒரு அளவிற்கு மேல குத்துமதிப்பா தான பார்த்து பேசிகிட்டு இருந்தோம்:))

அ.கொ.தீ கழகம் அந்த லாரன்ஸ், டேவிட் கதைங்களை சொல்றீங்களா? அடுத்த முறை மெரினா என்று சஜஸ்ட் பண்ணியிருக்கேன்...


சிவஞானம் ஐயா,

அனானியா வந்ததை அனானியா போட்டாச்சு...நீங்களாத்தான் இருக்கும்னு தெரியும்..ஆனா நானே அதர் ஆப்சனை உபயோகப்படுத்த முடியாதே :))

வாட்டர் பாக்கெட் மயக்கமா...:))என்னத்த சொல்ல..ஒரு பார்வைக்கே சுர்ருன்னு இறங்கிருச்சு அய்யா...

வினையூக்கி said...

that was a nice meeting

கவிதா | Kavitha said...

//சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் வலைப்பதிவுகளை விட்டு விலகுவதாக அறிவித்த அணில்குட்டி புகழ் கவிதா வந்திருந்தது சர்ப்ரைஸ்.//

என்னங்க இது, வந்து பார்க்ககூட கூடாதா?.. ம்ம்.. எழதுவதை விட்டுதானே விலகி இருக்கிறேன்..
என்னவோ.. உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுல எனக்கு சந்தோஷமே.. ! :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட போன வாரம் நான் சென்னையிலதானப்பா இருந்தேன்..யாரும் சொல்லவே இல்லையே..பாவிகளா?

லக்கிலுக் said...

//அ.கொ.தீ கழகம் அந்த லாரன்ஸ், டேவிட் கதைங்களை சொல்றீங்களா? //

முத்து நீங்களும் முத்து காமிக்ஸ் ரசிகரா? நேற்று தான் பார்முலா திருடர்களை மீண்டும் படித்தேன் :-)

வரவனையான் said...

நல்ல பதிவு முத்து(தமிழினி)

வாழ்த்துக்கள்.



தலை, மதுரை மாநாட்டு தேதியை விரைவில் அறிவிக்கவும், சுவர் பிடித்து விளம்பரம் எழுத வசதியாய் இருக்கும். ;)

அருண்மொழி said...

தி.த கூட்டத்தினை பற்றி பதிவு வருமா?

siva gnanamji(#18100882083107547329) said...

அட! நான்தான் அவ்சரத்தில் அனானி பட்டனை அழுத்திட்டேனோ?
இருக்கலாம்

Anonymous said...

அடுத்த சந்திப்பு எப்போதாம்?

Anonymous said...

செகண்ட் பார்ட் எப்போ தலைவரே!

Muthu said...

ஹிஹி வந்துட்டு இருக்கு

MSV Muthu said...

மதுரையில் வலைப்பதிவாளர் சந்திப்பு தீபாவளியையொட்டி நடத்தினால் கண்டிப்பாக சொல்லவும். கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.