Friday, August 11, 2006

சிங்கார சென்னைக்கு வருகிறேன்

இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் புத்தக கண்காட்சி மற்றும் ஏ.டி.பி டென்னிசுக்கு வந்தப்பிறகு இப்போது மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி சென்னை வருகிறேன்.ஒரு மூன்று,நான்கு நாள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.இந்த முறை சென்னை விஜயத்தின் போது நான் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. கீழ்க்கண்ட அனைவரையும் சந்திக்க ஆசை.

ரஜினிராம்கி, டோண்டு,ஜோசப், ரோசாவசந்த், குப்புசாமி, பினாத்தல், சந்திப்பு, பாலபாரதி, முத்துகுமரன், ராகவன், தங்கவேல், செல்வகுமார், பொன்ஸ், பூபாலன், லக்கிலுக், இட்லிவடை மற்றும் இதில் கூற மறந்த மற்ற நண்பர்களையும் சந்திக்க ஆசை.ஆர்வம் உள்ள சென்னை நண்பர்கள் எனக்கு ஒரு மெயில் தட்டி விடலாம். முடிந்தால் ஒரு பிளாக்கர் மீட்டிங்கும் நடத்த உத்தேசம்.

************************

முதுகலை படிக்க சென்னையின் மூன்று புகழ்பெற்ற கல்லூரிகளில் முட்டி மோதினேன் என்று கூறியிருந்தேன். எல்லா கல்லூரிகளில் என் மதிப்பெண்களுக்கு சுலபமாக சீட் கிடைக்கும் என்றார்கள்.எனக்கென்னவோ அந்த வயதில் லயோலா,கிறிஸ்டியன் காலேஜ் மேல் அப்படி ஒரு கிரேஸ். அந்த நம்பிக்கையில் தைரியமாக முயற்சி செய்தேன்.

இந்த மூன்று கல்லூரிகளிலும் அவர்கள் வைத்த நுழைவு தேர்வினில் தேறி விட்டேன். உடனே எனக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.பிரசிடென்சியில் நேர்முகத்தேர்வு இல்லை. ஆனால் லயோலாவிலும்,கிறிஸ்டியன் கல்லூரியிலும் நேர்முகத்தேர்வு இருந்தது. நன்றாகவே செய்திருந்தேன்.

குறிப்பாக கிறிஸ்டியன் காலேஜ் நேர்முகத்தில் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொன்னதால் மிகவும நம்பிக்கையுடன் இருந்தேன். அங்கிருக்கும் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடுவது போலவும், அங்கு மேய்ந்து திரியும் மான்குட்டிகள்(நிஜ மான்குட்டிகள் தாங்க)உடன் விளையாடுவது போலவும் கனவுகள் காண ஆரம்பித்தேன்.

ஆனால் விதி சதி செய்தது.தேர்வு பட்டியலில் என் பெயர் இல்லை.ஓபன் மற்றும் பி.சி என்று அனைத்து சீட்டுக்களையும் பெண்களே கைப்பற்றினர். போனால் போகிறதென்று எஸ.சி கோட்டாவில் ஆண்குலம் சிலரின் பெயர் இருந்தது.பட்டியலை பார்த்து துள்ளி குதித்த ஒரு ஜீன்ஸ் போட்ட ஒரு இளங்கன்னியை கேட்டே விட்டேன்.

எச்சூஸ் மீ, உங்க பர்சன்டேஜ் என்ன?

புழுவை போல் என்னை பார்த்த அந்த அழகிய இளம்பெண் சொன்னாள்.

"நைன்ட்டி ஓன்"

அதற்குப்பிறகு அங்கு எனக்கு என்ன வேலை? திரும்பி வரும்போது என் மாமன் சொன்னான்.

"டேய், இப்படி ஒரு ஃபிகர் கூட நீ படிக்கிறது ஆண்டவனுக்கே பொறுக்கலைடா"

சில நாட்கள் கழித்துத்தான் சென்னையில் உள்ள சில பெண்கள் கல்லூரிகளில் இன்டர்னல் மார்க் என்பது ஐம்பது சதவீதம் என்பதால் தொண்ணூறு சதவீதம் என்பது சாதாரணம் என்று தெரியவந்தது.

ஆனால் என் நண்பன் ஒருவன் எம்.பி.சி கோட்டாவில் கெமிஸ்ட்ரியில் நுழைந்து விட்டான்.நானும் அப்போதெல்லாம்(ஹிஹி..இப்போதும்தான்) பட்லர் ஆங்கிலம்தான் என்றாலும் ஒரு டவுனில்தான் வளர்ந்தேன்.அவனோ பிராப்பர் கிராமத்தான். அவனால் ஆறு மாதத்திற்கு மேல் அங்கு படிக்க முடியவில்லை. இடையில் படிப்பை விட்டுவிட்டான்.காரணம் அதேதான். அந்த மெட்ரோபாலிடன் சூழ்நிலையில் அவனால் சர்வைவ் செய்யமுடியவில்லை.

26 comments:

ஜோ/Joe said...

கலக்குங்க!
நான் சென்னை வந்து 7 வருடங்கள் ஆச்சு ! சென்னை இப்போ ரொம்ப மாரியிருக்காமே!

Chellamuthu Kuppusamy said...

You are welcome Muthu. Would be glad to see you.

- யெஸ்.பாலபாரதி said...

வாங்க...
ஆட்டோ ரெடி பண்ணி வைக்கிறேன்..
:)

G.Ragavan said...

வாங்க வாங்க கண்டிப்பாச் சந்திச்சிருவோம்.

நான் இன்னும் எத்தனை நாள் சென்னையில் இருப்பேன்னு தெரியலை. அநேகமா மாசக் கடைசி வரைக்கும்னு நெனைக்கிறேன். தள்ளிப் போனாலும் போகலாம்னு தோணுது. கண்டிப்பா ஒங்களுக்குத் தெரியப் படுத்துறேன். உறுதியாச் சந்திப்போம்.

G.Ragavan said...

// ஜோ / Joe said...
கலக்குங்க!
நான் சென்னை வந்து 7 வருடங்கள் ஆச்சு ! சென்னை இப்போ ரொம்ப மாரியிருக்காமே! //

இப்பல்லாம் சென்னையில யாருங்க மாரீன்னு பேரு வெக்கிறா? ஊர்ப்பக்கமே கொறஞ்சு போச்சே! :-)

Anonymous said...

http://sambu2.blogspot.com/2006/08/blog-post_11.html
>>>>
ப்ளாக்கர் தந்த இடத்தில் இலவசமாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குழுமத்தின் முதல் தமிழக மாநாடு சென்னையில் நடை பெறப் போவது எல்லாரும் அறிந்ததே. அந்த மாநாட்டில் தமிழ் வலைப் பதிவுகளின் முதல் 'தீவிர'வாத பதிவர் ஆப்பக் கடையில் வேறு ஆளை அமர்த்திவிட்டு வந்து கலந்து கொள்ளப் போகிறாராமே?
<<<<

யாருங்க அது ?

Muthu said...

அனானி,

:)))

எழுதுனவனை கேளப்பா.

ஜோ/Joe said...

//இப்பல்லாம் சென்னையில யாருங்க மாரீன்னு பேரு வெக்கிறா?//
ராகவன்,
ரசித்தேன் .என் எழுத்துப்பிழையை வைத்து கலைஞர் லெவலுக்கு சிலேடை பண்ணுறீங்களா?
சிங்கைக்கு முதலில் வந்த போது சென்னையிலிருந்து விமானம் ஏறினேன்.அதன் பின்னர் சென்னை வர வாய்ப்பு கிடைக்கவில்லை .ஊருக்கு போகும் போதெல்லாம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து 2 மணி நேரத்தில் வீட்டுக்கு செல்வது வழக்கமாகி விட்டது.

Anonymous said...

இது புதுசு.,

>>>>>>>>>>>>>>>>
தமிழ் சினிமாவுக்கு கவுண்டமணி செந்தில் மாதிரி தமிழ் வலையுலகத்துக்கு திராவிட தமிழர்கள்... கவுண்டமணி காமெடிய பாத்து சிரிச்சமா, ஜாலியா அடுத்த வேலய பாக்க போணமான்னு இருப்பீங்களா.. அத்த விட்டுட்டு ஆராய்ச்சி பண்ணிகிட்டு...

By முகமூடி, at 8/11/2006 09:15:28 AM

முகமூடி,

தமிழ் சினிமாவுல ரெண்டு பேர் தான் இருக்காங்க...இவனுங்க 40 பேராம்ல...!! தமிழ் வலையுலகு தாங்குமா?

By வஜ்ரா ஷங்கர், at 8/11/2006 09:31:13 AM
<<<<<<<<<<<<<

இது எப்பிடி இருக்கு !!!

Muthu said...

அனானி,

:))என்னன்னு சொல்வேனுங்கோ.
அதில் தகவல் பிழை உள்ளது.

வரவனையான் said...

//Anonymous said...
http://sambu2.blogspot.com/2006/08/blog-post_11.html
>>>>
ப்ளாக்கர் தந்த இடத்தில் இலவசமாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் இந்தக் குழுமத்தின் முதல் தமிழக மாநாடு சென்னையில் நடை பெறப் போவது எல்லாரும் அறிந்ததே. அந்த மாநாட்டில் தமிழ் வலைப் பதிவுகளின் முதல் 'தீவிர'வாத பதிவர் ஆப்பக் கடையில் வேறு ஆளை அமர்த்திவிட்டு வந்து கலந்து கொள்ளப் போகிறாராமே?
<<<<

யாருங்க அது //




உக்காந்து யோச்சிப்பாய்ங்க போல

Anonymous said...

>>>>>>
இப்போது மீண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி சென்னை வருகிறேன்.ஒரு மூன்று,நான்கு நாள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
<<<<<<

அப்போ நீங்க முதல் மாநாட்டுக்கு வர்லியா ? என்னமோ போங்க உங்க கிட்ட அல்வா கிண்டமுடியாது போலிருக்கே. ஸ்மைலியா போட்டு தாக்குறீங்க.

Muthu said...

அனானி,

//அப்போ நீங்க முதல் மாநாட்டுக்கு வர்லியா //

மாநாடாவது?சொந்த வேலையா வருகிறேன்.அப்படியே நண்பர்களை பார்ப்பதும் ஐடியா.

//அல்வா கிண்டமுடியாது போலிருக்கே. ஸ்மைலியா போட்டு தாக்குறீங்க//

ஹிஹி...இன்னைக்கு நல்ல மூட்

ப்ரியன் said...

வாங்க முத்து நானும் பாலா அண்ணன் கூட சேந்துக்குறேன் ஆட்டோ அனுப்புறதுலா... ஆட்டோ - சேர் ஆட்டோ ஆயிடுச்சு

ப்ரியன் said...

// ஜோ / Joe said...
கலக்குங்க!
நான் சென்னை வந்து 7 வருடங்கள் ஆச்சு ! சென்னை இப்போ ரொம்ப மாரியிருக்காமே! //

//இப்பல்லாம் சென்னையில யாருங்க மாரீன்னு பேரு வெக்கிறா? ஊர்ப்பக்கமே கொறஞ்சு போச்சே! :-)//

ராகவன் , இப்போ சென்னைல மழை 'ஜோ' ன்னு பெய்றதுனால நம்ம 'ஜோ', மாரி இருக்குன்னு சொல்லி இருக்கார்.

அப்படிதானே ஜோ?

நன்மனம் said...

ஆகா!!!

"மாரி" இங்க கை மாறி மாறி வருது. :-))

ஜோ/Joe said...

//ராகவன் , இப்போ சென்னைல மழை 'ஜோ' ன்னு பெய்றதுனால நம்ம 'ஜோ', மாரி இருக்குன்னு சொல்லி இருக்கார்.

அப்படிதானே ஜோ?//

அடேங்கப்பா! அப்படியும் வச்சுக்கலாம் ப்ரியன்

கருப்பு said...

அப்டியே சென்னைக்கு ரொம்ப பக்கத்தில் இருக்கும் சிங்கைக்கும் ஒரு விசிட் அடிக்கிறது?

என்னது ப்ளைட் டிக்கெட்டா? ஆள விடுங்க..

G.Ragavan said...

// ஜோ / Joe said...
//இப்பல்லாம் சென்னையில யாருங்க மாரீன்னு பேரு வெக்கிறா?//
ராகவன்,
ரசித்தேன் .என் எழுத்துப்பிழையை வைத்து கலைஞர் லெவலுக்கு சிலேடை பண்ணுறீங்களா? //

ம்ம்ம்...வேண்டாம் ஜோ. இன்னாரைப் போல ராகவன் இருந்தான் என்று இருக்க வேண்டாம். என்னைப் போல நாலு பேர் இருந்தார்கள் என்று பெருமை பேசுவதைத்தான் நான் விரும்புவேன். :-)

// ராகவன் , இப்போ சென்னைல மழை 'ஜோ' ன்னு பெய்றதுனால நம்ம 'ஜோ', மாரி இருக்குன்னு சொல்லி இருக்கார்.

அப்படிதானே ஜோ? //

அப்போ ஜோமாரீங்கறீங்களா முத்து :-))))))))))))))))

Anonymous said...

வரவேற்கிறோம்

காழியன் said...

//நான் சென்னை வந்து 7 வருடங்கள் ஆச்சு ! சென்னை இப்போ ரொம்ப மாரியிருக்காமே//

கிழிஞ்சது போங்க...அங்கங்கே IT பார்க்குகள் முளைத்துள்ளது மட்டுமே மாற்றம். மற்றபடி அதே:
சாலைகள், கட்சி தோரணங்கள், திரைப்பட சுவரொட்டிகள், புகைவிடும் ஆட்டோ, டப்பா MTC, தூசியான நெரிசல் நேர சாலை, தாறுமாறாக ஓடும் வண்டிகள், சாலையை ஆக்கரமிக்கும் கடைகள்......

Muthu said...

பாலபாரதி,

ஏன் ஆட்டோ? டாக்சி இருக்காதா?:))

gulf-tamilan said...

wel come to singara chennai!!

gulf-tamilan said...

//ஏன் ஆட்டோ? டாக்சி இருக்காதா?:))//
u mean call taxi!!!

ரவி said...

நானும் வருவேன், என்னையும் சந்திங்க....

:)))

லக்கிலுக் said...

சரி தலை வந்தது வந்தாச்சி. சந்திப்பும் முடிந்தாச்சி. அடுத்தப் பதிவு எப்போ? இன்னமும் தேனிலவு முடியலையா?