Tuesday, March 30, 2010

என்ன பண்ணி தொலைக்கறது?

இன்னுமொரு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து அந்த தொகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாப்பிட போகிறார்கள் என்று பார்ப்போம்.

திமுக ஆயிரம்,
அதிமுக ஐநூறு,
பா.ம.க முன்னூறு
ஆகமொத்தம் ஆயிரத்து எண்ணூறு.

பா.ம.க ஏதோ மூக்குத்தி, தோடு என்று திட்டம் போட்டதாகவும் அதில் யாரோ மடப்பயக மாம்பழம் சின்னத்தை பதித்துவிட்டதால் அது செயல்படுத்தப்படவில்லை என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது.அதை விட்டுவிடுவோம். விஜயகாந்த் கட்சிகாரர்களும் டெபாசிட் வாங்கும் நோக்கத்தோடு ஓரளவு பணத்தை செலவு செய்ததாகவும் அதனால்தான் கடந்த முறை வாங்கிய அளவு ஓட்டு மீண்டும் வாங்க முடிந்தது எனவும் தகவல்கள் வருகின்றன.

பிரியாணி(?) எல்லாம் எல்லா தொண்டர்களுக்கும் கிடைக்கறதுதான். அது வயித்தோட மறுநாள் காலைல வரைக்கும்தான்.மத்தபடி மேற்கண்ட கணக்குப்படி வரும் ஆயிரத்து எண்ணூறு (1800) எல்லாருக்கும் கிடைச்சிருக்காது. ஆக ஆவரேஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ரொம்ப கம்மி.அடுத்த தேர்தலில் தலைக்கு ஐயாயிரமாவது இல்லாமல் எவனும் ஓட்டு போடவே போகக்கூடாது என்று மக்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டும்.

வழக்கம் போல் அதிமுக ஆரம்பித்த ஒரு அரைகுறை வழக்கம் திமுகவினரால் முழுமை படுத்தப்பட்டு உள்ளது. விவரம் தெரியாதவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அதிமுக தான் ஆரம்பித்தது என்பதை நி்னைவு படுத்தி கொள்வது நலம். இல்லாவிடில் சில லூசு பசங்க வேற மாதிரி சொல்லிடுவாங்க. பலமுறை இதை செஞ்சவங்கதான் நம்மாளுங்க. தப்பையும் சரியாக பண்றவன்தான் திமுக காரன் என்று எங்கள் ஊர் பெரிசு ஒன்று சொன்னது ஞாபகம் வருகிறது(?).

டாக்டர் அய்யா இரண்டாம் இடம கிடைத்ததை தைலாபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்று மாதமாக குடும்பம், மாமன், மச்சான் எல்லாருடனும் சென்று சாதிக்கார பசங்க 70 சதவீதம் இருக்கற ஒரே தொகுதியில் வேலை செய்தால்தான் இவர் நாற்பது ஆயிரம் ஓட்டு வாங்குவார். கடந்த முறை தனியாக நின்று வாங்கியதை விட இது எததனை ஓட்டு அதிகம்?

வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டால் என்ன ஆவார்? அதிகபட்சம் பத்து இடங்களில் இரண்டாவது இடம் கிடைக்கலாம். தனியாக போட்டியிட்டு முதலிடம் மற்றும் இரண்டாமிடம் எத்தனை இடங்களில் இவர் வாங்கினார் என்று பார்க்கவேண்டும்.....அது எல்லாம் அந்த காலம் என்பதையும் கணக்கில் வைத்துத்தான் இதை பார்க்க வேண்டும். விருத்தாசலத்தில் விஜயகாந்த் சொருகிய ஆப்பு வேறு நினைவுக்கு வருகிறது.

கலைஞருக்கும் வெட்கம் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.ராம்தாசுக்கும் என்னைக்குமே எதுவுமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்தாஸ் நாளைக்கே காங்கிரசு கூட்டணிக்கு போகமாட்டார்னு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு கூறமுடியாது.

நேரம் கிடைச்சா இந்த பணம் கொடுக்கற விவகாரம் எங்க வந்து முடியும்னு எனக்கு தோண்றதை எழுதலாம்னு இருக்கேன்.

16 comments:

ஜோ/Joe said...

//தப்பையும் சரியாக பண்றவன்தான் திமுக காரன் என்று எங்கள் ஊர் பெரிசு ஒன்று சொன்னது ஞாபகம் வருகிறது(?).
//
:)

உண்மைத்தமிழன் said...

எதி்ர்பார்த்தேன்.. எங்கடா அண்ணனை இன்னும் காணோமேன்னு..?

வந்துட்டீங்களாண்ணே..!?

மக்கள் ரொம்பத் தெளிவாயிட்டாங்கண்ணே.. எவ்ளோ வேண்ணாலும் சம்பாதிச்சுக்குங்க. இந்த மாதிரி நேரத்துல எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்திருங்க.. யார் நிறைய கொடுக்குறாங்களோ அவங்களுக்குத்தான் ஓட்டு..!

அதிமுக ஆரம்பிச்சது திமுக காலத்துல கொடி கட்டுது..!

ஆக மொத்தம் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய.........................

வேண்டாம்.. அண்ணன் ரொம்ப டென்ஷனாயிருவீங்கன்னு நினைக்கிறேன்..! விட்டுர்றேன்..!

Anonymous said...

எல்லாம் ஓ.கே. வழக்கமான ஆங்காங்கே தூவப்படும் உங்க திமுக ஜால்ரா மிஸ்ஸிங்! அதையும் போட்டு பதிவ சமநிலைப் படுத்த 3. வட்டம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்!

வினையூக்கி said...

பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் : எங்கே போயிட்டீங்க சார், இடைத்தேர்தல்னா வர்றீங்க !!! சாமியார் மாட்டினா வர்றீங்க

சிவபாலன் said...

//கலைஞருக்கும் வெட்கம் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.ராம்தாசுக்கும் என்னைக்குமே எதுவுமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். //

Ha Ha Ha..shhh...இப்பவே கண்ணகட்டுதே..ம்ம்ம்.

Muthu said...

அனானி,

அவ்ளோதானா நீ? கி கி...திரும்ப படி..மத்தவங்களுக்கு திமுக பரவாயில்லை என்பதுதான் என்னைக்கும் இன்னைவரைக்கும் நான் சொல்றது.....

Muthu said...

உண்மைத்தமிழன் அண்ணாச்சி,

அதிமுக ஆரம்பிச்சது என்று உங்கள் வாயால ஒத்துகிட்டதே ஒரு நல்ல தொடக்கம்தான்..

ஒரே குட்டைதான்..நாமளும் அந்த குட்டைலதான் இருக்கோம்..

சினிமாகாரவங்களுக்கு ஓசில வீடு கொடுக்கறாங்கன்னதும் எட்டி குதிச்ச பதிவர்களை நான் பாத்திருக்கேன் :)

Muthu said...

வினையூக்கி,

அட்ரினலின் கொதிச்சா அது நம்மளை இழுத்து விட்டுறுது..மத்தபடி டெய்லி வர ஆசைதான்..முடியல....

அப்புறம் கலக்கல்தானே அங்க எல்லாம்??ஃ

Muthu said...

சுவைக்காக,

இன்றைய தினமலரில் இருந்து

எம்.ஜி.ஆர்., காலத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஓசூர், கிள்ளியூர் ஆகிய இரு தொகுதிகளில் டிபாசிட்டை அ.தி.மு.க., இழந்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், நடந்த 1996, 2006ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டும் அக்கட்சி டிபாசிட் இழந்துள்ளது.இடைத்தேர்தலில் முதல்முறையாக பென்னாகரம் தொகுதியில் அ.தி.மு.க., டிபாசிட் இழந்ததால் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். அ.தி.மு.க.,விற்கு அடி விழும் வகையில் அக்கட்சியின் தேர்தல் முடிவு அமைந்துள்ளது. அ.தி.மு.க.,விற்கு செல்வாக்குள்ள தொகுதியான பென்னாகரத்தில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சியின் தொண்டர்களாலும் ஜீரணிக்க



எம்ஜீஆர் இன்வின்சிபிள் என்று தவறாக வரலாறு எழுதுபவர்கள் பார்வைக்கு....

Muthu said...

96 தேர்தலைவிட சுமார் ஆறு ஆயிரம் ஓட்டுக்கள் பா.ம.க அதிகம் பெற்றிருப்பதாக தெரிகிறது.

மூன்று மாதம்..ம்

Muthu said...

கொய்யால..

தினமலரில் இருந்து....


கடைசி நேரத்தில் பா.ம.க., வினர் தங்கள் கட்சியினர் 70 ஆயிரம் பேருக்கு கொடுத்த, 'கோல்டு காயினை' சத்தம் இல்லாமல் கொடுத்ததால் மட்டுமே இரண்டாம் இடத்தை தக்க வைக்க முடிந்தது.அ.தி.மு.க.,வினர் தொகுதியில் அதிகபட்சம் 20 நாள் தேர்தல் பணிகளில் அக்கரை காட்டிய நிலையில், பா.ம.க., நான்கு மாதம் முகாமிட்டும் வெற்றி என்ற இலக்கோடு தேர்தல் பணியில் இருந்த போதும், இரண்டாவது இடத்தை மட்டுமே அவர்கள் தக்க வைத்தற்கு ஜாதிய ஓட்டுக்கள் சிதறி போனதே காரணம்.

Muthu said...

70 ஆயிரம் பேரில் 41 ஆயிரம் பேர்தான் கோல்டு காயினுக்கு ஓட்டு போட்டிருக்கான்..

பணத்தை வாங்கியும் ஓட்டு போடலின்னா எவ்ளோ வெறுப்பு இருக்கணும்....

கி கி கி

யுவகிருஷ்ணா said...

நல்ல தொகுப்பு!

please as soon as possible back to form :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

Glad to see you writing.

Government is a reflection of the people and vice versa. Both, right now, have no moral or ethical sense.

What to do, is quite right:-(

- Kajan