Thursday, March 04, 2010

நித்தியானந்தரும் உண்மைத்தமிழன்

சாமியார் அகப்பட்டு கொண்டது தமிழ்நாட்டு வாய்க்கு குறைந்தது இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவலை போடும் என்று தெரிகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற ஒரு விசயம் வெளிவந்தால் பின்நவீனத்துவ கருத்துக்கள் சில நாட்கள் கழித்துத்தான் வலையுலகில் வெளிவரும். இப்போதெல்லாம் முதல் நாளிலேயே வருகின்றன.


உண்மைத்தமிழன், செந்தழல் ரவி ஆகியோர் பதிவுகளை படிக்கும்போது எனக்கு ஏமாற்றமே வருகிறது. பல லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி கொண்டு இருந்துள்ளார் இந்த சாமியார். காவி உடையில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு உள்ளார். அப்பாவி ஆத்மாவின் வாழ்க்கையில் அநியாயமாக மீடியாக்கள் தலையிட்டு விட்டதாக எழுதுகிறார்கள். நித்யாவை நம்பி பல லட்சம் கொட்டிய பக்தர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


சன் டிவி மிட்நைட் மசாலா போடுவது பற்றி எழுதுவது எல்லாம் காமெடி. அப்படி பேசினால் அய்யா உண்மைத்தமிழன் அவர்களே அஜீத் பலகோடி சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துக்கொண்டு தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மறுப்பதை ஆதரிப்பது ஏன்? நடிகனுக்கு நடிப்பு மட்டும்தான் தொழில் அதில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு மற்றபடி உத்தம புத்திரன் வேடம் போடலாம் ( மிரட்டறாங்கய்யா) என்பதை ஒத்துக்கொண்டால மீடியாவிற்கும் எது தொழில் என்பது என்பது உங்களுக்கே தெரியும். பல காலம் மீடியாவில் காலூன்ற முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு ஒப்புமைக்காகத்தான்.


நடந்துள்ளது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மோசடி. இதை கோர்ட்டில் சாமியாரோ நடிகையோ பேசினால் அதை டிவிக்காரர்கள் எதிர்க்கொள்வார்கள். நாம் இதிலிருந்து என்ன எடுத்துக்கொள்வது என்பதுதான் முக்கியம்.சன் டிவி இவ்வளவு பில்ட் அப் கொடுக்காவிட்டால் இது இவ்வளவு பரபரப்பாகி இருக்காது. சுரணை கெட்ட ஜனங்கள் இதுபோன்ற சாமியாரை தேடிக்கொண்டு சென்று கொண்டு தான் இருப்பார்கள. துரதிஸ்டவசமாக இவ்வளவிற்கு பிறகும் இன்னமும் போகத்தான் செய்வார்கள்.


நாமெல்லாம் உத்தமர்கள் இல்லை உண்மைத்தமிழன். ஆனால் நீங்களும் நானும் காவி உடை கட்டிக்கொண்டா ரோட்டில் திரிகிறோம்? அல்லது வாழ்ந்தால் உண்மைத்தமிழன் போல வாழவேண்டும் என்று குறைந்தது ஒரு நூறு பேர் கே.கே.நகரில் வாழ்கிறார்களா? ரஞ்சிதா நித்தியானந்தம் காதல் ஒரு அக்மார்க் காதல் என்கிறீர்கள். பேசாமல் கல்யாணம் செய்திருக்கலாமே. பணம், புகழ் மரியாதை, அஜால் குஜால் எல்லாம் வேண்டும்.நம்பிக்கை மோசடி செய்யலாம். ஆனால் அதை வெளிப்படுத்துபவர்களுக்கு எல்லா ஒழுக்க விதிகளும் வேண்டும்.என்னங்க இது? எல்லாவற்றையும் விட ஒரு நிறுவனத்தின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தை தயாரிப்பினை வாங்காதீர்கள் அல்லது பார்க்காதீர்கள் அல்லது பயன்படுத்ததாதீர்கள் என்று நீங்கள் கூறியதாக எழுதி இருந்தீர்கள்..என்ன கொடுமை சார் இது?


http://truetamilans.blogspot.com/2010/03/blog-post_04.html

5 comments:

கோவி.கண்ணன் said...

இந்த பிரச்சனைக்கு உங்கள் கருத்துக்காக நீங்கள் எழுதவருவீர்கள் என்று நினைத்திருந்தேன்.

:)

மோகன் கந்தசாமி said...

Ha ha ha! haiyo! haiyo!

Nalama Mr. Kuthu Thelunkini!!

- Mohan Kandasamy

முத்து தமிழினி said...

கோவி, உண்மைத்தமிழன் என்ன சொலல வருகிறார் என்று குழப்பமாகி விட்டதனால் குறைந்தது நான் என்ன நினைக்கிறேன் என்று எனக்காகவாவது தெளிவு பெற எழுதிவிட்டேன். உங்களுடையது நேற்றே பார்த்தேன். மோகன், இருக்கீறீரா?

Sangkavi said...

சரியாச் சொன்னீங்க நண்பரே..

மஞ்சள் ஜட்டி said...

இனொன்னு, டீல் பேசி இருப்பாங்க சன் டிவி காரங்க???? சரியா படிஞ்சிருக்காது ..உடனே தோலுரிச்சி காட்டிட்டாங்க.... பாத்தீங்களா!! அங்கன "கல்கி சாமியார்" போதை லேகியம் குடுத்து "ஹோமோ செக்ஸ்" பண்ணி மாட்டிக்கிட்டாரு?? மேலும், எனக்கு ஒரு டவுட்...விகடன் ஏன் சைலண்ட்டா இருக்கு?? நித்யாவோட புக்கை விக்கிறதுநாலேயோ??

தமிழ்வெளியை பார்த்தீங்களா?