Wednesday, February 04, 2009

கலைஞர்- புலிகள்- அரசியல்

கருணாநிதி இந்த விஷயத்தை கொண்டு பதவியை தான் விடுவதாக இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். சில மாதங்களாகவே அவரது சொல்லும் செயலும் இதை நோக்கித்தான் இருந்ததால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பலரும் இதை எதிர்ப்பார்க்காதது போல அதிர்ச்சி அடைவது ஏனென்று புரியவில்லை. ஏதோ நமக்கெல்லாம் ஒரு ஆறுதல். ஏதோ ஒரு வகையில் கருணாநதியை கும்மி நம்முடைய ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துவிட்டோம்.

கலைஞர் இன்று புதிதாக சில வார்த்தைகளை சேர்த்து விட்டுள்ளார். பிரபாகரன் சர்வாதிகாரியாக நினைத்தாராம். புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றனராம். (அதுதானே அவர் சொன்னதற்கு அர்த்தம்). ஆக அவர்களுக்கு நான் உதவ முடியாது. விடுதலைப் புலிகள் அழிந்தவுடன் இலங்கை தமிழருக்கு உதவுகிறேன் என்று அவர் நிலையை கூறிவிட்டார். புலிகள் அழிந்தவுடன் தமிழர் சார்பாக பேச யார் இருப்பார்கள் என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

ராமதாஸ் அடிக்கும் கூத்து இன்னும் கொடுமையானது. வாயால் மட்டும் சிரிக்க முடியாதது. அதாவது அவருக்கு திமுக செயற்குழு முடிவு அதிர்ச்சி அளிக்கிறதாம். ஏது எதுக்கோ மரத்தை வெட்டினோமே அய்யா!! சட்டசபை தேர்தலில் ராமதாஸ் எந்த கூட்டணிக்கு போக போகிறார் என்பதில் இருக்கு சூட்சுமம். மூடிட்டாவது இருக்கலாம் கருணாநிதி மாதிரி.

கலைஞருக்கு அப்புறம் திமுக வை கைப்பற்றும் ஆசையில் இருக்கும் வைகோவிற்கு கலைஞர் தமிழின உணர்வாளர்களால் அடிபட்டு ரணகளமாக இருக்கும் இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிட்டுமா? அவர் சாவதானமாக இருப்பதை பார்த்தால் அப்படி ஒண்ணும் அவர் வாய்ப்பை உபயோகிப்படுத்த போவது போல் தெரியவில்லை.


புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.

ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.

பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.

இன்றைய நிலையில் தமிழகத்தின் அழுத்தம், மத்திய அரசு தலையீடு என்பதெல்லாம் வெறும் கனவுதான். அப்படி இருக்கு புலிகளின் எதிர்ப்பார்ப்பு, திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

11 comments:

வேலையத்தவன் said...

போங்கடா நீங்களும் உங்க ஈழ அரசியலும்.

இரா.சுகுமாரன் said...

//ராமதாஸ் அடிக்கும் கூத்து இன்னும் கொடுமையானது. வாயால் மட்டும் சிரிக்க முடியாதது. அதாவது அவருக்கு திமுக செயற்குழு முடிவு அதிர்ச்சி அளிக்கிறதாம். ஏது எதுக்கோ மரத்தை வெட்டினோமே அய்யா!! சட்டசபை தேர்தலில் ராமதாஸ் எந்த கூட்டணிக்கு போக போகிறார் என்பதில் இருக்கு சூட்சுமம். மூடிட்டாவது இருக்கலாம் கருணாநிதி மாதிர//

இராமதாசு மரத்தை வெட்டினார், கட்சி மாறப்போகிறார் என கருணாநிதி பாணியிலேயே நீங்கள் எழுதுகிறீர்கள்.
இது நியாயமா?

அவர் எந்த கட்சியிலாவது போகட்டும் ஈழப்பிரச்சனையில் அவர் நிலைப்பாடும் பற்றி மட்டும் பேசுங்கள் எப்போது பார்த்தாலும் மரம் வெட்டினார் என பேசும் நீங்கள் பசுமைத்தாயகம் வைத்து மரங்களை நடுகிறார் அய்யா! மறந்துவிட வேண்டாம்.

இராமதாசை விடுவோம், ஆனால் ஆட்சியில் கெட்டியாக பிடித்துக் கொண்டு உலக சமூகமே கண்டிக்கும் கொலை வெறிபிடித்த இலங்கை இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசுக்கு கொடிபிடிக்கும் நிலை மிகவும் கேவலமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Muthu said...

சுகுமாரன்,

கருணாநிதியை எப்படி எக்ஸ்போஸ் செய்கிறோமே அது போல் எல்லாரையும் செய்வது நமது கடமை.

அப்ப கருணாநிதி செய்வது தவறு.டாக்டர் அய்யா செய்வது சரி என்கிறீர்களா?

ஈழப்பிரச்சினையில் அவர் நிலைப்பாடு என்னன்னு நீங்கத்தான் சொல்லுங்களேன்.கேட்போம்.

கருணாநதி மாநில அரசை காப்பாற்ற முயற்சியில் வசமா சிக்கிட்டார். டாக்டர் உசாரா அரசியல் பண்றார்.அவ்வளவுதான் விசயம்.

Muthu said...

கருணாநிதி பதவிக்காக சப்பைக்கட்டு கட்டறார்னு சொலலலாம். அது தெரிஞ்சதுதான்.

இவரு கருணாநிதி அரசும், ராஜபக்சே அரசும் ஒண்ணு என்று சொல்கிறாரே?
எவ்ளொ படு கேவலமான அரசியல் இது?

இவருக்கு தெரியாதா சண்டையை நடத்துறது இந்திய அரசு அதில் இவரும் ஒரு அங்கம் என்று.

ஏற்கனவே ஜெயலலிதாவோட கூட்டணி சேர்ந்தா அது எதுக்கோ சமம்னு பேசினவருதான்.

கருணாநிதி காங்கிரசை விடமுடியாதுன்னு ஒத்துகிட்டார். இவரும் வெளியெ வரட்டும்.

Unknown said...

பாட்டாளி said....

கருணாநிதி ஒரு துளி கூட போராட முன் வராத நிலையில் ராமதாசின் அரசியல் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவது உள்நோக்கத்துடன் கிளரிவிடபடுவதன்றி வேறில்லை.

தற்போதைய ராமதாஸ் எந்த விதத்தில் தமிழர்களை ஏமாற்றி விட்டார்? அவரின் செயல்பாடும் திருமாவின் செயல்பாடும் இல்லாவிட்டால் இந்நேரம் ஈழ தமிழர்களின் சாவுமுனை போராட்டம் அடையாளம் இல்லாமலேயே போயிருக்கும்.

அதிலும் மிகவும் பாராட்டியாக வேண்டிய நபர் திரு. வெள்ளையன் அவர்கள். அவர்களின் வணிகர்களின் சங்கம்தான் வேலைநிறுத்த போராட்டத்தின் வெற்றியை தீர்மானித்தது.

ராமதாசை விமர்சிப்பவர்களுக்கு....உங்களை தடுக்கும் உரிமை எனக்கு கிடையாது. இருப்பினும் கருணாநிதியையும் ராமதாசையும் சமமாக சீர்தூக்கி பாருங்கள்.

கலைஞர் டிவியையும் ,அவர்கள் நடத்தும் மக்கள் தொலைக்காட்சியையும் பாருங்கள். செய்தி ஏடு தமிழ் ஓசையும் பாருங்கள். யார் மக்கள் நலனில் அக்கறை செலுத்துகிறார்கள்? அதில் ஏதாவது விருப்பு ,வெறுப்பு மற்றும் சுயநலத்திற்கு பயன்படுத்துவது உள்ளதா, என்பதையெல்லாம் பாருங்கள்? சும்மாவேனும் வெறுப்புகளை கொட்டாதீர்கள் .

மக்கள் தொலைக்காட்சியில் வரும் ஈழம் போன்ற தமிழர்களின் புரட்டி போட்ட வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையிடம் கொண்டு செல்லும் எண்ணம் கலைஞர் டிவிக்கு சிறிதளவாது உண்டா...சரி.... வாரிசுகளையாவது திணிக்கிராரே....அவர்களாவது அன்புமணியின் நிர்வாக திறமை, அணுகுமுறை, நிதானம் ,செயல் உறுதி எதிலாவது சிறிதளவாது நிரூபித்து இருப்பார்களா? எதிலெல்லாம் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்.

மனசாட்சியோடு சிந்தித்து பார்த்தீர்கள் என்றால் மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் பங்கு எடுத்து கொண்டே சிரித்துக்கொண்டே பழி வாங்கிகொண்டிருக்கும் சோனியாவின் முன் தைரியமாக போராடுகிறாரே...ராமதாஸ். அது நம் கருணாநிதி அவர்களால் முடியவில்லையே. ஏன்? இந்த அடிமை புத்தி தானே ராமதாஸ் மீது பொறாமை கொள்ள வைக்கிறது! பணஆசை, பதவிஆசை, சினிமா மோகம் தானே சோனியாவின் அதிகார மம்மதையை தட்டி கேட்க்க தயங்குகிறது...
தற்போது நான்காவது சேனல்லுக்கும் அச்சாரம் போடப்பட்டு விட்டது. இதெல்லாவற்றையும் காப்பாற்றிக்கொள்ளத்தானே இவளவு ஒப்பாரியும். ஊரை ஏமாற்றத்தானே போட்டி அமைப்பு போராட்டங்கள்.

ஒரு கைதுக்கு "அய்யோ கொல்றாங்களே...." என ஊளையிட்டதர்க்கும் , இன்று சின்னம் சிறார்களிலிருந்து பெரியோர்கள் வரை உண்ண உணவின்றி உறங்க இடமின்றி கையின்றி காலின்றி வலியினால் துடிக்கிறார்களே.... ஹாஸ்பிட்டலில் ஏசியில் படுத்துக்கொண்டு இது பற்றியெல்லாம் யோசித்திருந்தால் மற்றோரை கொச்சை படுத்தும் எண்ணம் வருமா?

வலை பதிவர்களே.... நல்ல விஷயங்களுக்கு பாராட்ட தயங்காதீர்கள். தவறுகளையும் சுட்டி காட்ட தயங்காதீர்கள். ராமதாஸ் மரம் வெட்டியதையே பேசிகொண்டிருக்காதீர்கள். அந்த வன்முறை கூட திரும்பி பார்க்காத அரசாங்கத்தை எதிர்த்துதானே....!?

Muthu said...

பாட்டாளி அவர்களே,

கருத்துக்கு நன்றி. கருணாநிதி முன்னாடி விட்டு விளையாடுறார்னு தான் நானும் சொல்றேன்.

wait maadi

sugethia said...

கருணாநிதி என்ன சொல்கிறார் வைகோ என்ன செய்கிறார் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்ற விவாதங்களை நடத்தும் நேரம் அல்ல இது . வன்னி யுத்தத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நாளாந்தம் இறந்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கான வளிமுறைகளை பற்றியே நாம் பேசவேண்டும் !.உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் யுத்த நிறுத்தம்கோரி இலங்கை அரசை நிர்பந்நித்து எல்லாம் பயனற்றதாகிவிட்டது. எனியும் யுத்தத்தை நிறுத்தப்போவதில்லை என இலங்கை அரசு தெளிவாக அறிவித்துவிட்டது. கடந்த இருநாட்களுக்கு முன் அறிவித்த யுத்தநிறுத்தமும் பயனளிக்கவில்லை. இணைத் தலைமை நாடுகளும் புலிகள் சரணடைவது பற்றியே வேண்டுகோள் விடுக்கின்றன!. இன்னிலையில் நாமும் விடுதலைபுலிகளை நோக்கியே வேண்டுகொள் விடுக்கவேண்டும்.
புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களையும் பலியிடாமல் பிணங்களின் மீது அரசியல் வியாபாரம் செய்யாமல் அப்பாவி மக்களை பாதுகாப்பாக சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் வளித்துணையுடன் வேளியேற்றவதற்கான பகீரங்க அறிவிப்பை விடுதலைபுலிகளை அறிவிக்க வேண்டும்.
தமிழக அரசியல் செயல்பாட்டாளர்களே புலிகளையும் நோக்கி உங்கள் கோரிக்கையை வையுங்கள்!
நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ என்னும் சில நாட்களில் எஞ்சியிருக்கும் நிலப்பரப்பும் இழக்கப்படும் கூடவே மக்களும் !.
மக்களை காப்பற்றுவதற்கான ஒரேவளி அவர்களை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் வளித்துணையுடன் வேளியேற்றவதே. மக்களுக்காக போராடுவதாக கூறும் புலிகள் இதை செய்ய முன்வருவார்களா?
அல்லது இவ் வேண்டுகோளை புலிகளை நோக்கி தமிழக உணர்வாளர்களும் புலம் பெயர் சமுகமும் முன்வைக்குமா ?.

இரா.சுகுமாரன் said...

//அப்ப கருணாநிதி செய்வது தவறு. டாக்டர் அய்யா செய்வது சரி என்கிறீர்களா? //

இல்லை கருணாநிதி செய்வதுமட்டும் தவறு அல்ல. இரண்டு பேரும் மத்திய அரசின் மந்திரிகளையாவது விலக்கி கொண்டிருக்கலாம் என்பது தான்.

கருணாநிதி தான் துரோகி என்றால் தான் மட்டும் தமிழர்களின் காவலாளி என்றால் அவராவது தனது மந்திரிகளை பதவி விலக்கி இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து கருணாநிதியை மட்டும் குறை செல்வதில் உடன்பாடில்லை எனினும், அந்த கோரிக்கையிலிருந்து கருணாநிதி விலகிக்கொள்ள இயலாது.

எனவே இருவரும் எதிர்கால தேர்தல் கூட்டணியை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆதரவை விலக்கிக் கொள்ளாமல் காங்கிரசு ஆட்சியில் இருந்து மட்டுமாவது விலகி கொண்டிருக்கலாம். குறைந்த பட்சம் இது கூட செய்ய இயலாதவர்களை பற்றி என்ன சொல்ல?.

இருவருக்கும் ஆட்சிதான் எனவே, இருவரையும் பெரிய அளவில் வித்தியாசப்படுத்த முடியாது. கருணாநிதி தனது மந்திரிகளை பதவி விலக்கினால் தானும் விலகுவேன் என்பது போல் அவரது நிலைப்பாடு தான் கருணாநிதிக்கும் இவருக்கும் வித்தியாசமில்லை என்பதை விளக்குகிறது.

இந்த விசயத்தில் தமிழர் தலைவர் எனச் சொல்லும் கருணாநிதியை தான் அதிகம் பேர் திட்டுகிறார்கள். ஏனெனில் கருணாநிதி நினைத்தால் இராமதாசை விட அதிகம் சாதிக்க முடியும் எனவே, கருணாநிதியின் நாடகம் இராமதாசின் நாடகத்தைவிட மோசமானதாக எல்லோருக்கும் படுகிறது. இந்த விசயத்தில் கருணாநிதி இன்னும் இராச தந்திரத்தோடு நடந்து கொண்டிருக்கலாம் ஆனால், அவர் மக்கள் துரோகமாக நடந்து கொள்கிறார்.

Muthu said...

சுகுமாரன்,

நீங்கள் சொல்வது சரி. உங்கள் முந்தைய பின்னூட்டத்திற்கும் இந்த பின்னூட்டத்திற்கும் நிறைய வித்தியாசம்.

நான் கூறியது போல் ஈழ பிரச்சினைக்காக ஆட்சியை விட கருணாநிதி தயாராகவில்லை.அப்புறம் எதற்காக ஆட்சியை விடுவார் என்றெல்லாம் கேட்கக்கூடாது :).

அதைத்தான் நான் சொன்னேன். என்னுடைய முந்தைய பதிவுலேயெ சொன்னேன்.


கருணாநிதி ராஜதந்திரத்தை பற்றி சொன்னீர்கள்.நிறைய இருக்கு. பிறகு ஒரு நாள் பேசுவோம். தொடர்ந்து பேசினால் என்னையும் தமிழ் துரோகி ஆக்கிவிடுவீர்கள் :)

Muthu said...

சுகேதியா ( என்ன அர்த்தம்?)

உலக நாடுகள் எல்லாம் கைவிட்டு விட்டனர் என்பதே இங்கு நான் குறிப்பிடும் அவல சூழ்நிலை. எங்கோ புலிகளின் அரசியலில் குறை இருக்கிறது.

புலிகள் யாரையும் பிடித்து வைக்கவில்லை. அவர்கள் அனைவரும் புலிகளுடனே இருக்கிறார்கள். இன்று புலிகள் அங்கிருந்து விலகினால் ராணுவம் எத்தனை தமிழ் மக்களை புலிகள் என்று நினைத்து அங்கு கொலை செய்யக்கூடும் என்று தெரியவில்லை.அதை தடுக்க உலக நாடுகள் எதாவது செய்ய வேண்டும்.

லக்கிலுக் said...

Very good post muthu. Hats off!