Sunday, July 01, 2007

கலைஞர் பதவி விலகலாம்

மதுரை மேற்கு தொகுதியில் ஆளுங்கூட்டணி முப்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. பலவீனமான கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். அழகிரி தேர்தல் பணி திறமைக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள் திமுகவினர். பணபலம் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

அந்த தொகுதியுடன் எனக்கும் ஒரு உறவு உள்ளதால் நான் விசாரித்தவரை பணப்பட்டுவாடா நடந்தது என்றுதான் கூறுகிறார்கள்.ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை அதிகாலை நான்கு மணிக்கு வீடுவீடாக வந்து கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது வெற்றி பெற்ற கூட்டணி பற்றிய தகவல். இரண்டு பெரிய கூட்டணிகளும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அதிக பணம் செலவழித்த ஆளுங்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. இந்த ட்ரெண்ட் நீடித்தால் இனி இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கூட்டணி என்பது தோற்கவே தோற்காது.

"தமிழனோட உலகப்புகழ் வாய்ந்த மனசாட்சி இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் ஸ்ராங்கா இருக்கிறதென்று தான் சொல்லவேண்டும் .கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை(?)."

விஜயகாந்த் கூறியதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டை எனக்கு போடுங்க என்ற வாதத்தை மதுரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விஜயகாந்த் மனைவியும் ஆரததி எடுத்த மக்களுக்கு நூறு நூறாகவும் ஐநூறாகவும் பணம் கொடுத்த புகைப்படங்கள் நக்கீரனில் பார்த்த ஞாபகம் உள்ளது. (இது விஜயகாந்த் ரசிகர்களுக்கான தகவல்). கவலைப்படாதீங்க கேப்டன்.நடத்துங்க.நீங்கள் மட்டும் இளிச்சவாயனா?

அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சொல்வாக்கை இழந்துவருகிறது அது தே.மு.தி.கவிற்கு பலமாக சேருகிறது என்பதும் உண்மைதான். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் டாக்டர் அய்யா என்ன செய்வார் என்பது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம்தான்.
இந்த இடைதேர்தலின்போது வெளியான ஒரு வதந்தியின்படி ஆளுங்கட்சி கூட்டணி 1500 ரூபாயை முப்பத்திரண்டாயிரம் வீடுகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. (1500*32000=48000000).கணக்கு சரியா. இந்த பணத்தை வெற்றி பெற்ற வேட்பாளர் எப்படி எடுப்பார்? இவர் ஊழல் செய்தால் அதை இந்த மக்கள் தட்டி கேட்க முடியுமா?

அது ஒருபுறம் இருக்க, கலைஞர் பதவி விலக இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்று ஏறக்குறைய எல்லாரும் ஏற்றுக்கொண்டாயிற்று. (கட்சியில்தான்). இன்னும் சில ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் நிலையில் இப்போதே ஸ்டாலினை அந்த பதவியில் அமர வைப்பது அவருடைய நிர்வாகத் திறமையை அளந்து பார்க்க உதவும்.உடனடியாக வாரிசு அரசியல் என்ற கோஷம் பலமாக எழும். அடுத்த தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு இது சலித்துபோய்விடும்.

கலைஞர் பால்தாக்கரே கணக்காக கருத்து கந்தசாமியாக மாறி சன் டிவி செய்திகளில் கருத்து சொல்லிக்கொண்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம். கலைஞருக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று அவ்வபோது வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. டெல்லியில் ஜெயா டிவி நிருபரை தரக்குறைவாக பேசியதாக வந்த தகவல் கலைஞர் தடுமாறுகிறார் என்பதையே காட்டுகிறது.

கட்டாய தலைக்கவச விவகாரத்தில் சொதப்பியது ரொம்பவே தவறானது. பல மாநிலங்களில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனததில் பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று முதலில் கூறிவிட்டு பின்னர் வண்டியை இயக்குபவர் மட்டும் அணிந்தால் போதும் என்றுதான் பல மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும் அதையே செய்திருக்கலாம். குழந்தைகளும் அணியவேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு தீடிரென்று இவர் போலீசார் மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றெல்லாம் மக்களிடம் அக்கறை காட்டும் மூதறிஞராக மாறி சொல்லப்போக, இப்போது சென்னையில் கூட ஒரு பயல் தலைக்கவசம் அணிவதில்லை.

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அறிவித்து பல நாட்களாகிறது. ஒரு ஆட்டோ கூட மீட்டர் போட்டு இயக்குவதில்லை. சென்னையில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது என்று பேச்சு இருக்கிறது. இழந்த செல்வாக்கை சுலபமாக மீட்கலாம் கலைஞர் அவர்களே.ஆட்டோகாரர்களை மீட்டர் போட்டு ஓட்ட வையுங்க அது போதும் :))

9 comments:

நாமக்கல் சிபி said...

//ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அறிவித்து பல நாட்களாகிறது. ஒரு ஆட்டோ கூட மீட்டர் போட்டு இயக்குவதில்லை. சென்னையில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது என்று பேச்சு இருக்கிறது. இழந்த செல்வாக்கை சுலபமாக மீட்கலாம் கலைஞர் அவர்களே.ஆட்டோகாரர்களை மீட்டர் போட்டு ஓட்ட வையுங்க அது போதும்//

வாஸ்தவம்தான்

சாலிசம்பர் said...

//நீங்கள் மட்டும் இளிச்சவாயனா?//

:-))))))நல்லா இருக்கு தலை.

Anonymous said...

//சன் டிவி செய்திகளில் கருத்து சொல்லிக்கொண்டு//

Sun T.V.?! or Kalaignar T.V.?!

G.Ragavan said...

பதிவை நானும் ஒப்புக்கொள்கிறேன் முத்து.

இடைத்தேர்தல் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குத்தான் வெற்றியைத் தரும். எதிர்பார்த்த வெற்றிதான். ஆனால் எதிர்பாராதது விஜயகாந்த் கட்சியின்...என்னங்க பேரு. தேமுகக...இல்ல...தேமுதிக? அதுக்குக் கெடைச்ச ஓட்டுதான். ம்ம்ம்...அதுசரி...எல்லா அரசியல்வாதிகளும் நல்லவங்களா இல்லாதப்ப விஜயகாந்த்த மட்டும் என்னத்த சொல்றது.

அடுத்த தேர்தல்னு வந்தா கண்டிப்பா பாமக திமுகவோடு இருக்காதுன்னு தோணுது. ஒருவேளை, பாமக, மதிமுக, தேமுதிக கூட்டணி வரலாம். காங்கிரஸ் திமுக கூடத்தான் இருக்கும். அவங்களுக்குச் சட்டுன்னு ரிஸ்க் எடுக்கத் தோணாது.

கருணாநிதிக்கு ஓய்வு தேவை என்பது மறுக்க முடியாதது. ஸ்டாலின்னு முடிவு செஞ்சப்புறம் என்ன தயக்கம்? காங்கிரஸ் பயக கேக்கப் போறதில்லை. பேசாம அதச் செய்யச் சொல்லுங்க.

//ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் அறிவித்து பல நாட்களாகிறது. ஒரு ஆட்டோ கூட மீட்டர் போட்டு இயக்குவதில்லை. சென்னையில் திமுக செல்வாக்கை இழந்துவிட்டது என்று பேச்சு இருக்கிறது. இழந்த செல்வாக்கை சுலபமாக மீட்கலாம் கலைஞர் அவர்களே.ஆட்டோகாரர்களை மீட்டர் போட்டு ஓட்ட வையுங்க அது போதும்//

ஆமா. ஆமா. உண்மைதான்.

அன்பு. பாலகுமார் said...

//கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை//
உண்மைதான், அப்படி மக்கள் மாறி விட்டால் இது போன்ற அரசியல் வாதிகளுக்கு தமிழ்நாட்டில் வேலையே இருக்காதே

உண்மைத்தமிழன் said...

//இப்போது சென்னையில் கூட ஒரு பயல் தலைக்கவசம் அணிவதில்லை.//

யெஸ் பிரதர்.. நானும்தான்.. 550 ரூபாய் கொடுத்து வாங்கின ஹெல்மெட் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு வீட்ல சும்மாவே கிடக்கு.. என்னோட ஒரு மாச சாப்பாட்டு செலவை ஒரே நிமிஷத்துல முழுங்கிருச்சு.. யாருக்குப் புரியுது..?

Anonymous said...

//Sun T.V.?! or Kalaignar T.V.?! //

இதுவரைக்கும் சன் டிவிதான். இனிமேலும் சன் டிவிதான். கலைஞர் டிவி வந்தாலும் சன் டிவி ஆளும் கட்சியுடன் மோதாத பிழைக்கத் தெரிந்த பிஸினஸ்மேன்களின் டிவி.
ஏற்கனவே அதிகப்படியான் ஆசையால் வந்த வினைக்கு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் அதுபோன்ற தவறை செய்யமாட்டார்கள்

Anonymous said...

ஏதோ இடைத் தேர்தல் காலங்களிலாவது நாலு காசு சம்பாதிச்சா என்ன தப்பு? ஒரு எம். பி அனுபவிக்கும் வசதிகளும் சேர்க்கும் சொத்துக்களூம்
பத்து பைசா செலவில்லாமல் கிடைக்க வேண்டுமா? அவர்கள் சம்பாதிப்பதில் ஆயிரம் கொடுத்தால் தப்பில்லை.


மக்கள் பிரதிநிதிகள் திருடுவதை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் வாக்காளர் ஒரு தடவை கை நீட்டுவதை தடுப்பது மட்டும் ஜனனாயகமா?

புள்ளிராஜா

வீ. எம் said...

// என்னோட ஒரு மாச சாப்பாட்டு செலவை ஒரே நிமிஷத்துல முழுங்கிருச்சு.. யாருக்குப் புரியுது..? ///

அடஎன்ன சார், சட்டம் இருக்கிறதா நினைச்சு தலைகவசம் போட்டுகிட்டு போங்க.. தலைகவசம் போட்ட அபராதம் நு யாராச்சும் சொன்னாங்களா???
சட்டம் இன்னும் இருக்கு.. காவல் துறையை கொஞ்சம் கெடுபிடி பண்ணவேண்டாம்னு தான் சொல்லியிருக்காங்க..கடுமையா கட்டுபாடு இருந்தா உபயோகப் படுத்தியிருப்பீங்க இல்ல??

உங்க பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயம். ஏன் சட்டம்னு பாக்கறீங்க??

ஒரு நாள் சாப்பாட்டை விட உயிர் முக்கியம்.. வாங்கிய தலைகவசத்தை உபயோகப்படுத்துங்க.. இதை வெறும் அரசியலா மட்டும் பார்த்து... சட்டம் போட்டாலும் குறை, கண்டிப்பு வேணாம்னு சொன்னாலும் குறை நு இருக்க கூடாது..

பி கு. நான் ஏதோ தி மு க கட்சி ஆளு நு நினைச்சுக்காதீங்க..