Wednesday, March 25, 2009

ஈழ துரோகியும் ஈழ நாயகியும்

நாளைக்கே ஈழத்திற்கு சென்று போரிடும் ஆர்வத்தில் இருந்த கட்சித் தலைவர்கள் ஆளுக்கொரு கூட்டணியாக தேடி ஓடிவிட்டனர். கீழ்க்கண்ட பதிவுகளில் குறிப்பிட்டபடி சம்பவங்கள் நடப்பதை நக்கீரன் வாயிலாக அறிய முடிந்தது.


http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

http://muthuvintamil.blogspot.com/2009/02/blog-post.html

ஈழ பிரச்சினையை தேர்தல் பிரச்சினை ஆக்கலாம் என்றும் கூறிய ஈழ ஆர்வலர்கள், சண்டை என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய அதிமுக கூட்டணியில் தமிழின போராளிகள் தஞ்சம் புகுந்திருப்பதற்கு என்ன சாக்கு சொல்வார்கள் என்று தெரியவில்லை.

பொதுவாக தமிழ் ஆர்வலர்கள் அம்மா ஆட்சியில் சப்த நாடியும் ஒடுங்கி இருப்பதும் கலைஞர் ஆட்சி வந்தால் ஆடுவதும் சகஜம்தான். ஆனாலும் இந்த முறை ரொம்ப ஓவர்.கருணாநிதி தமிழின துரோகி என்றால் ஜெயலலிதா என்ன ஈழ நாயகியா?

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை பல ஈழத்தமிழர்களும் கருணாநிதியை போட்டு தாக்கியதை பார்க்க முடிந்தது. உணர்வுபூர்வமாக பார்க்கும்போது அது பெரும் குற்றமாக தெரியவில்லை என்றாலும் ஈழத்தமிழர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லாரையும் விட ஈழ பிரச்சினையில் பொறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், காலத்திற்கேற்பவும் சமயோசிதமாகவும் நடக்க வேண்டிய பெறும் பொறுப்பு யாருக்கு உண்டு? கருணாநிதிக்கா?

சரி. தேர்தல் கணக்கை பார்ப்போம். மதிமுகவை கணக்கில் எடுக்க முடியாது. வடமாவட்டங்களில் பா.ம.க ஆதரவு உள்ளதால் அதிமுக எளிதில் வெல்லும் என்றே நினைக்கிறேன். விஜயகாந்த் எந்த அளவிற்கு ஓட்டை பிரிப்பார் என்பதை பொறுத்தே திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள்.

நாளைக்கு திமுக கூட்டணி தோற்றா(ல்)லும் மத்தியில் ஆட்சி அமைக்க நிலைக்கு காங்கிரஸ் வந்தால் டாக்டர் காங்கிரஸ் கூட்டணிக்கு போய்விடுவார். ( அன்புமணி புள்ளைங்க டெல்லியில் படிக்குதாம். படிப்பை பாதியில் விட முடியாதாம்).

காங்கிரசுடன் சேரும் டாக்குடர் அய்யா அப்படியே அம்மாவையும் கொண்டு போனால் திமுக ஆட்சி இங்கு பணால்தான். ஆக தமிழக அரசியல் சூடு பிடிக்கிறது.

திமுகவிற்கு வாழ்வா சாவா போராட்டம். ஆளுங்கட்சி எந்த எல்லைக்கும் போகும். கூட்டணி கட்சியான காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்த தேர்தல் பரபரப்பாக இருக்கும். நரேஷ் குப்தா..எப்படிப்பா இருக்கே?