Sunday, July 01, 2007

சிபிஐ எங்கே? தேடச்சொல்லு கொஞ்சம்

கடந்த வாரம் என்னை தேடி நிஜமாகவே வீட்டுக்கு வந்துவிட்டது சி.பி.ஐ . அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க வேண்டும் என்று ஒருவர் தகவல் தந்து சென்றார். சரியான நேரத்திற்கு சிபிஐ அலுவலகம் சென்றேன்.சுத்தமாக ஷேவ் செய்து மிடுக்காக உடையணிந்திருந்த அந்த அதிகாரி என்னுடன் சில முக்கிய தகவல்களை பற்றி விசாரிக்க வேண்டும் என்றார்.

"சி.பி.ஐ அதிகாரி என்னிடம் பேச என்ன இருக்கிறது", என்றேன் நான்.

"மிஸ்டர், அது எங்கள் உரிமை", என்றார் அவர்.அடங்கிப்போனேன் நான்.
அவர் கேட்ட அனைத்து தகவல்களையும் பொறுமையாக விளக்கினேன்.அதிலிருந்து சில விவரங்கள்.

"நீங்கள் எல்.டி.டி.ஈ க்கு சப்போர்ட் செய்கிறீர்களாமே"

"என்ன ஆதாரம் சார்?" என்றேன் நான்.

"உங்கள் இணையப்பக்கத்தில் எழுதியுள்ளீர்களாமே"

"எனக்கு ஞாபகம் இல்லை சார், ஆனால் வைகோ மேல் ஒரு பொடா கேஸ் இருந்து தள்ளுபடியானதே.அதுல என்ன காரணம் சொல்லி தள்ளுபடி செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா சார்?" என்றேன் நான்.

"நக்சலைட்டுகள்....."

"யாராவது அப்படி தெரிந்தால் சொல்லுங்க சார் நானும அவங்கள பார்த்து சிலது கேட்கணும்"

"என்ன"

"ஏய்யா வன்முறையை கையில் எடுத்து வாழ்க்கையை பாழடிச்சுக்கறீங்க. புள்ளை குட்டிய ஒழுங்கா படிக்க வையுங்கடான்னு சொல்லலாம்னு தான் சார்"

"....."

"இந்த தகவல் எனக்கு முன்னமே வந்துடுச்சு சார்" என்றேன் நான்.

"அப்படியா" என்றார் அவர்.

"அனானி மிரட்டல் பின்னூட்டம் வந்துச்சு சார்" என்றேன்.

பிறகு அந்த அனானி காமெண்ட்டின் ஐ.பி அட்ரஸ், அதன்மூலம் நான் கண்டுபிடித்த ஆள் அட்ரஸ், நான் சந்தேகப்படும் நபரின் பெயர் ஆகியவற்றை கொடுத்தேன். மேலும் நான் மட்டுறுத்தி வைத்திருக்கும் நானூற்றி சொச்சம் காமெண்டுகள்,அதன் ஐபி சமாச்சாரங்கள் ஆகியவற்றையும் வாங்கிக்கொண்டார்.

என்னய்யா ஒரு பேரலல் அண்டர்கிரவுண்ட் உலகமே இருக்கு இங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டே தகவல்களை வாங்கிக்கொண்டார்.

"சிபிஐ சட்டத்தின்படி பொய் குற்றச்சாட்டு சொன்னால் என்ன பண்ணுவாங்க சார்? என்றேன்.

"சுளுக்குதான்", என்றார்.

"சார், எல்லாம் படிச்சவங்க. சாப்ட்வேர் ஆளுங்க ஏதோ தெரியாம இப்படி பண்ணீட்டாங்க", என்றேன் நான்.

"அதை நீ சொல்லாதே..உனக்கு ஒரு பொட்டைப்பய இந்த மாதிரி பேடித்தனமா மிரட்டல் விடுறான்னு ஏன் நீங்க புகார் பண்ணலை?", என்றார்.

பாய்ந்து எழுந்து அவர் வாயை பொத்தினேன்.

"சார் நாகரீகமா பேசுங்க, இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் கோபமா கூட நீங்கள் உபயோகப்படுத்துவது எங்கள் வலையுலக சட்டத்தின்படி தவறு",என்றேன் காட்டமாக.

"அடப்பாவி இவ்ளொ நல்லவனாடா நீ? என்ன பண்றது? ஏகப்பட்ட கேஸ். இதுக்கு நடுவுல இந்த மாதிரி அரைகிறுக்கன்களாள இம்சை. எங்களுக்கும் டென்சன் இருக்கும்தானே?"

டென்சன் ஆவாதீங்க சார் என்ற நான் அருகிலிருந்த தண்ணீர் ஜாடியை அவர் அருகில் தள்ளி வைத்தேன்.மடக் மடக் என்று ஒரே மூச்சில் தண்ணீரை காலி செய்தார்.

உண்மைத்தமிழன் சமாச்சாரம், தோழி ஒருவருடைய பிரச்சினை, ஐதராபாத் நண்பர் ஒருவரால் வந்த பிரச்சினை, சுகுணாதிவாகரின் பிரச்சினை, டோண்டு சாரின் பிரச்சினை என்றெல்லாம் நான் ஆரம்பிக்க

"த்ரோ ஹிம் அவுட்" என்றார் அவர்.

சட்டென்று விழித்துக்கொண்டேன் நான்.

14 comments:

Boston Bala said...

:)

பழையபடி ஃபார்முக்கு வந்ததில சந்தோசம் :)

நாமக்கல் சிபி said...

அட கனவா!

:)

Muthu said...

மொக்கை பதிவுகள் அவ்வபோது தேவையாக இருக்கின்றன.

பதிவு தலைப்பு ஒரு சினிமா பாடலுடையது.

மற்றபடி இது ஒரு கற்பனையே.ஆனால் ஐ.பி ட்ராக்கர் மற்றும் மட்டுறுத்தப்படாத பின்னூட்டங்கள் சமாச்சாரங்கள் உண்மை.:)

gulf-tamilan said...

// ஐ.பி ட்ராக்கர் மற்றும் மட்டுறுத்தப்படாத பின்னூட்டங்கள் சமாச்சாரங்கள் உண்மை.:)//

:(((

Pot"tea" kadai said...

காணவில்லை நெஞ்சம் கனவிலே கொஞ்சம்...

Anonymous said...

இது தான் உங்கள் கனவு என்றால் அது உண்மையாகவே நடந்து உங்களை சி.பி.ஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்க எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்திக்கிறேன்.

-சோத்தில் உப்பு போட்டு திங்கும் இந்தியன்

உண்மைத்தமிழன் said...

கனவா? நான்கூட ஏதோ நிசம்தான்னு நினைச்சு சந்தோஷமாயிட்டேன்.. ம்.. எதுனாச்சும் செய்யுங்க சாமி..

Anonymous said...

//கனவா? நான்கூட ஏதோ நிசம்தான்னு நினைச்சு சந்தோஷமாயிட்டேன்.. ம்.. எதுனாச்சும் செய்யுங்க சாமி..//

யோவ் நீதான் ஜோக்கருன்னு ஆயிப்போச்சி இல்லே. அப்புறம் என்ன இங்க கூத்து. நவுரு அப்பால.

Muthu said...

சோத்தில் உப்புபோட்டு திங்கும் இந்தியன் அவர்களே,

நீங்கள் சோறுதான் சாப்பிடுகிறீர்களா என்பதே சந்தேகம்தான். அப்புறம் என்ன உப்பு?

Muthu said...

காமெடி செய்து கொண்டிருந்த லூசை காணவில்லை.தம்பி.பயப்படாதே.அப்பப்ப வந்து காமெடி பண்ணு.எங்களுக்கு டைம் பாஸ் ஆக வேண்டாமா?

Muthu said...

:))

சந்திப்பு said...

முத்துவுக்கே இந்த சோதனையா? ஹி. ஹி. ஹி...

Anonymous said...

Did u say humor?? OMG!!! Alfred Hitchk' must come back alive.

Anonymous said...

உங்களை சிபிஐ கிட்டே மாட்டிவிடறதா சொன்ன பெங்களூர் அண்ணாத்தே அதே மாதிரி ஒரு மிரட்டலை தமிழ்நதிக்கும், லீனாராய் என்ற ஈழத்து தோழருக்கும் விட்டிருக்காரு. அண்ணாத்தே புதிய இணையதாதாக்கள் க்ரூப்பிலே இருக்குறதாலே இப்போ கொஞ்சம் தெம்பா தான் திரியறாரு.