Saturday, February 10, 2007

டோண்டு சமாச்சார்

மூத்த பதிவர் டோண்டுவை நேற்று வந்து சோட்டா பதிவர்கள்வரை அனைவரும் போட்டு பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்
ரொம்ப நல்லவர்தான்.எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்தான்.அதற்காக அடிப்பதற்கு ஒரு அளவில்லையா? எவ்வளவு நேரம் அவர் வலிக்காத
மாதிரியே நடிக்க முடியும்? விட்டுடுங்க போதும்......

என்றெல்லாம் நாம் சொல்ல நினைத்தாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படுவதாக இல்லை.யுத்த தந்திரம், யுக்தி என்று பலவாறாக பேட்டி
தருகிறார். அவரை தூண்டி விடும் நண்பர்களும் ( அப்படி யாரும் இருப்பதாக தெரியவில்லை.அப்படி நாம் நினைத்து கொண்டு இருக்கும் பல பதிவர்கள் அவரே தான் என்று இப்போதுதான் தெரிகிறது:))இப்போது அவரை கைவிட்டு விட்டார்கள். அவரை மிகவும் நம்பியிருந்த ஜோசப் சாரும் டோண்டுவின் மேல் வருத்தப்பட்டதை படிக்க நேர்ந்தது.


ஒன்றை அவர் புரிந்துக்கொள்ளவேண்டும். அனானி ஆப்சன்,எலிக்குட்டி சோதனை போன்ற சமாச்சாரங்களை பேசிய அவரே பல போலி
ஐ.டிக்களை வைத்து பின்னூட்டலாமா? பதிவிடலாமா? என்பது தான் அடிப்படை கேள்வி. அதர் ஆப்சன்,அனானி ஆப்சன் பதிவில் இருப்பதே குற்றம் என்று கூறிவிட்டு அவரே இப்படி செய்யலாமா?அவர் இணையத்தில் செலவிடும் நேரத்தை கணக்கிட்டால் பல பதிவுகளும் அவர் வைத்திருக்கக் கூடும்.


அடுத்த அதிர்ச்சியாக சாமியை கும்பிட்டு நரபலி கொடுப்பது போல் டோண்டுவிற்கு அவர் நண்பர்களே அவருக்கு ஆப்பு வைத்தார்கள் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. அவருக்கு இப்போது ஆதரவு தெரிவிப்பவர்களும் முகத்தை காட்டி ஆதரவு தெரிவிப்பதில்லை.

அதற்கு மேலும் உட்லண்ட்ஸ் மீட்டிங்கிக்கு வருகிறேன் என்று சொல்லும் நண்பர் ஒருவரின் ஆண்மை(!)க்கு தலைவணங்குகிறார். இது போன்று புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்று அவர் நினைத்து எழுதும் வாக்கியங்கள் தான் அவரை ஒழிக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது. இந்த ஆண்மை என்ற வார்த்தையும் அதற்கீடான பெண்மை என்ற வார்த்தையும் அவர் நினைத்த பதத்தில் உபயோகித்துள்ளேன். ஆன்மீக அன்பர்கள் முதற்கொண்ட பெண்ணியவாதிகள் அறசீற்றம் கொள்ள வேண்டாம்.:).

இணையத்தில் எழுதும் அனைவருக்கும் ஒரு எல்லை உண்டு. எதிரி அந்த எல்லையை மீறி செல்ல தயார் என்று அறைகூவும் போது நாம் ஆட்டத்தில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது என்பது பெரும்பாலோனோரின் நிலைப்பாடு. டோண்டு அந்த நிலையை எடுக்கவில்லை. அது அவர் உரிமை. ஆனால் அவர் மற்றவர்களையும் அவர் எடுக்கும் நிலையை எடுக்க தூண்டுகிறார். மேற்கண்ட ஆண்மை போன்ற வார்த்தைகளை அவர் உபயோகிப்பது அதற்குத்தான்.தைரியம் என்று எதை அவர் நினைக்கிறார் என்றே நமக்கு புரியவில்லை.


பெயர்களில் உள்ள சாதியை எடுப்பது சம்பந்தமாக அவர் வைக்கும் வாதங்களும் கோக்கு மாக்காக உள்ளன. வலைப்பதிவு சந்திப்பின்போது
பூபாலன் ஐய்யங்கார் என்று தன்னை அழைத்துக்கொள்ளலாமா என்று கேட்டாராம்.இவரும் சரி என்றாராம். இது கொஞ்சம் ஓவராக
இல்லையா டோண்டு சார்? சமுதாயத்தில் உள்ள எல்லாரையும் ஐயராகவோ ஐய்யங்காராகவோ ஆக்குவதா நமது வேலை?


என்னவோ போங்க....

Thursday, February 01, 2007

என்னன்னு சொல்வேனுங்கோ...

இரண்டு மாதங்களுக்கு முன் வலைப்பதிவுக்கு ஒரு மாதம் விடுமுறை விடுவதாக அறிக்கை விட்டு என் லட்சோப லட்ச வாசகர்களை நட்டாற்றில்( சரி சரி...விடுங்க) விட்டபோது இந்த இடைவெளி இவ்வளவு பெரிதாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை. மாட்டு லோன் தரும் தொழிலை விட்டுவிட்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்து இத்தனை நாட்கள் ஆகியும் வலையுலகிற்கு ( வலையுலகம் என்கிற போது வலையுலக அரசியல் என்ற வார்த்தையையும் கூடவே வருகிறது..கொடுமைடா சாமி) வர முடியாமலே இருந்த வந்தது. இனிமேல் குறைந்தது வாரம் ஒரு பதிவாவது எழுதுவது என்று முடிவு எழுத்துள்ளேன்.( பழைய வேகம் இருக்காது. இருக்கக்கூடாது என்று நினைத்துள்ளேன்)

கடந்த நவம்பர் வலைப்பதிவர் சந்திப்பின்போது எழுதுவதை நிறுத்தினேன். நாளை சனியன்று நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பை ஒட்டி மீண்டும் வலையுலகில் இயங்க துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். லேட்டஸ்ட் வலையுலக சென்சேசன் நண்பர் வரவணையான் செந்தில் சென்னை வருகிறார். அவர் நண்பரும் சமீப காலமாக வலையுலகில் ஆழமாகவும் அகலமாகவும்(?) உழுது வருபவரும், வலைப்பதிவு மீட்டிங் என்றாலே எட்டி குதித்து எஸ்கேப் ஆகும் கவிஞர் எழுத்தாளர் சுகுணா திவாகரும் இதில் கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன். பெங்களூர் கிளை ( சேச்சே..அந்த கிளை இல்லைங்க) சார்பாக நானும் செந்தழல் ரவியும் வர இருக்கிறோம்.ஆங்காங்கே இருக்கும் வலைப்பதிவாளர்கள் அனைவரும் சனியன்று(பிப்ரவரி 3ந்தேதி) மாலை நண்பர் லக்கியாரோ அல்லது பாலாவோ சொல்லும் இடத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

சமீபத்திய புத்தக கண்காட்சியில் படித்த சுவையான புத்தகங்களைப் பற்றி ஒரு கலைந்துரையாடல் நடத்தலாம் என்று நான் நினைக்கிறேன். மற்ற நண்பர்களும் ஏதாவது திட்டம் இருந்தால் கூறலாம்.


மற்றபடி இந்த இரண்டு மாதங்களில் பலமுறை வலையுலகில் எழுதலாம் என்று கை பரபரத்தாலும் சொந்த வேலைகளும் அலுவலக ஃபயர்வால்களும் என்னை தடுத்து வைத்தன.பல நண்பர்கள் மூலமாக வலையுலக கலவரம்,அடிதடி,குத்துவெட்டு ஆகியவை பற்றிய தகவல்கள் கேள்விப்பட்டேன். இவர் தான் அவர் , அவர் தான் இவர் என்று எனக்கு இந்த இரண்டு மாதத்தில் எனக்கு இலவச விளம்பரம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.ஒரு நண்பர் நான் தமிழ்மண ஆலோசனை குழுவில் இருப்பதாக ஒரு போடு போட்டாராம். அடடே நமக்கு இப்படி ஒரு விளம்பரமா என்று சந்தோஷப்படுவதற்கும் தமிழ்மண குழுவினரின் மொத்த பெயரும் வெளிவந்துவிட்டது. எனக்கு வருத்தம்தான்.


ஓன்றிரண்டு பூங்கா இதழ்களை படித்தேன். தமிழ்மண பூங்கா பல்வேறு தடைகளை தாண்டி தரமான முறையில் வளர்ந்து வருவது சந்தோஷமளிக்கிறது.



இதோ வண்ட்டண்ணா.....