Saturday, November 01, 2008

சின்ன சோ சலசலப்பு, எங்கு முடியுமோ?

அதிமுகவில் தொடர்ந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்படும் எஸ்.வி்.சேகர் இன்றைய தினம் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்திால் தெய்வகுத்தத்திற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருப்பார். நல்ல வேளை.அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.

ஒரு பேட்டியில் அவர் கூடியவிரையில் எம்.பி ஆக இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் ஒருவேளை பி.ஜே.பியில் சேரலாம் என்று தெரிகிறது.

அவர் எப்படி சின்ன சோ ஆவார் என்று கேட்பவர்களுக்கு பதில் அவர் கொடுத்த பேட்டியில் உள்ளது. கீழே படியுங்கள்.

கேள்வி:சுயேட்சையாக நின்று தோற்ற நீங்கள் எம்எல்ஏவாக இருப்பது அதிமுகவால்தானே?


பதில்: இருக்கலாம். ஆனால் நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான். அது என் சொந்த பலம். தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் வெற்றிதானே!

இனிமேலும் யாருக்காவது சந்தேகம் இருக்கா? சோ.ராமசாமிக்கு வயதாகிவிட்டது. சேகருக்கும் சோவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தமிழகம் எங்கும் பரவலாக விஷ விதைகளை தூவ அவருக்கு பிறகு தகுதியுள்ள ஒரே ஆள் எஸ்.வி.சேகர். டோண்டு சாரையும் சேர்த்துகிட்டால் துக்ளக் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது.

Wednesday, October 29, 2008

கொழும்பு மீது விமானத்தாக்குதல்

ஒரு மணி நேரத்திற்கு முன்பு புலிகள் கொழும்பு அருகில் உள்ள ஒரு எண்ணைய் சேமிப்பு கிடங்கினை விமானம் மூலம் தாக்கியதாக தகவல் வந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

Sunday, October 26, 2008

கைது பண்ணிடுவாய்ங்களோ?

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். "தமிழ்நாட்டில் நிறைய பேரை கைது பண்ணியிருக்காங்களாம். நம்ம பிளாக்கை எல்லாம் பார்த்தா நமக்கும் ஆப்புதாம்ல", என்றார்.

"அடங்கொய்யால! நான் பதிவு எழுதுவதை விட்டே வருஷம் ஒண்ணாச்சே, என்னத்த எப்ப எழுதினேன்னு தெரியலையே", என்றேன்.

விளையாட்டு ஒருபுறமிருக்க இன்னொரு நண்பர் கலைஞர் இரண்டு திரைப்பட இயக்குநர்களை கைது செய்ததற்கு ஒரு புது விளக்கம் கொடுத்தார். வித்தியாசமாக இருந்தாலும் கலைஞரின் அரசியல் தந்திரங்களை வைத்து பார்க்கும்போது இப்படியும் இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது. அதாவது திரைப்பட இயக்குநர்களை கைது பண்ணிணால் தான் நம் தமிழ்மக்களிடம் பிரச்சினை சீக்கிரமாக சென்று சேருமாம் (Reach). அடங்கொக்கமக்கா... இப்படியும் இருக்கா?