Thursday, April 14, 2011

கலைஞரே உங்க அளும்புக்கு அளவே இல்லையா?

நேற்று ரஜினியுடன் சோ்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்ததாக தகவல்கள் வருகின்றன. இது ஓட்டு போட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா என்று தெரியவில்லை. வழக்கமாக மைக் பார்த்தவுடன் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமலே உளறுவது ரஜினியின் பாணி. நல்லாட்சி வேணும், யார் முதல்வர் என்று தெரியாது என்றெல்லாம் உளற போக கலைஞர் அதிர்ச்சியாகி இந்த வேலையை செய்துவிட்டார் போல.

ஏன்யா எனக்கு ஓட்டு போடலை என்று கேட்காமல் ரஜினியை மூன்று மணிநேரம் பொன்னர் சங்கர் படத்தை பார்க்கவைத்து அவ்வபோது பேசி தூங்காமல் தடுத்து கடைசியில் படத்தை பாராட்டியும் பேசவைத்து கடுமையான் டார்ச்சரை கொடுத்துவிட்டார் ). இதுக்கு பேசாம திமுகவிற்கே ஓட்டு போட்டிருக்கலாம் என்று புலம்பினாராம் ரஜினி.

Wednesday, April 13, 2011

தினமலர் திமுக கலக்கல் லடாய்

தினமலர் தன் வரலாற்று கடமையை மிகச்சரியாக ஆற்றிக்கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தீடீர், குபீர், தடால் தமி்ழார்வலராக மாறி அது போடும் செய்திகள் ஏதோ தமிழ் வலைப்பதிவுகள் படிப்பது போலவே உள்ளது.

கருணாநிதிக்கு கடிதம் எழுதிய நடேசன் கொலை என்ற ரீதியில் ஒரு செய்தி. ஏதோ கடிதம் எழுதிய நடேசனை கத்தியை எடுத்து சதக் சதக் என்று கருணாநிதியே கொன்று விட்டதை போல் ஒரு தொனி. என்ன வில்லத்தனம்?

பென்னாகரத்தில் தேமுதிக ஆளை அடித்து கொன்ற திமுகவினர் என்று ஒரு செய்தி. விக்கிரவாண்டியில் செத்தவர் எந்த கட்சி என்றே போடவில்லை. என்ன ஒரு கொலைவெறி?

Wednesday, April 06, 2011

புரட்சித்கலைஞரின் தில்லு

இன்று கோவையில் நடந்த அதிமுக கூட்டணி கட்சியினரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் இவரும் ஜெயலலிதாவும் ஒரே கூட்டத்தில் பேசமுடியுமா என்று ஒரு சேலஞ்சாக வைத்தும் கேப்டன் அஞ்சவில்லை. ஜெயலலிதாவுக்கு நான் பம்ப போவதில்லை என்று கூறிவிட்டார். மொக்க மேட்டர்களுக்கெல்லாம் இன்று ஜெயா காலி்ல் விழுந்துகிடக்கும் மானஸ்தர்களுக்கு இது செருப்படி. ஆனால் எந்த சென்மமும் திருந்த போவதில்லை.

ஆனா அதிமுக காரர்கள் ஓட்டு விஜயகாந்த்துக்கு விழுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். மேலும் நாஞ்சில் சம்பத் என்ற காமெடி பீஸ் அதிமுக வை எதிர்த்து பேசியிருப்பது மதிமுகவிற்கு மிச்ச மீதி உள்ள ஓட்டுக்கள் திமுகவிற்கு போகும் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. எலக்சன் கூத்து இன்னும் முடியவில்லை.

அந்த கருத்துகணிப்பு இந்த கருத்துக்கணிப்பு என்று என்னதான் போட்டாலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அவ்வளவு சுலபம் இல்லை. நாம் ஆவலுடன் எதிர்பபார்க்கும் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் வந்தே விடுமா?

Tuesday, April 05, 2011

டாட்டாவும் ராடியாவும்

நேற்று பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜாரான ராடியா சரியான பதில்களை தரவில்லையாம்.ஆனால் ரத்தன் டாட்டா ரொம்ப ஃபிராங்காக பேசினாராம். தகவல்கள் வருகின்றன.

அட முட்டா பசங்களா? இதுல என்ன ஆச்சர்யம்.ராசா ஆட்டைய போட்டதா சொன்ன பணத்துல ஒரு கணிசமான லாபம் இந்த டாட்டா,அம்பானி போன்ற தொழிலதிபர்கள் அடிச்சிருக்காங்கன்னு ஊருக்கே தெரிந்தாலும் அவர்கள் மேல் இந்த நாடு கை வைக்காது(வைக்க தைரியம் இருக்காது) என்று டாட்டாவுக்கு தெரியும். ராடியா என்ன டாட்டாவா? அதுதான் அந்தம்மா அடக்கி வாசிச்சிருக்கு. டாட்டா உங்களால் எதுவும் புடுங்க முடியாதுன்னு சொல்லாம சொல்றாரு. அவ்வளவுதான் மேட்டர். இப்ப நம்ம நாகரீக் கோமாளிகளான ஆங்கில செய்தி சேனல்களை பார்க்கணும். என்ன உளற போரானுங்களோ?

அண்ணன் சீமானின் குயப்பம்

சீமான் அதிமுகவிடம் சென்று காங்கிரசுக்கு எதிராக பரப்புரை(?) செய்வதற்காக உதவி (பொட்டி?) கேட்டதாகவும் அதற்கு ஜெயலலிதா போய் வேறு வேலையை பார் என்று கூறிவிட்டதாகவும் அதிமுகவின் நாளேடு தினமலர் தெரிவித்துள்ளது.இந்த தேர்தலின் ஒரு வித்தியாசமான காட்சி இது.

அதிமுக தீடிர் தமிழார்வல கோஷ்டிகளிடம் நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் என்றாலும் இவர்கள் ஆணியை தேடித்தேடி புடுங்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இது அண்ணன் சீமானுக்கு மட்டும் அல்ல. இணைய காகித புலிகளும் இதையே செய்கிறார்கள். இதற்கு காரணம் கண்டுபிடிக்க நாம் ஒன்றும் ரொம்ப சிந்திக்க வேண்டியதில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இன்னைக்கு பால், நாளைக்கு திவசம் என்றெல்லாம் புலம்பியும் எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தலிலாவது ஆளுங்கட்சி தோற்று அதற்கு காரணம் தங்களுடைய பரப்புரை தான் என்றும் தாங்கள் கூறும் காரணம்தான் என்றும் இல்லாத செல்வாக்கை காட்டி கொள்ளலாம் என்ற வெட்டி விளம்பர ஆசைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

மானஸ்தர்கள் எல்லாம் விஜயகாந்தின் உளறல்களுக்கும் ஜெயலலிதாவின் ஆணவபோக்கிற்கும் அருஞ்சொற்பொருள் போட ஆரம்பித்துவிட்டதும் பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் இளைய புரட்சித்தலைவி(?) குஷ்புவை ஆபாசமாக பேசி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் படா தமாசாக இருக்கிறது. அதிமுகவும் தேமுதிகவும் கனிமொழியின் ஸ்பெக்ட்ரம் உதவியுடன் வென்றாலும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஏதோ தாங்களே இந்த வெற்றியை வென்று கொடுத்தது போல் பேச ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கும்போது பகீரென்று தான் இருக்கிறது.

இன்னும் பல கூத்துக்கள் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது. விஜயகாந்தைவிட காங்கிரஸ் கூட்டணி தான் ஜெயாவுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். அதைத்தான் காங்கிரசும் ஜெயாவும் திரைமறைவில் முடிவு செய்துள்ளார்கள். அது நடக்கும்போது காகிதபுலிகள் என்னென்ன சொல்வார்களோ? இவர்கள் காமெடிக்கு அளவே இல்லையா?

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் காகித புலிகள் பதில் வைத்திருப்பார்கள். என்ன பெரிய பதில்? முரண்படுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்பதுதான் பதில். சுருக்கமான ஆனால் ஃஎபெக்டிவ்வான பதில். காலத்தால் சோதித்து பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள ஸ்டேட்டரஜி இது. இதற்கு உங்களால் பதில் சொல்லவே முடியாது என்பதல்ல விஷயம். பதில்(உண்மை) சுடும்.அது இவர்கள் கூச்சலை அதிகப்படுத்தவே உதவும் என்று நமக்கு நன்றாக புரிந்து அடங்கிவிடுவோம். அதுதான் இவர்கள் இருப்பை தக்க வைக்கிறது. வாழ்க வையகம்.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?