Monday, March 28, 2011

தேர்தல் கருத்து க(தி)ணிப்புகள்

தமிழக தேர்தல் வந்தேவிட்டது. இந்த முறை எந்த பத்திரி்க்கையும் கருத்து கணிப்பு நடத்தவில்லை. தோ்தல் கமிசனின் தடை தான் காரணம். ஆனாலும் விகடன் ஒரு கருத்து கணிப்பை குத்துமதிப்பாக வெளியிட்டுள்ளது. எல்லாரும் எதிர்ப்பாத்தபடி அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அது கூறுகிறது. நக்கீரன் திமுக ஜால்ராவாக ஆவதற்கு முன்னால் கருத்து கணிப்பை தரமாக வெளியிட்டதாக எனக்கு ஞாபகம் உள்ளது.

திடீர் தமிழார்வலர்கள் மற்றும் தலையை கடல் கடந்து அடகு வைத்தோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கள் ஆவலை கருத்து கணிப்பாக மாற்றி வெளியிட்டு வருகின்றனர். இந்த தேர்தல் அந்த தேர்தல்னு மாத்தி மாத்தி இன்னைக்கு பால், நாளைக்கு திவசம்னு ஏதாச்சும் சொல்லிட்டே இருந்தா எப்படியும் ஒரு தேர்தல்ல நாம சொல்றது காக்கா பனம்பழம் கத மாதிரி நடந்துராதாங்கற ஏக்கம் தான் அன்னார்களது நம்பிக்கைக்கு ஒரே அச்சாணி. தப்பி்ல்லை. நடக்கலாம்தான்.

தமிழக ட்ரெண்ட் என்ன? மக்கள் பரவலாக என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றெல்லாம் ஒரு முறை ஊருக்கு போய் பார்க்கவேண்டும்.


*******************
இனிமேல் தொடர்ந்து வாரம் ஒருமுறையாவது எதையாவது எழுத வேண்டும். கடந்த பதினைந்து தேர்தல்களாக நாம் தேர்தல் போது மட்டும் எழுதி மக்கள் மனதில் பெரிய விஷம புரட்சியை உண்டு பண்ணுவதாக நண்பர்கள் புகார் செய்கிறார்கள்.

*******************

வடிவேலு பொழைப்பை பார்க்காமா இதெல்லாம் தேவையா? தமிழக மக்கள் யாரும் இதை ரசிப்பதாக தெரியவில்லை. விஜயகாந்த் ரீஜணடா இதெயெல்லாம் நான் கண்டுக்கறது இல்லைன்னு சொன்னது மக்கள் மத்தியி்ல் எடுபடுது. ஏன்யா வடிவேலு? ஆப்பை தேடிப்பார்த்து உட்கார்ற மாதிரி இருக்கே?

Sunday, March 27, 2011

ஆனந்தவிகடன் திருந்திவிட்டதா?

பல மாதங்களாக திமுகவை ஆதரித்துக்கொண்டு இருந்த ஆனந்தவிகடன் குழுமம் இப்போது ஆளுங்கட்சியை தாக்கி எழுத ஆரம்பித்துவிட்டது. நககீரன் கோபாலுக்கு எப்ப புத்தி வரும்னு தெரியவில்லை. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் ஞாபகம்.பத்தாவதோ என்னவோ படிக்கிறேன். நான் இந்த ஜீ.வி, தராசு,(நக்கீரன் அப்போது இருந்ததா என்று ஞாபகம் இல்லை) எல்லாம் படிக்க ஆரம்பித்த நேரம். ஒரு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நான் என் தந்தையிடம் கேட்டேன்.

“என்னப்பா இது இந்த ஜீ.வி, தராசு எல்லாம் திமுக ஜெயிக்கறதுக்கு முன்னாடி கருணாநிதியை பாராட்டி எழுதினாங்க.இப்ப திட்டி எழுதறாங்க”

”எப்பவும் பத்திரிக்கைங்க ஆள்றவங்களை எதிர்த்துத்தான் கண்ணு எழுதணும்” என்றார் என் தந்தை ( anti-establishment என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்). சரியான உதாரணமாக எக்ஸ்பிரஸ் குழுமத்தை கூறினார்.

நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. துக்ளக் சோ மாதிரி ஆளுங்க திமுக மாதிரியான கட்சிங்க எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதைப்பற்றியே தாக்கி எழுதறதை ஒரு பக்கம். அவர் தான் ஒரு தலைமுறையின் கோபத்தையும் ஆற்றுப்படுத்தும் புனிதப்பணியை செய்து வருகிறார். விடுங்க.

ஆனால் தமிழகத்தின் பல பத்திரிக்கைகளும் இப்போது சைடு எடுத்துவிட்டன.இந்த நக்கீரன் கோபால் ரொம்ப ஜால்ரா தட்டுகிறார். ஆட்சி மாற்றம் நடந்தால் கோபாலுக்கு விழும் ஆப்பு மிக ஆழமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. காசு பணம் சோ்ந்தாலே மனுசனோட கொள்கை கருமம் எல்லாம் காணாம போயிடுது. நெடுமாறன் பொசிசன் எடுத்துட்டாரு ( இவர் பத்திரிக்கை நடத்துல). இவர் தப்பிச்சாரு. காட்டுராஜா பணத்தை இவரே வச்சிக்கலாம்.ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்ன கொடுமைடா சாமி?

திமுக தோல்வி உறுதி!

தோ்தல் முடிவு என்னவாகுமோ என்ற குழப்பம் ஒருவழியாக இன்று முடிவுக்கு வந்தே விட்டது. நேற்று வரை யார் வெல்வார் என்று தெரியாமல் இருந்த தமிழக தோ்தல் நிலவரம் இன்று இளைய தளபதியின் முடிவிற்கு பிறகு மிக தெளிவாகிவிட்டது. நேற்று வெளியான எஸ்.ஏ.சியின் புதிய படத்தின் மாபெரும் வெற்றியும் அதை தொடர்ந்த அவருடைய மக்கள் இயக்கத்தின் அதிமுக ஆதரவும் மே 13 முடிவுக்கு கட்டியம் கூறுகின்றன்.

சந்தேகம் இருப்பவர்கள் கடந்த காலத்தில் ரஜினி வாய்ஸ் கொடுத்ததையும் அதை தொடர்ந்து மக்கள் அதை நடத்தி காட்டியதையும் நினைவுப்படுத்திக்கொள்ளவும்.

Sunday, March 20, 2011

அதிமுகவாகி போன திமுக

கடந்த வருடம் ஒரு நண்பரிடம் ஜீடாக்கில் பேசும்போது சொன்னேன். திமுக அதிமுகவாக மாறுவது சுலபம். அது ஆபத்தும் கூட என்று. நண்பர் யார் வளர்ந்தாலும் விஜயகாந்த் வளரக்கூடாது என்றார்.நான் விஜயகாந்த் வளருவதில் என்ன பிரச்சினை என்றேன்.

சில மாதங்களுக்கு பிறது இப்போது திமுக அதிமுகவாகிவிட்டது. எப்படி என்று விளக்கமாக பிறகு பார்ப்போம். விஐயகாந்த் வளரக்கூடாது என்று நண்பர் கூறியது தனது கட்சியின் பார்வையைதான் என்பது இப்போது புரிகிறது. விஜயகாந்த் வளர்ச்சிக்கு கனிமொழியின் பங்கு மிகப்பெரிது.அதையெல்லாம் இந்த தேர்தல் முடிவுகள் முடிவு செய்யும்.

இந்த தேர்தல் தரப்போகும் முக்கியமாக தீர்ப்புகள் என்ன?

1. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது என்ற குற்றச்சாட்டை பற்றிய ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டி வரும்.

2. திமுக ஸ்பெக்ட்ரமில் ஒரு பெரிய தொகையை ஆட்டையை போட்டது உண்மை என்பது காங்கிரஸ் வாங்கிய சீட் கணக்கிலேயே தெரிந்துவிட்டபடியால் மக்களுக்கு வேற எந்த ஆதாரமும் தேவையில்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்.

3. விஜயகாந்த் வெல்லப்போகிற சீட்கள் எண்ணிக்கை வருங்கால தோ்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மேலும் திமுகவின் இன்றைய சரிவுக்கு என்ன காரணம் என்பதைப்ற்றி அடுத்த பதிவில் பார்ப்பாம். (இந்த சரிவு தேர்தல் வெற்றி தோல்வி பற்றியது அல்ல.ஏனெனில் தோ்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றுதான் நான் நினைக்கிறென்(

வைகோவிற்கு ஆப்பு - தப்புவாரா?

கடந்த சில நாட்களாக வைகோவிற்கு அம்மாவினால் வைக்கப்பட்ட ஆப்பை பற்றித்தான் தமிழ் கூறு நல்லுலகு பேசிக்கொண்டு இருக்கிறது. அன்புத்தம்பி சீமான் என்ன கருத்து சொல்ல போகிறார் என்று தீடிர் தமிழார்வலர்கள் (இணைய பி.ஆர்.ஓக்கள்) உள்பட நெடுநாள் தமிழார்வலர்கள் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள். சீமானுக்கு பேதி புடுங்கியிருக்கலாம். அனைவரும் எதிர்பார்க்கும்படி அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உள்ளே போக போகிற ஆள்களில் சீமான் முக்கியமானவர் இல்லையா? இப்போதிருந்தே வாயை அடக்கி இருக்க பழகுகிறார்...புத்திசாலிதான்...லேசாக உதார் விடலாம் இல்லாட்டி தெரிஞ்சிரும்.

ஆனால வைகோவின் தகுதிக்கு எட்டு சீட்டே அதிகம்தான் என்பது என் சொந்த கருத்து. அதிமுக இந்த முறை ஸ்பெக்ட்ரம் புண்ணியத்தில் (தமிழக மக்கள் எப்போதும் போல் ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை வழங்கினால்) தனக்கு ஆட்சி வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் என்னைப்பொறுத்தவரை கம்யுனிஸ்ட்டுகளை கூட கழட்டி விடலாம். மற்றபடி ஸ்பெக்ட்ரம் சர்ச்சை (நன்றி பத்ரி) இந்த தோ்தலில் மக்களை கவரவில்லை என்றால் இந்த கணக்கு செல்லாது.


கிரைண்டர் மிக்சி என்று நாடெல்லாம் பரபரப்பாக இருக்கிறது. கடந்த முறை தந்த டிவியை நடுரொட்டில் தூக்கி எறிந்த பதிவர்களின் பதிவுகளில் திமுகவின் அடாவடி சலுகைகளை எதிர்த்து அறச்சீற்றத்துடன் பதிவுகள் வருகின்றன்.சினிமா கலைஞர்களுக்கு வீட்டு மனை என்றவுடன் பல்லிளித்தவர்கள் உள்பட. திமுக என்ன கொடுத்தாலும் கூட நூறு ருபாய் நான் தருகிறேன் என்று சிம்பிளாக இதை சமாளிக்க அம்மாவுக்கு தெரியாதா என்ன?

நாம் முன்னமே கூறியபடி ராமதாஸ் இந்தமுறை திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டார். பல நாட்களுக்கு முன்னமே லிப்ஸ்டிக் அடித்து,பவுடரோடு ரோட்டிற்கு வந்து தனது செல்வாக்கை பற்றி பேச ஆரம்பித்தவராயிற்றே? முழுகும் படகான திமுகவில் இருந்து காங்கிரசோடு சோ்ந்து யாரும் சுதாரிக்கும் ( திருமா என்று படிக்கவும்) முன்பு டாக்குடர் எஸ்கேப் ஆகப்போகிறார். ஆனால் அவர் ஆதரவு ஆட்சி அமைக்க தேவையில்லை என்ற நிலைமை அம்மாவுக்கு வந்தால் அவர் பொறுப்புள்ள எதிர்க்கட்சி ஆக்கப்பட்டுவிடுவார். அன்புமணி எம்பி சீட்டும் பாதிக்காம இதுக்கு காய் நகர்த்துறது தான் இதுல டாக்டரோட சாமர்த்தியம்.

தோழர்களை இந்த முறை கோவணத்தோடு தப்பி தலா பத்து சீட் வாங்கியதே மிராக்கிள்தான். ஆனால் எத்தனை எம்மெல்லே தேறும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணி மாறும்போது இவங்களும் பொறுப்புள்ள எதிர்க்க்ட்சிதான். நடுவில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி என்று பேச்சு நடக்கும்போது அதிமுக அலுவலகத்தில் பேச்சு நடத்திக்கொண்டு இருந்த தோழர்களுக்கு கொடுப்பட்ட காபி பாதியில் பிடுங்கப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. நல்லவேளை ஆனாலும் வலிக்காத மாதிரியே இருக்காங்கப்பா...

தமிழ்வெளியை பார்த்தீங்களா?