வழக்கமாக சினிமா விழாக்களிலோ அல்லது அரசியல் கலந்த சினிமா விழாக்களிலோ இரண்டு பேர் பேச்சை நான் விடாமல் கேட்பதுண்டு. ஒருவர் கலைஞானி கமல். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.
முக்கியமான காரணம் என்னவென்றால் இருவரும் கன்னாபின்னாவென்று உளருவார்கள் என்பதும் கேட்பதற்கு படு சுவாரசியமாக இருக்கும் என்பதுதான். அதுவும் ஒருவர் " திரையில் படு யதார்த்தமாக வரும் கமல் மேடையில் படு செயற்கையாக நடிப்பது ஏனென்று தெரியவில்லை" என்று கூறியது ரொம்பவே உண்மை என்று நினைத்தேன். சூப்பர் ஸ்டார் சொல்லவே வேண்டாம். தங்கமணி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு பேசுவார். ( "கூட" என்ற பதம் அவர் அரசியல் அறிவு பற்றி அறியாதவர்கள் கூட என்ற அர்த்தத்தில).
இப்போது லிஸ்ட்டில் ஒன்று கூடுகிறது. முன்னாள் அல்டிமேட் ஸ்டார். சத்தமில்லாமல் போய் கருணாநிதியிடம் சரணடைந்துவிட்டு வந்துவிட்டதை மறந்தோ மறைத்தோ மக்கள் அவருக்கு வீரர் பட்டம் சூட்டுவது காமெடியாக உள்ளது.
அரசியல்வாதிகளுக்கு (கருணாநிதி, ஜெயலலிதா) போன்றவர்களுக்கு சற்றும் குறைவில்லாத மக்கள் நல விரும்பிகள் தான் இந்த நடிகர்கள். குறிப்பாக இந்த முன்னணி நடிகர்கள். இவர்கள் சம்பளம், டீலிங்ஸ் எல்லாம் என்ன? எழு கோடி, எட்டு கோடி அளவிற்கு முண்ணனி கதாநாயகர்களின் சம்பளம் எகிறிவிட்டதாக சொல்கிறார்கள். வெட்கமில்லாமல் பலகோடி வாங்கிவிட்டு அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு டிக்கெட்டை ஐநூறு ஆயிரம் என்று விற்பதை ஊக்கப்படுத்திக்கொண்டே திருட்டு விசிடி வாங்காதீங்க என்று வாயகிழிய பேசும் மக்கள் நல பணியாளர்கள் தான் இவர்கள். அதற்கு அரசியல்வாதிகளின் உதவி வேண்டுமாம்.
கூட்டுகளவாணிகளுக்குள் நடக்கும் சண்டையை பார்த்து சிரித்துவிட்டு போவதுதான் முறை. அனைத்து தரப்பினரும் ஆட்டம் போடலாம் என்ற அளவில் இன்று தமிழகத்தில் அனைவரும் எது கேட்டாலும் தரும் அளவிற்கு கருணாநிதி இறங்கியதற்கு என்ன காரணமாக இருக்கும்?
அவருடைய கடைசி ஆட்சிகாலம் என்பது மட்டும் காரணமா?
மாறன் சகோதரர்களுக்கு அளவிற்கு நம் குடும்பமும் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து களம் இறங்கியுள்ள அவர் குடும்ப வாரிசுகள் காரணமா?
உருப்படியாக ஆட்சி செய்தபோது பணம் புழக்கம் இல்லை..மசு* புழக்கம் இல்லை என்று ஆப்படித்த மக்களின் மீதான நம்பிக்கையா?
இந்த முறை கருணாநிதி ஆட்சிக்கும் கடந்த முறைகளில் அவர் நடத்திய ஆட்கிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி பிறகு எழுதலாம். அதிமுக திமுக ஆகமுடியாது என்றும் ஆனால் திமுக அதிமுக ஆகமுடியும் என்றும் நான் முன்பு ஒரு முறை நண்பர் ஒருவரிடம் கூறியிருந்தேன். அது நடப்பதை நேரில் பார்க்க முடிகிறது. திமுக அதிமுக ஆகிறது. ஆனால் அதிமுக திமுக ஆக முடியாது என்பது தான் உண்மை. இது தமிழகத்தின் எதிர்காலம் பற்றி யோசித்தால் பகீரிட வைக்கிறது.
மற்றபடி இன்று கருணாநிதி வெறுப்பில் உள்ள அனைவரும் அஜீத் ரசிகர் மன்றத்தில் சேருவது ரொம்ப சுவாரசியமான சினிமா பார்ப்பதை போல் உள்ளது. இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை. விஜயகாந்த் கட்சியில் சேரலாமே?