இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளை (தமிழ் மக்களை) அழிக்க இறுதி யுத்தம் நடத்தும் இலங்கை அரசை தடுக்க இந்திய அரசாங்கம் முன்வரவில்லை என்பதும் இதற்கு முழுமுதற்காரணம் கருணாநிதிதான் என்றும் பரவலாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது.
இந்திய அரசின் நிலை கூட ஏதோ ஒரு கட்சியின் நிலை என்றும் சோனியாவில் தனிப்பட்ட பகை போல் சித்தரிக்கப்படுவது எனக்கு சரியாக படவில்லை. அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்.
மத்திய அரசின் ஆட்சிக்காலம் இருப்பது ஓரிரு மாதங்கள்.அதற்கும் கருணாநிதி என்ன செய்ய முடியும் என்று மக்கள் அவரை கும்முகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. தமிழ் மக்களின் ஒரே காவலனாக இப்போதெல்லாம் தன்னை நினைத்துக்கொள்ளும் ராமதாசு கச்சிதமாக காய்களை நகர்த்துகிறார்.வீராவேசமாக பேசுகிறார்.ஆனால் பதவி என்று வந்தால் முதலில் கருணாநிதி பதவி விலகட்டும் என்கிறார். நாளைக்கே கருணாநிதி முற்காலத்தில் இழந்ததுபோல் ஆட்சியை இழந்தால் ராமதாசு ராஜுபக்சே தங்கச்சியின் கட்சியான அதிமுக கூட்டணிக்கு போகமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பது தான் நிஜம். அது கருணாநிதிக்கும் தெரியும்.
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.
நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.
அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா நாளைக்கே காங்கிரசு காரன் அதிமுக கூட கூட்டணி போடுவான். டாக்டர் அய்யாவும் தான்.
மக்கள் நிலை என்ன என்பதுதர்ன இங்கே முக்கியம். எத்தனை அரசியல் கட்சிகள் உளமார ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றன? எழுச்சி எப்படி வரும? மக்கள் வீதியில் இறங்கி போராடினால் நடக்கலாம்.
******************
Wednesday, January 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
:)))
One of the best comedy posts of the year :))))))
one of the best :))
ஆமாண்ணே, நீங்க சொல்றதுதான் சரி.
கருணாநிதிக்கு இப்படி ஒரு ஆதரவு பதிவு ...
சரி உங்கள் கட்சி பாசம் அது அதற்கான என்ன செய்ய முடியும் செயலலிதா செய்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனமாக இருந்தாலும் அவர்கட்சிக்காரர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் அது போலத்தான் இதுவும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் கட்சிக்காரரா எனத்தெரியாது, ஆனால் நீங்கள் அவரின் ஆதரவாளர் என்பதை நான் நீங்கள் எழுதிய பதிவுகளிலிருந்து நான் அறிந்தவை,
வடமாநிலத்தவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பதற்காக 5 எம்.பிக்கள் பதவி விலகினார்கள் தமிழகத்தில் அப்படியா? இல்லை, எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நலனுக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும். என்பது இவர்களுக்கு முக்கியம்,
மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வோம் என எப்போதோ சொல்லி இருக்கலாம் இப்போது 3 மாதம் மத்திய ஆட்சி மிச்சம் இருக்கிறது என்பது வேறு விசயம், கருணாநிதி இந்த கூட்டணியின் முக்கிய தலைவர் அவர் சொன்னால்தான் மத்திய அரசு சிந்திக்கும் இல்லையெனில் கவலைப்படாது என்பது உண்மை, ஆனால் உண்மையில் தமிழக ஆட்சியை இழக்க வேண்டியிருக்க வேண்டியிருக்கும் எனபதாலேயே மத்திய அரசுக்கு ஆதரவு விலக்கிக் கொள்ளவில்லை. மத்திய அரசு கருணாநிதியின் கருத்தை உணர்ந்த பின்பே துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வெளிப்படையாக கொடுக்கிறது என்பது உண்மை,
கருணாநிதி ஒரு வலிமையான சக்தி அவர் ஆட்சிக்கு ஆதரவு விலக்கிக் கொண்டால் மத்திய அரசு கவிழும் ஆனால் பா.ம.க விலகினால் மத்திய அரசு வருத்தப்படாது எனெனில் 5 எம்பிக்கள் அதற்காக பா.ம.க சரி என்று சொல்ல வில்லை பா.ம.க விலகினால் தி.மு.க விற்கு அது நெருக்கடியாக அமைந்து வேறு மாதிரியாக கூட நிலைமை மாறி இருக்கலாம்.
எதுவுமே இழக்க இயலாமல் இருக்கும் ம.தி,மு,க கூட தனது எம்.பிக்களை பதவி விலக்கிக் கொள்ளவில்லை, இதுதான் உண்மை தமிழக அரசியல் தலைவர்கள் தமிழர்களின் ஏமாளித்தனததை புரிந்து கொண்டவர்கள், எனவே தான் தமிழன் எங்கு சென்றாலும் உதை வாங்கி சாகிறான், ”இது தமிழனின் சாபக்கேடு”
one of the best :))
yes there are many more posts like Mu.ka's final deadline etc.,
what is surprising is even at this time you were able to write posts of these kind. People like you can support Mu.Ka, but you should do some constructive criticism.
if there is no difference between you and the street level dmk cadre what is the use
i am surprised seeing your post that too from you whom i thought will be a sincere Tamil Supporter.
Alas, you disappointed not just me about also your own stand on Tamil issues
முத்து, உங்கள் மேல் மதிப்பு வைத்திருக்கிறேன், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதிருங்கள் என்று மட்டும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கருணாநிதியைக் காப்பாற்ற வேண்டியதில்லை. அது அவருக்கு நன்றாகவே தெரியும்.
முத்து,
தமிழ்ச்சமூகம் 'வாய்ப்பந்தல்' வார்த்தை அலங்காரங்களுக்குள் சிக்கியிருக்கிறது. ஈழம் விசயத்தில் கருணாநிதியின் கடந்த ஒரு வருட அறிக்கை, பேச்சுகள், கவிதை தொடர்புபடுத்தினால் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களை விலக்குவதாக வெட்டிப்பேச்சு பேசும் முன்னர் கருணாநிதிக்கு ஆட்சி கவிழும் என்பது தெரியாதா? அவ்வளவு அப்பாவியா அவர்? மத்திய அரசின் தந்திரங்களை ஈழத்தில் அரங்கேற்ற வசதியாக இவர் சென்னையிலிருந்து நாட்கள் நீட்டிக்கிறார். அவரும் அழுத்தமான போராட்டத்தை எடுக்கவில்லை, மற்றவர்களையும் எடுக்க விடவில்லை. முன்பு பழ.நெடுமாறன் உண்ணாநோன்பு இருந்த போது வாக்குறுதி கொடுத்த கருணாநிதி பின்னர் மௌனமானார். யாரை ஏமாற்ற இந்த நாடகம் ஆடுகிறார்? கருணாநிதியின் ஒத்துழைப்புடன் சோனியாவின் காங்கிரஸ் அரசு அனுப்புகிற ஆயுதம், ஆதரவு மூலம் தான் தமிழின படுகொலை அரங்கேறுகிறது.
மக்கள் நிலையை பற்றி பேசியிருக்கிறீர்கள். வீதியில் போராடிய, உண்ணாவிரதமிருந்த மக்களை கருணாநிதி அரசு என்ன செய்கிறது? ஜெயலலிதாவின் (ஜெயாவின் தமிழின எதிர்ப்பு நாடறிந்த ஒன்று) ஆட்சியில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் கருணாநிதியின் அறிக்கைகளும், பேச்சும், நிலைபாடும் வேறுவிதமாக இருந்திருக்குமில்லையா? கருணாநிதியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை கண்டிப்பது அவசியம்.
ஈழத்தில் கொலைவேட்டையாடும் போது திமுக செயற்குழுவுக்கு 15 நாட்கள் கழித்து நாள் குறித்தார். அவர் நினைத்தால் அவசரமாக கூட்ட முடியாத செயற்குழுவா என்ன? உதாரணமாக: அழகிரிக்கு எந்த செயற்குழு கூடி பதவி கொடுத்தது? ஈழத்தமிழர்களுக்காக அழுத்தமான அரசியல் நடவடிக்கை எடுக்காமல், பழைய வரலாற்றை பேசி பேசி.... கலைஞர் சிந்தும் கண்ணீரில் எந்த இரக்கமும், பொருளுமில்லை.
தெற்காசிய வல்லரசு பல விதங்களில் யோசித்துத்தான் புலிஎதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்தியா காஷ்மீரத்தை தக்கவைக்கவும், மற்ற தேசிய இனங்களை கட்டுக்குள் வைக்கவும் தனி ஈழ எதிர்ப்பை தரித்துக்கொள்கிறது என்பதும் வெளிப்படை. இந்தியா தன் பின்கட்டில் அதன் எதிரிகளை புழங்க விட விரும்பவில்லை. புலிகளால் ஈழம் வென்றெடுக்கப்பட்டால் உலகெங்கும் உள்ள பல தேசிய இனங்களுக்கு வன்முறைமீது நம்பிக்கை பிறக்கும்; சர்வதேச ஒழுங்கு கெடும் என்பது உலக நாடுகளின் கவலை.
எல்லாம் சரிதான். ஆனால் இந்தியாவின் சொந்த பிரச்சினைகளுக்கும் சர்வதேச சமூகத்தின் உலக அமைதிக்கான சோ கால்டு அக்கறைக்கும் தனிஈழ எதிர்ப்பு ஒன்றே வழி; வேறு வழிகள் இல்லை என்பது உண்மையா? இல்லை, உண்மையில் வேறு வழிகளும் உள்ளன. இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் அந்த வேறு உபாயங்கள் மீது கவனம் செலுத்த வைத்திருக்க வேண்டும். அந்த வேலையை செய்திருக்க வேண்டியது யார் பொறுப்பு? உலகெங்கும் வாழும் தமிழர்களுடையதும் தமிழக தமிழர்களுடையதும்தான். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் புலிஎதிர்ப்பாளர்கள் கூட தனிஈழத்தை எதிர்க்கவில்லை. தனி ஈழம் கிடைத்தால் தமிழகத் தமிழர்கள் குறுக்கே நிற்கப்போவதும் இல்லை. ஆனால் இதையெல்லாம் செய்யவேண்டியது தமிழகத்தளைவர்கள்தான். எவ்வளவு சமூக அக்கறை இருந்தாலும் தனிமனிதன் தெருவில் இறங்கி போராடுவது நடவாத ஒன்று. ஒவ்வொரு மனிதனையும் ஒன்றிணைக்க வேண்டியது தலைவர்கள் வேலைதானே? அந்த தலைவர்கள் அவர்களுக்குள் ஒன்றினைந்தார்களா? எல்லாருக்குமே சுயநலம்.
ஒரு சில பெஸிமிஸ்மிட்டுகளான எனது நண்பர்கள் சொல்வது என்னவென்றால் தமிழக மக்களுக்கு ஈழப் பிரச்சினைமீது ஆர்வம் இல்லை; அவர்களை மீண்டும் எழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபடுத்துவது கடினம் என்கிறார்கள். இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். செய்திகள் மற்றும் நாட்டு நடப்புகளில் ஆர்வமற்ற எனது வேறு சில நண்பர்களை என்னால் ஈழம் தொடர்பாக உணர்ச்சிவசப்பட செய்யமுடிந்துள்ளது. புரட்சிப்புயல் என்றும் தமிழினத் தலைவர் என்றும், தமிழ் குடி தாங்கி என்றும் கூறிக்கொள்கிற அரசியல் தலைவர்கள் இதை அற்புதமாக செய்யமுடியும். தனிஈழ தீர்வை நோக்கி சர்வதேச சமூகத்தையே திருப்ப தமிழக மக்களால் முடியும். இந்தியாவை வெகு சாதாரணமாக இணங்க வைக்க முடியும். புலிகளால் களத்தில் மட்டுமே போராட முடியும் என்பது என் கருத்து. அதி அற்புதமான உலக அங்கீகாரம் உள்ள இந்திய தமிழர்களாலும் தமிழக தலைவர்களாலும் மிக நேர்த்தியாக இப்பணியை முடிக்க முடியும். அதற்கு மனத்திண்மையும், தன்னலமற்ற தியாக உணர்வும், உடல் வலுவும் கூடவே கொஞ்சம் நல்ல ரத்தமும் உடலில் ஓடவேண்டும்.
கருணாநிதி ஆட்சியை இழந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றி இருந்திருக்க வேண்டும் என்று இங்கு யாரும் அவரை கும்மவில்லை. அவரால் செய்யமுடிந்த எதையும் செய்யாமல் ஒப்பாரியை மட்டும் தவறாமல் வைக்கிறார் என்பது மிகக் கேவலம் அல்லவா? எத்தகைய தலைவராக அறியப்பட்டவர்!!! கடைசி காலத்தில் இப்படியொரு பெயர் தேவையா இவருக்கு! பல திமுக அனுதாபிகள் தங்களை அவ்வாறு சொல்லிக்கொள்ள மிகக்கூச்சமாக உணர்கிறார்கள் என்பது உண்மை!
கலைஞர் ஆதரவு பதிவு என்று எடுத்துக்கொண்டால் அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது
அவரால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. பதவியை இழந்து வீட்டுக்கு போகலாம் என்பது தவிர.
இப்போது திமுக கார்ப்பரேட் கம்பெனியாகிவிட்டபடியால் அதுவும் அவரால் செய்யமுடியாது.
ராமலிங்கம் அண்ணே,
நீங்க சொன்னா சரியாத்தானே இருக்கும் :)
தமிழ் சப்போர்ட்டர் எல்லாம் உங்களை மாதிரியே சிந்திக்க முடியலையே. அவரால் முடியாது.
திமுக பழைய திமுக இல்லை. கருணாநிதியும் பழைய கருணாநிதி இல்லை சாரே.
நாம் விருப்பம் வேறாக இருக்கலாம்.நடைமுறை வேறாக இருக்கலாம். நான் நடைமுறையை சுட்டி காட்டுகிறேன்.
சுகுமாரன்,
நான் திமுக அனுதாபியாகத்தான் இருந்தேன். அது மாற முடியாத பந்தம் அல்ல.
கருணாநிதி சொன்னால் மத்திய அரசு கேட்கும் என்று இன்றும் நீங்கள் சொல்லுவது எனக்கு காமெடியாக உள்ளது.
சுடலைமாடன்,
நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. கருணாநிதியை நான் காப்பாற்ற வேண்டியதே இல்லை.
அவரை தாண்டி நாம் சிந்திக்க வேண்டும் என்பது தான் என் நிலை.
திரு,
பதவியில் இல்லை என்றால் கலைஞர் வேறு மாதிரி இன்னேரம் இயங்குவார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் என்ன செய்யமுடியும் என்கீறர்கள் என்றால் யாரும் பதில் சொல்ல மாட்டேன் என்கீறிர்களே?
திரு,
அழுத்தமான அரசியல் நடவடிக்கை என்றால் என்ன என்று விளக்கமாக கூறவும்.
மோகன்,
//தெற்காசிய வல்லரசு பல விதங்களில் யோசித்துத்தான் புலிஎதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்தியா காஷ்மீரத்தை தக்கவைக்கவும், மற்ற தேசிய இனங்களை கட்டுக்குள் வைக்கவும் தனி ஈழ எதிர்ப்பை தரித்துக்கொள்கிறது என்பதும் வெளிப்படை. இந்தியா தன் பின்கட்டில் அதன் எதிரிகளை புழங்க விட விரும்பவில்லை. புலிகளால் ஈழம் வென்றெடுக்கப்பட்டால் உலகெங்கும் உள்ள பல தேசிய இனங்களுக்கு வன்முறைமீது நம்பிக்கை பிறக்கும்; சர்வதேச ஒழுங்கு கெடும் என்பது உலக நாடுகளின் கவலை//
சரிதான்.
உங்கள் பெசிமிஸ்ட் நண்பர்களுடன் என்னால் ஓரளவு ஒத்துப்போக முடிகிறது.தமிழன் என்று கூறுவதையே அவமானமாக நினைக்கும் அளவிற்கு ஆக்கப்பட்டுள்ளனர் தமிழர்கள்.
அப்புறம் தீடிரென்று எங்கிருந்து வரும் இனப்பாசம்? இனப்பாசம் இருந்திருந்தால் இந்நேரம் தமிழன் வீதியில் இறங்கி போராடியிருப்பான்.
ராமதாசும் ஒரு கருணாநிதிதான். இங்கே நடப்பதெல்லாம் நாடகம்தான். ஆனால் கருணாநிதி ஒன்றும் யோக்கியமானவரல்ல. ராமதாஸ் இன்று ஆசைப்படுவதைப் போல தமிழினத் தலைவர் என்கிற பட்டத்திற்கு கருணாநிதியும் அலைகிறவர்தான். உண்மையில் ஈழம் மலரும் என்றல் நாளையே பதவி விலகத் தயார் என்று சொல்வது பிரச்சனையை திசை திறுப்புவது ஏனென்றால் யாரும் இங்கே தனி ஈழம் பெற்றுக் கொடுங்கள் என்று கேட்க வில்லை. கோரிக்கை போர் நிறுத்தம் மட்டுமே.சரி கிடக்கட்டும். நளையே தமிழீழம் மலராது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டா தமிழக சட்டசபையில் தமிழிழத்துக்கு ஆதரவான தீர்மானம் கொண்டு வந்தார், எவளவு மோசமான நாடகம்.
/* அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும் */
முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.
2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.
அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.
பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.
ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.
கருணாநிதி என்னதான்செய்யனுமின்னு
எதிர்பாக்குறீங்க?
பொச்சுக்கு மேல வேட்டிய தூக்கிக்கட்டிகிட்டு கையில சாமானோட கருணாநிதி கெளம்புனாத்தான் இவிங்களுக்கு தூக்கம் வரும் போல.
அட அரவேக்காடுகளா,
தெலுங்கானா, மிசோரம், நாகாலாந்து, காசுமீருன்னு முப்பது,நாப்பது வருசமா ஆயுதம் ஏந்தி போராடுறவனுக கொட்டையவே இரும்புக்கரத்தால நசுக்குற இந்தியாவ சனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தால மயிரா புடுங்கமுடியும்.
எனைய பொரட்சிக்காரங்களா ஒங்க தொல்ல தாங்கமுடியல.
//நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.
//
அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!
1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல... என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?
கலைஞர் அறிவித்த MP ராஜினாமா சித்துவிளையாட்டிலிருந்து இன்று வரை அவரது அறிக்கை,செயல்களை கவனித்தால் தென்படும் உண்மைகள் ஈழ பிரச்சினையை கையாண்ட முறை சரியல்ல என்பதே.
அதன் காரணம் கொண்டும் நமது ஆதங்கத்தை தமிழக முதல்வரிடமில்லாது எங்கே போய் சொல்வது என்ற நியாயமான கோபத்திலும் உருவாகுவதே கருணாநிதியின் விமர்சனங்கள்.
இவ்வளவு சாதனைகளுக்கும் மத்தியில் கலைஞரின் வரலாறு ஈழம் பொறுத்தவரை சறுக்கலே.
வீ த பீப்பிள்,
அதை நாடகம்னு எடுத்தா நாடகம்தான். டெஸ்பிரேட் அட்டம்ட் எடுத்தா அதுதான். அவங்கவங்க முடிவு அது.
கிச்சு கிச்சு மூட்டாதீங்க சார். சுத்த இந்தியனான உங்களை போன்றொர் இன்று தமிழன் சாகும்போது முதலைக்கண்ணீர் வடிப்பது உண்மையிலே...எல்லாம் நேரம்தான்.
உங்க நிலை என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.கலைஞர் என்ன பண்ணணும்னு சொல்லுங்களேன். என்ன காரணம் சொல்லி 1989 ஆட்சியை கலைச்சாங்கன்னு நேரடியா சொல்லுங்க சார்..
ச்சும்மா குழம்புன குட்டையில் மீன் புடிக்காதீங்க..காலம் மாறலாம்.
//அதன் காரணம் கொண்டும் நமது ஆதங்கத்தை தமிழக முதல்வரிடமில்லாது எங்கே போய் சொல்வது என்ற நியாயமான கோபத்திலும் உருவாகுவதே கருணாநிதியின் விமர்சனங்கள்.//
நான் இதை ஒத்துக்கொள்ளும் அதே கருணாநிதியும் எதுவும் செய்யமுடியாது என்கிறேன்.
*வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் புலிஎதிர்ப்பாளர்கள் கூட தனிஈழத்தை எதிர்க்கவில்லை.*
தவறு. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் இந்த தனிஈழகோரிக்கயை முட்டாள் தனமாக ஆதரித்து விட்டோமே என்று என்று இப்போ கவலைபடுகிறார்கள்.
புலியினால் இவ்வளவு மோசமான சீரழிவு எற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
கருணாநிதியைக் கும்முவது முட்டாள்தனம்.அவரது துணைவி ராசாத்தியைக் கும்மலாமா?
மிரட்டி பதவி வாங்கத் தெரிந்த கருணாநிதி என்ற நபருக்கு,தமிழினம் அழிவதைக் காக்க மிரட்டக் கூடாதா?
இந்த நபரைவிட பதவிவெறி பிடித்த மிருகம் யாராவது உண்டா?
1991-ல் கருணாநிதி என்ற நபரை பதவியை விட்டுத் தூக்கியதில் பல காரணங்கள் உண்டு.
இதே கருணாநிதி என்ற நபர், மனமுவந்து விடுதலைப் புலிகளை ஆதரித்ததுண்டா?
எழவெடுத்த மாதிரி கவிதை எழுதியதைத் தவிர இந்த கருணாநிதி என்ற நபர் ஈழத்தமிழருக்காக என்ன செய்துள்ளார்?
ஈழத்தமிழருக்கு மட்டுமில்லை,தமிழகத் தமிழருக்கும் ஏதாவது நல்லவை நடக்கவேண்டுமென்றால் இந்த கருணாநிதி என்ற நபர் போய்த்தொலையவேண்டும்.
கருணாநிதி மீது பழி போடுவதை விட வீதியில் இறங்கி போராடலாம் என்ற நிலைக்கு தமிழகம் வந்துக்கொண்டு இருப்பது பாராட்டத்தகுந்த முன்னேற்றம்.
இந்திய அரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் பொதுமக்கள் போராட வேண்டும்.நடக்குமா?
// வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் இந்த தனிஈழகோரிக்கயை முட்டாள் தனமாக ஆதரித்து விட்டோமே என்று என்று இப்போ கவலைபடுகிறார்கள்.
புலியினால் இவ்வளவு மோசமான சீரழிவு எற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.//
அய்யா..இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? இல்ல ச்சும்மா போற போக்குல அடிச்சி விடறீங்களா?
//அட அரவேக்காடுகளா,
தெலுங்கானா, மிசோரம், நாகாலாந்து, காசுமீருன்னு முப்பது,நாப்பது வருசமா ஆயுதம் ஏந்தி போராடுறவனுக கொட்டையவே இரும்புக்கரத்தால நசுக்குற இந்தியாவ சனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தால மயிரா புடுங்கமுடியும்.//
எப்படிங்க இப்படி? என்னால இப்படி ஓப்பனா எழுதமுடியாது..எழுத ஆசைப்பட்டாலும்....
//இன்றைய தி.மு.க, தி.மு.க ஓ.கே சொன்ன தால் தான் கட்ச தீவு இலங்கைக்கு தரப்பட்டது என்பது சரித்திரம்//
we the people, உங்களோட அரசியல் அறிவு கண்டிப்பா என்னோடதை விட அதிகம் என்பதற்கு மேற்கண்ட வரிகளே சாட்சி.
ஆனால் மேற்கண்ட விசயத்தை நீங்கள் அறியாமையால் சொன்னதாக மட்டும் சத்தியமாக நான் நினைக்கவில்லை :)
( தற்செயலாக கண்ணில் பட்டது)
//சுகுமாரன்,
நான் திமுக அனுதாபியாகத்தான் இருந்தேன். அது மாற முடியாத பந்தம் அல்ல.//
//கருணாநிதி சொன்னால் மத்திய அரசு கேட்கும் என்று இன்றும் நீங்கள் சொல்லுவது எனக்கு காமெடியாக உள்ளது.///
ஆட்சிக்கு ஆதரவு விலக்கி கொள்வேன் என்றால் மத்திய அரசை கேட்கவைக்க முடியும், கருணாநிதிக்கு பதவி சுகம் தான் பெரிது என்பதால் மத்திய அரசு கருணாநிதி பேச்சை மதிக்கவில்லை. கருணாநிதி செய்யும் காமடியை விட வேறு யாரும் பெரிய காமடியை நடத்திவிட முடியாது.
////அதன் காரணம் கொண்டும் நமது ஆதங்கத்தை தமிழக முதல்வரிடமில்லாது எங்கே போய் சொல்வது என்ற நியாயமான கோபத்திலும் உருவாகுவதே கருணாநிதியின் விமர்சனங்கள்.//
நான் இதை ஒத்துக்கொள்ளும் அதே கருணாநிதியும் எதுவும் செய்யமுடியாது என்கிறேன்.//
அதெப்படிங்க தனக்கு தேவையானதை மட்டும் அடம் பிடிச்சு சாதிக்கிறாரு?அவர் முதுமையால் உடல்வலு இழந்தாலும் மூளை விசயத்தில் இன்னும் தீர்க்கமாகவே இருக்கிறார்.
உள்ளுக்குள் அமுங்கி கிடந்த உணர்வுகளை எதிர்க்கட்சிகள் முந்திக்கொள்ளுமோ என நினைத்து அவரே ஈழம் குறித்த அனுதாபத்தில் முந்திக் கொண்டார்.தமிழகமே ஒருமிக்கும் கருத்துகளில் அவர் அடித்த அந்தர்பல்டிகளை நினைத்தால் என்ன சொல்றதுன்னு தெரியலீங்க.
விடுதலைப் புலிகளின் கிளிநொச்சி நகர்வு,கலைஞரின் முன்னுக்குப் பின் முரண் அரசியல் புரியாதவைகள்.
//அதெப்படிங்க தனக்கு தேவையானதை மட்டும் அடம் பிடிச்சு சாதிக்கிறாரு?//
அதாவது தேவையான மந்திரி பதவியை மத்திய அரசு தருவது கடசி சார்ந்த பிரச்சினை. கொஞ்சம் சுலபமும் கூட.
ஈழ பிரச்சினை வெறும் கட்சி பிரட்சினை அல்ல. இது அரசாங்க பிரச்சினை.இந்திய ஏகாதிபத்தியத்தின் வாழ்நிலை சார்ந்தது. இப்படி சொன்னால் நீ அரசுக்கு சப்போர்ட்டா என்றெல்லாம் குழந்தை மாதிரி கேட்கப்படாது.
உங்களுக்கு இது புரியாமல் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
//குழலி, நீங்க கொடுத்த சுட்டியிலிருந்து தான் ..
//மேலும் கூடுதலாக அன்றைக்கு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் கூடுதலாக அழுத்தத்தை தரமுடியவில்லை ஆனாலும் கூட அன்றைக்கு கச்சத்தீவை கொடுப்பதை எதிர்க்கத்தான் செய்தார்கள், அதையும் தாண்டி இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது, அது நமக்கு பெரிய இழப்புதான்கிட்டத்தட்ட//
இன்று ஈழத்துக்கு போடும் அதே நாடகம் தான் அன்றும் தி.மு.க போட்டிருக்கு என்று தோன்றுகிறது! அன்று முதல் இன்று வரை ஒரே சீன் தான் என்று நான் கருதுகிறேன்! தவறிருந்தால் திருத்தவும்...//
இந்த பின்னூட்டம் உங்களுக்கு தற்செயலா கூட கண்ணில் பட்டிருக்காது என்று நினைக்கிறேன் சரியா??
//கிச்சு கிச்சு மூட்டாதீங்க சார். சுத்த இந்தியனான உங்களை போன்றொர் இன்று தமிழன் சாகும்போது முதலைக்கண்ணீர் வடிப்பது உண்மையிலே...எல்லாம் நேரம்தான்.//
இந்தியானா இருக்கிறது அவ்வளவு பெரிய குற்றமா??
சரி சார் உங்க கண்ணீர் தாங்க ஈழத்தமிழனை இன்றும் உயிரோடு வைச்சுக்கிட்டு இருக்கு! சந்தோஷமா!
முத்து! நீங்க இன்னும் வீ த பீப்புள் கூட மாரடிச்சுட்டு இருக்கீங்களா ரொம்ப பொறுமை தான் உங்களுக்கு. இந்த மாதிரி சில ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்
அய்யா வீ.த.பீப்பிள்,
நன்றி. உருப்படியா எந்த பதிலும் தரமாட்டீங்கன்னு தெரியும்.நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை.
முத்து,
நானும் உங்களைப் போல கலைஞருக்கு காவடி தூக்குபவன் என பெயரெடுத்தவன் தான் .
ஆனால் இப்போது தான் எதுவும் செய்ய முடியவிட்டாலும் கூட தானாக எழுந்துள்ள எழுச்சியை அடக்கப்பார்ப்பது ஏன்?
முத்துக்குமாரின் மரணத்தை அடுத்து மாணவர் எழுச்சியை அடக்க கல்லூரிகளை மூடுவதும் ,பொது வேலை நிறுத்தத்துக்கு கட்சி ஆதரவு (அரசு ஆதரவு என்பது வேறு) கொடுக்காவிட்டாலும் அதை முடக்க நினைப்பதும் எந்த வகையில் சேர்ப்பது ..இவரே இப்படி நடந்து கொண்டால் நான் யாரிடம் முறையிடுவது?
சோமாறிகளையும், கொட்டைதாங்கிகளையும் எதிக்கும் அதே வேளையில் கயவன் கருணானிதியையும் தோலுரிக்க வேண்டும்.
கோமாளி கோபாசாமிக்கு தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ராமதாஸ் தானும் ஒரு கருணானிதியா இல்லை தமிழ் உணர்வாளாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
Post a Comment