Tuesday, January 13, 2009

கூச்சமே வேண்டாம்..கழட்டி விட்டுடுங்க

இடைதேர்தல் முடிவு எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தி.மு.க அனுதாபியாகத்தான் இருந்தேன். ஆனா இன்னமும் தொடர்ந்து இருப்பேனாங்கறது சந்தேகம் தான். அது ஸ்டாலின் நடந்துக்கற முறையிலதான் இருக்கு.(ஓவரா இருக்கா).

என்னதான் லஞ்சம், லாவண்யம்னு சொன்னாலும் இத்தனை ஓட்டு வித்தியாசத்துல ஜெயித்து, கேப்டனுக்கு ஆப்பு அடிச்சி..என்ன கொடுமை சரவணன் இது?

கேப்டன் இனிமேல் விடும் அறிக்கைகள், பேசும் பேச்சுக்கள் எல்லாம் கொஞ்சம் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விடுவது நல்லது. சுப்ரமணிய சாமி அறிக்கை மாதிரியே தெரிகிறது. நேரம் இருக்கு தலைவரே. அவசரப்படாதீங்க. இனிமேலாவது சில விசயங்களை நேரடியா பேசுங்க. இலங்கை பிரச்சினை போன்றவை. தினமலர் வகையறாக்களின் சப்போர்ட்டுக்காக பேச ஆரம்பிச்சா உள்ளதும் போயிடும்.


சரி.அடுத்து திமுக என்ன பண்ணலாம்? அவட் ஆஃப் பாக்ஸ் யோசிச்சா..

ராஜீவ் அது இதுன்னு பேசற காங்கிரஸ் காரனுங்களை கழட்டி விட்டுட்டு பி.ஜே.பிக்கு ( ரெண்டு எம்.பி. சீட்டு, ஆட்சி அமைக்க சப்போர்ட்) கூட்டணி போட்டு, பதிலுக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவா நடக்கணும்னு ஒரு டீல் போடலாமா? ராமதாசும் வந்திருவார். அவருக்கு என்ன? அன்புமணி கன்டினியு பண்ணலாமே?

கலவரமா இருக்கும் இல்ல?

6 comments:

Darren said...

///ராஜீவ் அது இதுன்னு பேசற காங்கிரஸ் காரனுங்களை கழட்டி விட்டுட்டு பி.ஜே.பிக்கு ( ரெண்டு எம்.பி. சீட்டு, ஆட்சி அமைக்க சப்போர்ட்) கூட்டணி போட்டு, பதிலுக்கு இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவா நடக்கணும்னு ஒரு டீல் போடலாமா///

100% Ok.

Muthu said...

பேச்சு வார்த்தை ஆரம்பிச்சுரலாமா?

வரவனையான் said...

திராவிட ராஸ்கல்கள் முன்னணியும் ஆதரவு தந்திடலாமே !


கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்க பொதுக்குழு அதிகாரம் வழங்குகிறது.

முத்துகுமரன் said...

பிஜேபியுடன் பல மாதங்களுக்கு முன்னரே பேச்சுகள் தொடங்கி விட்டதாக தகவல்!

Unknown said...

திருமாவையும் வீரமணியையும் விட்டு ஈழத்தமிழர் விஷயத்திலே நூல்விட்டுப் பார்க்கிறதெல்லாம் எதுக்காகன்னு நினைக்கிறிங்க. நீங்க சொல்றது தான் நடக்கப்போகுது. கூடவே கயல்விழிக்கு ஒரு அமைச்சர் சீட் கிடைக்கலாம்.

ரவி said...

haiyaaa jolly jolly