Sunday, February 08, 2009

திருமாவளவன் - தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியுமா?

பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் சம்பந்தமான விவாதங்களில் மக்கள் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு.

"திமுக, அதிமுக ரெண்டுமே வேஸ்ட். வேற கட்சியை கொண்டு வரணும்க". காங்கிரசை அந்த இடத்தில் வைத்து அவ்வபோது சில தேசியவியாதிகள் காமெடி செய்வதுண்டு. சிலர் ரஜினிகாந்தை வைத்து செத்த பிணத்திற்கு உயிரூட்ட முயன்றனர். அது நடக்கவில்லை.

சமீப காலமாக விஜயகாந்த் மேல் அந்த பொறுப்பு (?) விழுந்திருக்கிறது. மாற்று வேண்டும் என்று சொல்லும் அம்பிகள் விஜயகாந்த்தை தான் தொடர்ந்து முன்னிறுத்தவார்கள் என்பது என் அனுமானம். (கடந்த சட்டசபை தேர்தலில் கடைசி வரை விஜயகாந்த் 70 தொகுதிகளில் வெல்வார் என்று ஒரு கூட்டம் சீரியசாக நம்பியது.). இன்றைய சூழ்நிலையில் விஜயகாந்த் கட்சி இன்னொரு அதிமுக வாக ஆவதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன. பி.ஜே.பி யுடன் கூட்டணி மற்றும் "சோ" வுடனான நட்பு மட்டும் தான் இன்னும் நடக்கவில்லை. அதுவும் நடந்தால் இது உறுதியாகிவிடும்.

ஆனால் அடுத்த நம்பிக்கைக்குரிய தலைவர் என்ற இடத்திற்கு பொறுத்தமான ஒரு தலைவராக திருமாவளவன் இருப்பார் என்று நினைக்கிறேன். சினிமா கவர்ச்சி இல்லை. குடும்ப அரசியல் என்றெல்லாம்சொல்வதற்கு குடும்பமும் இல்லை. தமிழ் உணர்வாளர் என்ற அடிப்படையில் தினமலர், துக்ளக் மற்றும் அம்பிகளின் ஆதரவு அவருக்கு கிடைக்காது.

சரி. இப்போதைய ஈழ பிரச்சினையைப் பற்றி பலரையும் போல் (சிலர் உணர்ச்சிவசப்பட்டு, சிலர் சுயநலத்திற்கு பாற்பட்டு ) வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டாமல் மிக முதிர்ச்சியாக அணுகும் திருமாவளவன் என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


" திமுக மாநில ஆட்சியை தக்க வைக்க ஆசைப்படுகிற காரணத்தால்தான் காங்கிரசை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. காங்கிரசை திமுக விட்டால் காங்கிரசு அதிமுகவுடன் சேர்ந்துவிடு்ம். இதன்மூலம் இருப்பதையும் விட்டுவிடுவோம் என்று திமுக பயப்படுகிறது.( எல்லாருக்கும் தெரிந்ததுதான் இது, கலைஞர் குடுமி சோனியா கையில்). மற்ற அனைத்து கட்சிகளும் செய்யவேண்டியது.... .....


தொடர்ந்து சில அருமையான கருத்துக்களை கூறியுள்ளார்...வீடியோ பார்க்க இங்கே செல்லவும்.


திமுக அழிவுப்பாதையில் பயணம் தொடங்கி இருக்கும் இந்த சமயத்தில் திருமாவளவன் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவனாக தெரிகிறார்.ஆனால் பல காரணங்களால் திருமாவளவனின் வளர்ச்சியும் எழுச்சியும் தமிழக அரசியல் அரங்கில் சுலபமாக இராது.

Wednesday, February 04, 2009

கலைஞர்- புலிகள்- அரசியல்

கருணாநிதி இந்த விஷயத்தை கொண்டு பதவியை தான் விடுவதாக இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். சில மாதங்களாகவே அவரது சொல்லும் செயலும் இதை நோக்கித்தான் இருந்ததால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பலரும் இதை எதிர்ப்பார்க்காதது போல அதிர்ச்சி அடைவது ஏனென்று புரியவில்லை. ஏதோ நமக்கெல்லாம் ஒரு ஆறுதல். ஏதோ ஒரு வகையில் கருணாநதியை கும்மி நம்முடைய ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துவிட்டோம்.

கலைஞர் இன்று புதிதாக சில வார்த்தைகளை சேர்த்து விட்டுள்ளார். பிரபாகரன் சர்வாதிகாரியாக நினைத்தாராம். புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றனராம். (அதுதானே அவர் சொன்னதற்கு அர்த்தம்). ஆக அவர்களுக்கு நான் உதவ முடியாது. விடுதலைப் புலிகள் அழிந்தவுடன் இலங்கை தமிழருக்கு உதவுகிறேன் என்று அவர் நிலையை கூறிவிட்டார். புலிகள் அழிந்தவுடன் தமிழர் சார்பாக பேச யார் இருப்பார்கள் என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

ராமதாஸ் அடிக்கும் கூத்து இன்னும் கொடுமையானது. வாயால் மட்டும் சிரிக்க முடியாதது. அதாவது அவருக்கு திமுக செயற்குழு முடிவு அதிர்ச்சி அளிக்கிறதாம். ஏது எதுக்கோ மரத்தை வெட்டினோமே அய்யா!! சட்டசபை தேர்தலில் ராமதாஸ் எந்த கூட்டணிக்கு போக போகிறார் என்பதில் இருக்கு சூட்சுமம். மூடிட்டாவது இருக்கலாம் கருணாநிதி மாதிரி.

கலைஞருக்கு அப்புறம் திமுக வை கைப்பற்றும் ஆசையில் இருக்கும் வைகோவிற்கு கலைஞர் தமிழின உணர்வாளர்களால் அடிபட்டு ரணகளமாக இருக்கும் இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிட்டுமா? அவர் சாவதானமாக இருப்பதை பார்த்தால் அப்படி ஒண்ணும் அவர் வாய்ப்பை உபயோகிப்படுத்த போவது போல் தெரியவில்லை.


புலிகள் மிக மோசமாக தனிமைப்படுத்த பட்டுள்ளனர். ராஜபக்செ பொறுப்பேற்றதில் இருந்தே ஒவ்வொரு நடவடிக்கையும் அணுஅணுவாக திட்டமிட்டு கடைசியில் இன்றைய நிலை வரை தமிழர்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.

ஐரோப்பிய யுனியன், கனடா, யு.எஸ் இங்கு எல்லாம் தடை செய்யப்பட்டது பலத்த அடி.பிறகு ராணுவ ரீதியாக இந்தியாவுடன் இலங்கை நெருங்கியது புலிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் அரசியலே என்னவென்று தெரியவில்லை.

பல தமிழ் ஆர்வலர்களிடமும் நாம் இதைப்பற்றி கேட்கும் போதெல்லாம் இது ஒரு திட்டம், இங்க தான் இருக்கு ஐடியாவே என்றெல்லாம் சொல்கிறார்களே ஒழிய நடப்பவை எதுவும் தமிழர்களுக்கு நன்மையாக முடிய காணோம். கடைசியாக நார்வே உள்பட முக்கிய நாடுகள் புலிகளை சரணடைய சொல்வதில் வந்து நிற்கிறது நிலைமை.

இன்றைய நிலையில் தமிழகத்தின் அழுத்தம், மத்திய அரசு தலையீடு என்பதெல்லாம் வெறும் கனவுதான். அப்படி இருக்கு புலிகளின் எதிர்ப்பார்ப்பு, திட்டம் என்னவாக இருக்கமுடியும்?