Saturday, January 10, 2009

மக்கா..சூதானமா இருந்துகோங்க

http://pulithikkaadu.blogspot.com/2009/01/blog-post.html

மேற்படி பதிவை பார்த்தேன். ரொம்ப ஆபத்தான ஒரு ஐடியாவை நண்பர் கொடுத்துள்ளார். பங்கு விலைகள் சரிவதனால் தின வர்த்தகம் செய்ய முடியாமல் இருப்பவர்கள் தின வர்த்தகமே செய்யாமல் இருப்பதே நல்லது. டெலிவரி எடுத்து வைத்திருக்கும் பங்குகளையும் தின வார்த்தகம் செய்ய உபயோகப்படுத்தி உள்ளதும் போச்சு என்ற கதையாகி விடக்கூடாது.

என்றாவது ஒரு நாள் அது மீண்டு வரும் என்று இருக்கலாம். அதுவும் போய்விட்டால்.....

தின வர்த்தகம் என்பதே ஒரு சூதாட்டம். பங்கு சந்தையில் ஒரு கணக்கெடுப்பின் படி 90 சதவீத பங்கு சந்தை வியாபாரிகள் நஷ்டமே அடைகிறார்கள். ஆக, பங்குகள் தினப்படி நகருவது பெரிய பெரிய முதலைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவரின் நஷ்டம் தான் ஒருவரின் லாபம். அதுவம் டே டிரேடிங் எனப்படும் தினப்படி பங்கு வியாபாரத்தில் இதுதான் நிதர்சனம். பின்னூட்டத்தில் அனைவரும் வெற்றியாளராக ஆண்டவனை வேண்டுவோம் என்று ஒரே போடாக போடுகிறார் நண்பர்.

மக்கா....வேண்டாம்டா....

2 comments:

சிம்பா said...

இங்கு சொன்னதை அங்கே போட்டிருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும்... நண்பரே இப்படி தேட வெச்சுடீங்களே... இத்தனைக்கும் நான் எந்த வித தடுப்பான்களும் இடவில்லை..

சரக்கு போடுறதுன்னு முடிவு பண்ணிட்டா அத வீட்டுல போடுங்க.. கடைல போட்டு மப்புல மல்லாக்கா விழா வேண்டாம்னு தான்,,,

சூதுல பாஞ்சாலிய அடமானம் வைத்த நிலைமை வேறு யாருக்கும் வர வேண்டாம். காசில்லாதவங்களுக்கு, இப்படி ஒரு வழி இருக்கு. ஆகவே பொண்டாட்டி தாலியையோ, கந்து வட்டியை நோக்கியா போகவேணாம்.

மேலும் அக்கட்டுரையை எழுதியதன் நோக்கம் இப்படியும் ஒரு வழி உண்டு என்று சுட்டிக்காட்டவே... யாரையும் இந்த வழியில் செல் என்று சொல்வதற்க்காக அல்ல.

Muthu said...

தொழில்முறை தரகர்கள் கதை வேறு. ஆனா சாதாரணமா இருக்கிறவன் இதை பார்த்தா இப்படியும் வழி இருக்கான்னு நினைப்பாங்கறதுனால போட்டிருக்கேன்.

எல்லாரும் லாபம் சம்பாதிக்கலாம்னு ஒரு வார்த்தை சொன்னீங்களே? அது என்னங்க? அதுதான் எனக்கு ரொம்ப கன்பீசினா இருக்கு..

நானும் அப்பப்ப மார்க்கெட் பக்கம் போறது உண்டு.