சல்மா அயூப் விவகாரத்தை பற்றியும் ஜெயராமன் சார் விவகாரத்தை பற்றியும் செந்தழல் ரவி மற்றும் உண்மைத்தமிழன் ஆகியோர் எழுதிய பதிவை பார்த்தேன். இது சம்பந்தமான சில தகவல்களை பொதுவில் வைத்துவிடலாம் என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.
இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ( போலி விவகாரம்) முழுமையாக ஓய்ந்துவிட்டபடியால் கணக்கை நேர் செய்துவிடலாம் என்ற எண்ணமும் மற்றும் வெட்டியாக பொழுது போக்கிக்கொண்டு இருப்பதாலும் ( இந்த காரணம் முக்கியமானது) இதை எழுதி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
நான் பெங்களூரில் இருந்த சமயம். எனது நண்பர் ஒருவர் ( செந்தழல் ரவியின் பதிவில் பிரபல பத்திரிக்கையாளர் என்று விளிக்கப்பட்டவர்) எனக்கு தொலைபேசினார். அவர் கூறிய தகவல் என்னவென்றால் அந்த சமயம் பதிவுலகில் மும்முரமாக இயங்கிய தோழி ஒருவர் பெயரில் போலி பாணி வலைத்தளம் இருப்பதாகவும் அதை நடத்துபவர் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர் என்று சில ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வலதுசாரி அடிப்படைவாதி என்று நான் அறிந்திருந்தாலும் சாதுவானவர்.நான் அறிந்தவரை நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடியவர் தான். ஒரு உதாரணம். தகவல் அறியும் சட்டத்தை பற்றி ஒரு அருமையான பதிவை எழுதி இருந்தார் மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்.. அதில் தேவை இல்லாமல் திராவிடம், கலைஞர் என்று எழுதி நக்கல் அடிந்திருந்தார். நான் நல்ல கட்டுரையில் இது போன்ற எள்ளல் எதற்கு என்று கேட்டிருந்தேன். உடனே கட்டுரையை அழகாக திருத்தினார். இது ஒரு உதாரணம் தான்.
விசயத்திற்கு வருவோம். தொலைபேசிய நண்பர் இது சம்பந்தமாக காவல் துறைக்கு போக போவதாக என்னிடம் கூறினார். எனக்கு அந்த சமயத்தில் அது அதிகமாக பட்டது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் அந்த தளத்தை துவக்கினார் என்ற தகவல் பதிவுலகில் பரவியவுடன் அந்த தளம் அகற்றப்பட்டது. ஆகவே வேண்டாம் என்றேன்.
எனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லும்படி கேட்டார் நண்பர்.நானும் இன்னொரு பிதாமகரின் மூலம் சம்பந்தப்பட்டவரிடம் பேசினேன். தெளிவாகவே நான் கூறியிருந்தேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.
ஆயினும் ஏனோ தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை பிரபல பத்திரிக்கையாள நண்பரிடம் ஒத்துக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காகவே எழுதி வாங்குவதாக பிரபல பத்திரிக்கையாளர் என்னிடம் கூறினார். அந்த முடிவு பாதிக்கபட்டவர் நிலைமையில் இருந்து பார்த்தால் தான் சரியா தவறா என்பது நமக்கு தெரியும்.
அதுபோல் மெத்த படித்த ஒருவர் ச்சும்மா யாருக்கும் எழுதி கையெழுத்து போட்டு தந்துவிட மாட்டார். மேலும் இந்த இடத்திலும் நான் இதை வலியுறுத்தினேன். நீங்கள் இதில் குற்றவாளி இல்லை என்றால் கவலையே படவேண்டாம். அவர்கள் காவல்துறைக்கு போனாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றேன்.
கடைசியில் சல்மா தான்தான் என்றும் ஆனால் ஆபாசத்தளம் என்னுடையது இல்லை என்பது போல் எழுதி கொடுத்தார் என்று நினைக்கிறேன்.
ஆபாசத்தளம் முக்கிய பிரச்சினை என்றாலும் அவரை பொறுத்தவரை சல்மா அவர்தான் என்பது வெளிப்பட்டாலே பிரச்சினை என்று அவர் நினைத்தபடியால் அவர் இதற்கு ஒத்துக்கொண்டார் என்பதாகவே நான் நினைத்துக்கொண்டேன்.
ஆபாச்த்தளம் அவருடையது என்பதற்குரிய ஆதாரம் என்னை பொறுத்தவரை உறுதியானது என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் இல்லை என்று உறுதியாக என்னால் அன்று சொல்லமுடியவில்லை.
பிரச்சினை நடந்த சமயம் பதிவுலகே களேபரமானது.பிதாமகரின் சப்போர்ட்டும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிறைய இருந்தது.
ஒரு சும்பன் என்னை பேட்டை ரவுடி என்று அப்போது திட்டினான். என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒருவரை திட்டுபவன் என்னை பொறுத்தவரை சும்பன்தான். அவனை பொறுத்தவரை இது இந்து முஸ்லீம் பிரச்சினை.அவன் இந்துவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது வேறு பிரச்சினை.
போலிக்கு ஆப்படித்த செந்தழல் ரவி, உண்மைத்தமிழன் ஆகியோர் கூற்று பிதாமகரின் கூற்றைவிட நம்பகமானது. மேலும் ரவிக்கு போலி விவகாரத்திற்கு பிறகு நிறைய தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இன்னமும் சில வாய்ச்சொல் வீரர்கள் இந்த பிரச்சினையை காவல்துறைக்கு கொண்டு செல்லும்படி வீரமாக ஆனால் அனானியாக ( ஒரே ஐ.டி இருந்தாலும் யார் என்று தெரியவில்லை என்றால் அது அனானிதான்) அடிக்கடி எங்காவது எழுதுவது உண்டு. என்னமோ ரவி,உண்மைத்தமிழன் எல்லாம் போலீசையே பார்க்காதது மாதிரி.சம்பந்தப்பட்ட இரு தரப்புமே இதைப்பற்றி பேசுவதில்லை என்பது கூடுதல் செய்தி.
அது ஒரு துன்பியல் சம்பவம் என்று நினைத்து அதில் இருந்து ஒதுங்கி விட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். தமிழ்மணத்திலும் இல்லை.ஆயினும் அவரின் பழைய முடிந்த பிரச்சினையை தோண்டி அவரை அமுக்கலாமா?
Saturday, January 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
சம்பந்தப்பட்ட பதிவு - 1
http://tvpravi.blogspot.com/2009/01/blog-post_07.html
சம்பந்தப்பட்ட பதிவு -2
http://truetamilans.blogspot.com/2009/01/blog-post_8191.html
பிதாமகன் என்பது புரிகிறது...
சும்பன் என்பது யார் என்று தெரியவில்லை...
இதற்கு தனி விசாரனை கமிஷன் வைத்து பதிவு போடுவதற்குள் நீங்களே சொல்லிருங்க :))))
இந்திய நேரம் 11 மணிக்கு வந்துள்ள இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்...
முன்னாலயே போடவேண்டியது தானே ?
அதும் சாட்டர்டே நைட்டு வேற..
திங்கள் கிழமை மிள்பதிவு செய்யவும்...
//ஆபாச்த்தளம் அவருடையது என்பதற்குரிய ஆதாரம் என்னை பொறுத்தவரை உறுதியானது என்று சொல்லமுடியாது. ஆனால் அவர் இல்லை என்று உறுதியாக என்னால் அன்று சொல்லமுடியவில்லை.//
கால காட்டுங்க சாமி...லிவ்னிக்கே டிப்ளமேட்டிக்காகப் பேசுவது எப்பிடின்னு சொல்லி கொடுப்பீங்க போலிருக்கே!!!
//கால காட்டுங்க சாமி...லிவ்னிக்கே டிப்ளமேட்டிக்காகப் பேசுவது எப்பிடின்னு சொல்லி கொடுப்பீங்க போலிருக்கே!!!//
இல்லாட்டி கண்டவன்லாம் வந்து நம்மை பேட்டை ரவுடிம்பான்..தேவையா?
ஆமா யார் அந்த லிவ்னி?
//ஆமா யார் அந்த லிவ்னி?//
ask பிதாமகன் !!! :)))
Narayana, Narayana! :)
இப்போது மறுபடியும் பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்றோ, அவரை பிரபலப்படுத்த வேண்டும் என்றோ நான் செய்யவில்லை ஸார்..
ஏதோ அன்றைக்கு அந்த பின்னூட்டத்தின் முதல் 5 வரிகளைப் படித்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. சட்டென்று கோபப்பட்டுவிட்டேன்..
இதுவரையிலும் அவருடைய பல பின்னூட்டங்களை பலவிடங்களில் பார்த்தும், படித்தும் கண்டு கொள்ளாமல் போனவன்தான் நான்.
இந்த முறை மட்டுமே கோபம் கொப்பளித்துவிட்டது.
அதனால் என்ன..? நீண்ட நாட்கள் கழித்து உங்களை பதிவு போட வைச்சாச்சே..
ஆமா.. அந்த 'சும்பன்' யார்..?
நானில்லையே..?
உ.த அண்ணே, உடனே என்னை காண்டாக்டு செய்யவும்
உண்மைத்தமிழன்,
நல்ல காமெடி. அப்ப நீங்க என்னை பேட்டை ரவுடின்னீங்களா? :))
சர்வேசன்,
:)
நீங்க கூட இதில லேசா சம்பந்தப்பட்டிருக்கீங்க...யோசிங்க
இந்தப் போலி விவகாரத்தின் சரியான கதை வசனப் பதிவுகள் எங்காவது இருந்தால் சொல்லுங்க சாமி,எங்கள மாதிரி விவகாரம் தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கும் ........
நிச்சயம் இந்த சமயத்திற்கான தேவையில்லாத பதிவுதான் இது :(
சென்சி,
இந்த சமயத்திற்கு தேவையான பதிவுகள் லிஸ்ட் கொடுத்தால் தேவலை எனக்கு பொழுது போகவில்லை :)
அறிவன்,
சம்பந்தப்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டன.
போலி டோண்டு என்று கூகிளில் தேடுங்கள்.சில கிடைக்கலாம்.
// முத்து தமிழினி said...
சென்சி,
இந்த சமயத்திற்கு தேவையான பதிவுகள் லிஸ்ட் கொடுத்தால் தேவலை எனக்கு பொழுது போகவில்லை :)//
என்ன கொடுமை சார் இது.
ஸிப்பி லிவ்னிய தெரியாது? இப்போதைக்கு இவங்க தான் டிப்ளமேட்டிக் குயின். இவங்களால தான் எந்த வல்லரசும் பாலஸ்தீனத்தை தாக்காமல் இருக்கிறார்கள்.
ராசா,
இப்போதைக்கு இத்த படிச்சி பித்தத்த தெளிஞ்சிக்கோ...
இணையரவுடி மேட்டரும் இதிலக்கீது
http://kusumban.blogspot.com/2006/07/blog-post_14.html
சாரி பாஸ்...லைட்டா மப்பார்யிருச்சி
//http://kusumban.blogspot.com/2006/07/blog-post_14.html
சாரி பாஸ்...லைட்டா மப்பார்யிருச்சி//
இவுரு இல்லப்பா..அட நீங்க வேற..இவரு தான் சீன்லயே இல்லையே...
அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்
தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களை
ஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினம், இந்திய நடுவண் அரசின் ஒப்புதலுடனையே இந்த தாக்குதல்கள் தற்போது முடுக்கி விடப்படுள்ளது.சுமார் அய்ம்பதினாயிரம் சிறிலங்காப் படைகள் பல முனைகளில் இருந்து குண்டு வீச்சுக்களை நாடத்தி வருகின்றன.செறிவாக மக்கள் கூடி இருப்பதால் மிக அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ் நாட்டு அரசிடம் மட்டுமே இப்போது இருக்கிறது.தமிழ் நாட்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் வலைப்பதிவர்களிடமும்,தமிழ்ப் பத்திரிகையாளர்களுடமுமே இருக்கிறது.இந்த அவசரச் செய்தியை தமிழ்மணம் எங்கும் பரவ வைக்கும் நோக்கில் ஒரு பதிவையாவது இடும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.மின்னஞ்சல் மூலமாகவும் தொலை பேசி,குறுந் தகவல் மூலமாகவும் உங்கள் நண்பர்கள் ,உறவினர்களுக்கும் இந்த அவசரச் செய்தியை அறியத் தந்து ,முழுத் தமிழ் நாட்டிற்க்கும் இந்தச் செய்தியை கொண்டு செல்லுங்கள்.
நடை பெறப்போகும் இந்த மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த எம்மால் இயன்ற அனைத்தையும் இப்போது இந்த நிமிடத்தில் செய்வோம்.
நன்றி.
SLA shelling targets densely populated Vanni regions
Uploaded by spyglass8
மேலதிக தகவல்களுக்கு
முரசுமோட்டை மக்கள் குடியிருப்பில் சிறிலங்கா வான் படை தாக்குதல் 31.12.2008 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=91
முரசுமோட்டை-வெளிக்கண்டல் சிறிலங்கா வான் படை தாக்குதல் 01.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=92
முரசுமோட்டை ஏறிகனைத்தாக்குதல் 02.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=93
வட்டக்கச்சி,தருமபுரம் பகுதிகளில் எறிகணைத்தாக்குதல் 08.01.2009 http://www.votradio.com/gallery/categories.php?cat_id=102
முல்லைத்தீவு தேரா மேற்குப்பகுதி ஏறிகனைத்தாக்குதல் 11.01.2009http://www.votradio.com/gallery/categories.php?cat_id=103
http://www.pulikalinkural.com/
பத்த வெச்சுடியே பரட்டை :)..
Quickly you have answered...
Post a Comment