ஏற்கனவே புனித பிம்பங்கள் என்றால் என்ன என்பதைப்பற்றி இரண்டு பாகங்களில் எழுதியுள்ளேன். வலைப்பதிவிற்கு புதிதாக வந்துள்ளவர்கள் அதை படித்து அப்டேட் ஆகலாம்.இந்த பாகத்தில் நாம் பார்க்க இருப்பது நடுநிலைவாதி ஆவது எப்படி என்பதை பற்றியது.
நடுநிலைமை என்றால் என்ன? நடுநிலைவாதியாக ஏன் ஆகவேண்டும்? என்ற சிக்கலான கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்ப்பார்க்க வேண்டாம்.பதில் எனக்கு தெரியாது. ஆனால் தெரிந்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.
1. பொதுவாக சர்ச்சைகளின் அடிப்படையில் தான் கருத்துக்கள் பிற்ககின்றன. லேட்டஸ்ட் சர்ச்சை உதாரணம். அப்துல்கலாம் மீண்டும் வரலாமா? என்ற பிரச்சினை. எப்போதும் இருக்கும் பிரச்சினை திமுக,பா.ம.க பிரச்சினைகள். சரியா? விஷயத்திற்கு வருவோம்.
நடுநிலைவாதியாக விரும்புபவர்கள் சர்ச்சைகள் உருவாகும் போதே கருத்து சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது. ஒரு மூன்று நான்கு நாட்கள் அனைத்து பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்து அனலைஸ் செய்யவேண்டும். கடைசியில் யார் கை ஓங்குகிறது என்பதை பார்த்து அவருக்கு ஆதரவாக பதிவோ பின்னூட்டமோ இடலாம்.பெரும்பான்மையை ஆதரிப்பதால் வரும் நல்ல பெயர் உங்களுக்கு இங்கே கிடைக்கும்.
2. அப்படியே ஆதரவை கொடுத்தாலும் முழுமையான ஆதரவை தந்துவிடக் கூடாது. அப்படி கொடுத்தால் நீங்கள் நடுநிலையாளர் என்ற அந்தஸ்த்தை இழக்கிறீர்கள்.ஆனால் என்ற வார்த்தையை போட்டு ஒரு மொக்கை கருத்து சொல்லவேண்டும். உதாரணமாக சதாம் விவகாரத்தி்ல் புஷ் செய்வது தவறு என்று யாராவது பதிவு போட்டால் ஆமாம் புஷ் அயோக்கியன் தான் என்று சொல்லும் அதே நேரம் சதாமும் கொல்லப்பட வேண்டியவன் தான் என்று ஒரு பிட்டை கடைசி வாக்கியமாக சேர்க்கலாம். இதில் என்ன லாபம் என்றால் புஷ் எதிர்ப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் அதே நேரம் கடைசி வாக்கியத்தின் மூலம் புஷ் ஆதரவாளர்களையும் ஆறுதல் படுத்துகிறீர்கள்.
3.தீவிரமாக யாராவது கருத்து சொல்லி இருந்தால் அவரிடம் சென்று "அய்யோ சுப்ரமணி, நீங்களா இப்படி? " என்றெல்லாம் ஃபீல் செய்து அவர்கள் கருத்தை மாற்ற முயற்சி எடுக்கவேண்டும். இதை எமோசனல் பிரசர் டேக்டிக்ஸ் எனலாம். சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தாம் ஏதோ தவறாக சொல்லிவிட்டோமே என்று குழம்பி மந்தையில் ஒன்றாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கே வந்துவிடுவார். இவ்வாறு மந்தையில் ஆடுகளை சேர்ப்பதும் நடுநிலையாளர்களின் பணிதான்.
4.முக்கியமாக அடிப்படை விஷயங்களில் உங்கள் கருத்தை யாராவது மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும். அப்படியும் சில பிரகஸ்பதிகள் தனிமடல் அனுப்பி இம்சை செய்வார்கள்.அது போன்ற சூழ்நிலையில் இதுபோன்ற விஷயங்களில் நான் பொதுவாக கருத்து சொல்வதில்லை என்று கூறிவிடவேண்டும். அடிப்படையான சில விஷயங்களில் உங்கள் கருத்து என்ன என்றே யாருக்கும் தெரியாமல் இருக்கும்வரை நீங்கள் கூட்டம் சேரும் இடங்களில் கோவிந்தா போட்டு உங்கள் நடுநிலைமையை நிலைநாட்டிக்கொண்டே இருக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு
http://muthuvintamil.blogspot.com/2006/04/1_19.html
http://muthuvintamil.blogspot.com/2006/04/2_20.html
( இது பழைய பதிவு ட்ராப்ஃடில் இருந்தது)
Thursday, July 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மிக முக்கியமாய் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம்- இந்த மாதிரி பிரச்சனைகளில் விறுவிறு வென்று நுழைத்து முதல் பின்னுட்டம் மட்டும் போட்டு விடவே கூடாது ( நோ ஸ்மைலி)
சர்ச்சை பதிவா, அப்படியெல்லாம் பின்னூட்டமே போடாமல்,படிச்சிட்டு நைசா எஸ்கேப் ஆகிடனும். அதுதான் சரியான வழி
மறுபடியும் கும்மி ஆரம்பிச்சாச்சா? :-))))))
வாங்க முத்து(தமிழினி)
வந்ததும் சாம்பிரானி புகை அடிக்க ஆரம்ச்சுட்டிங்களே! :-))
நடுநிலையாளர்கள் பற்றிய தங்களின் புரிதல் நன்றாக உள்ளது. இருப்பினும் நீங்க இப்படி கருத்து சொல்லலாமா? ( நடுநிலையாளர் ஆகும் தகுதி எனக்கு இருக்கா? சொல்லுங்க.)
A very good example of such nadunilai post is given below :
http://muthuvintamil.blogspot.com/2007/06/blog-post.html
உங்களுடை மற்றை சுட்டிகளையும் படித்தேன். ஆனால் சீரியசா சொல்றீங்களா அல்லது உள்குத்தோடு சும்மா சொல்றீங்களா? என்னை போன்ற அப்பாவிகள் எப்படி புரிந்து கொள்வது?
நீங்கள் சொன்ன நடுநிலைகளை நான் எப்போதோ தவறிவிட்டேன்.
:))
உஷா,
அனுபவ கருத்தா இது? (ஸ்மைலி இருக்கு):))
இளா,
சர்ச்சை பதிவுகள் காரணத்தோடவே இட்டீர்களாமே?நீங்களா இதை சொல்லுவது?:))
வவ்வால்,
ஹிஹி பழைய பதிவுய்யா இது?
குட்டிபிசாசு,
நீங்க பாஸ் ஆயிட்டீங்க..
அனானி,
காமெடியன் இந்த பதிவுக்கு தேவையில்லை.பதிவே காமெடி பதிவுதான்.:))
ஜெஸிலா,
உள்குத்துதான்...உள்குத்து பற்றிய என் பதிவை படிக்கவில்லையா நீங்களா?
கோவி,
நீங்கள் நடுநிலையாளராக இருந்த காலம் உண்டு. அது தொடர்ந்து மெயின்டைன் செய்வது கஷ்டம். இல்லையா?:))
சுருக்கமா சோ மாதிரியா?
(இப்ப கூட சோ மாதிரின்னு டைப் அடிச்சேன் அப்புறம் மாதிரியான்னு மாத்திட்டேன்.)
"அய்யோ தமிழினி, நீங்களா இப்படி? " :-)))))))))))))
சூப்பரா இருக்குங்க. மேலும் சில யோசனைகள்.
- இந்த நடுநிலைவாதிங்கிறது இருபக்கமும் கூரான ஆப்பு மாதிரி. கொஞ்சம் அசந்தாலும் சொ.செ.சூ தான் :-))
- ரொம்பவும் நட்ட நடு நிலைவாதியா இருந்தா யாருமே கண்டுக்காம போயிட வாய்ப்புண்டு. அப்பப்ப பூனைக்குட்டிய எடுத்து வெளில விட்டுக்கிட்டு இருக்கனும்.
- மல்டிப்பில் ஸ்ப்லிட் பர்சனாலிட்டியா (சரியா சொன்னேனான்னு தெரியல) இருக்கறது பெட்டர். நாலஞ்சு வலைப்ப்பூ வச்சுக்கிட்டு ஓட்டலாம். அதுல ஒண்ண நடுநிலைமையா வச்சுகிறலாம்.
- சொந்த பதிவுல மட்டும் 'நடுநிலையா' பதியனும். ஆர்வ மிகுதியில அங்கிட்டு இங்கிட்டு பின்னூட்டம் போட்டுகிட்டு திரிஞ்சா எந்த பக்கத்திலிருந்தாவது ஆப்பு வரும். அப்புறம் 'நான் அவனில்லை'ன்னு கூண்டு கூண்டா ஏறி சாட்சி சொல்லனும்.
- வலைப்பதிவை விட்டு போகிறேன்னு ஒரு ட்ராப்ட் ரெடியா வச்சிக்கறது நல்லது. :-))
சரிதான்..... :-)))
அசுரன்
நீங்க சொல்ற மாதிரி இருந்துட்டா நல்லதுதானே!
என்னை வச்சு சொல்லலை :-))
More than a year since blogging.
Howz infy?
Hey i am suuper boy
Post a Comment