Sunday, October 26, 2008

கைது பண்ணிடுவாய்ங்களோ?

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். "தமிழ்நாட்டில் நிறைய பேரை கைது பண்ணியிருக்காங்களாம். நம்ம பிளாக்கை எல்லாம் பார்த்தா நமக்கும் ஆப்புதாம்ல", என்றார்.

"அடங்கொய்யால! நான் பதிவு எழுதுவதை விட்டே வருஷம் ஒண்ணாச்சே, என்னத்த எப்ப எழுதினேன்னு தெரியலையே", என்றேன்.

விளையாட்டு ஒருபுறமிருக்க இன்னொரு நண்பர் கலைஞர் இரண்டு திரைப்பட இயக்குநர்களை கைது செய்ததற்கு ஒரு புது விளக்கம் கொடுத்தார். வித்தியாசமாக இருந்தாலும் கலைஞரின் அரசியல் தந்திரங்களை வைத்து பார்க்கும்போது இப்படியும் இருக்குமோ என்றுதான் தோன்றுகிறது. அதாவது திரைப்பட இயக்குநர்களை கைது பண்ணிணால் தான் நம் தமிழ்மக்களிடம் பிரச்சினை சீக்கிரமாக சென்று சேருமாம் (Reach). அடங்கொக்கமக்கா... இப்படியும் இருக்கா?

27 comments:

ராஜ நடராஜன் said...

எனக்கும் இப்படியொரு சம்சயம் முன்னப்பவே இருந்துச்சு.

அருண்மொழி said...

Welcome back :-)))))

குப்பன்.யாஹூ said...

அந்த இரு இயக்குனர்களும் யார் என்று பார்த்தாயா உடன் பிறப்பே.

அமீர் மாலிக் மற்றும் சைமன் (சீமான்) செபஸ்டியன்.

சட்டம் தன் கடமையை செய்தது. அம்மையார் சோனியா மிகவும் மகிழ்ச்சி கலைஞரின் மத சார்பின்மை கண்டு.

தருமி said...

முத்து தமிழினி ... எங்கேயோ எப்பவோ கேட்ட பேரு மாதிரில்ல இருக்கு ...

Muthu said...

அமீர் தெரியும்..சீமான் சைமனா?இது எனக்கு செய்தி.

ஆனால் இவர்கள் இருவர் மேலும் மரியாதை கூடித்தான் உள்ளது.

Unknown said...

மதிப்புக்குரிய இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்களுக்கு!

அன்புடையீர்!

தமிழ் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இராமேஸ்வரத்தில் நடாத்திய ஓர் பிரமாண்டமான கூட்டத்திற்கு தாங்கள் தலைமை தாங்கியுள்ளீர்கள். அக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகளாவிய தமிழ் மக்களின் வீரமிக்க தலைவன் என பிரகடனப்படுத்தியுள்ளீர்கள. அவரின் வீரச் செயல்கள் அனேகவற்றில் ஒரு சில, ஓர் ஜனாதிபதியையும்;, ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் உருக்குலைந்த நிலையில் சடலமாக்கியமை, இன்னோர் ஜனாதிபதியினுடைய கொலை முயற்சியில் அவரின் ஒரு கண் பார்வையை இழக்கச் செய்தமை, குண்டு வெடிப்புகள், கிளேமோர் குண்டுத்தாக்குதலகள்;, கைக்குண்டுத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பஸ் வணடிகளிலும், ரயில் வண்டிகளிலும் பறித்தமை, கிளேமோர் தாக்குதல் ஒன்றில், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் போன்றோர் கிராமத்திலிருந்து பட்டினத்திற்கு சென்ற பஸ் வண்டியில் மட்டும் 65 பேர் கொல்லப்பட்டு; 65 பேர் படுகாயமுற்றமை, ஆயிரக்கணக்கான விதவைகளை, மனைவியை இழந்தவாகளை, அநாதைகளை உருவாக்கியதோடு பலரை அங்கவீனர்களாக்கி கண்பார்வையை இழக்கச் செய்தமை, 22,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும், யுத்த முனைக்கு அனுப்பியும் உயிர்ப்பலி கொடுத்தமை, கர்ப்பிணி பெண்களை இதற்கு பாவித்தமை, பல அறிஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு பொறுப்பான உயர் அரச அதிபர்கள், திறமைமிக்க வைத்திய காலாநிதிகள், பொறியிலாளர்கள், சட்ட வல்லுனர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், பல்வேறு தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை பலி கொண்டமை ஆகிய அத்தனைக்கும் முழு பொறுப்பேற்க வேண்டிய ஒரேயொரு நபர் பிரபாகரனே. வீரமிக்க உலகளாவிய தமிழராக தங்களால் கௌரவிக்கப்பட்டவரின் சாதனைகளை மேலும் குறி;ப்பிடின், வடஇலங்கையில் பல தலைமுறையாக ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறித்தெடுத்துவிட்டு வெறும் 500 ரூபா பணத்துடன் வெளியேற்றப்பட்ட மக்கள் 17 ஆண்டுகளின் பின் இன்றும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அகதி முகாம்களில் வாடி,வதங்க வைத்ததோடு எமது மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வடக்கு கிழக்கு மகாணங்களில் வாழ்ந்த மக்களை ஓட்டாண்டியாக்கி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்து எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சிதைத்த இப் பெரு மகனாரை சினிமா உலகம் வீரமிக்க தமிழர் தலைவராக பிரகடனப்படுத்தி உள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவாகிய தாங்களும், இயக்குனர் சீமான் போன்ற சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரும் இப்போதும் பிரபாகரன் அவர்களை வீரம் நிறைந்த தலைவனாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து இலங்கை வாழ் தமிழ் மக்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய கொடூர செயல்;களை வீரம் செறிந்த செயலாக தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களேயானால் திரு. பிரபாகரனை தமிழ் நாட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். முறைப்படி அவரை கௌரவிப்பின் ஸ்ரீபெரம்புத்தூரில் அமைந்துள்ள கௌரவ ராஜீவ்காந்தி அவர்களின் ஞாபகசின்னத்துக்கு அண்மையில் ஓர் சிலை எழுப்புவீர்களேயானால் அது இன்றைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்வாறு மக்களின் பெரு மதிப்பை பெற்ற மிகச் சிறந்த ஓர் பிரமுகரை வெட்கப்படக் கூடிய வகையில் ஓர் முட்டாள் பெண்மணியின் உதவியோடு மற்றும பலருடன் தன்னையும் ராஜீவ்காந்தி அவர்களையும் சதை பிண்டமாக்கிய இம் மாவீரனின் சாதனையை ஞாபகப்படுத்தும். இலங்கைத் தமிழர்கள்தான் அது கூட விடுதலைப் பெற்றுத் தருவோம் என்று கூறிவந்த விடுதலைப் புலிகளால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உண்மை நிலையை கண்டறிய மறுத்து இஷ்டம்; போல் செயல்படுவீர்களேயானால் விடுதலைப் புலிகளின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவேதான் தமிழ் நாட்டை நாம் வலிந்து கேட்பது என்னவெனில் இலங்கை தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுக்கு புத்துயிர்; கொடுக்கின்ற முயற்சியல் ஈடுபடாது ஒதுங்கி இருக்குமாறு வேண்டுகிறேன். சிங்கள அரசு தமிழ் மக்களை இன அழிப்பு செய்கிறது என்ற கூற்று வெறும் பொய்யாகும். அதற்கு மாறாக இன்று தமிழ் மக்களை அழிக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளே.

யுத்தத்தால் தமிழ் மக்கள் சொல்லொணா கஸ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளின் அடக்குமுறை ஆட்சியில் அவர்கள் பட்ட துன்பத்தோடு ஒப்பிடும் போது இப்போது படும் துன்பம் பெரிதல்ல. தமிழ் நாடு விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பலாத்காரமாக பிடித்திருக்கும் மக்களை விடுவிக்க செய்வதே பெரும் உதவியாக இருக்கும்.

தாங்கள் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்துக்கு விடுத்த கோரிக்கை நியாயமானதல்ல. சினிமாத் துறையில் ஈடுபட்டவர்கள் தற்போதைய முயற்சி வெறும் பயனற்றதென்றும் அதற்குப் பதிலாக நிலைமையை அறிவதற்காக ஒரு குழுவினர் இலங்கைக்கு சென்று உண்மையை அறிற்துவர வேண்டுமென வேண்டுவதே நியாயமானதாகும். திருமதி இந்திரா காந்தியை சீக்கியர்தான் கொலை செய்தவர் என்றபடியால் ஒரு சீக்கியர் முதலமைச்சராக வர முடியாது என்பது விதண்டாவாதமாகும். அதேபோலவே மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றியும் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை பற்றியும் ஒப்பிட்டு பேசுவது விதண்டாவாதமாகும்.

ஒரு சிலர் தாம் நன்மை பெறுவதற்காக அல்லது தான் பிரபல்யமாவதற்காக முழு தமிழ் நாட்டுக்கும் களங்கத்தை உருவாக்குவது ஒரு தேச துரோக செயலாகும்.

நன்றி

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ

Muthu said...

யாருங்க த.வி.கூ ஆனந்தசங்கரி?

SurveySan said...

//// நம்ம பிளாக்கை எல்லாம் பார்த்தா நமக்கும் ஆப்புதாம்ல///

;)

அதுக்குதான், என்ன கருமாந்திரம் எழுதினாலும், கடைசீல ஒரு 'சிரிப்பான்' போடணும் ;)

கொழுவி said...

யாருங்க த.வி.கூ ஆனந்தசங்கரி?//

ha ha ha ha ha ha

இதே கேள்வியை பாரதிராஜாவும் கேட்க கூடும்.

அவர் ஒரு காகிதப் போராளி - யாழ்ப்பாணத்தின் மேட்டுக் குடிகளை பிரதிநிதித்துவப் படுத்திய பிறகு ஆயுதப் போரினால் வர்க்க பேதங்கள் அழிந்து விட்ட நிலையில் காலாவதியாகிப் போன தமிழர் விடுதலை கூட்டணி என்ற பழைய கட்சியொன்றின் எஞ்சிய எச்சம்.

சற்று வயதானவர். யாராவது புலிகளை ஆதரித்தால் போதும் பேனாவும் காகிதமும் எடுத்து கடிதம் வரையத் தொடங்கிவிடுவார்.

பிரபாகரனுக்கே இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

ஆனால் ஒருதடவை கூட - மகிந்தராஜபக்சவிற்கு எழுத வில்லை! எழுத மாட்டார். ஏனெனில் எலும்புத் துண்டு கிடைக்காதே...

கோவி.கண்ணன் said...

கலைஞர் செயலுக்கான டிக்ஸ்னரி விளக்கம் நன்றாக இருக்கிறது. அவை உண்மை என்றால் மிகவும் மகிழ்ச்சி !

Muthu said...

//அதுக்குதான், என்ன கருமாந்திரம் எழுதினாலும், கடைசீல ஒரு 'சிரிப்பான்' போடணும் ;)//

சர்வேசா, அது சரிதான்..சில பதிவெல்லாம் அந்த சிரிப்பானை போடலைன்னாலும் சிரிக்க வைச்சிரும்..உதாரணத்திற்கு நேத்து
"தமிழீழம் மலர்ந்தால் தமிழகத்தின் கதி" என்று ஒரு பதிவை பார்த்தேன்.சிரிப்பானே தேவையில்லை...

manasu said...

மு.க விற்கு நன்றி,
மு.த வை மீண்டும் பதிவெழுத வைத்ததற்கு.

குழலி / Kuzhali said...

//"தமிழ்நாட்டில் நிறைய பேரை கைது பண்ணியிருக்காங்களாம். நம்ம பிளாக்கை எல்லாம் பார்த்தா நமக்கும் ஆப்புதாம்ல", என்றார்.
//
கைது செய்தா அதை வைத்தே அரசியலில் இறங்கிடலாமோ?

புகழன் said...

:)
:)

பதிவு போட முடியலை
அதனால வெறும் சிரிப்பான் மட்டும்.

:)
:)

Udhayakumar said...

பாஸ், செய்தி பார்த்தீங்களா? அரசியச் சா"நக்கி"யர் சொன்னதை? பதவி விலகல் கிடையாதாம். இப்படி இவருக்கு சொம்பு தூக்கியே சாகப் போறோம். இவரையெல்லாம் நம்பி... போங்க, இதுக்கு மேல எழுதுனா....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஈழத்தமிழ் மக்களின் வேதனையில் விளையாடும் வீரப்பன்கள்!(அப்பாவி வீரப்பன்கள் அல்ல, வேல் திருடி வீரப்பன்கள்)

மாயவரத்தான் said...

Welcome back

ரவி said...

தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவது தவறாங்க ?

அப்படீன்னா எதிர்த்து பேசுறது, ஆதரித்து பேசுறது ரெண்டுலயும் "பேசுறது" இருக்கே ?

ப்ளீஸ் இந்த தங்கபாலுவை கைது செய்ய சொல்லுங்க ஹி ஹி ஹி

ம்ம்ம் அப்புறம்...தடை செய்யப்பட்ட நாகா தீவிரவாத அமைப்பை பற்றி பேசிய பிரதமரையும் கைது செய்யவேண்டியது தான் ஹி ஹி ஹி

எனக்கு எதுக்குங்க வம்பு, புள்ள குட்டிக்காரன் :)))

gulf-tamilan said...

Welcome back !!!

ஜோசப் பால்ராஜ் said...

யாருப்பா அது அந்த ஆநொந்த சங்கரிக்கு பிளாக் எல்லாம் படிக்க கத்துக்குடுத்தது ? இம்புட்டு நாளும் அவரு ஒரு 10 பக்க கடிதத்த எழுதி பத்திரிக்கைக்கு குடுத்துக்கிட்டு இருந்தாரு. இப்ப எல்லா பிளாக்ளயும் போயி ஒரே கடுதாசி மதிப்பிற்குறிய தமிழக முதல்வர்க்கு அப்டினும், அடுத்து பாரதிராஜா பெயர போட்டும் ஒட்டிக்கிட்டு இருக்காரு.

முதல்ல எல்லாரும் இவரோட அறிக்கைய பின்னூட்டமா அனுப்புறத நீக்கணும். நாம எல்லாம் சேர்ந்து நல்லது நடக்க முயற்சி செஞ்சா, அங்கயும் வந்து இந்தாளு ஆட்டையப் போடுறாரு.

. said...

தமிழகத்தின் தமிழ்மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் புலிகளுக்கு ஆதரவாக செல்லக்கூடாது- பா.உ வினாயகமூர்த்தி முரளிதரன்

தமிழகத்தின் தமிழ்மக்கள் மீதான ஆதரவு போராட்டங்கள் புலிகளுக்கு ஆதரவாக திரும்பக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் மட்டக்களப்பு நகரின் வெபர் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே கருணா அம்மான் என்ற வினாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் ஈழத்தமிழ் மக்கள் மீதான ஆதரவை வரவேற்றுள்ள கருணா அம்மான், புலிகள் தோல்வியை சந்தித்து கிளிநொச்சி நகர் விடுவிக்கப்படும் நிலையில் தமிழகத்தின் ஆதரவு பயங்கரவாத புலிகளின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இவ் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வன்னிமக்களின் அவலம் கவலை தருகின்றது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் இராணுவ ரீதியாகவே முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும், இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியல் ரீதியாகவே காணப்படவேண்டும் என்றும் தனதுரையில் தெரிவித்துள்ளார்.

இவ் கூட்டத்தினால் தமிழ் கூட்டமைப்பினர் கவலைகொண்டுள்ளதுடன் மேற்படி கூட்டத்தினை விமர்சனம் செய்யும் வகையில் போலி செய்திகளை பரப்பிவருவதுடன் கூட்டமைப்பின் ஜெயானந்தமூர்த்தி கடந்த பல மாதங்களாக ஜரோப்பிய நாடுகளில் வசித்த வண்ணம் இவ்வாறு போலி பரப்புரைகளை வெளிவிடுவது உண்மைக்கு புறம்பான போலி செய்தியாகும் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Anonymous said...

//அந்த இரு இயக்குனர்களும் யார் என்று பார்த்தாயா உடன் பிறப்பே.

அமீர் மாலிக் மற்றும் சைமன் (சீமான்) செபஸ்டியன்.

சட்டம் தன் கடமையை செய்தது. அம்மையார் சோனியா மிகவும் மகிழ்ச்சி கலைஞரின் மத சார்பின்மை கண்டு.//

அப்படி போடு!

வேலையில் மட்டுதானா சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு. சிறையிலும்தான். வைகோ கண்ணப்பன் ஆகிய இந்துகளுக்கு இரு இடம். கிருத்துவ முஸ்லிம் மக்களுக்கு தலா ஒரிடம்.

வாழ்க கலைஞரின் சமூக நீதி!

Gurusamy Thangavel said...

நல்லா இருக்கு!

லக்கிலுக் said...

வாங்கோண்ணா.. அட வாங்கோண்ணா!! :-)

லக்கிலுக் said...

கமெண்டு மாடரேஷன் கண்டிப்பாக வைக்கவும். உங்கள் வலைப்பூவுக்கெல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு அவசியம்!!!

இப்போதெல்லாம் அனானிமஸ் ரேஞ்சில் புது ஐடியே ஓபன் செய்து பின்னூட்டம் போட முடிகிறது.

Muthu said...

நல்வரவு அளித்த பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கு நன்றி. பேசக்கூட ஆளில்லாத தேசத்தில் தவிப்பதால் கண்டிப்பாக நிறைய எழுதுவேன்.

லக்கி,

:)

இன்னும் எதும் நடக்கலை.

Santhosh said...

தல,
வெல்கம் பேக்...
//நல்வரவு அளித்த பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கு நன்றி. பேசக்கூட ஆளில்லாத தேசத்தில் தவிப்பதால் கண்டிப்பாக நிறைய எழுதுவேன்.//
ஒ இப்ப பெண்களூருல இல்லையா நீங்க..