ஆறு தகவல்கள்
1.இப்போது நான் தினமும் கேட்கும் பாட்டு டைலாமோ டைலாமோ என்ற டிஷ்யூம் படப்பாடல். என்ன டேஸ்டுடா உனக்கு என்று சிலர் பல்லை கடிப்பது தெரிகிறது.என்ன பண்றது? என் குழந்தை இந்த பாட்டை போட்டால் அழாமல் இருப்பதும் இல்லாமல் என்கூட சேர்ந்து டான்சும் ஆடறா.இந்த பாட்டுல இன்னொரு சுவாரசியம் பாடல்வரிகள். அதுல ஒரு டைமிங் ஜோக் நல்லா இருக்கும்.சொல்பவர்களுக்கு அரசியல் ரத்னா விருது உண்டு.
2. நான் ஆங்கில பாடல்களை விரும்பி கேட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது நேரம் இல்லை. என் இசையப்பி நண்பன் தேவபாரதி எனக்கு கொடுத்த ஒரு ஆங்கிலப்பாடல்கள் அடங்கிய கேசட்டை நான் தொலைத்ததை மிகப்பெரிய இழப்பாக உணர்கிறேன்.
3.பெருமாள்முருகனின் பீக்கதைகள் என்ற தொகுப்பை இந்த வாரம்தான் படித்து முடித்தேன். யாரும் தொட தயங்கும் விஷயங்களை அழகாக கதையாக்கி உள்ளார்.
4. உலக கோப்பை கால்பந்தைப்பற்றி ஒரு விரிவாக ஒரு பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நண்பர் இளங்கோவின் கால்பந்து பதிவுகள் அருமையாக இருப்பதால் நான் அடக்கி வாசிக்கிறேன். சாருநிவேதிதாவின் இந்த கால்பந்து பதிவு நன்றாக இருக்கிறது.
5.ஒரு கொசுறு தகவல்:2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை.
6. ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்.நல்ல கேள்வியாக இருந்தால் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.(மனசாட்சி: டேய், முத்து எழுத விஷயம் இல்லாட்டி இப்படி எல்லாமா ஒப்பேத்துறது)
என்னை கவர்ந்த வலைப்பதிவுகளில் ஆறு:
1.ரோசாவசந்த்:ரொம்ப ஆக்ரோஷமாகவும் எழுதுவார். நக்கல் நையாண்டியும் நன்றாக இருக்கும். இணைய அம்பிகள் என்ற வார்த்தையை முதன்முதலாக நான் பார்த்தது இவர் பதிவில்தான்.எந்த பதிவு என்று நினைவில்லை. இந்த வார்த்தை மல்டி டைமன்ஷன் கொண்டது.இதை இவர் உருவாக்கினாரா என்று தெரியவில்லை.ஆனால் பல அர்த்தங்களை கொண்ட அருமையான வார்த்தை.எப்போது நினைத்தாலும் சிரிப்பேன்.இவருடைய குஷ்பு விவகாரம் பற்றிய கருத்திலும் எஸ்.ரா குட்டிரேவதி சர்ச்சை பற்றிய கட்டுரையிலும் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு என்ற போதிலும் நம்மை சிந்திக்க வைப்பதில் வெற்றி பெறுபவர் இவர்.எந்த ஒரு சீரியஸ் பத்திரிக்கையிலும் எழுதும் அளவிற்கு தகுதி படைத்த இவர் சாதாரண பதிவுகளை விட எதிர்வினைகளில் தான் உக்கிரமாக வெளிப்படுவார்.
அருந்ததி கட்டுரை, சாரு நிவேதிதா கட்டுரை
2.தங்கமணி:இவர் கொஞ்சம் சீரியஸானவர்.கொஞ்சம் ஆழமாக எழுதுவார். இவருடைய இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியுமா என்ற பதிவு தமிழ்மணத்தில் பயங்கர பிரபலம்.பதிவுக்கு அல்ல.பின்னூட்ட சண்டைக்கு.
அழியும் பன்முகத்தன்மை பற்றிய பதிவு
3.தமிழ்சசி: மகா சீரியஸானவர் தமிழ்சசி.ஆழ்ந்து ஆராய்ந்து இவர் போடும் கட்டுரைகள் தகவல் சுரங்கங்கள். தமிழக அரசியல் பற்றியும் எழுதுவார். காஷ்மீர் பற்றியும் எழுதுவார். பங்கு வணிகம் பற்றியும் எழுதுவார்.எனக்கு பிடித்தது காஷ்மீர் பதிவுகள்.
காஷ்மீர் பற்றிய பதிவுகள்.
4.தருமி: தருமியின் மாஸ்டர் பீஸ் என்றால் மதங்களை பற்றிய ஆராயும் இந்த பதிவுகள்தான்.இஸ்லாம் மற்றும் கிறிஸ்து மதத்தைப்பற்றியும் கடைசியாக இந்து மதத்தையும் ஆராயும்படி நிர்பந்திக்கப்பட்டார்.நன்றாகவே செய்தார் பேராசிரியர். அன்புக்கு இலக்கணமாக திகழும் பேராசிரியர் தருமியின் பதிவுகள் படிப்பதே ஒரு இனிய அனுபவம்.
மதம் பற்றிய பதிவுகள் இந்து மதம் பதிவு
5.இளவஞ்சி: அளவோடு எழுதி வளமோடு வாழ்வது எப்படி என்று இவரைப் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்.நானெல்லாம் ஆர்வ கோளாறில் நூற்றிக்கும் மேற்பட்ட பதிவுகள் போட்டிருந்தாலும் அதில் எத்தனை தேறும் என்று சொல்லமுடியாது.ஆனால் இளவஞ்சியின் அனைத்து பதிவுகளுமே சூப்பர்.மனதை தொடும் பதிவுகள், அட்டகாசமாக நகைச்சுவை பதிவுகள், அறச்சீற்ற பதிவுகள்(?) என்று வெரைட்டியும் காட்டுவார்.இவர் போன்ற ஆட்களின் பதிவுகளில் இருந்து ஒருசில பதிவுகளை எடுத்துக்காட்டுவது கடினம்.இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
துளசி பெங்களூர் வந்துப்போது, பீட்டர் சாங்ஸ்
6.குழலி: மாற்று பார்வைகளை அழுத்தமாக முன்வைப்பது என்பதை இவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.பா.ம.க பற்றி, இடஒதுக்கீடு பற்றி இவர் போட்ட பல பதிவுகள் மூலம் ஏற்கனவே தமிழ்மண வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.எந்த வித சீண்டுதல்களுக்கும் நிதானம் தவறாதவர் குழலி.(கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன் தலைவரே) பதிவுகளுக்கு சுட்டி இவர் தளத்தில் உள்ளது.
மேலும் பல நண்பர்களுடைய பதிவுகளை விரும்பி படிப்பேன்.ஆறு பதிவுகளில் ஆறு பேர் மட்டுமே இருக்கமுடியும் என்பதால் ஆறு பதிவுகள் மட்டுமே இங்கு கொடுக்க முடிந்தது.
கடைசி செய்தி:நானும் "ஆத்திகம்" எஸ்.கே அவர்களும் சட்டை கிழிய சண்டை போட்டுள்ளோம். அதையெல்லாம் மனதில் வைத்து விஷச்செடியை வளர்த்துக்கொள்ளாமல் என்னை இந்த ஆட்டத்துக்கு அழைத்த நண்பருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் என் புரொபைல் ஒரு குறுகிய காலத்திற்கு ஆத்திகமாக்கப் பட்டுள்ளது.என்ன, இது திராவிட ஆத்திகம்.அவ்வளவுதான்(படம் உதவி:நன்றி இளவஞ்சி)
என்னுடைய நாலு பதிவை இங்கு படிக்கலாம்
Thursday, June 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
//2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை. //
முத்து உண்மையாகவா...
வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி சமாளிக்கிரீங்க...
//நல்ல கேள்வியாக இருந்தால் பதிலளிக்க முயற்சிக்கிறேன்//
Carefully worded? :)))
முத்து,
அருமையான வலைபதிவர்கள் தேர்வு .தமிழச்சியை நான் அதிகமாக படிக்கவில்லை .இனிமேல் படிக்க வேண்டும் .மற்ற ஐவரும் எனக்கும் மிகவும் பிடித்த பதிவர்கள்.
முத்து,
மன்னிக்கவும் .தமிழ் சசி-யை தமிழச்சி என வாசித்து விட்டேன் .ஆக உங்கள் அபிமான வலைபதிவர்கள் எனக்கும் அப்படியே பொருந்தி வருகிறது.
//5.ஒரு கொசுறு தகவல்:2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை//
சிம்ரன் படம் நடிப்பதை நிறுத்தியதும் இந்த வருடத்தில் தான் என்று கூறிக் கொள்கிறேன். இதற்கும் 2003ல் நீங்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்தியதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் கூறவில்லை :)
நீங்களும் ஆறுல மாட்டிக்கிட்டீங்களா? நல்லது அதான் பதிவு போட்டுட்டீங்களே.
டைலமோ பாட்டா........ஊரெல்லாம் அதத்தான் பாடிக்கிட்டு இருக்காங்க. நீங்க பாடுறதுல ஆச்சரியம் இல்ல.
ஏதாவது கேள்வி கேக்கனுமா? எனக்குத் தெரிஞ்ச கேள்விதான். திராவிடக் கேள்விதான்.
(முத்தை)த்தரு பத்தித் திருநகை-ன்னா என்னங்க? ;-) ஒங்க பேரு வர்ர மாதிரி கேள்வி கேக்கனும்னு நெனச்சேன். கேட்டுட்டேன்.
பீக்கதைகள் பத்தி நானும் கேள்விப் பட்டிருக்கேன். ஒன்றிரண்டு படிக்கவும் கெடைச்சிருக்கு. எனக்கு நினைவு வந்த விஷயம் சின்ன வயசுத் தூத்துக்குடி. ரொம்பச் சின்னப்புள்ளைல ரெண்டு மூனு வயசு இருக்கும்னு நெனைக்கிறேன். அப்பல்லாம் தூத்துக்குடியில பீ அள்ளுற வண்டிகள் உண்டு. குறிப்பிட்ட தெருவுக்குன்னு மட்டும் இல்ல. எல்லா மதக்காரங்க இருக்குற தெருவுக்கும். எல்லா வீடுகள்ளயும் மாடர்ன் கக்கூஸ் இருக்காது. அவங்க தெலுங்கு பேசுவாங்க. அட...எந்த மொழியப் பேசுனா என்ன....மிதிபடுறவன் மிதிபடுறவந்தானே...நல்லவேளை நான் வளர்ர காலத்துலேயே எல்லாம் மாறீருச்சு. இப்பல்லாம் மாடர்ன் கக்கூஸ்கள்தான். இப்பல்லாம் தூத்துக்குடித் தெருக்கள்ள "ஓரேய்....தானி அள்ளேசி(!) ரா"ன்னு கேக்க முடியாது.
முத்து,
//5.ஒரு கொசுறு தகவல்:2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை.//
இந்த தகவல படிச்சுட்டு எதுக்கு இது இங்கனு புரியாம ஒரு 2 வினாடி முழிச்சேன் அப்புறம், இத படிச்சுட்டு
//(மனசாட்சி: டேய், முத்து எழுத விஷயம் இல்லாட்டி இப்படி எல்லாமா ஒப்பேத்துறது)//
சிரிச்சேன்.
// G.Ragavan said...
(முத்தை)த்தரு பத்தித் திருநகை-ன்னா என்னங்க? ;-) //
என் கேள்வியும் இது தான்.;-)
// வளமோடு வாழ்வது எப்படி //
ஹிஹி...
// ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் //
ஊட்டம்மாவிடம் கையும்களவுமாக மாட்டிய அனுபங்கள் பற்றி?!
( அரசு, மதன், பராசக்தி, ஃபீனிக்ஸ்... ( இன்னும் யாரப்பா? ).. என அனைவரது பதில்களோடு உம்முடைய 'முத்தான' பதிலையும் தரவும்! )
சாருவின் கால் பந்தாட்டக் கட்டுரையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
முத்து(தமிழினி), நீங்களும் சீரியஸான பதிவர் என்பதை உங்கள் தேர்வுகள் தெரிவிக்கின்றன.
//நல்ல கேள்வியாக இருந்தால் பதிலளிக்க முயற்சிக்கிறேன்//
இது உங்கள் வாதத் திறமைக்கு சவால் அல்லவா?
முத்து அந்த டைலாமோ பாட்டு பலரின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் கேட்கலாமே என்ற தொனியில்தான் அது இருக்கிறது.
அடுத்து இதே பெருமாள் முருகனின் கூள மாதாரி கதையை நீங்கள்தான் எனக்கு அறிமுகம் செய்தீர்கள். ஆனால், இன்னும் படிக்கவில்லை. கொஞ்சம் ஓட்டினேன். அதற்குள் டைவர்ஷன்.
கிரிக்கெட் அளவிற்கு கால்பந்திற்கு எழுதுவது மிகக் குறைவுதான். இருப்பினும் இது எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
கழுத்து வலி காரணமாக இப்போதெல்லாம் இணையத்தில் படிப்பதையும், எழுதுவதையும் கொஞ்சம் குறைத்து வருகிறேன்.
அடுத்து அந்த 6 வலைப்பதிவர்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளீர்கள். இது தரமான எழுத்துக்கள் இடம் பெறுவதற்கு உதவி புரியும். வாழ்த்துக்கள்.
//அதுல ஒரு டைமிங் ஜோக் நல்லா இருக்கும்.சொல்பவர்களுக்கு அரசியல் ரத்னா விருது உண்டு.//
Srilanka நீயானா, L.T.T.E நான் ஆனா
ஐய் ஐய்யோ வாய் கொஞ்சம் மூடு.,
D.M.K., நீயானா,A.D.M.K., நான் ஆனா
கோட்டையில் நம்ம வீட்ட போடு.......
//2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை.//
திருட்டு வி.சி.டி.யா
//திராவிட ஆத்திகம்.//
எம்.ஜி.ஆர்.யாரின் அண்ணாயிசம் போல் உள்ளது. :))))
//Srilanka நீயானா, L.T.T.E நான் ஆனா
ஐய் ஐய்யோ வாய் கொஞ்சம் மூடு//
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் சரியான விடையெழுதி முதல் பரிசும் அரசியல் ரத்னா விருதும் பெறுவது திரு.நாகை சிவா.வாழ்த்துக்கள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//2003 வருடத்திற்கு பிறகு நான் தியேட்டருக்கு என்று போய் எந்த சினிமா படமும் பார்க்கவில்லை. //
முத்து உண்மையாகவா...
வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி சமாளிக்கிரீங்க... //
ஹிஹி ..பம்பாய்ல் ரயில் ஏறி ஆபிஸ் போயிட்டு வந்தாவே சாதனைதான்..
மங்களூர்ல குழந்தையை தூக்கிட்டு சினிமாக்கா? நோ சான்ஸ்
////நல்ல கேள்வியாக இருந்தால் பதிலளிக்க முயற்சிக்கிறேன்//
Carefully worded? :)))//
ஏங்க அப்படி சொல்றீங்க? புரியலையெ
நண்பர்களே,
அனைத்து பதிவுகளுக்கும் சுட்டி இணைத்துவிட்டேன்.நன்றி
ஜோ,
என் தேர்வை அங்கீகரித்ததற்கு நன்றி.(எங்க ஆளையே பார்க்கமுடியலை)
கோவிகண்ணன்,
//சிம்ரன் படம் நடிப்பதை நிறுத்தியதும் இந்த வருடத்தில் தான் என்று கூறிக் கொள்கிறேன். இதற்கும் 2003ல் நீங்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்தியதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் கூறவில்லை :) //
ஹிஹி என்னங்க இதப்போய் பொது சபைல சொல்லிக்கிட்டு....
அப்ப கோவிச்சுக்குட்டு பம்பாய் போனவந்தான் நானு....:))
//எங்க ஆளையே பார்க்கமுடியலை//
ஆமா முத்து! எதிர்பாராத வேலைப்பளு ,வெளிநாட்டில் இருப்பது..இவை தான் காரணம் .விரைவில் சரியாகும் என நம்புகிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஹி ஹி....
// (படம் உதவி:நன்றி இளவஞ்சி) //
படம் எங்கேங்க?! :)
// (படம் உதவி:நன்றி இளவஞ்சி) //
படம் எங்கேங்க?! :) //
என் புரொஃபைல் பாருங்க இளவஞ்சி...படத்தை ஒரு நண்பர் உதவியுடன் சிறுசாக்கிட்டேன்
ராகவன்,
டைலாமோவிற்கு இவ்வளவு ரசிகர்களா? நன்றி
//(முத்தை)த்தரு பத்தித் திருநகை-ன்னா என்னங்க? ;-) //
புகாரி ஹோட்டல்ல புளியோதரை கிடைக்குமா?:))
முத்து போன்ற பற்களை காட்டி சிரிக்கும் அழகான சிரிப்பு
என்பது தான் அர்த்தமா?
ஹிஹி தப்பா இருந்தா அடிக்காதீங்க...
பீக்கதைகள் பற்றி ஒரு மதிப்புரை எழுதிக்கொண்டு உள்ளேன்.விரைவில் போடுகிறேன்.(பீ அள்ளற வண்டிகள் என் சிறுவயதிலும் இருந்தது..எங்கள் ஊரில் ஒழித்தாயிற்று..)
நன்மனம்,
உங்களுக்கும் புரிஞ்சிடுச்சா? :))
முத்ததிரு நகைக்கு அர்த்தம் மேல சொல்லியிருக்கேன்.சரியான்னு பாருங்க.
வசந்தன்,
நன்றி.சாருவின் அந்த கட்டுரை அவருடைய அரைகுறை அரசியல் கட்டுரைகளை விட நன்றாக வந்துள்ளது.
மணியன்,
//இது உங்கள் வாதத் திறமைக்கு சவால் அல்லவா//
:))
சீரியஸ் பதிவர்தான் நானும் !
சந்திப்பு,
கழுத்து வலி வருவதற்கு இணையம் மட்டும் காரணமில்லை. கம்ப்யூட்டரில் சரியான முறையில் உட்கார்ந்து வேலை செய்யவில்லை என்றால் வரலாம்.
இந்தியாவில் விளையாட்டுக்களை பற்றி ஒரு பதிவு போடும் எண்ணம் உள்ளது.
இன்னும் கொஞ்சம் எனக்கு பிடித்த பதிவர்களை பற்றி எழுதும் எண்ணம் உள்ளது.பார்ப்பொம்.
குழலி,
ஆவ்வ்வ்வ்வ்...
இளவஞ்சி,
உங்கள் கேள்விக்கு விளக்கமாக எழுத வேண்டுமய்யா ( ஹிஹி தனிப்பதிவெல்லாம் இல்லை)..நாளை எழுதறென்
////(முத்தை)த்தரு பத்தித் திருநகை-ன்னா என்னங்க? ;-) //
புகாரி ஹோட்டல்ல புளியோதரை கிடைக்குமா?:)) //
புகாரில புளியோதரை கிடைக்குமான்னு தெரியாது. ஆனா முனியாண்டி விலாஸ்ல சமயத்துக்குக் கிடைக்கும். குறிப்பா காலைல.
// முத்து போன்ற பற்களை காட்டி சிரிக்கும் அழகான சிரிப்பு
என்பது தான் அர்த்தமா?
ஹிஹி தப்பா இருந்தா அடிக்காதீங்க...//
அடிக்கிற மாதிரியா இருக்கு நெலமை? காலைல தோசையக் கூட எடது கைலதான் பிச்சுத் திங்க வேண்டியிருக்கு. இதுல ஒங்கள ஓடிப் பிடிச்சி அடிச்சு..அடப் போங்க முத்து.
// பீக்கதைகள் பற்றி ஒரு மதிப்புரை எழுதிக்கொண்டு உள்ளேன்.விரைவில் போடுகிறேன்.(பீ அள்ளற வண்டிகள் என் சிறுவயதிலும் இருந்தது..எங்கள் ஊரில் ஒழித்தாயிற்று..) //
நான் புத்தகம் படித்ததில்லை. வலைப்பூவில் யாரோ அதிலிருந்து சில பகுதிகளைக் குடுத்திருந்தார்கள் என நினைக்கிறேன். அப்பொழுது படித்தது. அவ்வளவுதான்.
அட சொல்லவே இல்லையே...நீங்க சொன்ன பொருள் சரிதான்.
முத்தைப் போல (முத்தைத் தரு)
பார்த்ததும் பத்திக் கொள்வது போன்ற (பத்தித்)
அழகு மிகும் புன்னகை (திருநகை)
அது சரி..தமிழப் புளியோதரையாக்கீட்டீங்களே. வாரியார் சொல்வார். பனங்கற்கண்டு கடக்குமுடக்குன்னுதான் இருக்கும். ஆனா சுவையும் உண்டு. நல்ல பண்பும் உண்டுன்னு. தமிழ் அப்படித்தானாம்.
//நன்மனம்,
உங்களுக்கும் புரிஞ்சிடுச்சா? :))//
அந்த ? ல ஏதோ சொல்ல வரீங்க :-( சரி...சரி... சிரிப்பான் எல்லாம் போட்டுட்டீங்க அதனால சிரிச்சிட்டேன் :-))
//முத்ததிரு நகைக்கு அர்த்தம் மேல சொல்லியிருக்கேன்.சரியான்னு பாருங்க.//
சரின்னு தானுங்க தோனுது.
நன்மனம்,
உள்குத்து மேட் ஈஸி புக் நான் இப்ப படிக்கிறதில்ல சாமி :))
ஆக்சுவலா நான் டமில்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேன். ஆனால் இந்த பண்டைய தமிழ் இலக்கியத்தின் மேல் மரியாதை உள்ள அளவிற்கு எனக்கு பரிச்சியம் இல்லை. இந்த கால வாழ்முறைக்கு ஏற்ற இலக்கியத்தை தேடுகிறேன்.
ராகவன்,
//அது சரி..தமிழப் புளியோதரையாக்கீட்டீங்களே.//
புளியோதரைக்கு என்ன சாமி குறைச்சல்? புளியோகரெ புளியோகரெ என்று உங்க பெங்களூரு ஆள் தான் தினமும் டிவியில் சொல்றாரே :))
உங்கள் கேள்விக்கு பதில் நன்மனத்திற்கு மேலே நான் கொடுத்த பதிலில் உள்ளது.ஹிஹி
நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன்...
முத்து, இந்து மதத்தை அழிக்காமல் ஜாதியை ஒழிப்பது முடியாது என்ற பதிவு உண்மையில் என்னுடைய கருத்தைப் பேசியது என்பதை விட அது அம்பேத்காரின் அந்தத் தலைப்பினால் ஆன புத்தகத்தைப்பற்றியது. அவரது அந்து கருத்துக்கு ஏற்ப அவரும் அவரது ஆதரவாளர்களும், இன்னும் இலட்சக்கணக்கானவர்களும் மதம் மாறினர்கள்; மதம் மாறி வருகிறார்கள். அந்தக்கேள்வி இந்த நிமிடம் வரை உயிர்ப்போடு இந்து-பார்பனிய அடிப்படைவாதத்தை எதிர்கொண்டுவருகிறது. ஆனால் அந்தப்பதிவுக்கு முகம் கொடுத்த இந்துமத ஆதரவாளர்கள் எவரும் (ஆம் எவரும்) அந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பெரியாரை தாக்குவது, தங்கமணியின் இந்துமத அறிவை கேள்வி கேட்பது, பொய்யான கூச்சல்களை எழுப்பியது, சொந்த அனுபவங்களை வைத்து சமூக பிரச்சனையை அளப்பது என்பதாகவே அவர்களது கேள்விகள் இருந்தன. இந்தக்கேள்விகளை சிலர் நேர்மையுடனும் எழுப்பியிருக்கலாம்; ஆனால் அது அல்ல அம்பேத்கார் அந்தப்புத்தகத்தை எழுதியதன் நோக்கம். அது அல்ல என் பதிவின் நோக்கமும்.
மோடிவழியிலான (குஜராத்) அணுகுமுறையின் மூலம் இன்னும் சிறிது காலத்துக்கு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் முனைப்புகளை ஒத்த அணுகுமுறைதான் பொதுவாக பதிவுகளில் வெளிப்பட்டது; இன்றும் வெளிப்படுகிறது. இந்து-தேசியவாத்தைத் (அதாவது பிராமணிய மேலாண்மையைக் காப்பாற்றக்கூடிய) தூக்கிப்பிடிப்பது, பிறமதங்கள், சமூக/அரசியல் இயக்கங்கள் மேல் வெறுப்பை வளர்ப்பதன் மூலம் பாமர ஒடுக்கப்பட்ட மக்களை தங்களது பகடைக்காய்களாகவும், ஏவல் நாய்களாகவும் பயன்படுத்திகொள்ளும் பாசிச நடவடிக்கை மூலம் அந்தமக்களுக்கு இருக்கும் வெளியேறிச்செல்லும் வாய்பை மறுப்பது/ அந்த மக்களுக்கு உதவும் அரசியல்-சமூக சக்திகளை அவர்களைக்கொண்டே அழிப்பது என்ற ஹிட்லர்-மோடி தத்துவ பிரச்சாரங்களே வலுப்பெறுகின்றன.
அம்பேத்காரின் அந்தகேள்வி அணுகப்படாமலே இருக்கிறது. ஆனால் அது கேட்கப்பட வேண்டியவர்களால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
முத்து,
நான் "மகா சீரியசான டைப்பல்லாம் இல்லை" :-)))
எழுதும் பதிவுகள் அப்படியாகி விடுகின்றன
காஷ்மீர் குறித்து இன்னும் நிறைய விடயங்கள் எழுதவேண்டி உள்ளது, நேரம் வாய்க்கும் பொழுது எழுதுகிறேன்
உங்களது கண்ணியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அதனை மீண்டும் காட்டியிருக்கிறீர்கள் இந்தப் பதிவில்.
மதிப்பளித்து ஆறு போட்டதற்கு நன்றி.
பி.கு. :: எனது அடுத்த திருப்புகழ் பதிப்பும், ஜி.ரா. கேட்டு, நீங்கள் பதிலளித்த அதே!!
முத்து உங்கள் ப்ரோஃபைலில் உள்ள ஆத்திகம் பற்றி சிறு விளக்கம் அளிப்பீர்களா? அறிய ஆவல்!
அன்பு அனானிக்கு அனேக நமஸ்காரங்கள்,
இது என் பதிவின் கடைசி பத்தி
********
கடைசி செய்தி:நானும் "ஆத்திகம்" எஸ்.கே அவர்களும் சட்டை கிழிய சண்டை போட்டுள்ளோம். அதையெல்லாம் மனதில் வைத்து விஷச்செடியை வளர்த்துக்கொள்ளாமல் என்னை இந்த ஆட்டத்துக்கு அழைத்த நண்பருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் என் புரொபைல் ஒரு குறுகிய காலத்திற்கு ஆத்திகமாக்கப் பட்டுள்ளது.என்ன, இது திராவிட ஆத்திகம்.அவ்வளவுதான்(படம் உதவி:நன்றி இளவஞ்சி)
************
எதையாவது எழுதி வம்பிழுக்க நினைக்கும் முன் பதிவை முழுதாக படிக்கவும்.பிறகு கண்ணாடியில் முகத்தை பார்த்துவிட்டு வந்து எழுதலாமே? நன்றி
முத்து,
உங்கள் பதிவின் கடைசி பத்திய படித்த பின்னர் தான் அக்கேள்வியைக்க் கேட்டேன். நீங்கள் நினைப்பதுபோல் உங்களை வம்பிழுக்கும் எண்ணத்தில்லிலாமல் உண்மையாகவே அறியும் ஆர்வத்தில் தான் கேட்டேன். என்ன ஆர்வக்கோளாறால் :) கொஞ்சம் தெளிவில்லாமல் கேட்டுவிட்டேன். உங்கள் ப்ரோஃபைலிலுள்ள கடவுளர்களின்? பெயர், வரலாறு (கதை), ஊர் போன்றவற்றின் சிறு விளக்கம் தான் நான் அறிய விழைந்தவை. நேரமும், மனும்மும் இசைந்தால் அறியத் தாருங்கள்.
அனானி,
நன்றி.இப்படி விளக்கமாக சொல்லியிருக்கலாம்.நியாயமான கேள்விகள்தான்.இளவஞ்சி சமீபத்தில் மணப்பாறைக்கு சென்றிருந்தார்.
அவருக்கு "பொண்ணு கொடுத்த தெய்வம்" ஊரு அது.அங்க இருந்த சாமிகள் அது.அதன் வரலாறு எனக்கு தெரியாது.எங்களுக்கு இது ஒரு உருவகம்தான் அனானி.
எங்கள் வரலாறுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அழிக்கப்படுகின்றன. எவருடைய வரலாற்றையோ எங்களுடைய வரலாறு போல் படித்து அதனடிப்படையில் நாங்கள் செத்ததற்கு நாங்களே விழா(?) (தீபாவளி) எடுக்கவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
ஆனாலும் நாட்டார் தெய்வங்களைப்பற்றி ஒரு தொடர் விரைவில் திராவிடதமிழர் வலைத்தளத்தில் வரலாம்.
தங்கமணி,
நீங்கள் கூறுவது உண்மைதான். இதை கேட்டால் ஒன்று நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதியாக்கப்படுவீர்கள்.அல்லது போலியனுக்கு சித்தப்பா என்று கூறுவார்கள்.
இந்த கேள்வியை பல்வேறு தருணங்களில் பல்வேறு ஆட்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.அது சரியான முறையில் பதிலளிக்கப்படும்வரை.
சசி,
காஷ்மீர் பிரச்சினையில் யாசின் மாலிக்கின் பங்கை பற்றி ஏதாவது எழுதுங்களென்.
தருமி,
ஏவ்வ்வ்வ்வ்...
அன்பின் எஸ்.கே,
அது வேற இது வேற..நான் டென்சன் ஆனா நீங்க பின்னாடி போகணும்..நீங்க டென்சன் ஆனா நான் பின்னாடி போவேன்..:))
சரியா...
(முத்தத்திரு பதிவா கலக்குங்க!)
பதிவிலிட அல்ல!
சிரிப்பதற்கு இந்தப் பக்கம் கொஞ்சம் வருமாறு தங்களை அழைக்கிறேன்.
http://kalaaythal.blogspot.com/2006/07/004.html
Post a Comment