Saturday, May 16, 2009

கொஞ்ச நஞ்சமாவாடா ஆடுனீங்க....

தமிழின துரோகிகளுக்கு மரண அடி கிடைத்திருக்கிறது. ஈழ தமிழர்களை கிள்ளுக்கிரையாக நினைத்த அரசியல்வாதிகளுக்கு ஆப்பை ஆழமாகவும் அகலமாகவும் தந்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

சில பதிவுகளில் சொல்லப்பட்டிருப்பதை போல் கருணாநிதியை படு கேவலமாக எழுதி தள்ளினார்கள். நண்பர் குழலி போன்ற ஒரு கட்சி சார்பானவர் என்று கூறப்படுபவர்களுக்கு கருணாநிதியை திட்ட காரணம் உள்ளது. கூட்டணி மாறப்போவதை முன்னமே கணித்து அதற்கு ஏற்றாற் போல் அவர் களத்தை அமைத்துக்கொண்டார். மற்ற பல நண்பர்களுக்கும் என்ன காரணம் என்பது உளவியல் ரீதியாக ஆராயப்படவேண்டியது.

நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால் நினைத்தது நடக்கவில்லை என்பதால் மேலும் கருணாநிதியை திட்டுவது கவைக்குதவாது. நல்லவேளை விடுதலைப்புலிகள் இந்த காகித புலிகளை நம்பி கருணாநிதியை எதிர்த்து எதுவும் கடைசி நேர அறிக்கை எதையும் விட்டு விடவில்லை.

இனி ஆயிரம் வியாக்கியானங்கள் வரும். விளக்கங்கள். பா.ம.க வை பற்றி மட்டும் பத்து பதிவு எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சியம். அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல் என்ற வகையில் இந்த தேர்தல் மிக முக்கியமானது. பணம் கொடுத்தார்கள் என்றெல்லாம் புலம்புவது முட்டாள்த்தனம். என்னவோ இந்த தேர்தலில்தான் அதுவும் திமுக மட்டும்தான் பணம் கொடுத்தது என்பது போல் வெட்டி(நொண்டி) சாக்கு சொல்வார்கள். இது கலைஞர் தமிழக வாக்காளர்களை சோற்றலாடைத்த பிண்டங்கள் என்று சொன்னதற்கு ஒப்பானது.(நான் நடுநிலைவியாதி யாக்கும்)


தமிழின ஆர்வலர்கள் என்றும் உணர்வாளர்கள் என்றும் தீடிரென்று கிளம்பிய இவர்கள் புரட்சித்தலைவியை ஆதரித்ததுதான் இந்த தேர்தலில் அலையை திமுக பக்கம் திருப்பியது. ( ஒரு வேளை இதுவும் கலைஞரின் திட்டமோ:)


என்னை தேர்தெடுத்தால் மூணாவது குறுக்கு சந்தில் கக்கூஸ் கட்டுவேன். ஈழம் பெற்றுத்தருவேன். வெள்ளாளகுண்டம் கிராமத்திற்கு பாலம் அமைப்பேன் என்ற ரீதியில் ஈழ பிரச்சினையை தமாசாக அணுகிய புர்ச்சிதலைவியை ஆதரித்த அறிவுசீவிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. ( நண்பர்கள் மன்னிக்க).சில வாரங்களுக்கு முன்பு புலிகளின் அரசியல் அறிவை நான் கேள்வி கேட்டபோது என்னை பெயர் சொல்லாமல் தாக்கினார்கள். இன்று ஓபாமாவையே வேலையை பாருய்யா வெங்காயம் என்ற அளவில் இலங்கை பேசுகிறது.

இன்று அதையே தமிழ்சசி எழுதுகிறார். என்ன பதில்?


( தொடரும்)


http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html

58 comments:

Muthu said...

ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். நொண்டிச்சாக்கு வெளியாகிறது. காணத்தவறாதீர்கள்.

சீனா பணம் கொடுத்திச்சாம்.சீனா எதுக்குய்யா தரணும் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு..:))

Muthu said...

http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html

ரங்குடு said...

இதில் தவறு அ.தி.மு.க மற்றும் ப.ஜ.க வினருடையது.

தி.மு.க + காங்கிரஸ் > அ.தி.மு.க
தி.மு.க + காங்கிரஸ் > ப.ஜ.க

ஆனால்,

அ.தி.மு.க + ப.ஜ.க > தி.மு.க + காங்கிரஸ்

என்பது இவர்களுக்கு விளங்காமல் போனது தான் ஈழத்தமிழர்களின் துரதிருஷ்டம்.

இதிலும் ஒரு சந்தோஷம் என்ன வென்றால், அந்தப் பச்சோந்தி மருத்துவர் படு தோல்வி அடைந்ததுதான்.

Muthu said...

ரங்குடு,

இருக்கலாம். நாற்பதும் நமதே என்று ஆர்ப்பரித்தவர்கள் யாரையும் இன்னும் இங்கு காணோமே?

ஈழ சிடி அது இதுன்னு தான் அரசியல் பண்ணிக்கிட்டு கருணாநிதியை மட்டும் திட்டுனதுக்கு இதுதான் எஃபக்ட்

ILA (a) இளா said...

இந்தியர்கள் நாய்களாம்

ராவணன் said...

இந்த வயதில் இத்தாலி சோனியாவை நக்கிப்பிழைக்கும் பிழைப்புக்கு...சே....
ஓ..ஒ...பிறப்பே அப்படித்தானா அந்த நபருக்கு...

Muthu said...

மேற்கண்ட பின்னூட்டம் நான் கூறியுள்ளதற்கு நல்ல உதாரணம்.

இளா...என்னத்த சொல்ல....

ILA (a) இளா said...

இதுவரைக்கும் சகோதரர்கள், ஒரே ரத்தம்னு சொன்னவங்க எல்லாம் வெறுப்புல என்ன சொல்றாங்கன்னு பாருங்க. பாவம், உசுரே போவுது,, திட்டிக்குங்க. நீங்கதானே.. வாங்கிக்கிறோம். நாங்க நாய்கள்தான்.. நக்கி பிழைப்பவர்கள்தான். உங்களுக்காக உசுரை விட்ட முத்துக்குமார் மற்றும் பலரும் இந்த இந்தியர்கள் வட்டத்துல தானே இருப்பாங்க, எங்க வாலை நாங்க பார்த்துக்குறோம்... அவுங்க அவுங்களுக்கு அவுங்க அவுங்க கஷ்டம்.

Muthu said...

இளா,

ஈழத்தமிழர்கள் திட்டட்டும். அது உணர்வுபூர்வமான கோபம். அவஙகளை யோசிக்கத்தான் சொல்றோம்.

நான் குறிப்பாக அதிகமாக விமர்சிப்பது நம்ம ஆட்களைத்தான்.

ILA (a) இளா said...

//நம்ம ஆட்களைத்தான்/
திடீர்னு போராளிங்க ஆன தீவிரவாதிகள் :)). அதை நினைச்சாதாங்க சிரிப்பா வருது. சோ, சரியாத்தான் சொன்னாரு. ஈழம் இந்தியன் ஓட்டுல பிரதிபலிக்காதுன்னு . அதுவும் அதே கூடாரத்துல இருந்துதான். சோவுக்கு அப்போவே தெரிஞ்சு இருக்கே..

Muthu said...

இளா,

கொஞ்ச நஞ்ச எண்ணம் இருந்தாலும் டாக்டரும், வைகோவும் ஆடிய ஆட்டத்தில் காணாம போயிருக்கும். கூடவே நம் இணைய திடீர் போராளிகளையும் சேர்த்துக்குங்க...

இந்த கம்யுனிஸ்ட் காரங்க பாருங்க என்ன ஆட்டம்.....

ரங்குடு said...

/திடீர்னு போராளிங்க ஆன தீவிரவாதிகள் :)). அதை நினைச்சாதாங்க சிரிப்பா வருது. சோ, சரியாத்தான் சொன்னாரு. ஈழம் இந்தியன் ஓட்டுல பிரதிபலிக்காதுன்னு . அதுவும் அதே கூடாரத்துல இருந்துதான். சோவுக்கு அப்போவே தெரிஞ்சு இருக்கே..//

இங்கே ஒண்ணும் நிலைமை இலங்கையை விடா நல்லாவாயிருக்கு?
நல்லவேளை - ராணுவம் வந்து தாக்காம இருக்கு.
இங்கே இருக்கற கழகங்கள்தான் தமிழர்களை காயடிச்சு வச்சிருக்கே.

இதுலே, இலங்கைத் தமிழனைப் பத்தி யோசிக்க நேரமும், அறிவும் தமிழகத் தமிழனுக்கு எங்கே இருக்கு?

இராஜபக்ஷே said...

நன்றி தமிழினி உங்களைப் போன்ற தமிழின துரோகிகளின் ஆதரவாளர்கள் அதிகம் பேர் தமிழகத்திற்கு தேவை

அன்புடன்

இராஜபக்ஷே

Anonymous said...

//என்னை தேர்தெடுத்தால் மூணாவது குறுக்கு சந்தில் கக்கூஸ் கட்டுவேன். ஈழம் பெற்றுத்தருவேன். வெள்ளாளகுண்டம் கிராமத்திற்கு பாலம் அமைப்பேன் //

என்னாது இது? ஈழம் அமைக்கிறது இவ்வளவு சுலபமா?

Muthu said...

ரங்குடு,
நோ காமெண்ட்ஸ்.


ராஜபக்சே என்ற அனானி,

உணர்வாளர் முரட்டு முட்டாளாக இருக்க வேண்டும் என்பது உங்கள் எண்ணம். என் எண்ணம் வேறு. மேலும் என் பழைய பதிவுகளை பார்க்கவும். நன்றி.

பொன் ரஜபக் ஷே said...

//தமிழின துரோகிகளுக்கு மரண அடி கிடைத்திருக்கிறது.//

இது உனது முட்டாள் தனம், தமிழின துரோகிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என எழுது.

Muthu said...

//இது உனது முட்டாள் தனம், தமிழின துரோகிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என எழுது.//

மக்கள் தமிழின துரோகிகளுக்கு தண்டனை தருவார்கள் என்று உங்களை போன்றவர்கள் சொன்னார்கள்.அதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

Anonymous said...

//மக்கள் தமிழின துரோகிகளுக்கு தண்டனை தருவார்கள் என்று உங்களை போன்றவர்கள் சொன்னார்கள்.அதைத்தான் சொல்லி இருக்கிறேன்.//

காசு கொடுத்தால் மக்களை முட்டாளிக்கி உள்ளார் தமிழ் ஈனத் தலைவர்

உடன்பிறப்பு said...

//நல்லவேளை விடுதலைப்புலிகள் இந்த காகித புலிகளை நம்பி கருணாநிதியை எதிர்த்து எதுவும் கடைசி நேர அறிக்கை எதையும் விட்டு விடவில்லை//

நல்ல ஆய்வு நண்பரே, வன்னியில் இருந்து வகோவுக்கு வந்த கட்டளை என்பதெல்லாம் டுபாக்கூர் என்று தெரியும் ஆனால் அதை சொன்னால் நம்மை கட்டம் கட்டி விடுவார்கள் என்பதும் தெரியும்

சாலிசம்பர் said...

//என்னை தேர்தெடுத்தால் மூணாவது குறுக்கு சந்தில் கக்கூஸ் கட்டுவேன். ஈழம் பெற்றுத்தருவேன். வெள்ளாளகுண்டம் கிராமத்திற்கு பாலம் அமைப்பேன் என்ற ரீதியில் ஈழ பிரச்சினையை தமாசாக அணுகிய புர்ச்சிதலைவியை ஆதரித்த அறிவுசீவிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது.//

எனக்கு சந்தேகம் தீர்ந்துருச்சு.

நச்சுன்னு இருக்கு பதிவு.

Anonymous said...

// நல்ல ஆய்வு நண்பரே, வன்னியில் இருந்து வகோவுக்கு வந்த கட்டளை என்பதெல்லாம் டுபாக்கூர் என்று தெரியும் ஆனால் அதை சொன்னால் நம்மை கட்டம் கட்டி விடுவார்கள் என்பதும் தெரியும்///

கட்டம் கட்டி விடுவார்கள் என்பதும் தெரியும். கட்டம் அல்லது ரவுண்டு கட்டுவார்கள்.

இந்த கொம்பனை எதிர்த்தால் என்ன ? ஆதரித்தால் என்ன? இவன் புள்ளைகளுக்கு சேர்த்த சொத்த பாதுக்காக்கனும் அதான் இவன் மொதல் வேலை தமிழனாவது மண்ணாங்கட்டியாவது?.

Anonymous said...

கருணாநிதி உங்களுக்கு சம்பாதித்து கொடுப்பாரா
பெண்டுகள், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு சம்பாதித்து கொடுப்பாரா?
கொடுத்த காசுக்கு மேல கூவுறீங்க தமிழினி.

Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்

Unknown said...

தனி ஈழம் பற்றிப் பேசியதால்தான் ஜெயாவிற்கு வாக்குகள் குறைந்தது.
பாமகவும், வைகோவும் மண்ணைக் கவ்வியதற்கு அதே காரணம். LTTEஐ ஆதரித்தால், தமிழகமும் பயங்கரவாதிகளின் களமாகும்.

இந்தியா முன்னேற்றம் அடையவேண்டும், தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டுமேயன்றி அண்டை நாட்டு விவகாரங்களெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இதுதான் பெரும்பான்மையான இந்தியனின்/தமிழனின்/ சிந்தனை.
கலைஞர் நினைப்பது அவ்வாறே...
திமுக தொண்டனுக்குத் தெரியும் யார் யார் தமிழினத் துரோகிகள் என்று.

போகும் இடமெல்லாம் தமிழன் அடி வாங்குகிறான் என்ற கருத்தே முட்டாள்தனமான பிரச்சாரம்தான்.
தமிழன் எவனையும் விட குறைந்தவனில்லை! அவன் இளிச்சவாயனும் இல்லை!!
தெலுங்கனுக்கும், மலையாளிக்கும், கன்னடனுக்கும், மராட்டிக்கும், குஜராத்திக்கும் எந்த அளவு 'இன உணர்வு' இருக்கோ அதே அளவுதான் பாமரத் தமிழனுக்கும் இருக்கிறது என்பது தான் உண்மை!!!

இருமேனிமுபாரக் said...

உண்மையில் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது,தேர்தல் முடிவுகளைப் பார்த்து. ஆனாலும் ஈழத் தமிழர்களை நினைத்து பாவமாகவும் இருக்கிறது. முன்னால் போனால் புலி கடிக்கும். பின்னால் போனால் சிங்கம் குதறி எடுத்து விடும். இதற்கிடையில் தமிழ் நாட்டு அரசியலிலும் புலி வாலைப் பிடித்தவன் எல்லாம் முகத்தை வெளியில் காட்ட முடியாமல் முடங்கிப் போய்விட்டான்.

Athisha said...

super ...

Athisha said...

:-) this is for mail follow up. sorry for english commentu no tamil font

Anonymous said...

//Anonymous said...

ராமதாஸ் ஒரு செத்த பாம்பு பாவம் அதை அடிக்காதீர்கள்//


கருணாநிதி சாவப்போற பாம்பா?

Anonymous said...

//கருணாநிதி சாவப்போற பாம்பா?//

அதுக்குள்ள அன்புமணிய மறந்தாச்சா

Anonymous said...

சூரியனை பார்த்து நாய்கள் குரைத்தால் சூரியனுக்கு ஒன்றும் ஆக்கப்போவதில்லை பாவம் நாய்கள்

Anonymous said...

//முன்னால் போனால் புலி கடிக்கும். பின்னால் போனால் சிங்கம் குதறி எடுத்து விடும்.//
புலி சிங்கம் சண்டையில் இடையில் அகப்பட்டு தான் ஈழத் தமிழர்கள் குதறுப்படுகிறார்கள். புலி ஒழிக்கப்பட்டால் ஈழத் தமிழர்கள் இவ்வளவு துன்பம் அடையமாட்டார்கள்.

உடன்பிறப்பு said...

//Anonymous said...

கருணாநிதி சாவப்போற பாம்பா?
//

யாருங்க இந்த நடுநிலைவாதி

சூனிய விகடன் said...

பதிவர்களை விடுங்க......இந்த சூனியர் விகடன்காரன் இருக்கானே.....வாராவாரம் "புலிகள் வட்டாரத்தில் விசாரித்ததில் " அப்பன்டின்னு பீலா உடுவான்.....பேசினாராம் ....தாடியை சொரிந்து கொண்டே கேட்டாராம்....லேசான செருமலுடன் சிரித்தாராம்....என்று "ராம்" மொழியில் புலனாய்வு பத்திரிக்கை நடத்தி வரும் சூனிய விகடன் சூ...ல் வச்சாங்கப்பா மொளகாய ....ரசினியை தூக்கிக்கொண்டு ரொம்ப நாள் ஊர்வலம் வந்தவனுங்க இந்த ஒரு வருஷமா "ராஜீவ் காந்தி தற்கொலை தான் செய்து கொண்டார்" ங்கற ரேஞ்சுக்கு டகால்டி விட ஆரம்பிச்சுட்டானுக.......இந்த தேர்தல் முடிவுகள் சூனிய விகடன் மாதிரி மேஜை மேல உக்காந்து பீடி குடிச்சுகிட்டே ஈழம் , பிரபாகர சரிதம் என்று பாடியவங்களுக்கு ஒரு மரண அடி

Anonymous said...

அய்யா பிரபாகரன் தனது 300 சகாகளோடு தற்கொலை செய்து கொண்டு விட்டாராம். இது உறுதிபடுத்தபடாத தகவல்.

Kasi Arumugam said...

:-)

Anonymous said...

ஒரு காலத்தில் உங்கள் தந்தையை பற்றி எழுதிய ஒரு பதிவை கண்டு சிலாகித்தது உண்டு. ஆனால் சமீபத்திய அரசியல் பதிவுகளை பார்கும் போது மிக கீழ்த்தரமாகவே இருகின்றன. அதுவும் ஈழத்தமிழர் ஒருவர் தங்களால் என்ன செய்ய முடியும் என்று சொன்னதாக கிண்டல் செய்தீர்களே...என்னென்று சொல்வது. அய்யா, இன்றைய நிலையில், உலகம் முழுக்க திரும்பி பார்க்க ஈழத்தமிழர்கல் என்ன பாடு பட்டார்கள். New York Times எழுதும் வரைக்கும் யார் கொண்டு வந்தார்கள். தமிழகத்தில் 'ஈழம்' என்று பேசினாலே கைதாகும் நிலை. 2000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருந்த பொழுது, Sonia Gandhi போர் முடிந்துவிட்டது என்று சொன்ன அதே மேடையில் இருந்த தமிழ் இனத் தலைவருக்கு வக்காலத்து?!

அரசியல் ரீதியாக திமுக-வை ஆதரிக்கலாம். அதற்காக அடுத்தவர் வேதனையில் குளிர்காய்வது சரியா? கவிஞர் தாமரை சொன்னது போல், ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி அடுத்த நாள்.

பொதுவாக, தமிழகத்து தமிழருக்கு தங்கள் வாழ்கையை ஓடுவதிலே பல சிரமங்கள். இதில் எங்கு அடுத்தவர் பிரச்சனைகள் பற்றிய சிந்தனை. என் மன வருத்தம் அரசியல் வாதிகளிடம் மட்டுமே. இன்றைய ஈழத்து நிலைக்கு இந்திய பெரும் பொறுப்பாளி. அவர்களை ஊகிவிட்டது இந்திய. நேரத்திக்கு ஏற்ப கை கழுவியதும் இந்திய. இன்றைய நிலையில், இலங்கை-க்கு பெரும் ஆயுத உதவியும் ஆள் உதவியும் கொடுப்பது இந்திய. கடைசியில் ஸ்ரீலங்கா-வின் அரசியல் தந்திரத்தால் முழி பிதுங்குவதும் இந்திய. இந்த லட்சணத்தில் இது வேர் ஒரு நாடின் பிரச்னை என்று பிதற்றுவது இந்திய.

ஏந்த நாடில் வாழ்ந்தாலும் சீக்கியர்கள் தங்கள் மக்களுக்கு என்றும் உறுதுணையாகவே நிற்பார்கள். இன்று கூட, கொல்லப்பட்டும் மக்களுக்கு (தமிழ்)சீக்கியர்கள் குரல் கொடுக்கிறார்கள். அனால் நாம்? கேவலம்.

நிச்சயமாக, தமிழர் என்று சொல்வது பெரும் அவமானம். முத்துக்குமார் போன்ற மனிதாபியல் பாவம் செய்ததால் தமிழர்களா பிறந்து இறந்தார்கள். அதுவே கட்டபொம்மன், பிரபாகரன், பாரதி போன்ற வீரர்களுக்கும் பொருந்தும். தமிழ் பிறப்பு, ஒரு புழுவிலும் கேவலம். இதுல ஒருக்கு ஒரு கட்சி போட்டு பிரிக்கவேண்டம். எல்லாரும் ஒரே சாக்கடை தான்.

- கஜன்

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

சில பல எணைய பொரட்சியாளய்ங்களுக்கும், உண்மை இந்தியன் போன்ற திடீர்தமிழ் வெறியன்களுக்கும், கணினி வழியாகவே கலகம் செய்த அட்டைகத்தி வீரன்களுக்கும் சுண்ணாம்பு தடவப்பட்ட தேர்தல்.

Muthu said...

//அதுவும் ஈழத்தமிழர் ஒருவர் தங்களால் என்ன செய்ய முடியும் என்று சொன்னதாக கிண்டல் செய்தீர்களே...//

தவறான புரிதல். அந்த நண்பா ஈழத்தமிழர் அல்ல. நான் கடுமையாக இந்த பதிவில் மற்றும் பல பதிவில் விமர்சிதத தமிழக தமிழர்களில் ஒருவர். திரும்ப படிக்கவும்.

ஒரு ஈழத்தமிழராக உங்கள் உணர்வு எனக்கு புரிகிறது. உங்களுக்கு எதை சொல்லி விளங்க வைப்பது என்று எனக்கு தெரியவில்லை.

நான் யாரை எதற்கு விமர்சிக்கிறேன் என்று புரியாத அளவு மன கஷ்டத்தில் நீங்கள் இருப்பதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி கஜன்

Muthu said...

சந்தடி சாக்கில் இந்திய தேசிய வீரர்களும் கபடி விளையாடுவதாக தெரிகிறது.

இது தமிழக அரசியலும் கருணாநிதியும ஈழமுமே என்ற அளவில் எழுதிய பதிவுதான்.

இந்தியா என்று யோசித்தால் இந்தியாவும் அதன் வெளியுறவு கொள்கை மகா கேவலமானது என்பதுதான் என் கருத்து.

தேசியவியாதி நண்பர்கள் மன்னிக்க.

ers said...

பா.ம.க வை பற்றி மட்டும் பத்து பதிவு எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சியம். அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல் என்ற வகையில் இந்த தேர்தல் மிக முக்கியமானது.|||||||
|||||
அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல்... சூப்பர் வார்த்தை..||||||

யட்சன்... said...

கடந்த இரண்டு மாதங்களில் ஈழத்தமிழர் பாதுகாப்புக்காக எழுதியவர்களை விட அதை சாக்கு வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டியதன் மகத்துவத்தை உருகி உருகி எழுதியவர்கள்தான் அதிகம்....

எல்லோருக்கும் முகமூடிகள் தேவைப்படுகின்றன....

Anonymous said...

//பா.ம.க வை பற்றி மட்டும் பத்து பதிவு எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சியம். அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல் என்ற வகையில் இந்த தேர்தல் மிக முக்கியமானது.|||||||
|||||
அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல்... சூப்பர் வார்த்தை..||||||//

தேர்தலே அரசியல் விபச்சாரம் தான் இந்த முறை கருணாநிதி அதிகம் காசு கொடுத்து விபச்சாரம் செய்தார் அவ்வளவு தான்

Anonymous said...

மன்னிக்கவும், தவறான புரிதலுக்கு. அந்த சம்பவத்தை பற்றி.

என் அளவில், இந்த முடிவுல்கள் ஒன்றும் அதிர்ச்சி அல்ல. எதிர் பார்த்துதான். இந்தியாவை பொறுத்த மட்டில், என் அணைத்து இந்திய நண்பர்களும் சொல்வது ஒன்றுதான். அது பெங்காலி இருந்தாலும் சரி, மலையாளி இருந்தாலும் சரி. எங்கள் நாட்டில் நல்லது என்று இல்லை. எப்பொழும் இரண்டு கேட்டது.

மற்றொன்று, இலங்கை என்னக்கு பேர் அளவில் ஒரு நாடு. என்னைபோல் மேலை நாடுகள் மட்டும் தெரிந்த தமிழ் இளைஞர் எல்லோருக்கும் அதுவே. எங்கள் கவலை தமிழர்களை ஒற்றியே. அது இலங்கையில் நாளுக்கு நாள் சாகும் ஆயிரம் ஆயிரம்மும் சரி, கும்பகோணத்தில் இருந்து நூறு பிள்ளைகள் ஆனாலும் சரி. சாவது எம் மக்கள்.

மக்கள்நன்றாக இருந்தால் போதும். என் மனகஷ்டம் ஆயிரம் ஆயிரம் ஆக இறந்து கொண்டு இறக்கும் தமிழ் மக்களுக்கே:-) நாங்கள் தாமரை கட்சி.

தமிழர்களை புழுவாக நடத்துவதும் தமிழரே. இது மிக கேவலம். நேற்று ஜெயலலித. இன்று கருணாநிதி. என்ன செய்திருக்கலாம் என்று கேட்கவேண்டாம். அரசியல் தந்திரத்தின் மந்திரியால் முடியாத ஒன்ற? அதுவும், தென்னகத்தின் அணைத்து மாநிலங்களிலும் media power உள்ள ஒரு முதல் அமைச்சர். மனம் இல்லை என்று சொல்லுங்கள். தாமரை சொன்னது போல், எவளவு பெரிய தடம் கிடைத்திருக்கும், போராட? தமிழ் நாடு அந்த அளவுக்கு வெங்காய மாநிலமா? இலங்கை ஆனாலும், தமிழகம் ஆனாலும், மேலைநாடு ஆனாலும், எட்டபங்களின் பிடியால் எங்கள் மக்கள் படும் அவதி எவளவு. என்னக்கு தமிழ் நாடவர் மேல கோவம் இல்லை. ஏனெனில், தமிழ் நாடு இருட்டு அரை ஆனாலும், தமிழர்கள் எல்லோரும் ஒன்று கூடியது மேலை நாட்டில். இன்று இலங்கை தமிழர்கல்லுகாக காவலர்களிடம் லண்டன்-இல் ஆடி வாங்குபர்களில் தமிழ்நாட்டவர்களும் உண்டு.

இதுல, நாமெல்லாம் ஒழுங்கா மேல நாட்டுல பிறந்து வளர்ந்துட்டு ஏன்தான் இந்த தமிழை படிச்சோம்னு இருக்கு. தற்போதைய கஷ்டம் அது ஒன்றே.

A tip for anyone reading from Europe or North America, best avoid the Tamil link with future generations. Best for your kids pyschological health:-) There just ain't anything to be proud of this baggage.

Many seem so ill-knowledged about the Srilankan issue. If you care to, do read this link I recently received, and pass on to your friends.

http://www.tamilnaatham.com/pdf_files/2009/may/neshor_20090511.pdf

-kajan

Anonymous said...

இலங்கைக்கு பலான்ன்டுக்கு முன் பிளைப்பிற்க்காக வந்த இந்தியாவை சேர்ந்த தமிழர்களை மாட்டிவிட கேவலமாக நடத்தியவர்கள்தானே இலங்கை தமிழர்கள் அதை இன்னமும் நாங்கள் மறக்க வில்லை

Muthu said...

கஜன்,

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஈழ பெற்றால் அதில் வாழ மக்கள் வேண்டுமில்லையா?

என்னால் எதையும் எழுத முடியவில்லை.மன்னித்துவிடுங்கள்

Anonymous said...

//இந்தியா என்று யோசித்தால் இந்தியாவும் அதன் வெளியுறவு கொள்கை மகா கேவலமானது என்பதுதான் என் கருத்து.//

போ(டா) டுபுக்கு. இவரு கருத்தை எல்லாம் வெளியுரவு துறை அதிகாரிகள் படிகக் வேண்டும் என்ன அவங்க தலைஎழுத்தா? ஓசி ப்ளாக்கர் கிடைச்சா எந்த கருமத்தையாவது பதிவு போடறேன்னு வாந்தி வேற. என்ன பொழைப்புடா மாதாவா

Muthu said...

//போ(டா) டுபுக்கு. இவரு கருத்தை எல்லாம் வெளியுரவு துறை அதிகாரிகள் படிகக் வேண்டும் என்ன அவங்க தலைஎழுத்தா? //

ஹிஹி அதையேதான் நானும் சொல்றேன்.மக்களை விட்டு அவனுங்க விலகித்தான் இருக்கானுங்க.

Anonymous said...

@இந்தியா என்று யோசித்தால் இந்தியாவும் அதன் வெளியுறவு கொள்கை மகா கேவலமானது என்பதுதான் என் கருத்து.@

உலகத்தில் சிறந்த நாட்டுக்கு மிக சிறந்த வெளியுரவு கொள்கையை எழுதியவர் சொல்கிறார் சரியாதான் இருக்கும்.

Anonymous said...

This doesn't seem the platform to fight who is who, indian tamil or tamil from srilanka. As muthu has said, he has no answers himself. Somethings, are rubbish to answer. Because we will always be looking for excuses. There is a saying "meesaiyil mann vilunthaal". That happened long back for Tamils, and we are still looking for excuses.

Regarding the issue of Tamils who came to Srilanka during British regime, I think history has been distorted enough. Hasn't enough divide them and rule them been done on the Srilankan conflict, without me adding fuel to rubbish. Lest We Forget.

-Kajan

Anonymous said...

@ஹிஹி அதையேதான் நானும் சொல்றேன்.மக்களை விட்டு அவனுங்க விலகித்தான் இருக்கானுங்க.@
இவரு மட்டும் தான் மக்கள் போலக்கீது.
சிம்பு நான் தனியாளு இல்லை தோப்புன்னு பிஞ்சு போன டயலாக் போலக்கீது

Muthu said...

யட்சன் மற்றும் அனைவருக்கும் நன்றி.குறிப்பாக பொழுதுபோக்கு அம்சமான அனானி பிரதர்சுக்கு.

Muthu said...

//This doesn't seem the platform to fight who is who, indian tamil or tamil from srilanka. As muthu has said, he has no answers himself. Somethings, are rubbish to answer. //

அனைத்து தமிழர்களுக்கும் ஒரு அவமானம். படுதோல்வி கண்ட உணர்வு உள்ளது.சொல்லமுடியாத ஒரு சோகம் உள்மனதில் உள்ளது.

அதற்கு யார் காரணம் என்று பேசமுடியாமலும் உள்ளது. தவறான நபர்களை காட்டி தம் அரிப்புகளை சொறிகின்றனர் சிலர். வெறுத்து மவுனம் காக்கிறோம் நாம்.

உண்மை கஜன்.

ராம கிருஷ்ணன் said...

ஒவ்வொரு ஊரிலும் ஓட்டுக்கு ஐநூறு வரை கொடுத்து பெறப்பட்டதா... இல்லையா? அன்றாடம் காய்ச்சி மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை காத்தார்களா.... இல்லையா? மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். சன் டிவியாலேயே சொல்லப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னானது?எவருக்கும் எதை பற்றியும் கவலை இல்லை. சுயநலவாதியாக உள்ளவன் திமுகாவின் அனைத்து நிலைப்பாட்டையும் ஏற்று வரவேற்று பெருமிதம் கொள்கிறான்.இன்று சின்ன குடும்பத்தை மக்கள் ஓரம் கட்டியுள்ளார்கள். நாளை பெரிய குடும்ப ஆட்சியை ஓரம் கட்டுவார்கள். ரொம்பவே ஆட வேண்டாம். மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Anonymous said...

ONRU MATDUM PURINTHU KOLLUNGAL TAMILARGALE.... ENNI TAMILAGAR ENRU SOLLATHINGE...VETKAMAGE ERUKIRATHU..

Anonymous said...

எது எப்படியோ! இந்திய அரசும், உலக நாடுகளும் ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வழி வகுக்க வேண்டும். செய்வார்களா?????????

லக்கிலுக் said...

ரீ-எண்ட்ரி அமர்க்களமா கீதே நைனா? :-)))))

ganesh said...

I have read your comment in santhippu. You are mentioning something "Chumma tamash". Then based on that coming out with a fact...

Amazing, indeed...

Be honest in your approach...

ganeshwrites.blogspot.com

Muthu said...

ganesh,

i did not understand what you said.be clear and specific