அதிமுகவில் தொடர்ந்து ஓரம் கட்டப்படுவதாக கூறப்படும் எஸ்.வி்.சேகர் இன்றைய தினம் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருந்திால் தெய்வகுத்தத்திற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்திருப்பார். நல்ல வேளை.அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது.
ஒரு பேட்டியில் அவர் கூடியவிரையில் எம்.பி ஆக இருப்பதாக கூறி இருக்கிறார். அவர் ஒருவேளை பி.ஜே.பியில் சேரலாம் என்று தெரிகிறது.
அவர் எப்படி சின்ன சோ ஆவார் என்று கேட்பவர்களுக்கு பதில் அவர் கொடுத்த பேட்டியில் உள்ளது. கீழே படியுங்கள்.
கேள்வி:சுயேட்சையாக நின்று தோற்ற நீங்கள் எம்எல்ஏவாக இருப்பது அதிமுகவால்தானே?
பதில்: இருக்கலாம். ஆனால் நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான். அது என் சொந்த பலம். தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தாலும் வெற்றிதானே!
இனிமேலும் யாருக்காவது சந்தேகம் இருக்கா? சோ.ராமசாமிக்கு வயதாகிவிட்டது. சேகருக்கும் சோவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. தமிழகம் எங்கும் பரவலாக விஷ விதைகளை தூவ அவருக்கு பிறகு தகுதியுள்ள ஒரே ஆள் எஸ்.வி.சேகர். டோண்டு சாரையும் சேர்த்துகிட்டால் துக்ளக் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது.
Saturday, November 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:))
கடைசி பஞ்ச் லைன் சூப்பர்!
//
நான் சுயேச்சையாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டபோது 1,400 ஓட்டுக்கள் பெற்றேன். அதிமுக சார்பில் போட்டியிட்ட போது நான் பெற்ற ஓட்டு 62,794. எனக்கும் நெப்போலியனுக்கும் இருந்த ஓட்டு வித்தியாசம் வெறும் 1,200 ஓட்டுக்கள்தான். அதிமுக என்ற கட்சியின் வாக்கு எனக்குக் கிடைத்தாலும், என் வெற்றியைத் தீர்மானித்தது அந்த 1,200 வாக்குகள்தான்.
//
இதப் பாத்தா அடுத்த சுப்பிரமணிய சாமி மாதிரியில்ல தெரியுது.
Welcome back naattaamai
Happy to see you again
//டோண்டு சாரையும் சேர்த்துகிட்டால் துக்ளக் நடத்த எந்த பிரச்சினையும் இருக்காது. //
போகிற போக்கில் கண்ணி வெடியை புதைச்சிட்டு போறது என்பது இதுதானா?
ஆஸ் யூஸ்வல் அருமை!!!
மீள்வருகைக்கு வாழ்த்துகள்!
1400 மக்களின் ஓட்டு முக்கியமில்லை. இந்தியாவின் "பலம் வாய்ந்த power center" ஆதரவு அவருக்கு இருக்கிறது. அது போதும், அவர் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்
Post a Comment