Tuesday, April 05, 2011

அண்ணன் சீமானின் குயப்பம்

சீமான் அதிமுகவிடம் சென்று காங்கிரசுக்கு எதிராக பரப்புரை(?) செய்வதற்காக உதவி (பொட்டி?) கேட்டதாகவும் அதற்கு ஜெயலலிதா போய் வேறு வேலையை பார் என்று கூறிவிட்டதாகவும் அதிமுகவின் நாளேடு தினமலர் தெரிவித்துள்ளது.இந்த தேர்தலின் ஒரு வித்தியாசமான காட்சி இது.

அதிமுக தீடிர் தமிழார்வல கோஷ்டிகளிடம் நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் என்றாலும் இவர்கள் ஆணியை தேடித்தேடி புடுங்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இது அண்ணன் சீமானுக்கு மட்டும் அல்ல. இணைய காகித புலிகளும் இதையே செய்கிறார்கள். இதற்கு காரணம் கண்டுபிடிக்க நாம் ஒன்றும் ரொம்ப சிந்திக்க வேண்டியதில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இன்னைக்கு பால், நாளைக்கு திவசம் என்றெல்லாம் புலம்பியும் எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தலிலாவது ஆளுங்கட்சி தோற்று அதற்கு காரணம் தங்களுடைய பரப்புரை தான் என்றும் தாங்கள் கூறும் காரணம்தான் என்றும் இல்லாத செல்வாக்கை காட்டி கொள்ளலாம் என்ற வெட்டி விளம்பர ஆசைதான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

மானஸ்தர்கள் எல்லாம் விஜயகாந்தின் உளறல்களுக்கும் ஜெயலலிதாவின் ஆணவபோக்கிற்கும் அருஞ்சொற்பொருள் போட ஆரம்பித்துவிட்டதும் பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் இளைய புரட்சித்தலைவி(?) குஷ்புவை ஆபாசமாக பேசி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதும் படா தமாசாக இருக்கிறது. அதிமுகவும் தேமுதிகவும் கனிமொழியின் ஸ்பெக்ட்ரம் உதவியுடன் வென்றாலும் இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஏதோ தாங்களே இந்த வெற்றியை வென்று கொடுத்தது போல் பேச ஆரம்பிப்பார்கள் என்று நினைக்கும்போது பகீரென்று தான் இருக்கிறது.

இன்னும் பல கூத்துக்கள் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது. விஜயகாந்தைவிட காங்கிரஸ் கூட்டணி தான் ஜெயாவுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். அதைத்தான் காங்கிரசும் ஜெயாவும் திரைமறைவில் முடிவு செய்துள்ளார்கள். அது நடக்கும்போது காகிதபுலிகள் என்னென்ன சொல்வார்களோ? இவர்கள் காமெடிக்கு அளவே இல்லையா?

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் காகித புலிகள் பதில் வைத்திருப்பார்கள். என்ன பெரிய பதில்? முரண்படுபவர்கள் எல்லாம் துரோகிகள் என்பதுதான் பதில். சுருக்கமான ஆனால் ஃஎபெக்டிவ்வான பதில். காலத்தால் சோதித்து பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள ஸ்டேட்டரஜி இது. இதற்கு உங்களால் பதில் சொல்லவே முடியாது என்பதல்ல விஷயம். பதில்(உண்மை) சுடும்.அது இவர்கள் கூச்சலை அதிகப்படுத்தவே உதவும் என்று நமக்கு நன்றாக புரிந்து அடங்கிவிடுவோம். அதுதான் இவர்கள் இருப்பை தக்க வைக்கிறது. வாழ்க வையகம்.

4 comments:

சிவபாலன் said...

:)

Robin said...

ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணி ஆட்சி அமைந்தால் இன்னும் வேடிக்கையாக இருக்கும்.

அருள் said...

இ-கலப்ப புண்ணியத்துல
வலைப்பதிவு எழுதுவதாலேயே தங்களை மார்க்ஸின் பேரப்பிள்ளைகள் போலவும்,சே வின் சின்னத்தா மக்கள் போலவும் எண்ணிக்கொண்டு இந்த இணைய பொரட்சிகர சுள்ளான்கள் அடிக்கும் கொட்டம் சகிக்க முடியவில்லை.

டி.என்.சேசனுக்கு அதிமுக மகளிரணி காட்டிய தெய்வ தரிசனத்த இந்த அட்டக்கத்தி வீரர்கள் அனைவரையும் கூப்புட்டு வச்சி காட்டுனா உச்சி மண்ட சூடு கொறைஞ்சு பொரட்சிகர சிந்தனை நீர்த்துப்போகும்ன்னு நெனைக்கிறேன்.

அடியேனின் ஆசையை நிறைவேற்றுவாரா அன்னை மாகாளி?

MuthuThamizhini said...

அருள்,

உங்க எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும். இந்த இடத்தில் எழுதப்பட்ட பல விஷயங்கள் நடந்துள்ளன. நாஞ்சில் சம்பத் பதிவு, திமுகவில் சரணடைந்துள்ள டாக்குடர் பதிவு ஆகியவற்றை பார்க்கவும்.

இணைய பொரட்சிகர சுள்ளான்கள் பாவம்..விட்ருங்க..நாம எதுனா பேசினா நாமள துரோகின்னுடுவாங்க..விட்ருங்க...

தமிழ்வெளியை பார்த்தீங்களா?