Sunday, March 20, 2011

வைகோவிற்கு ஆப்பு - தப்புவாரா?

கடந்த சில நாட்களாக வைகோவிற்கு அம்மாவினால் வைக்கப்பட்ட ஆப்பை பற்றித்தான் தமிழ் கூறு நல்லுலகு பேசிக்கொண்டு இருக்கிறது. அன்புத்தம்பி சீமான் என்ன கருத்து சொல்ல போகிறார் என்று தீடிர் தமிழார்வலர்கள் (இணைய பி.ஆர்.ஓக்கள்) உள்பட நெடுநாள் தமிழார்வலர்கள் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள். சீமானுக்கு பேதி புடுங்கியிருக்கலாம். அனைவரும் எதிர்பார்க்கும்படி அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உள்ளே போக போகிற ஆள்களில் சீமான் முக்கியமானவர் இல்லையா? இப்போதிருந்தே வாயை அடக்கி இருக்க பழகுகிறார்...புத்திசாலிதான்...லேசாக உதார் விடலாம் இல்லாட்டி தெரிஞ்சிரும்.

ஆனால வைகோவின் தகுதிக்கு எட்டு சீட்டே அதிகம்தான் என்பது என் சொந்த கருத்து. அதிமுக இந்த முறை ஸ்பெக்ட்ரம் புண்ணியத்தில் (தமிழக மக்கள் எப்போதும் போல் ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை வழங்கினால்) தனக்கு ஆட்சி வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தால் என்னைப்பொறுத்தவரை கம்யுனிஸ்ட்டுகளை கூட கழட்டி விடலாம். மற்றபடி ஸ்பெக்ட்ரம் சர்ச்சை (நன்றி பத்ரி) இந்த தோ்தலில் மக்களை கவரவில்லை என்றால் இந்த கணக்கு செல்லாது.


கிரைண்டர் மிக்சி என்று நாடெல்லாம் பரபரப்பாக இருக்கிறது. கடந்த முறை தந்த டிவியை நடுரொட்டில் தூக்கி எறிந்த பதிவர்களின் பதிவுகளில் திமுகவின் அடாவடி சலுகைகளை எதிர்த்து அறச்சீற்றத்துடன் பதிவுகள் வருகின்றன்.சினிமா கலைஞர்களுக்கு வீட்டு மனை என்றவுடன் பல்லிளித்தவர்கள் உள்பட. திமுக என்ன கொடுத்தாலும் கூட நூறு ருபாய் நான் தருகிறேன் என்று சிம்பிளாக இதை சமாளிக்க அம்மாவுக்கு தெரியாதா என்ன?

நாம் முன்னமே கூறியபடி ராமதாஸ் இந்தமுறை திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டார். பல நாட்களுக்கு முன்னமே லிப்ஸ்டிக் அடித்து,பவுடரோடு ரோட்டிற்கு வந்து தனது செல்வாக்கை பற்றி பேச ஆரம்பித்தவராயிற்றே? முழுகும் படகான திமுகவில் இருந்து காங்கிரசோடு சோ்ந்து யாரும் சுதாரிக்கும் ( திருமா என்று படிக்கவும்) முன்பு டாக்குடர் எஸ்கேப் ஆகப்போகிறார். ஆனால் அவர் ஆதரவு ஆட்சி அமைக்க தேவையில்லை என்ற நிலைமை அம்மாவுக்கு வந்தால் அவர் பொறுப்புள்ள எதிர்க்கட்சி ஆக்கப்பட்டுவிடுவார். அன்புமணி எம்பி சீட்டும் பாதிக்காம இதுக்கு காய் நகர்த்துறது தான் இதுல டாக்டரோட சாமர்த்தியம்.

தோழர்களை இந்த முறை கோவணத்தோடு தப்பி தலா பத்து சீட் வாங்கியதே மிராக்கிள்தான். ஆனால் எத்தனை எம்மெல்லே தேறும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணி மாறும்போது இவங்களும் பொறுப்புள்ள எதிர்க்க்ட்சிதான். நடுவில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி என்று பேச்சு நடக்கும்போது அதிமுக அலுவலகத்தில் பேச்சு நடத்திக்கொண்டு இருந்த தோழர்களுக்கு கொடுப்பட்ட காபி பாதியில் பிடுங்கப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. நல்லவேளை ஆனாலும் வலிக்காத மாதிரியே இருக்காங்கப்பா...

6 comments:

MuthuThamizhini said...

கடந்த வருடம் எழுதப்பட்ட கடைசி பதிவான கொள்கை சிங்கம் நாஞ்சில் சம்பத் பதிவில் சொல்லப்பட்டது இப்போது நடப்பது தற்செயலானது அல்ல...

ராவணன் said...

கருணாநிதி, கொலைகாரன் என்று வைகோ மேல் குற்றம் சுமத்தி, அவரை வெளிற்றியதை விட பெரிய ஆப்பு வைகோவிற்கு கிடைக்கப்போவதில்லை.

திமுகவை தன் குடும்ப சொத்தாக மாற்ற வைகோ மேல் வீண் பழி சுமத்திய கருணாநிதியும், அந்தக் குடும்பமும் வீதியில் அம்மணமாக அலையும் காலம் வந்தால் நல்லது.

இப்போது திருவாரூரில் வெறும் கோவணத்துடன் கருணாநிதி நிற்பதாக அனைவரும் கூறுகின்றனர்.

அடுத்து பழைய தேவதாசி தொழில்தான்.

ராஜேஷ், திருச்சி said...

indha pathivargaley tamasu paa... pona parliment election la kooda ippadi dhan ADMK jaalra adigama irundhadhu..adhuvum 34/39 la admk solid nu oothi thallunaanunga.. AC room okkarndhu blog ezhuthuravanga.. appuram paarunga peria naamam potanga avangaluku


EPPAVUM BLOG / ONLINE LA ADMK dhan first.. !

ராஜேஷ், திருச்சி said...

ayoooo yaaru petha pullaiyo RAVANAN. ippadi dhan pona election la kooda aripeduthu sorinjudhu.. may 13 idhu komanam kooda illama dhan irukum

MuthuThamizhini said...

கருணாநிதி திருவாருருக்கு போனது கண்டிப்பாக பயந்துத் தான் .உண்மை.

அதே கருமத்தைத்தானே பிரதான எதிர்க்கட்சி தலைவியும் செய்யறாங்க.....விசயகாந்த் கூட பயந்துட்டாருதானே...

MuthuThamizhini said...

ஏதோ தொழில் பற்றி ஆளு மாத்தி சொன்ன மாதிரி இருக்கே....

தமிழ்வெளியை பார்த்தீங்களா?