சவுக்கு இணையத்தளத்தை ஒரு நண்பர் கூகிளில் பகிர்ந்து இருந்தார். எப்படி இத்தனை நாள் இது நம் கண்ணில் படவில்லை என்பதே நமக்கு புரியவில்லை. பல தகவல்கள் உண்மை தகவல் என்ற தொனியையே தருகின்றன. வெவரம் உள்ள வழக்கறிஞர்கள் இதையெல்லாம் வைத்து எதுவும் வழக்கு தொடுக்க முடியாதா என்ன?
இதுவே அதிமுக ஆட்சியாக இருந்து திமுக எதி்ர்க்கட்சியில் இருந்திருந்தால் இந்த மாதிரியான தகவல்களை வைத்து திமுக பொறி கிளப்பி இருக்கும். இந்தியாவே பொங்கி இருக்கும். ஆனால் அதிமுக ஆகட்டும் மற்ற எதிரி கட்சிகள் ஆகட்டும். சோம்பி திரிவது பெரும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இது அதிமுக மேல் எனக்கு பல நாட்களாக இருக்கும் அபிப்பிரயாயத்திற்கு வலு கூட்டுகிறது. கூறு உள்ள ஆட்கள் அங்கு இல்லை அல்லது ரொம்ப கம்மி.
அம்மா மிகப்பெரிய மிருக பல பெரும்பான்மையில் ஆட்சியில் இருந்த போது கடைசி சில காலம் இதுபோல் ஆடித்தான் அதிமுக ஏறக்குறைய காணாமல் போனது. ரஜினி எல்லாம் கூட சவுண்ட் விட்டு நல்ல பெயர் வாங்கிய நேரம் அது. திமுக அந்த பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் விழித்துக்கொள்ளவில்லை என்றால் அதோ கதிதான்.
Subscribe to:
Post Comments (Atom)



5 comments:
http://www.udanpirappu.com/2010/07/blog-post_7095.html
//திமுக அந்த பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது தெளிவாக தெரிகிறது//
உங்கள் பதிவும் தெளிவாக விஷயத்தை சிம்பிலாக விளக்குகிறது. நன்றிகள்
உடன்பிறப்பு,
நக்கீரனை சவுக்கு தாக்கினால் என்ன? என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
காமராஜ் பத்தரை மாற்று தங்கமாக இருந்தால் அவருக்கு என்ன பிரச்சினை?
நக்கீரன் ஆளும் திமுகவிடம் பல விதமாக சமரசமாக போவது கண்கூடு. பார்ப்போம்.
//ஸ்டாலின் விழித்துக்கொள்ளவில்லை என்றால் அதோ கதிதான்.//
உண்மை.
ஜெ. ஆட்சி இன்னும் கேவலமாக இருக்கும்.
Post a Comment