Friday, October 27, 2006

நெருப்பு நரியில் உங்கள் பதிவு

என்னுடைய பதிவுகளை நெருப்பு நரி உலாவியை உபயோகப்படுத்தி படிக்க முடியவில்லை என்று ஒரு நண்பர் கூறினார்.நேற்று அகஸ்மாத்தாக ஒரு புகழ்பெற்ற பதிவரிடம் பேச நேர்ந்தது.


பிளாக்கரில் வலையேற்றிய பின் அதை right align,left align,justify full ஆகிய ஆப்சன்களை உபயோகப்படுத்தினால் நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியாது என்றார் அவர்.சோதித்து பார்த்ததில் அது உண்மை என்று அறிந்தேன்.


எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.தனிபதிவாக இட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது.

13 comments:

திருவடியான் said...

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=firefox

Anonymous said...

அறிவியல்/நுட்பத்துக்கு உங்களுக்கும் ஒண்ணு கிடைச்சதுன்னு நினைச்சிகிட்டிருந்தேன்..

அனுபவம்/நிகழ்வுகள்? ;)

ramachandranusha(உஷா) said...

நேற்று அகஸ்மாத்தாக ஒரு புகழ்பெற்ற பதிவரிடம் பேச நேர்ந்தது.//

அகஸ்மாத்தாய்- தற்செயலாய்

அருள் குமார் said...

ஆஹா... திராவிடதமிழர்கள் முதற்கொண்டு என்ன பெயரில் நீங்கள் எழுதினாலும் உங்கள் பதிவென்று பார்த்தவுடன் கண்டுகொள்ள இருந்த ஒரு மேட்டரை மாற்றிவிட்டீர்களா? பரவாயில்லை... இன்னும் ஒரு மேட்டர் இருக்கு. அத மாத்த மாட்டீங்கன்னு நினைக்கிறேன் ;)

Muthu said...

திருவடியான்,

அது வொர்ட்பிரஸ்.இது பிளாக்கர்...எப்படி?

(கவுந்து விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு எஸ் ஆயிடுவோமில்ல...)


பொன்ஸ்,

ஆமாங்க..உணர்ச்சி வசப்பட்டுட்டேன்...:)) அறிவியல் நுட்பமும் தான்..என் அனுபவமும் தானே...


மொக்கை,

புரியலையேப்பா:))

உஷா,

ஆமாங்க..சட்டுனு சில வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குது..முதலில் யதார்த்தமாக என்று போட்டேன்..மாத்தினேன்.நீங்க சொன்ன வார்த்தைதான் சரி..நன்றி...

அருள்,

யோவ்..சொல்லுங்கய்யா..இன்னும் என்னய்யா வெச்சிருக்கீங்க..தனி மெயில் கூட அனுப்பலாம்..

மணியன் said...

நான் நெருப்புநரி தான் பயன்படுத்துகிறேன். உங்கள் பதிவுகளைப் படிப்பதில் சிரமம் இருந்ததில்லை.

இப்போது FF2.0 க்கு மாறிவிட்டேன். ஆனால் VoW ங்கின் Tagutils நீட்சி compatiability இல்லாமல் technograti குறிச்சொற்களை இட முடியவில்லை. அவர் ஆவன செய்வார் என நம்புகிறேன்.

பூங்குழலி said...

எனது பதிவுகளை இதுவரை நெருப்பு நரியில் சோதனை செய்து பார்த்ததில்லை.

பதிவுகளைப் பார்ப்பதில் ஏதேனும் குறையிருந்தால், தயவுசெய்து தெரிவிக்கவும்..

நன்றி.

Anonymous said...

நெருப்பு நரி என்று புது பெயர் எதற்கு? பயர்பாக்ஸ் என்றுதானே அழைக்கவேண்டும். firefox என்பது ஒரு வணிகப் பெயர், அதை மொழிபெயர்க்கூடாது.
நம்ம ஊரில் இருக்கும் வெள்ளைச்சாமி என்ற பெயர் உள்ளவரை ஆங்கிலேயன் whitegod என்று அழைக்க முடியுமா... ???

தயவு செய்து firefoxஐ பயர்பாக்ஸ் (அல்லது ஃபயர்ஃபாக்ஸ்) என்றே அழையுங்கள்.

வசந்தன்(Vasanthan) said...

நெருப்புநரியில் பார்ப்பவர்களுக்காக பதிவை Align செய்யக்கூடாதென்பது நீண்டகாலத்துக்கு முன்பே தமிழ்வலைப்பதிவுகளில் வந்துவிட்ட நடைமுறை. குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாக இவ்விளக்கம் இருந்துவருகிறது. நான் வலைப்பதிவு தொடங்கியபோதே இவ்விளக்கம் எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

நெருப்பு நரியில் அண்மைக்காலமாக நான் சந்தித்த சிக்கல் ஒன்றுண்டு.
பெரும்பாலான நேரங்களில் பதிவு எழுதி வெளியிட்டவுடன் தமிழ்மணப் பட்டையில் தானாகவே வகைப்படுத்தல் நடந்துவிடுகிறது. 'வகைப்படுத்தாதவை' என்ற வகைக்குள் வகைப்படுத்தப்படுகிறது.
சிலநேரங்களில் பதிவை அழித்து வேறு உலாவியில் பதிவிட்டு மீண்டும் வகைப்படுத்தியிருக்கிறேன்.
இறுதியாக நெருப்பு நரியில் பதிவிட்ட 6 பதிவில் 4 பதிவுகள் தானாக வகைப்படுத்தப்பட்டன.

இப்போது பதிவு வெளியிடுவதாயின் மற்ற உலாவிகள்தான் பாவிக்கிறேன்.

இது எனக்கு மட்டும்தான் சிக்கலா?
வேறு யாருக்காவது இருக்கிறதா?
அல்லது இப்படி தானாக வகைப்படுத்துவதற்கும் உலாவிக்கும் சம்பந்தமேயில்லையா?

இன்னுமொரு சிக்கல், ஒலி-ஒளிப் பதிவுகள் தொடர்பானவை.

Anonymous said...

ரொம்ப உபயோகமா இருந்தது முத்து.. நன்றி..

Muthu said...

mukund,

i agree with you...thanks

திருவடியான் said...

வசந்தன்...

நீங்கள் சந்தித்த அதே பிரச்னை எனக்கும் ஏற்பட்டது. கடந்த சில எனது பதிவுகள் வகைப்படுத்தாதவை என்றே தமிழ்மணத்தில் பதிவாயிற்று. பிறகு ஆராய்ந்ததில், நான் என்ற ஃபயர்ஃபாக்ஸ் எக்ஸ்டன்ஷன் பயன்படுத்துகிறேன். அது தான் இதைத் தடுக்கிறது எனக் கண்டுபிடித்தேன். எனவே, பதிவை பப்ளிஷ் செய்யுமுன் தற்காலிகமாக தமிழ்மணம் ஸ்கிரிப்ட்களை அனுமதித்தால் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டிருந்தது.

முத்து...

மீசையில மண் ஒட்டலைங்கறீங்க... :-) இன்றைக்கு உள்ள கணிணி வல்லுநர்கள் யார் மீசை வச்சிருக்காங்க... அதுக்காகவேனும் உங்கள மன்னிச்சிரலாம்.

முத்துகுமரன் said...

ஆமா இங்க என்ன பேசிக்கிறீங்க :-)